வேலன்:-இணைய தமிழ்மாநாடு பற்றிய விரிவான விளக்கங்கள்.



அனைவருக்கும் வணக்கம்.
தமிழ் இணைய மாநாட்டுக்காக நாம் கட்டுரையை அனுப்புவது பற்றிய பதிவை இணைத்திருந்தேன்.அதை காணுராதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.இந்த கட்டுரைக்கு நமது நண்பர்கள் மிகுந்த ஆதரவும் வரவேற்பும் அளித்தார்கள். இந்த மாநாடுக்கான விரிவான தகவல்கள் பெற நண்பர் ஒருவர் லிங்க அனுப்பியுள்ளார். அதில் கீழ்கண்ட தகவல்கள் உள்ளன. 
தேவையான டேபை கிளிக் செய்து மேலும் விவரங்கள் அறிந்து உங்கள் கட்டுரையை அனுப்பி வையுங்கள். விரிவான இந்த தளம் காண இங்கு கிளிக் செய்யுங்கள். கட்டுரையை அனுப்புங்கள். மறக்காமல் மற்ற நண்பர்களுக்கும் சொல்லி கட்டுரையை அனுப்பசொல்லுங்கள். நமக்குள் வெற்றி யார் பெற்றாலும் அது நம் அனைவரின் வெற்றியாகும். வெற்றி நமதே....
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப்பில் தமிழ் எழுத்துக்கள்

சற்றே கண்மூடி கண்திறப்பதற்குள் 250 ஆவது பதிவு வந்துவிட்டது.பின்தொடரும் 400 தோழர்களுக்கும்,அன்பும் ஆதரவும் கொடுத்துவரும் சக பதிவு நண்பர்கள்-,சகோதரிகளுக்கும் மற்றும் உள்ள  அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி...தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டி...
அன்புடன்.
வேலன்.


இன்ஸ்டன்ட் காபி,இன்ஸ்டன்ட் இட்லி,வடை போல் இது போட்டாஷாப்பில் பயன்படுத்த இனஸ்டன்ட் பாண்ட்கள் உள்ளது. அதை பற்றி இங்கு இன்று காணலாம்.முதலில் இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம் செய்து உங்கள் கணிணியில் சேமித்துக்கொள்ளுங்கள். இது PSD பைலாக உள்ளது.உங்களுக்கு கீழ்கண்ட பைல்கள் கிடைக்கும்.
இரண்டாவது பைல்:-
மூன்றாவது பைல்:-
நான்காவது பைல்:-
ஐந்தாவது பைல்:-
ரைட். இப்பொழுது அதை எப்படி உபயோகிப்பது என்று பார்க்கலாம். முதலில் எழுத்துக்களை எந்த புகைப்படங்களில் வைக்கப்போகின்றீர்களோ - அந்த புகைப்படத்தை தேர்வுசெய்துகொள்ளுங்கள்.அதைப்போல் இந்த பாண்ட்களின் PSD பைலையும் திறந்து கொள்ளுங்கள். இப்போது நீங்கள் F 7 கீயை அழுத்துங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் எந்த வார்த்தையை வேண்டுமோ அதை இந்த லெயர் விண்டோவில் தேர்வுசெய்து(நீங்கள் தேர்வு செய்ததும் அந்த எழுத்து நீலக்கலரில் மாறிவிடும்) கர்சரால் இழுத்துவந்து புகைப்படத்தில் விட்டுவிடுங்கள்.
இப்போது கீழ்கண்ட புகைப்படத்தை பாருங்கள்.
எழுத்துக்கள் கொண்டுவந்தபின் வந்த படத்தை பாருங்கள்.
ஆங்கில எழுத்துக்கள் சரி...இதுவே தமிழ் எழுத்துக்கள் கொண்டுவருவது எப்படி.உங்கள் கணிணியில் தமிழ் எழுத்துக்கள் இருந்தால் சரி. இல்லையென்றால் இந்த லேயர் விண்டொவில் உங்களுக்கு கட்டம் கட்டமாக தெரியும்.அந்த நேரத்தில் லேயர் விண்டொவில் உள்ள கண்போன்ற அமைப்பை கிளிக் செய்யுங்கள். இப்போது பாண்ட்கள் விண்டோவை பாருங்கள்.எந்த வாக்கியம் மறைகின்றதோ அதுவே நீங்கள் தேர்வு செய்த வாக்கியம் ஆகும். முன்பு சொன்னதுபோல் அதை தேர்வு செய்து இழுத்துவந்து புகைப்படத்தில் விட்டுவிடுங்கள். அவ்வளவுதான். இன்ஸ்டனட் எழுத்துக்களுடன் புகைப்படம் ரெடி.இதில் உங்கள் ரசனைக்கு ஏற்றவாறு புகைப்படத்திற்கு ஏற்ற வார்த்தைகளை தேர்வு செய்யுங்கள். வார்த்தைகள் பொருந்துவதாகவும் இருக்கவேண்டும் - அதேசமயம் நகைச்சுவையாகவும் இருக்கவேண்டும்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.:-
பயன்படுத்திப்பாருங்கள். கருததுக்களை சொல்லுங்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.அடுத்த பதிவும் கருத்துரைக்கு பதில்களும் 28.02.2010 அன்று காலை.மீண்டும் சந்திப்போம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
அட...சும்மா எட்டி பார்த்தேன்பா... ஓனர்அம்மா தலை பின்னால் இருக்குப்பா...
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இந்த டிசைனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

பின்இணைப்பு:- இத்துடன் +2  பாடத்திற்கான கணித வினா களின் தொகுப்பு இங்குஇணைத்துள்ளேன். உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் பகிர்ந்துகொள்ளவும். 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பதிவர்களும் தமிழ்இணைய மாநாடும்.

http://www.infitt.org/ti2010/ti2010_hdtamil.jpg


அன்பார்ந்த பதிவுலக நண்பர்களே..
.வரும் ஜீன் மாதம் 23 லிருந்து 27 வரை (23.06.2010 முதல் 27.06.2010 வரை) தமிழ் இணைய மாநாடு கோவையில் நடைபெறுவது நாம் அனைவரும் அறிந்ததே...அந்த மாநாட்டுக்கு நாம் பதிவுலகில் எழுதிவரும் யார்வேண்டுமானாலும் தங்கள் கட்டுரையை சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் தமிழில் பிளாக்கர்கள் உள்ளனர் என்பதும் அவர்களாளும் அருமையான கட்டுரைகளை சமர்ப்பிக்க முடியும் என்பதும் அறிய வைக்கலாம்.தமிழில் நாம் விரிவாக எழுதும் தொழில்நுட்ப கட்டுரையாகட்டும் -கணிணிசார்ந்த எந்த கட்டுரையாக இருந்தாலும் அதனை அனுப்பிவைக்க வேண்டுகின்றேன்.தமிழ் பதிவுலகம் என்பது இணைய உலகில் தவிர்க்கமுடியாத ஊடக பெருவெளியாக திகழ்வதை எவராலும் மறுக்க இயலாது. குறிப்பாக தமிழில் தொழில்நுட்பம் குறித்தும் இணையம் மற்றும் கணினி சார்ந்த பல சிறப்பான கட்டுரைகள் நமது சக பதிவர்கள் எழுதி வருவது உலகளவில் பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. ஒரு சில பத்திரிகைகள் கூட இது போன்ற சிறப்பான கட்டுரைகளை தங்களது இதழ்களில் பிரசுரித்து பதிவர்களை கெளரவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

