வேலன்-புகைப்படத்தில் படங்கள் எழுத்துக்களை வாட்டர் மார்க்காக உபயோகிக்க

வாட்டர் மார்க் சாப்ட்வேர் பற்றி நாம் ஏற்கனவே நிறைய சாப்ட்வேர்கள். பார்த்திருக்கின்றோம்.மற்றது மாதிரி இல்லாமல் இது சற்றே புதுமாதிரியாக உள்ளது.7 எம்.பி. கொள்ளளவு கொண்டஇதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஒரே ஓரு புகைப்படம் ஆக இருந்தால் அந்த புகைப்பட பைலையும் அதிக படங்கள் இருந்தால் அதனுடைய போல்டரையும் தேர்வு செய்யவும்.ஒரே ஒரு புகைப்படம் தேர்வு செய்ததும் வந்துள்ள விண்டோ கீழே-
நிறைய படங்கள் உள்ள போல்டரை தேர்வு செய்ததும் வந்துள்ள படம் கீழே-
இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்தபின்னர் உங்களுக்கு அடுத்த விண்டோ ஓப்பன் ஆகும். அதில் படத்திற்கு தேவையான எழுத்துக்களை நாம் தட்டச்சு செய்யலாம்.
இதில்உள்ள டெக்ஸ்ட் செட்டிங் கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் தேவையான எழுத்தின் அளவு -  வகை - வண்ணம் - அமைப்பு என அனைத்தையும் தேர்வு செய்யவும்.
எழுத்து தட்டச்சு செய்ததும் வந்துள்ள விண்டோவின் படம் கீழே-
ஒ.கே. கொடுத்து அடுத்து பக்கம் செல்லவும.இதில் 9 வகையான படங்களின் தொகுப்பு உள்ளது. அதில் நாம் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.
இதில் கீழே உள்ள Browse -ப்ரவுஸ் கிளிக் செய்து கம்யூட்டரில் உள்ள நமக்கு விருப்பமான படத்தை தேர்வு செய்துகொள்ளலாம்.படத்தை வேண்டிய அளவு டிரான்ஸ்பரன்ட் செய்துகொள்ளலாம். 
இதில் பார்ட்ர் அமைக்கும் வசதியும் உள்ளது. தேவையான டிசைனையும் தேவையான அளவினையும் தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
படத்திற்கு வேண்டிய பெயரினை கொடுக்கலாம். எல்லாம் செய்து முடித்ததும் இறுதியாக ரன் கொடுத்து வேண்டிய இடத்தில் சேமிக்கவும்.
இறுதியில் வந்துள்ள படம் கீழே-

பதிவு போடுபவர்கள் குறிப்பாக சமையல் குறிப்பு போடுபவர்கள் இந்த சாப்ட்வேர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

28 comments:

பி.நந்தகுமார் said...

தினம் ஒரு சாப்ட்வேர் தந்து அசத்தும் வேலன் அண்ணாவிற்கு நன்றி! பி.நந்தகுமார், காங்கேயம் மின்னஞ்சல் vinothmaligai@gmail.com

பி.நந்தகுமார் said...

வேலன் சார் சூப்பர்

மாணவன் said...

பயனுள்ள பதிவுகளையே பதிவிடுவதில் உஙளுக்கு நிகர் நீங்களேதான் வேலன் சார், வாட்டர் மார்க் சாப்ட்வேர் ஏற்கனவே நீங்கள் பதிவிட்ட ஒரு மென்பொருளைதான் பயன்படுத்திவருகிறேன் இப்ப இதையும் பயன்படுத்திபார்க்கிறேன் பகிர்ந்தமைக்கு நன்றி சார்

அப்புறம் நேரமிருந்தால் நம்ம தளத்திற்கும் வருகை தரவும் உங்களைப்போன்ற ஆசான்களின் உற்சாகத்தால் நான் என்னை மெலும் மெருகேற்றிக்கொள்ள உதவியாய் இருக்கும் சார்....
என்றென்றும் உங்கள் வழியில்
உங்கள் மாணவன்

malar said...

மலர் ரமேஷ் காங்கேயம் நண்பர் நந்தகுமார் மூலம் உங்கள் இணையத்தை பார்த்தேன். நான் ஸ்டுடியோ வைத்திருப்பதால் போட்டோ ஷாப் சாப்ட்வேர் எனக்கு பயனுள்ளதாக இருந்தது.

சரன்யா மனோகரன் said...

வேலன் நன்று

கக்கு - மாணிக்கம் said...

அந்த ஸ்டாம்ப் படத்துல கீறது ஆரு மாப்ஸ்?
உங்க அண்ணாத்தயா ?

எஸ்.கே said...

மிக்க நன்றி!!!

NAGA said...

வேலன் சார்,பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்.அரவரசன்.

ஈரோடு தங்கதுரை said...

வாட்டர் மார்க் செய்ய பல சாப்ட்வேர் இருந்தாலும் , இது மிகவும் நல்ல சாப்ட்வேர் அண்ணா... !

சசிகுமார் said...

தமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help

http://vandhemadharam.blogspot.com/2010/10/please-help.html

PalaniWorld said...

மிகவும் அருமை வேலன் சார். உங்கள் சேவை எங்களுக்கு தேவை.

