புகைப்படங்களை Crop.Rotate.Remove.Text.Image Correction.Resize போன்ற பணிகளை செய்ய இந்த போட்டோ எடிடடர் சாப்ட்வேர் பயன்படுகின்றது. 8 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உங்கள் விருப்பமான புகைப்படத்தினை கணிணியில் இருந்து தேர்வு செய்யவும்.
இதன் மேல்புறத்தில் நிறைய டேப்புகள் கொடுத்துள்ளார்கள். அதில முதலில் உள்ள கிராப் கிளிக ;செய்திட உங்களுக்கு வரும் விண்டோவில் புகைப்டத்தின் உயரம் மற்றும் அகலத்தினை தேர்வு செய்து இதில் உள்ள கிராப் பட்டனை கிளிக் செய்யவும். சில நொடிகளில் நீங்கள் விரும்பிய அளவில் புகைப்படம் கிடைக்கும். இதில் விருப்பப்பட்டால் உங்களுக்கு தேவையில்லாதவர்களின் புகைப்டத்தினையும் நீக்கி விடலாம்.அடுத்துள்ள டேபினை கிளிக் செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வலதுபுறம் ஒப்பன் ஆகும். இதில் புகைப்படத்தினை இடது புறமாகவோ வலது புறமாகவோ மாற்றலாம். மேலும் ஓரு குறிப்பிடட கோணத்தில் படங்களை மாற்றி அமைக்கலாம். அதற்கான வசதி இதில கொடுத்துள்ளார்கள்.
அடுத்து ரீமூவ் டூல் கொடுத்துள்ளார்கள். இதில் தேவையில்லாத பகுதியை நீக்கிவிடலாம். புகைப்படத்தில் தேவையில்லாமல் இருக்கும் வாட்டர் மார்க்கை நீக்கிவிடலாம். தேவையில்லாத நிறங்கள் இருப்பின் அதனை தேர்வு செய்து அதனை நீக்கிவிடலாம். புகைப்படங்களில் தேதி இருந்தால் அதனை நீக்கிவிடலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
சிலபுகைப்படங்கள் அதிக வெளிச்சத்துடனும் சில புகைப்படங்கள் குறைந்த வெளிச்சத்துடனும் இருக்கும் அவ்வாறான புகைப்படங்களை நாம் வேண்டிய வெளிச்சத்திற்கு கொண்டு வரலாம்.
புகைப்படங்களில் வேண்டிய குறிப்புகளையோ அதில் உள்ள நபர்களின் பெயர்களையோ போட்டோவிலேயே தட்டச்சு செய்ய இந்த டூல் பயன்படுகின்றது. இதனை பயன்படுத்தி நாம் விரும்பிய டெக்ஸ்டை விரும்பிய பாண்ட்டில் தட்டச்சு செய்து கொள்ளலாம்.
ஓரே சாப்ட்வேரிலேயே ஆறுக்கும் மேற்பட்ட பணிகளை செய்து நமது வேலையை சுலபமாக்குகின்றது. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment