இணையத்தில் பயன்படுத்தப்படும் வீடியோக்களை கொண்டுள்ள யூடியூப்.பேஸ்புக்.விமியோ(Vimeo) போன்ற தளங்களிலிருந்து வீடியோக்களை பதிவிறக்கம் செய்திடவும். வேண்டிய பார்மெட்டுக்குமாற்றிடவும் இந்த இணையதளம் உதவுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஏற்கனவே சில யூடியூப் படங்கள் இருக்கும் அதிலிருந்தும் தேர்வு செய்யலாம் அல்லது நமக்கு தேவையான வீடியோவினை தேர்வு செய்திட இதில் உள்ள சர்ச் பாக்ஸில் வீடியோவின் பெயரினை உள்ளீடுசெய்யலாம். நான் இளையராஜா என தட்டச்சு செய்தேன். எனக்கு இளையராஜா பாடல்கள் வந்தது. தேவையான பாடலை தேர்வு செய்து டபுள்கிளிக் செய்திட அடுத்த தளம் ஒப்பன் ஆகியது.தேவையான அளவு மற்றும் பார்மெட்டினை தேர்வு செய்திடவும்.பின்னர இதன் கீழே உள்ள கிராப் என்பதனை கிளிக் செய்யவும்.
சில நிமிடங்களில் உங்களுக்கான வீடியோ பதிவிறக்கம் ஆக ஆரம்பிக்கும்.
பதிவிறக்கம் முடிந்ததும் உங்களுக்கு கம்ளிடெட் என தகவல் வரும்.
இதன் மேல்புறம் உங்களுக்கான வீடியோ முடிந்து Finished என்கின்றத தகவல் கிடைக்கும்.
வீடியோக்கள் மட்டுமல்லாது ஆடியோ பார்மெட்டுக்களையும் இது ஆதரிக்கின்றது. MPEG4.MP3.WMV.OGG மற்றும் ஒரிஜினல் எந்த பார்மெட்டில் இருக்கின்றதோ அதே பார்மெட்டில் டவுண்லோடு ஆகும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
2 comments:
நல்ல பகிர்வு.
சிறப்பு
பாராட்டுகள்
Post a Comment