பதிவுலக வட்டத்தில் நமது சக பதிவர்களில் எவருடைய படைப்பாவது இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்படும் வகையில் நமது இருப்பை இந்த உலகிற்கு வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இது பதிவர்கள் அனைவருக்கும் ஓர் சிறந்த அங்கீகாரமாக விளங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லைஎனவே வலைப்பதிவு அன்பர்கள் நீங்கள் எழுதும் எந்த பதிவாக இருந்தாலும் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகின்றேன். நீங்கள் உங்கள் கட்டுரையின் முன்னேட்டம் மட்டும் நாளைக்குள் (25.02.2010)அனுப்பிவைத்தால் போதும். விரிவான கட்டுரையை சமர்பிக்க கால அவகாசம் உள்ளது. முகவரி தளம்:- http://tamilinternetconference.blogspot.com/


உங்கள் கட்டுரையை அனுப்ப வேண்டிய முகவரி:- ti2010-cpc@infitt.org
எனவே பதிவுலக நண்பர்கள் கட்டுரையை இன்றே - இப்போழுதே அனுப்பி வைக்க வேண்டுகின்றேன். 
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் சந்திப்போம்.


வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-அட்வான்ஸ் டெலிபோன்புக் உபயோகிக்க



வலைப்பதிவு நண்பர்களுக்கு :- 


விளையாட்டையே பதிவாக போட்டுவரும் பதிவரை இங்கு அறிமுகப்படுத்தவிரும்புகின்றேன்.அவருக்கு இன்று 23-02-2010 பிறந்த நாள்.அவர்தளம் செல்ல இங்கு கிளிக்செய்யவும்.அவரின் தந்தை உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த பிரபல பதிவர்.(ஹி..ஹி...அது நான்தான்) அவருக்கும் உங்கள் ஆதரவு வேண்டி.
வாழ்க வளமுடன்,
வேலன்.