மச்சவல்லவன் said...

நன்றி வேலன்சார்.
வாழ்த்துக்கள்...

சீலன் said...

நன்றி வேலன் அண்ணா.
வாழ்த்துக்கள்

வேலன். said...

பி.நந்தகுமார் கூறியது...
தினம் ஒரு சாப்ட்வேர் தந்து அசத்தும் வேலன் அண்ணாவிற்கு நன்றி! பி.நந்தகுமார், காங்கேயம் மின்னஞ்சல் vinothmaligai@gmail.com
ஃஃ

நன்றி நந்தகுமார்..தங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பி.நந்தகுமார் கூறியது...
வேலன் சார் சூப்பர்ஃ

நன்றி

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
பயனுள்ள பதிவுகளையே பதிவிடுவதில் உஙளுக்கு நிகர் நீங்களேதான் வேலன் சார், வாட்டர் மார்க் சாப்ட்வேர் ஏற்கனவே நீங்கள் பதிவிட்ட ஒரு மென்பொருளைதான் பயன்படுத்திவருகிறேன் இப்ப இதையும் பயன்படுத்திபார்க்கிறேன் பகிர்ந்தமைக்கு நன்றி சார்

அப்புறம் நேரமிருந்தால் நம்ம தளத்திற்கும் வருகை தரவும் உங்களைப்போன்ற ஆசான்களின் உற்சாகத்தால் நான் என்னை மெலும் மெருகேற்றிக்கொள்ள உதவியாய் இருக்கும் சார்....
என்றென்றும் உங்கள் வழியில்
உங்கள் மாணவன்

எனது ஆசிகள் எப்போதும் உங்களுக்கு உண்டு சிம்பு சார்...வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

malar கூறியது...
மலர் ரமேஷ் காங்கேயம் நண்பர் நந்தகுமார் மூலம் உங்கள் இணையத்தை பார்த்தேன். நான் ஸ்டுடியோ வைத்திருப்பதால் போட்டோ ஷாப் சாப்ட்வேர் எனக்கு பயனுள்ளதாக இருந்தது.
ஃஃ

நன்றி சகோதரி..தங்கள் முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..தங்களை அறிமுகம் செய்த நந்தகுமாருக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சரன்யா மனோகரன் கூறியது...
வேலன் நன்றுஃ

ந்னறி சகோதரி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
அந்த ஸ்டாம்ப் படத்துல கீறது ஆரு மாப்ஸ்?
உங்க அண்ணாத்தயா ?

ம்..இல்லை இல்லை அது எங்க நைனா மாம்ஸ்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
மிக்க நன்றி!ஃஃ

நன்றி எஸ்.கே. சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

NAGA கூறியது...
வேலன் சார்,பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்.அரவரசன்.

நன்றி அரவரசன் சார்...
வாழ்க வளமுடன்,
வேலன.

வேலன். said...

ஈரோடு தங்கதுரை கூறியது...
வாட்டர் மார்க் செய்ய பல சாப்ட்வேர் இருந்தாலும் , இது மிகவும் நல்ல சாப்ட்வேர் அண்ணா... !

நன்றி தங்கதுரை சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
தமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help

http://vandhemadharam.blogspot.com/2010/10/please-help.html
ஃஃ

வநது ஓட்டும் போட்டுவிட்டேன் சசி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

PalaniWorld கூறியது...
மிகவும் அருமை வேலன் சார். உங்கள் சேவை எங்களுக்கு தேவைஃஃ

நன்றி பழனி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
நன்றி வேலன்சார்.
வாழ்த்துக்கள்ஃ

வாங்க மச்சவல்லவன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சீலன் கூறியது...
நன்றி வேலன் அண்ணா.
வாழ்த்துக்கள்ஃ

நன்றி சீலன் சார். உங்கள் பதிவுகள் நன்றாக இருக்குமே..தொடர்ந்து எழுதலாமே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரசுரத்துக்கல்ல!
அன்புடன்
தாங்கள் தரும் இந்த தொடர்பை என் வீட்டுக் கணனியில் தரவிறக்கி என் படங்களுக்கு பெயரிட முற்பட்டபோது வந்த முடிவில் டெமோ என் சிவப்பு நிறத்தில் படத்தில் நடுவில் வந்து விட்டது.
இதைக் காசு கொடுத்து வாங்கும் படியும் கேட்டது. பழகிப் பார்க்கும் பதிப்பு எனக் கூறியது.
என்ன? காரணம், பின்னூட்டியோர் எல்லோரும் இது பற்றிக் கூறவில்லை. அதனால் நான் ஏதோ தவறிழைத்து விட்டேன் என்பதைப் புரிகிறேன்.
தயவு செய்து ஏன் இப்படி வருகிறது. எனக் கூற முடியுமா?

சிரமத்துக்கு மன்னிக்கவும்.
அன்புடன்
யோகன் பாரிஸ்
johan.arunasalam@gmail.com

வேலன். said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) கூறியது...

நீங்கள் இன்ஸ்டால் செய்ததில் தவறுஇருக்கலாம் என நினைக்கின்றேன். மீண்டும் ஒரு முறை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்யவும்.சரியாக வரும்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...