வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

 வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் ;அட்டையையும் இணைக்கும் பணி தற்போது நடந்துவருகின்றது. இதற்காக சிறப்பு முகாம்களும் அமைத்துள்ளார்கள். இதுதவிர ஒவ்வொரு வீடாக சென்றும் ஆதார் அட்டையையும் வாக்காளர் அட்டை எண்ணையும் இணைத்துவருகின்றார்கள். இணையத்திலும் நாம் சுலபமாக இவை இரண்டையும் இணைத்துக்கொள்ளலாம். முதலில் அவர்கள்இணையதளமான http://nvsp.in/ என்கின்ற இணையதளத்தினை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும். அவ்வாறு வரும் விண்டோவில் கீழ்கண்ட நிரலில் கடைசியாக உள்ள ஐகானை கிளிக் செய்யுங்கள்.
 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள ஆதார் பெயரை எவ்வாறு ஆதார் அட்டையில்உள்ளதோ அதனைபோன்றே இந்த அப்ளிகேஷனிலும் நிரப்புங்கள்.
 EPIC நம்பர் என கேட்டுள்ளார்கள். உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டையிருந்தால் அதில் இந்த எண் இருக்கும். வாக்காளர்அடையாள அட்டை கைவசம் இல்லாமல் இருந்தால் உங்கள் பெயர் முகவரி.வயது. இருப்பிடம் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்தால் உங்களுக்கான வாக்காளர் அடையாள எண் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

 இதனை அடுத்து உங்கள் ஆதார் எண் மற்றும் உங்கள் தொலைபேசி எண் அல்லது உங்கள் இமெயில் முகவரிகொடுத்து சப்மிட் செய்யுங்கள்.

 சில நொடிகள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் ஆதார் அடையாள அட்டையின் எண்ணும் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணும் இணைத்துவிட்டதாக உங்களுக்கு தகவல் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

அங்கும் இங்கும்அலையாமல் வீட்டில் அலுவலகத்தில் இருந்தபடியோ நாம் இரண்டையும் இணைத்துவிட்டோம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...