வேலன்-நமதுபெயரில் விதவிதமான கூகுள் லோகோ வரவழைக்க

நமது பெயரில் கூகுளின் இணையதளம் வந்தால் எப்படி இருக்கும். அந்த வசதியை இந்த இணைய தளம் நமக்கு தருகின்றது. அந்த தளம் செல்ல நீங்கள் 
இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட இணைய தளம் ஓப்பன் ஆகும். அதில் உள்ள Enter your Name Here என்கின்ற விண்டோவில் நமது பெயரை தட்டச்சு செய்யவும். 
அதன் கீழே உள்ள விண்டோவில் விதவிதமான எழுத்துருக்கள் இருக்கும் நமக்கு எந்த டிசைன் தேவையோ அந்த எழுத்தின் கீழே உள்ள ரேடியோ பட்டனில் கிளிக் செய்து என்டர் தட்டவும்.
சில வினாடிகளில் நமது பெயருடன் கூகுளின் இணைய தளம் ஓப்பன் ஆகும்.கீழே உள்ள விண்டோவில் பாரக்கவும்.


கூகுளின் லோகோ-ஸ்டைலிலும் நமது பெயரை கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

நீங்களும் உங்களுக்கு விருப்பமான பெயரை தட்டச்சு செய்து வேண்டியவர்களுக்கு அதன் லிங்க அனுப்பிவையுங்கள். அவர்கள் அந்த லிங்கை கிளிக் செய்கையில் அவர்களுடைய பெயர் அங்கு கிடைக்கும்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-நேர உதவி(Time Clue)

காலம் பொன் போன்றது...கடமை கண்போன்றது....சிலர் அலுவலக வேலையில் நேரம்போவதுதெரியாமல் வேலை செய்துகொண்டே இருப்பார்கள்.அவர்களுக்கான சின்ன சாப்ட்வேர் இது. 450 கே.பி.அளவுள்ள 
இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் டாக்ஸ்பாரில் வந்து அமர்ந்துகொள்ளும். அதனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமககு எவ்வளவு நிமிடத்திற்கு நேரம் வரவேண்டுமோ அதனையும் எவ்வளவு வினாடிகள் அது நமது கம்யூட்டரில் டிஸ்பிளே ஆகவேண்டுமோ அந்த நேரத்தையும் பின்புற நிறம் மற்றும் எழுத்தின் நிறத்தையும் அளவினையும் நிர்ணயித்து பின்னர் ஓ.கே. கொடுங்கள். இப்போழுது நீங்கள் எவ்வளவு நேரத்திற்கு செட் செய்துள்ளீர்களோ அந்த நேரத்தில் நீங்கள் எந்த அப்ளிகேஷனில் பணிபுரிந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு நேரம் வந்து மறையும்.கீழ்கண்ட விண்டோவில் பாருங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-நண்பர்களின் ஸ்கிரீன்சேவர்.

எவ்வளவு நாளைக்கு தான் நாம் நமது புகைப்படங்களை ஸ்கிரீன்சேவராக வைத்திருப்பது.ஒரு மாறுதலுக்கு நமது நண்பர்கள் புகைப்படங்களை ஸ்கிரீன்சேவராக வைத்திருக்கலாமே? 9 எம்.பி.கொள்ளளவு கொண்ட நண்பர்களின் புகைப்படத்தை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் விதவிதமான தோற்றத்தில் நண்பர்கள் ஸ்கிரீன்சேவரில்வருவார்கள்.விதவிதமான தோற்றங்கள் கீழே-







குழந்தைகள் உணவு சாப்பிட அடம்பிடித்தால் பூச்சாண்டி மாமா வருவார் என பயமுறுத்தவேண்டாம். இந்த ஸ்கிரீன்சேவரை போட்டுவிட்டால் போதும்.பயமுறுத்தும் இசையுடன் ஸ்கிரீன்சேவர் உலா வரும்.குழந்தைகள் சமர்த்தாக உணவு சாப்பிடும்.
பயமுறுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-கர்சரில் கெடிகாரம் கொண்டுவர

சிலர் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடுவார்கள்.நேரம் அவர்களுக்கு அவ்வளவு முக்கியம்.ஒவ்வொரு நிமிடமும் அவர்களுக்கு அவசியம். டாக்ஸ்பாரில் கடிகாரம் இருந்தாலும் டெக்ஸ்டாப்பில் இருந்து பார்வையை திருப்பவேண்டும் அல்லவா,?அவர்களுக்காகவே கர்சர் முனையிலேயே கடிகாரம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.அவர்களுக்காகவே இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுககு அதற்கான ஐ-கான் டாக்ஸபாரில் வந்து அமர்ந்துகொள்ளும். அதனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் கெடிகாரம் நிறத்தையும் நேரத்தின் அளவினையும் நாம் முடிவு செய்யலாம். அதைப்போலவே செகண்ட் டையும் கர்சருக்கு வலது -இடது புறத்தையும் முடிவு செய்யலாம்.எழுததுரு போல்ட் ஆக தேவையென்றாலும் அதனையும் நாம் அமைத்து்ககொள்ளலாம். இனி நீங்கள் எந்த அப்ளிகேஷன் திறந்தாலும் கர்சர் கூடவே உங்களுக்கு நேரம் வந்துகொண்டே இருக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
கர்சரிலேயே கடிகாரம் வைத்துக்கொண்டு நாமும் பிஸியாக ஆகிவிடலாம்  இல்லையா? நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-வேர்ட் ஆர்ட் செய்ய.

வழக்கமாக நாம் வார்த்தைகளை டிசைன் செய்ய வேர்ட்டை தான் தேர்வு செய்வோம். வேர்ட் அப்ளிகேஷன் இல்லாதவர்கள் டிசைன் செய்வது சற்று சிரமமே.வேர்ட்டில் செய்யும் டிசைன்வேலையை வேர்ட் இல்லாமலேயே நாம் தனியே செய்யலாம். அதற்கு Word Art Generator என்கின்ற இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது.2 எம்.பி.க்கும் குறைவான இந்த சாப்ட்வேரினை டவுண்லோடு செய்ய நீங்கள் இங்கு கிளிக்  https://inkpx.com/word-art-generatorசெய்யவு்ம்.

நீங்கள் இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விணடோ ஓப்பன் ஆகும். அதில் மேலே உள்ள Text என்பதின் கீழ் உள்ள விண்டோவில் தேவையான டெக்ஸ்டை தட்டச்சு செய்யவும்.அதனைப்போலவே பாண்ட் என்பதில் உங்கள் கணிணியில் உள்ள எழுததுருவினை தேர்வு செய்யவும். எழுத்தின் அளவினையும் நிர்ணயம் செய்துகொள்ளுங்கள். அதற்கும் கீழே ஏழு சிறிய கட்டங்கள் உள்ளது. தேவையான கட்டத்தின் முன் டிக் அடையாளம் கொடுங்கள்.எழுத்தின் நிறத்தையும் பின்புற நிறத்தையும் தேர்வு செய்யவும்.Gradual என்பதில் டிக் செய்து எழுத்தின் நிறம் மாறுவதை காணலாம். ஆரம்ப நிறத்தையும் முடியும் நிறத்தையும் தேர்வு செய்துகொள்ளுங்கள்.Shadow வின் நிறத்தையும் தேர்வு செய்து இறுதியில் வார்த்தைகளை இமேஜாக சேமித்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதாங்க. இதனை நீங்கள் போட்டோஷாப் உட்பட எல்லாவித அப்ளிகேஷன்களிலும் உபயோகித்துக்கொள்ளலாம்.கீழே உள்ள வார்ததைகளை கவனியுங்கள்.


பயன்படுத்திப்பாருங்கள். கருததுக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-துப்பறியும் விளையாட்டு

புரபஸர் ஒருவரை கடத்திக்கொண்டு சென்று காட்டில் ஒளித்துவைத்துவிடுவார்கள். அவரை தேடிக்கொண்டு 4 பேர் கொண்ட குழு ஒன்று செல்லும் சமயம் அவர்களின் விமானத்தை வில்லன் சுட்டுவிடுவான்.குழுவினர் தனிதனியே பிரிந்துவிடுவார்கள்.ஒவ்வொருவருக்கு்ம் ஒவ்வொருவிதமாக அடிப்பட்டு விடும்..அதை எல்லாம் சரிசெய்ய சரிசெய்ய அடுத்த லெவல் செல்ல ஒவ்வொரு குளு கிடைக்கும். அதை கண்டுபிடித்தால் விளையாட்டு தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும்..150 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
விளையாட்டில் இடம்பெறும் காட்சிகள் சில கீழே-



இறுதியில் வில்லன் இடம் இருந்து அந்த ப்ரபஸரை மீட்டுகொண்டுவரவேண்டும். சனி -ஞாயிறு குழந்தைகளுக்கு நன்கு பொழுதுபோகும்.விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-தேவைகளை சுலபமாக தேட

தட்டுங்கள் திறக்கப்படும்....கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொல்லுவார்கள். இந்த சாப்ட்வேரில் தேடுங்கள் ...கொடுக்கப்படும் என்று சொல்லலாம். நமது கணிணியில் உள்ள எதையும் நொடியில் தேடலாம்.வழக்கமாக நாம் ஏதாவது கணிணியில்தேடும் சமயம் Start-Search-சென்று தேவையானதை தேடவேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரில் தேடும் நேரம் அதிகமாக நமக்கு மிச்சமாகும். 300 கே.பி.அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவைப்படும் பைலின் பெயரை தட்டச்சு செய்ய நொடியில் அதுசம்பந்தமாக நமக்கு அனைத்து டிரைவிலிருந்தும் கிடைக்கும். 
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-4 பாஸ்போர்ட் மற்றும் 9 ஸ்டாம்ப்சைஸ் புகைப்படங்கள் ரெடி செய்ய

கடந்த வாரம் கரூர் நண்பர் திரு.தியாகராஜன் அவர்கள் போன்செய்திருந்தார்..நீங்கள் ஏற்கனவே பாஸ்போர்ட் மற்றும் ஸ்டாம்ப் சைஸ் புகைப்படங்கள் போட்டோஷாப் மூலம் உடனே தயார் செய்வதுபற்றி பதிவிட்டுள்ளீர்கள்.எனக்கு 4 பாஸ்போர்ட் மற்றும் 9 ஸடாம்ப்சைஸ் போட்டோக்கள் ஒரே சமயத்தில் தேவை. அதனை எவ்வாறு ஆக்ஷன் டூல் மூலம் கொண்டுவருவது என்று கேட்டார். அவரி்ன விருப்பத்திற்கு இணங்க இங்கு 4 பாஸ்போர்ட் மற்றும் 9 ஸ்டாம்ப்சைஸ் புகைப்படங்கள் கொண்டுவருவது பற்றி பதிவிட்டுள்ளேன். முதலில் 3 கே.பி. அளவுள்ள இந்த ஆக்ஷன் டூலை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.போட்டோஷாப்பினை திறந்துகொண்டு வழக்கப்படி அதனை போட்டோஷாப்பினுள் கொண்டுவந்துவிடுங்கள்.
 இப்போது தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்து ஓப்பன் செய்துகொள்ளுங்கள்.கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
 ஆக்ஷன் டூலினை கிளிக செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும் அதில் புகைப்படத்தில் முகம் நடுவில் வருமாறு தேவையான இடத்திற்கு அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள்.
 என்டர் தட்டுங்கள். சில நொடிகளில் உங்களுக்கு புகைப்படம் ரெடி. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதனைப்போலவே குழந்தை ஒன்றின் புகைப்படத்தைதேர்வு செய்துள்ளேன்.
 ஆக்ஷன் டூலில் தேர்வு செய்தபின் வந்துள்ள படம் கீழே-
நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-அழகான மூன்று ஆங்கில எழுத்துக்கள்.

அழகான ஆங்கில எழுத்து கிடைக்கும்போது அதை தேவைப்படும் இடத்தில் உபயோகிக்கலாம். போட்டோ டிசைன்செய்பவர்களுக்கு விதவிதமான டிசைன் எழுத்துக்கள் அடிக்கடி தேவைப்படும்.இங்கு மூன்றுவிதமான ஆங்கில எழு்த்துக்கள் பதிவிட்டுள்ளேன்.160 கே.பி. அளவுள்ள அதனை பதிவிறக்கம் செய்ய் இங்கு கிளிக் செய்யவும்.வழக்கப்படி அதனை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.


 இப்போழுது நீங்கள் தேவையான புகைப்படததை திறந்துகொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு 4 வரி நோட்டில் எழுத சொல்லிக்கொடுப்பார்கள். அதுபோல் இதில் நான்குவரிகளில் நாம் எழுதும் எழுத்துக்கள் அழகாக வரும்.புதியதாக எழுத்துக்களை பழகும் குழந்தைகளுக்கும இதுபயன்படும்.
சேர்த்து எழுதுவது ஒரு தனிக்கலை. இங்கு புகைப்படத்தில் சேர்தது எழுதிஉள்ளதை காணுங்கள்.

கடைசியாக ஒரு மாடல் எழுத்து.எழுத்தின் கீழே அழகான கோடுகளுடன் நமக்கு காட்சியளிக்கின்றது.

போட்டோ டிசைன்செய்பவர்களும்.போட்டோக்களில் நகைச்சுவை கமெண்ட்எழுதுபவர்களும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-போட்டோமேஜிக்.

சூ...மந்திரகாளி...வா..இந்தப்பக்கம்...வந்தேன்...மந்திரவாதி இவ்வாறு சொல்வதை கேட்டிருப்பீர்கள். அதைப்போல நாம் நமது புகைப்படங்களை சூ...மந்திரகாளி என சொல்லி நொடியில் வேண்டிய அளவிற்கு மாற்றிவிடலாம். தனிதனி புகைப்படமாகவோ-போல்டரில் உள்ள அனைத்து புகைப்படங்களையுமோ நாம் எளிதில் மாற்றிவிடலாம். 2 எம்பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்கு கிளிக் https://photo-magician.en.softonic.com/செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து கிளிக செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட் விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள இன்புட் போல்டரில் உங்கள் புகைப்படம் இருக்கும் இடத்தை தேர்வு செய்யவும். அதைப்போலவே மாற்றிய புகைபடம் வரவேண்டிய போல்டரையும் தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதல் உள்ள Select a Profile கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும். அதில உங்களுக்கு தேவையான அளவினை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
மேலும் இதில் Common Setting.Options என இரண்டு டேப்புகள் உள்ளது தேவையான அளவினை தேர்வு செய்துகொள்ளுங்கள்.இதில் உடனடி மாற்றம் கொண்டுவருவதற்கும் வசதிஉள்ளது.இதில் உள்ள Quick Convert Mode தேர்வு செய்தால் உங்களுக்கு மேஜிக் நிபுணர் தலையில் உள்ள தொப்பி படம் கிடைக்கும். இதில் நாம் அவுட்புட்போல்டரை தேர்வு செய்தபின்னர் புகைப்படத்தை இதில் இழுத்துவந்து போட்டுவிடவேண்டும்.சில நொடியில் நமக்கு தேவையான படம் ரெடி.

சுலபமாக -விரைவாக எளிமையாக உள்ளதை நீங்கள் பயன்படுத்தும்போது அறிந்துகொள்வீர்கள.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-அனைத்து விளையாட்டுகளின் சீட்கோட் புத்தகம்.

விளையாட்டு என்றாலே குழந்தைகளுக்கு நேரம்போவதே தெரிவதில்லை.நாம் கம்யூட்டரில் விளையாட்டினை இன்ஸ்டால் செய்தாலும் அதன் ரகசிய குறியீடுகள் தெரிந்தால் தான் விளையாட்டு சுலபமாக இருக்கும். சுமார் 200 விளையாட்டுக்களுக்கான Cheat Code கள் இந்த புக்கினில் பதிவிட்டுள்ளார்கள். 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்க்ம செய்ய நீங்கள் இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலதுபுறம் விளையாட்டுகளின் வகைகள் இருக்கும். அதில தேவையானதை தேர்வு செய்ததும் உங்களுக்கு இடதுபுறம் அந்த விளையாட்டுக்குறிய அனைத்து ரகசியங்களும்-சீட்கோடுகளும் கிடைக்கும்.தேவையானதை தேர்வு செய்து பிரிண்ட் எடுத்து்ககொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-பெரிய பைக் ரேஸ் விளையாட்டு


பள்ளிகள் ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் பாட புத்தகங்கள் வரவில்லை..அதனால் விளையாட்டினை தொடரலாம். பைக் ரேஸ் விளையாட்டு குழந்தைகளுக்கு பிரியமானது. சற்று பெரிய கேமான இது 73 எம்.பி. கொள்ளளவு கொண்டது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை 
இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான செட்டிங்ஸ் அமைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான வண்டி ரெடி. ஒட்ட ஆரம்பியுங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-அழகிய கிளிகளின் ஸ்கிரீன்சேவர்

சொன்னதை சொ்ல்லும் கிளிப்பிள்ளை என்பார்கள். பல வண்ண நிறத்தில் கிளியின் அழகே அழகு, இங்கு சில கிளிகளின் ஸ்கிரீன்சேவரை நாம் காணலாம். 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட கிளிகள் உங்கள் டெக்ஸ்டாப்பில் ஸ்கிரீன்சேவராக உலா வரும்.






பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.


பின்குறிப்பு- சில தொழில்நுட்ப காரணத்தால் சென்ற பதிவில் பதிவிட்ட போட்டோக்களை டிசைன் செய்ய என்கின்ற பதிவு பின்தேதியில் சென்றுவிட்டது். அந்த பதிவினை படிக்காமல் விட்டவர்கள் அந்த பதிவினை காண இங்கு கிளிக் செய்து படித்துக்கொள்ளவும்.





பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...