யூடியூப் வீடியோக்களை HD தரத்துடன் பதிவிறக்கம் செய்திட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் உள்ள GO To Youtube Downloader என்கின்ற ஐகானினை கிளிக் செய்திட உங்களுக்கு யூடியூப் இணையதளம் திறக்கும் அங்குள்ள யூடியூப் வீடியோக்களில் உங்களுக்கு எது விருப்பமானதோ அதனை தேர்வு செய்து அதன் யூஆர்எல் முகவரியை காப்பி செய்யவும். அடுத்த வினாடியே உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வீடியோ எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்திடவும்.வீடியோ சேமிக்கவிரும்பும் இடத்தினை தேர்வு செய்திடவும்.இறுதியாக டவுண்லோடு என்பதனை கிளிக் செய்யவும்.உங்களுக்கு டவுண்லோடு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்களுக்கான வீடீயோ பதிவிறக்கம் ஆவதனை காணலாம்.
இந்த மென்பொருள் உடன் உங்களுக்கு எம்பி4 பிளேயர் என்கின்ற மென்பொருளையும் இணைத்துள்ளார்கள். நீங்கள் முந்தைய மென்பொருளை பதிவிறக்கம் செய்கையிலேயே இந்த மென்பொருளும் பதிவிறக்கம் ஆகிவிடும்.
உங்களுக்கான எம்பி4 வீடியோவினை தேர்வு செய்திடவும்.
வீடியோவினை ப்ளே செய்யும் வசதியும் முழுஸ்கிரீன் பார்க்கும் வசதியும் ஆடியோ வினை அதிகப்படுத்தும் வசதியும் இதில் கொடுத்துள்ளார்கள்.தேவையான வீடியோவினை பதிவிறக்கம் செய்வது மட்டும் அல்லாமல் அதனை ப்ளே செய்தும் பார்த்திடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment