புகைப்படங்களை மேலும் அழகாக்கவும்.எடிட் செய்திட.ரெட் ஐ நீக்கிட. ரீ டச் செய்திட.பிரஷ் செய்திட.பிரிண்ட் எடுத்திட இந்த மென்பொருள் பயன்படுகின்றது இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதன் கீழே red eye.retuch.brush.crop என நான்கு விதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். உங்களுக்கு எதுதேவையோ அதனை தேர்வு செயதிட அதற்கான டேப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
இதில் முதலில் உள்ள Browse கிளிக் செய்திட நீங்கள் தேர்வு செய்திட்ட டிரைவில் உள்ள அனைத்துபுகைப்பபடங்களும் உங்களுக்கு கிடைக்கும். தேவையான புகைப்படத்தினை நீங்கள் தேர்வு செய்திடலாம்.
புகைப்படங்களை உங்கள் ரசனைக்கு ஏற்றவாறு மாற்றியபின் இதில மூன்றாவதாக உள்ள பிரிண்ட் ஆப்ஷனை கிளிக் செய்திடுங்கள்.
உங்களுடைய பிர7ிண்டர் பெயர்.எத்தனை காப்பி தேவை,எந்த அளவு பேப்பரில் தேவை என்பதனை தேர்வு செயதிடவும். பின்னர் பேப்பரில் எந்த இடத்தில் புகைப்படடம் வரவேண்டுமோ அந்த இடத்தினை தேரவு செய்திடவும்.இறுதியாக பிரிண்ட் கிளிக் செய்திடுகையில் உங்களுக்கான புகைப்படம் நீங்கள விரும்பியவாறு அழகாக வந்துள்ளதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
1 comments:
சிறப்பு
பாராட்டுகள்
Post a Comment