Musetips என பெயர்கொண்ட இந்த நிறுவனத்தில் 5 விதவிதமான சாப்ட்வேர்களை அறிமுகம் செய்துள்ளார்கள். அனைத்துசாப்ட்வேர்களையும்சேர்த்து 4 எம்.பி.கொள்ளளவுதான் வருகின்றது. அனைத்தையும் நீங்கள் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் http://www.musetips.com/products.htmlசெய்யவும்.இனி ஓவ்வொரு சாப்ட்வேர்பற்றியும் அதனை பயன்படுத்துவது பற்றியும் இங்கு காணலாம்.
MP3 கட்டர் மற்றும் எடிட்டர்.
முதலில் உள்ள MP3 கட்டர் மற்றும் எடிட்டரைபற்றி காணலாம். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். நம்மிடம் உள்ள எம்.பி.3 பாடலை தேர்வு செய்யவும். பாடலை பிளே செய்யவும்.இதில் எந்த இடத்தில் தேவையில்லையோ அல்லது எந்த இடம் தேவையோ அதனை தேர்வு செய்யுங்கள்.
இதில் உள்ள Set Start கிளிக் செய்து தேவையான இடம் வந்ததும் நீங்கள் இதில் உள்ள Set End கிளிக் செய்து செவ் செய்துகொள்ளவும்.
WMA கட்டர் மற்றும் எடிட்டர்.
எம்.பி.3 கட்டர் மற்றும் எடிட்டர் செய்ததுபோலவே நாம் நம்மிடம் உள்ள WMA -Windows Media Audio பைல்களையும் இதனையும் செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
MP3 ரிங்டோன் மேக்கர்.
நம்மிடம் உள்ள பாடல்களில் ரிங்டோன் தேர்வு செய்து நமது செல்போல்களில் ரிங்டோனாக வைத்துக்கொள்ளலாம்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள பாடலை தேர்வு செய்யவும். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான இடம் வந்ததும் இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையான இடத்தினை தேர்வு செய்யவும்.
இறுதியாக இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்க்ணட் விண்டோ ஓப்பன்ஆகும். இதில் நாம் சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்யவும்.
Free Ringtone Maker
எம்.பி.3 அல்லாது பிற பாடல்களில் இருந்தும் நாம் நமது ரிங்டோனை தயாரிக்கலாம். இதனை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
தேவையான பாடலை தேர்வு செய்து தேவையான இடத்தில் கட் செய்திடவும்.
விரும்பும் டிரைவில் சேமித்துவைக்கவும்.
சேமித்துவைத்த இடத்தில் சென்று பார்த்தால் நமக்கான பாடலின் ரிங்டோன் கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
Text Filter.
நம்மிடம் உள்ள பைல்களில் உள்ள வார்த்தைகளை சுலபமாக தேட இந்த சாப்ட்வேர் பயன்படுகி்ன்றது. இதனை இன்ஸ்டால் செய்து இதி்ல் உள்ள பைல் மூலம் நம்மிடம் உள்ள பைலை ஓப்பன் செய்யவும். தேடவிரும்பும் வார்த்தையை தட்டச்சு செய்யவும்.
நாம் தேடிய வார்த்தைகள் மஞ்சள் நிற ஹைலைட்டுடன் நமக்கு டிஸ்பிளே ஆகும. பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்
வாழ்க வளமுடன்.
வேலன்.