நமக்குஉறவினர்கள்,நண்பர்கள்,ரொம்பபிடித்தவர்கள்,அக்கம்பக்கத்தவர்கள்,குடும்பஉறுப்பினர்கள்எனஇருப்பார்கள்.அதுபோலவேவியாபரம்செய்பவர்களுகுஅவர்களின்வாடிக்கையாளர்கள்,தொழிளாளர்கள்,பார்ட்னர்ஸ்,விளம்பரதாரர்கள், பொருட்களை நமக்கு சப்ளை செய்பவர்கள் என பட்டியல் நீண்டு கொண்டு செல்லும். இவர்களின் அனைத்து விவரங்கள் அவர்களை பற்றி சுமார் 25 குறிப்புகள் வரை குறித்துவைக்க இந்த சாப்ட் வேர் உபயோகப்படுகின்றது.இது வெறும் 5 எம்.பி்.கொள்ளளவு தான்.இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கி நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் உள்ள நீல முக்கோணத்தை கிளிக் செய்தால் உங்களுக்கு எல்லா வகைகளும் தெரியவரும். அதில் நீங்கள் பிஸினஸ் மற்றும் குடும்பம் என தேர்வு செய்துகொள்ளலாம்.பின்னர் அதில் உள்ள + குறியை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில முதல் டேப்பில் உள்ளதில் நீங்கள் சேமிக்க வேண்டியவரின் பெயர்,டைட்டில், கம்பெனி பெயர், முழு முகவரி,அனைத்தும் தட்டச்சு செய்து கொள்ளுங்கள். அடுத்து அவரைப்பற்றி சிறப்பு விமர்சனம் ஏதாவது இருந்தால் அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். அதில் நிறைய கேட்டகிரி இருக்கும்..
 வருகின்ற  கேட்டகிரியில் அவர் எந்த வகையில் வருகின்றாரோ அதை தேர்வு செய்துகொள்ளுங்கள். அடுத்துள்ள டேபை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் :ஆகும்
இந்த விண்டோவில் மொத்தம் 12 குட்டி குட்டி விண்டோக்கள் இருக்கும். இதில முதலில் உள்ள விண்டோவின் டவுண்லோட் ஏரோவினை கிளிக் செய்ய உங்களுக்கு மேலே உள்ளவாறு விண்டோ தோன்றும். அதில் அவரின் எந்த தகவலை நீங்கள் சேமிக்க விரும்புகின்றீர்களோ அதை தேர்வு செய்து எதிரில் உள்ள விண்டோவில் அதற்குரிய தகவலை தட்டச்சு செய்யுங்கள்.கடைசியாக நீங்கள் தகவலை உள்ளீடு செய்தவரின் புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.இங்கு இன்னும் ஒன்றை கவனிக்க வேண்டும். நீங்கள் தேர்வு செய்யும் புகைப்படம் 500 கே.பிக்குள் இருக்க வேண்டும்.
இறுதியாக ஓ.கே. கொடுங்கள். அவ்வளவுதான். ஒருவருடைய மொத்த தகவல்கள்(மொத்தம் 25 வரும்) நீங்கள் சேமித்தாகிவிட்டது.
இதில சேமித்துள்ள தகவல்களை நீக்கி கொள்ளவும் முடியும். அதைப்போல் ஒருவருடைய பெயரையும் சுலபமாக சர்ச் செய்து தேட இங்குள்ள சர்ச் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஸ்டட்டிக்ஸ் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில நீங்கள் உள்ளீடு செய்துள்ள நபர்களின் முதல் எழுத்துக்களை வைத்து எவ்வளவுபேர உள்ளனர் என தெரிந்து கொள்ளலாம்.
அடுத்துள்ளது ரிப்போர்ட்.இதை கிளிக் செய்தால்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில ஒருவரோ - அல்லது மொத்தநபர்களதோ -தேர்வு செய்து நெக்ஸ்ட் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன் ஆகும். அதில் அவரின எந்த விவரங்கள் தேவையோ அதை மட்டும் தேவையான பைல்வகைகளில் சேமித்துகொள்ளலாம்.
கடைசியாக உள்ள கிரியேட் கிளிக் செய்து சேமித்துக்கொள்ளுங்கள்.இதனை எச்டிஎம்எல் பைலாகவும் எக்ஸெல் பைலாகவும் சேமித்துக்கொள்ளலாம். பொறுமையாக தகவல்களை உள்ளீடு செய்து உபயோகித்து பாருங்கள். அருமையாகஇருக்கும்.பதிவின்நீளம்கருதிஇத்துடன்முடித்துக்கொள்கின்றேன் வாழ்க வளமுடன்  
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
வீட்டில் சொல்லிவிட்டு ஒரு முடிவோடுதான் கிளம்பிட்டார் போலஇருக்கு...?
இன்றைய PSD டிசைன்னுக்கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இரண்டு வகை கண்ட்ரோல்பேனல்கள் பயன்படுத்த



இரண்டு கண்களிலும் ஓரே பார்வை என் று சொல்வார்கள்.  இலக்குக்கு ஒன்றே -ஆனால் இரண்டு வெவ்வேறு பாதைகள் என்றும் சொல்வார்கள். அதைப்போல் நமது கம்யூட்டரில் இரண்டு கண்ட்ரோல் பேனல் விண்டோகள் உள்ளன. அவை Start Menu  மற்றும் Classic Start Menu  என இரண்டுவகைப்படும். இந்த இரண்டு தோற்றங்கள் மூலம் வழக்கமான கண்ட்ரோல் பேனல் பணிகளை செய்யலாம்.இரண்டும் ஓரே பணியினை செய்வதால் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நாம் மாறிக் கொள்வதும் எளிது . சரி இதை எப்படி கொண்டுவருவது என்று பார்க்கலாம்.  முதலில் Start -Properties -தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Start Menu எதிரில் உள்ள பட்டனை கிளிக் செய்து Apply - Ok கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இந்த விண்டோவில் கண்ட்:ரோல் பேனலில் எதை யெல்லாம் நாம் பயன்படுத்துகின்றமோ அவை அனைத்தும் ஒரே விண்டோவில் தோன்றும்.ஆனால் நீங்கள் ஒவ்வொறு முறையும் Start மூலமே செல்ல வேண்டும்.இதைப்போல் Classic Start Menu செல்ல முன்பு போல் ஸ்டார்ட் - ப்ராபர்டீஸ் தேர்வு செய்யுங்கள்.இரண்டாவதாக உள்ள கிளாசிக் ஸ்டார்ட் மெனு எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யுங்கள்.
இந்த செட்டிங்ஸ்' நீங்கள் கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ தோன்றும்.

