புகைப்படங்களை நாம் வேண்டிய அளவிற்கு மாற்றிடஇந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3.1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஒவ்வொரு புகைப்படமாகவோ அல்லது போல்டரில் உள்ள மொத்த புகைப்படங்களை தேர்வு செய்யவும். பின்னர் இதனை எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அங்கு குறிப்பிடவும். பின்னர் ;இதில் உள்ள பிக்ஸல் அளவினையும் சதவீத அளவினையும் தேர்வு செய்யவும். இறுதியாக இதில் உள்ள ரீ சைஸ் கிளிக் செய்யவும்.இப்போது உங்கள் புகைப்படமானது வேண்டிய அளவில் மாறியுள்ளதை காணலாம்.அதுபோல நீங்கள் விருப்பிய புகைப்படங்களை வேண்டிய அளவில் மாற்றிக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment