வேலன்:-வேர்ட் பைலில் பாண்ட் வகை.நிறம்,அளவுகளை எளிதில் மாற்ற

அலுவலக பணிகளாகட்டும் வீட்டு உபயோகத்திற்காகட்டும் நாம் வேர்டில் டாக்குமெண்ட்களை தட்டச்சு செய்து வைத்திருப்போம். அந்த டாக்குமெண்டில் உள்ள பாண்ட் டிசைன.சைஸ்.கலர் நமக்கு பிடிக்காமல் போகலாம். அந்த மாதிரியான சந்தர்பத்தில் நம்மிடம் உள்ள பைலை நமக்கு தேவையான பாண்ட்டில்.தேவையான அளவில் - தேவையான நிறத்தில் எளிதில் கொண்டுவர இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது. 3 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விணடோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள Add Word Files-ல் நம்மிடம் உள்ள ஒரு வேர்ட்பைலையோ Add All Word Files in Folder -ஐ தேர்வு செய்திட போல்டரில் உள்ள அனைத்து வேர்ட் பைல்களையும் தேர்வு செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இதில் கொடுத்துள்ள ரேடியோ பட்டனை தேர்வு செய்வதன் மூலம் தேவையான ஆப்ஷன்களை நாம் தேர்வு செய்ய்லாம். அனைத்து பணிகளும் முடிந்தபின்னர் இதில் உள்ள Start Changing கிளிக் செய்திடுங்கள்.Progess Bar --ல் மஞ்சள் நிற கட்டம் மூலம் நமது தேவை நிறைவேறுவதை நாம் அறிந்துகொள்ளலாம்.இந்த பணிக்கு  உங்களுக்கு கீழே கண்ட விண்டோ  கிடைக்கும்.
 பாண்ட் சைஸ் மாறியதும் உங்களுக்கு கீழ்கண்ட மெசேஜ் விண்டோ ஓப்பன் ஆகும்.
மொத்தமாக பைல்களை மாற்றுவதற்கு எளியதாக உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பிடிஎப் பைலை பிளாஷ் பைலாக மாற்ற


சில சமயங்களில் நாம் பிடிஎப் பைல்களை பிளாஷ் பைல்களாக மாற்ற விரும்புவோம். அந்த நேரத்தில் நமக்கு உதவ இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. 8 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உங்களிடம் உள்ள பிடிஎப் பைல்களை டிராக் அன்ட் டிராப் முறையில் இழுத்துவந்தோ - அல்லது இதில் உள்ள ADD FILES மூலம் தேர்வு செய்யவும்.பிளாஷ் பைல் எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யவும்.
இதில் உள்ள கன்வர்ட் கிளிக் செய்யவும். சில நிமிடங்களில் உங்கள் பைலானது பிடிஎப்பிலிருந்து பிளாஷ் பைலாக கன்வர்ட்டாக தொடங்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக பணி முடிந்ததும் நீங்கள் சேமிக்க சொன்ன இடத்தில் சென்று பாரத்தால் உங்கள் பிடிஎப் பைலானது பிளாஷ் பைலாக மாறி இருப்பதனை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோ டூ வீடியோ

வீடியோக்களை விரும்பியவாறு டிவிடியிலோ - கணிணியிலோ-செல்போனிலோ -யூடியூபிலோ -பார்க்கவிரும்புவோம் மற்றவர்களுக்கு கொடுக்கவிரும்புவோம்.வீடியோக்களை நாம் விரும்பியவாறு மாற்ற இந்த சாப்ட்வேர் உதவுகின்றது.வீடியோ டூ வீடியோ என பெயரிடப்பட்டுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள Add Video  கிளிக் செய்து உங்களுடைய வீடியோவினை தேர்வு செய்யுங்கள்.
இதில் நமது வீடியோவினை தேர்வு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ முதலில் ஓப்பன் ஆகும.இதில் 30 வகையான வீடியோ பார்மெட்டுக்கள் கொடுத்துள்ளார்கள்.தேவையான பார்மெட்டின் வீடியோ புகைப்படத்தினை கிளிக் செய்தால் போதுமானது.உங்களது வீடியோ அந்த குறிப்பிட்ட பார்மெட்டுக்கு மாற தொடங்கிவிடும்.
மேலும் இதில் Video profiles.Audio profiles.Apple.Android.Mobile.Sony.Blackberry.Other Devices.You Tube.HDTV என நிறைய டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.போன் மாடல்களில் எதுஎது உள்ளதோ அனைத்தும் இதில் கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் வீடியோவினை சேர்க்க,ஆடியோவினை சேர்க்க,வீடியோவினை பிரிக்க.டிவிடியிலிருந்து வீடியோவினை கன்வ்ர்ட்செய்ய.வீடியோவினை சிடியில் பதிவுசெய்ய என நிறைய வசதிகள்கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
Main Informations --ல் நமக்கு தேவையான விவரங்களை அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் ப்ரிவியூ பார்க்கும் வசதி உள்ளது.மேலும் வீடியோ ப்ரிவியூ வை பார்க்கும் சமயம் நாம் அதில் உள்ள சிறந்த காட்சிகளை புகைப்படம் எடுக்கும் வசதியும் கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
தெரிந்த விவரங்கள் கொடுத்துள்ளேன். மேலும் இதில் உள்ள கூடுதல் விவரங்களை  கீழே கொடுத்துள்ளேன்.


  • Video converter is free software
  • Supports over 200+ of input formats
  • Supports over 700+ of output presets
  • Supports a large number of output video formats: AVI, DivX, Xvid, mpeg-4, AVC/H264, mpeg, mpeg2, MOV, WMV, 3GP, 3GP2, MKV, WEBM, SWF, FLV, RM, ASG, GIF, DV...
  • Supports many output audio formats: mp2, mp3, aac, ac3, wav, m4a, Vorbis, 3gpp, flac, mmf, iff, au...
  • You can convert almost all existing video and audio formats
  • Easy to use
  • Has a built-in high quality DVD Ripper that supports foreign languages subtitles
  • Video Joiner with which you can combine multiple movies in one video
  • Has a built-in Video Splitter with which you can cut out parts of the video that you find interesting, so you don’t convert the entire video
  • Converting video is reliable and fast
  • You can also convert to DVD video (supported DVD Authoring)
  • Embedded tools for burning video DVDs
  • Support for subtitles (internal and Vobsub Filter)
  • Video presets
  • Basic video filters
  • Watermark
  • Shapshots
  • Live preview
  • There is also a portable version of the video converter
  • Main languages are supported
இதனை முகவரி தளம் காண இங்கு கிளிக் செய்யவும்.

பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-டெக்ஸ்டாப் ஐ-கான்களை மறையவைக்க

அவசரத்தில் நாம் பைல்களை -புகைப்படங்களை - டாக்குமென்ட்களை சுலபமாக எடுத்து பயன்படுத்த டெக்ஸ்டாப்பில் வைத்துவிடுவோம்.சில சமயங்களில் ஐகான்கள் நிரம்பி டெக்ஸ்டாப்பில் இடமே இருக்காது.டெக்ஸ்டாப்பில் உள்ள ஐகான்களை மறையவைத்து தேவைபடும்சமயம் பயன்படுத்த இந்த சின்ன சாபட்வேர் நமக்கு பயன்படுகின்றது. 200 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள Hide Icons கிளிக் செய்ய டெக்ஸ்டாப்பில் உள்ள ஐ-கான்கள் மறைந்துவிடும்.கீழே உள்ள புகைப்படத்தினை பாருங்கள்.
 இதில் உள்ள Show Icons கிளிக் செய்தால் நமது டெக்ஸ்டாப் பழையவாறு மாறிவிடும்.கீழே உள்ள புகைப்படத்தினை பாருங்கள்.
இதனைப்போல நாம் டெக்ஸ்டாப்பில் உளள பேக்ரவுண்ட் புகைப்படத்தையும் மாற்றலாம்.மேலும் பேக்ரவுண்டில் உள்ள புகைப்படங்கள் - ஐ கான்கல் என அனைத்தையும் மறையவைத்து மீண்டும் கொண்டுவரலாம். பயன்படுத்திப்பர்ருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய அளவுக்கு சுருக்க

புகைப்படங்களை சமயங்களில் நாம் சுருக்கவேண்டிய தேவை வரலாம். அந்த சமயங்களில் இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது.5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் புகைப்படங்களின் பைல்களையோ - புகைப்படங்கள் உள்ள போல்டர்களையோ தேர்வு செய்யவும்.அல்லது டிராக் அன்ட் டிராப் முறையில் தேர்வு செய்யவும். 
 இதில் உள்ள ரீ-சைஸ் செட்டிங்ஸ் கிளிக் செய்ய உங்களுக்கு வரும் விண்டோவில் Profile தேர்வு செய்யவும். அகலம் உயரம் மற்றும் பிக்ஸல்கள் தேர்வு செய்யவும.நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்யவும. எல்லா செட்டிங்ஸகளையும் நீங்கள் செய்து முடித்தவுடன் இதில் உள்ள Start Resize கிளிக் செய்யவும்.
 உங்களது புகைப்படங்கள் அளவு மாறியிருப்பதை காணலாம். இதில் கூடுதல் வசதி என்ன என்றால் நீங்கள் இந்த சாபட்வேரினை இன்ஸ்டால் செய்ததும் உங்களுடைய ஒவ்வொரு புகைப்டங்களிலும் இந்த சாப்ட்வேர அமரந்துகொள்ளும்.நீங்கள் புகைப்படத்தினை ரைட் கிளிக் செய்ய உங்களுக்கு அதற்கான ஆப்ஷன்கள் நேரடியாக கிடைக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் Edit.Preview.Print.Encode/Decode files..அடுத்து .Resize Pictures.மற்றும் Resize Pictures Pro உள்ளதை கவனியுங்கள். இங்கிருந்தும் நீங்கள் புகைப்படங்களை நேரடியாக மாற்றிக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க  வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...