வேலன்:-துப்பறிந்து கண்டுபிடியுங்கள்.

துப்பறியும் விளையாட்டு விளையாட உங்களுக்கு ஆவலாக உள்ளதா? இந்த விளையாட்டு உங்கள் மூளைக்கு சவால் விடுவாதாக உள்ளது. கொலைசெய்யப்பட்ட இடத்திலிருந்து ஒவ்வொரு குளுவாக நீங்கள்கண்டுபிடிக்கவேண்டும்.420 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுடைய பெயரை தட்டச்சு செய்யுங்கள்..வேறு ஏதாவது மாற்றங்கள் தேவையிருப்பின் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஒவ்வொரு இடத்திலும் உங்களுக்கு ஒவ்வொரு பொருட்கள் கிடைக்கும். அந்த பொருட்களை கொண்டு வேறு ஒரு இடத்தல் இருந்து வேறு பொருளை எடுப்பற்கான லிங்க் கிடைக்கும்.
உங்களுக்கு உதவுவதற்காக உதவிக்குறிப்பும் உங்களுக்கு உள்ளது.
ஒரு அழகிய நகரம்.அதன் அருகே கடல். கடலில் உள்ள கப்பலில் இருந்து வென்னிற புகை நகரத்திற்கு பரவுகின்றது. அதனை சுவாசிக்கும் மனிதர்கள் முகம் மாறி அருபமாக மாறிகோமா நிலைக்கு சென்றுவிடுகின்றனர்.ஆனால் அந்த நகரத்தில் உள்ள ஒருவன் மட்டும் எந்த ஓரு பாதிப்பும் இல்லாமல் இருக்கின்றான்.அவன்தான் வில்லன் என்று சொல்லவும் வேண்டுமா?நாம் அந்த நகரத்திற்கு சென்று ஒவ்வொரு கூளுவாக கண்டுபிடிக்கவேண்டும்...வில்லனை அழித்து அந்த கப்பலையும் அழிக்க வேண்டும்.அதில் இடம் பெற்ற ஒரு கூளு சொல்லுகின்றேன்.ஒரு இடத்தில் பள்ளத்தில் சாவி விழுந்துவிட்டது. அந்த சாவியை எடுக்க வேறு இடத்தில் கொம்பு இருந்தது. வேறு ஒரு இடத்தில் கயிறு இருந்தது.வேறு ஒரு இடத்தில் பப்புள்காம் இருந்தது. இந்த மூன்றையும் எடுத்து கொம்பில் கயிறை கட்டி அதன் நுனியில் ப்பபுள்காமை ஓட்டி அதன் மூலம் பள்ளத்தில இருந்து சாவி எடுத்து அறையை திறக்கவேண்டும. அங்கு உங்களுக்கு அடுத்த லெவலுக்கான குறிப்பு இருக்கும.பின்னணி இசை பயங்கரமாக உள்ளதால் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தனியே விளையாட விடவேண்டாம்.பயப்பட போகின்றார்கள். விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவ ளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

12 comments:

பால கணேஷ் said...

துப்பறியும் நாவல்களை விரும்பிப் படிப்பேன். என்னையே துப்பறிவாளனாக்கி விட்டீர்கள். விளையாடிப் பார்க்கிறேன். நன்றி.

Anonymous said...

சிறந்த game இணை அறிமுக படுத்திஇதற்கு நன்றிகள்...........

Thomas Ruban said...

டவுன்லோட் செய்து கொண்டியிருக்கிறேன் முடிந்த உடன் விளையாடி பார்க்கிறேன் மிக்க நன்றி வேலன் சார்.

வேலன். said...

velanblogger said...
கணேஷ் said...
துப்பறியும் நாவல்களை விரும்பிப் படிப்பேன். என்னையே துப்பறிவாளனாக்கி விட்டீர்கள். விளையாடிப் பார்க்கிறேன். நன்றி..

நன்றி கணேஷ் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Anonymous said...
சிறந்த game இணை அறிமுக படுத்திஇதற்கு நன்றிகள்...........//

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Thomas Ruban said...
டவுன்லோட் செய்து கொண்டியிருக்கிறேன் முடிந்த உடன் விளையாடி பார்க்கிறேன் மிக்க நன்றி வேலன் சார்.ஃஃ

தாமஸ் சார்.கேம் லோட் செய்யும்போது உங்களைதான நினைத்துக்கொண்டேன். விளையாடி பார்த்து எப்படி இருக்கின்றது என்று சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Thomas Ruban said...

//தாமஸ் சார்.கேம் லோட் செய்யும்போது உங்களைதான நினைத்துக்கொண்டேன். விளையாடி பார்த்து எப்படி இருக்கின்றது என்று சொல்லுங்கள்.//

உங்கள் அன்புக்கு நன்றி வேலன் சார்.

கேம் மிகவும் அருமையாக உள்ளது. இன்னமும் முடிக்கவில்லை நன்றி.

வேலன். said...

Thomas Ruban said...
//தாமஸ் சார்.கேம் லோட் செய்யும்போது உங்களைதான நினைத்துக்கொண்டேன். விளையாடி பார்த்து எப்படி இருக்கின்றது என்று சொல்லுங்கள்.//

உங்கள் அன்புக்கு நன்றி வேலன் சார்.

கேம் மிகவும் அருமையாக உள்ளது. இன்னமும் முடிக்கவில்லை நன்றி.ஃஃ

நன்றி தாமஸ்ரூபன் சார்..எனது குழந்தைகள் விளையாட்டினை முடித்துவிட்டார்கள்.நீங்கள் எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.
வாழ்க வளமுட்ன
வேலன்.

PCKaruppaiah said...

நன்றி நண்பரே

வேலன். said...

PCKaruppaiah said...
நன்றி நண்பரேஃஃ

நன்றி கருப்பையா...உங்கள் பதிவு அருமையாக உள்ளது:. தொடருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Thomas Ruban said...

இதில் உள்ள போனஸ் கேம்யையும் விளையாடி முடித்து விட்டேன் மிக அருமையாக இருந்தது. போனஸ் கேம் சற்று கடினமாக இருந்தது தொடர்ந்து இதேபோல் நல்ல விளையாட்டை அறிமுகப் படுத்துங்கள் மிக்க நன்றி வேலன் சார்.
இவ்வளவு கடினமான விளையாட்டை விரைவாக விளையாடி முடித்த உங்கள் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.

ARUL said...

I want nomao Naked or NUDE IT for android [samsung galaxy ace]

Related Posts Plugin for WordPress, Blogger...