இரண்டுவகை விண்டோக்களையும் உபயோகித்துப்பாருங்கள். எந்த வகை உங்களக்கு சுலபமாக இருக்கின்றதோ - எது உங்களுக்கு பிடித்திருக்கின்றதோ அதையே உங்கள் கண்ட்ரோல் பேனலாக செட் செய்துகொள்ளுங்கள்.                   
  வாழ்க வளமுடன்,
  வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
அந்த பக்கம் போகாதே...சிக்கன் இல்லாத சிக்கன் பிரியாணி (கஞ்சி) ரெடிபண்ணிக்குனு இருக்காங்க...சாப்பிட்ட ...அப்புறம் நீ அவ்வளவுதான்....!
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-டெக்ஸ்டாப்பில் பல்ப் எரிய வைக்க


திரைப்படத்தி்ல் ஒரு வசனம் வரும்...பல்ப் எரியுது பார் என்று...கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் இந்த வசனம் பிரபலம்.    நாம் நமது கம்யூட்டரிலும் பல்ப் எரிய வைத்தால் எப்படி இருக்கும். நாம் கடைகளில் - வீடுகளில் ஏதாவது விஷேஷம் என்றால் சீரியல் பல்ப்களை தொங்கவிட்டு எரிய விடுவோம். அதுபோல் நமது கம்யூட்டரிலும் சீரியல் பல்ப்களை எரியவிடலாம். அதை செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படும். ( 2 எம.பி.அளவுதான்) இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம் முடித்து நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்களுடைய டாக்ஸ்பாரில் இது அமரந்துவிடும்.இதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் முதலில் ஜெனரல் டெப் இருக்கும் . இதில் நாம் பல்ப்களை எந்த சமயங்களில் எரியவிட வேண்டும் என்கின்ற ஆப்ஸன்கள் உள்ளன. தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும்.
செலக்ட் ஐ-கானில் உங்களுக்கு எத்தனை பல்ப்கள் - நிறங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.பாடல்கள் செட் செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
பல்ப்களின் வகைகள் கீழே உள்ளன.                                                                                         
இரண்டாவது டேபில் பல்ப்கள் இருக்கின்றது. உஙகளுக்கு டிசைன்போட்ட பல்ப் வேண்டுமா - விலங்கினங்கள் பல்ப்பா - பூக்கள் டிசைனா - அல்லது சாதாரண குண்டு பல்ப்பா நமக்கு விருப்பமானதை தேர்வு செய்யலாம்.
 தவிர அது ஒடும் வேகத்தை யும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம். தவிர நமது விண்டோவின் மேல்புறம் மட்டுமா - அல்லது திரையின் நான்கு புறமுமா என விரும்புவதை தேர்வு செய்துகொள்ளலாம்.
மூன்றாவது டேபில் இசையை சேர்த்துள்ளார்கள். அவர்களே 10 பாடல்கள் தொகுத்துள்ளார்கள். தேவையானதை தேர்வு செய்து பிளே செய்து பார்க்கலாம். அல்லது நமக்குவிருப்பமான இசையையும் தேர்வுசெய்துகொள்ளலாம். கீழே உள்ள் விண்டோவினை பாருங்கள்.
இதில் ஸ்கிரீன் சேவரும் - வால்பேப்பரும் உள்ளன.தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
காலண்டர்வசதியும் உள்ளது. தேவைப்பட்டால் அதையும்நாம் தேர்வுசெய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.உபயோகித்துப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS
ஆண்புறா:-ஜலீலா அக்காவின் தொண்டையில் மீன்முள் மாட்டிக்கொண்டால் அபாயம் -கட்டுரையை படித்தேன்.இரு உனது தொண்டையில் இருந்து மீன்முள் எடுக்கின்றேன்.  
பெண்புறா:- ஒன்றும் வேண்டாம்...நானே பார்த்துக்கின்றேன்...நீங்க போங்க....
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இந்த டிசைனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப்பில் நிழலுடன் எழுத்துக்கள் கொண்டுவர


