வேலன்:-செர்ரி ப்ளேயர் -CherryPlayer

வீடியோ பைல்கள்.ஆடியோ பைல்கள்,இணைய வீடியோக்களான யூடியூப் வீடியோக்கள்,பிபிசி செய்திகள்.இணைய பண்பலைகள் பார்க்க கேட்க இந்த பிளேயர் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள பைல்மெனு கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வீடியோ ஆடியோ பைல்களின் யூஆர்எல் முகவரியை காப்பி செய்து இதில் பதிவிட்டால் உங்களுக்கான வீடியோ ஆடியோ பைல்கள் பதிவிறக்கம் ஆகும். 
உங்களுக்கான வீடியோ எந்த அளவில் வேண்டுமோ அதற்கான செட்டிங்ஸ் நீங்கள் அமைத்துக்கொள்ளலாம். ஒவ்வொன்றுக்குமான செட்டிங்ஸ் எதிரில்; அதற்கான பட்டன் கொடுத்துள்ளார்கள். தேவையானதை கிளிக் செய்தால் போதுமானது.
வீடியோவினை தேர்வு செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கான வீடியோ ப்ளே ஆக ஆரம்பிக்கும்.  
 வீடியோக்கள் அதிகமாகவும் உங்கள் ப்ளே லிஸ்டில் சேர்க்கலாம்.
 விண்டோவின் வலதுபுறம் Music.Videos.Radio.MyDownloads.Recent Media.BBC.Billboard.lost.fm.Twitch என நிறைய டேப்புகள்கொடுத்துள்ளார்கள்.
 ரேடியோ பட்டனை கிளிக் செய்திட ஆன்லைன் ரேடியோ பட்டன் கிளிக் செய்திட பண்பலை மற்றும் வானோலி நிலையங்கள் திறக்கும்.
 இதில் ஆசியா -இந்தியா என தேர்வு செய்திட உங்களுக்கு இந்தியாவில உள்ள அனைத்து பண்பலை வானோலி நிலையங்கள் ;ஒப்பன் ஆகும். தேவையான நிலையத்தினை டபுள் கிளிக் செய்திட உங்களுக்கான நிலைய பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும்.
 அதுபோல வீடியோ பைல்களையும் நாம் பார்வையிடலாம்.
 ப்ரவ்சர் செல்லாமல் யூடியூப் இந்த மென்பொருள் மூலம் லாகின் செய்து நீங்கள் யூடியூப் வீடீயோக்களை பார்வையிடலாம்.
டெக்ஸ்டாப்பில பயன்படுத்தும் சிறந்த ப்ளேயராக இது உள்ளதுடன்.வீடியோ.ஆடியோ,பண்பலை.ரேடியோ.மற்றும் நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் ஆதரிப்பதுடன் அனைத்து பார்மெட்டுகளை யும் இது ஆதரிக்கின்றது.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...