வேலன்:-கணினி பயன்பாட்டினை அறிந்துகொள்ள -Worktime Personal Free

கணினியில் நாம் முகநூல்.விளையாட்டு,இணையம்.இதர கணினி வேலை என கணினியை  பயன்படுத்துவோம்.ஆனால் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு நேரம்செலவழித்தோம் என பார்த்தால் வியப்படைவோம்.விளையாட்டாக இருந்தாலும் சரி,முகநூலக இருந்தாலும்சரி நமக்கு நேரம் போவதே தெரியாது. இநத மென்பொருளில் நாம் எதுஎதுக்கு எவ்வளவு நேரம் செலவழித்தோம் என அறிந்துகொள்ள முடியும். இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும்.

இதன் கீழ்புறம் கணினி பயன்படுத்துபவர்கள் சோர்வடையாமல் இருக்க நிறைய குறிப்புகள் கொடுத்துள்ளார்கள். அதனை ஒவ்வொன்றாக நாம் படித்து பயன்அடையலாம். 
குறிப்பிட்ட நேரம் கடந்ததும் இந்த விண்டோவினை நாம் ஒப்பன்செய்து பார்க்க அதில் நாம் கணினியை எவ்வளவு நேரம் பயன்படுத்தினோம் என அறியலாம்.  
இணையம் எவ்வளவு நேரம் பயன்படுத்திநோம் என அறியலாம். இதன் கீழேயே அன்றைய நாளின் நாம் இணையம் பயன்படுத்திய நேரமும்  தெரியவரும்.
இதுபோல முகநூலில் எவ்வளவு நேரம் செலவழிக்கின்றோம் என அறிந்துகொள்ளலாம். முகநூலிலே அதிக நேரம் செலவழிப்பதாக இருந்தால் நமது தவறினை நாம் திருத்திக்கொள்ளலாம். 
இந்த மென்பொருளை நாம் பயன்படுத்தும் மொத்த பயன்பாட்டினை அறிந்துகொள்ள இதில் உள்ள ரிப்போர்ட் என்பதனை கிளிக் செய்ய நாம் எது எது எவ்வளவு நேரம் பயன்படுத்தினோம் என அறிக்கையாக நமக்கு கிடைக்கும்.


Free Software for Self-Monitoring Monitor Facebook Time ,Monitor Social Websites ,Time Monitor Games ,TimeMonitor Computer Use ,Organize Your Days, Track Your Progress ,Track Software Use Track Website Links Visited Get Reminded to Take Breaks And More! லுவலகத்தில் ஊழியர் வேலை செய்யாமல் முகநூல் மற்றும் விளையாட்டில் நேரம் செலவழித்தாலும் சரி.வீட்டில் குழந்தைகள் முகநூல் மற்றும் விளையாட்டில் பொழிதை கழித்தாலும் சரி நமக்கு எந்த நேரத்தில் எதுஎது பயன்படுத்தினார்கள் என புள்ளிவிவரத்துடன் அறிக்கை கிடைக்கும் இதன் மூலம் அவர்களின் தவறுகளை நாம் திருத்தலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...