போட்டோஷாப்பில் இன்று  நிழலுடன் எழுத்துக்கள்
கொண்டுவருவது எப்படி என்று பார்க்கலாம்.
முதலில் நீங்கள்புதிய விண்டோவினை கீழ்கண்ட
அளவில்திறந்துகொள்ளுங்கள்.

  
போட்டோஷாப்பில் டெக்ஸ்ட் டூலை தேர்வு செய்யுங்கள்.
இது போட்டோஷாப் டூல்பாரில் 16 ஆவது டூல்லாக
உள்ளது.T என்கின்ற ஆங்கில எழுத்து போட்டு இருக்கும்.
அதை கிளிக் செய்யுங்கள்.(வரிசையாக டூல்கள் பற்றிய
பாடத்தில் இந்த டூல்பற்றி நாம் விரிவாக பார்க்கலாம்)
ரைட். இப்போது உங்களுக்கு தேவையான எழுத்துருவை
தேர்வு செய்யுங்கள்.எழுத்துகள் மேலே உள்ள பாரில்
தெரியும்.தமிழ் வேண்டுபவர்கள் நான் ஏற்கனவே
கொடுத்துள்ள பாமினியை இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.
லதாவிலும் தமிழ் எழுத்துரு வரும்.உங்கள் 
பார்வைக்கு எனது பெயரை தமிழிலும் ஆங்கிலத்திலும்
தட்டச்சு செய்துள்ளேன். கீழே உள்ள படத்தை 
பாருங்கள்.

 


எழுத்துக்களுக்கு தேவையான வண்ணங்கள் கொடுத்து
கொள்ளுங்கள். ரைட். இப்போது மேலே உள்ள
லேயர் டெப்பிற்கு வாருங்கள்.அதை கிளிக் செய்தால்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில்
லேயர் ஸ்டைல் - ஸ்டோக் -கிளிக் செய்யுங்கள்.


இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன்ஆகும்.
 
இதில் சைஸ் -3, பொஸிசன் -அவுட் சைட், என இதில் 
உள்ள அளவுகளையே வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் தட்டச்சு செய்த எழுத்து மாறுவதை
காணலாம். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
ஒ.கே. கொடுங்கள்.
  
 நாம் ஏற்கனவே தட்டச்சு செய்ததற்கும் இப்போதுக்கும்
எழுத்து மாறிஉள்ளதை கவனியுங்கள்.
  
அடுத்து மீண்டும் அதேப்போலவே லேயர் - லேயர்
ஸ்டைல் - கிராடியன்ட் ஓவர்லே தேர்வு செய்யுங்கள்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
  
அதிலும்  Blendmode=Normal, Opacity=40%,Gradiant (இந்த
டூலுக்கு எதிரில் உள்ள அம்புகுறியை கிளிக்
செய்தால் உங்களுக்கு நிறைய மாடல்கள்
கிடைக்கும். அதைப்பற்றி விரிவாக ஒரு 
பாடத்தில் சொல்கின்றேன். தற்சமயம் அதில் உள்ள
டிசைனையே தேர்வு செய்து கொள்ளுங்கள்)Style= Liner,
Angle =90 Scale 100% என அதில் உள்ள அளவுகளையே
கொடுத்து ஓ.கே. கொடுங்கள்.
  
இப்போது மீண்டும் லேயர் - லேயர் ஸ்டைல் -பெவல்
அண்ட் எம்போஸ் ( Bevel and Emboss) கிளிக்செய்யுங்கள்.
  
தேவைப்பட்டால் அளவுகளை மாற்றிக்கொள்ளுங்கள்.
 இல்லையென்றால்அதில் உள்ள அளவுகளை 
அப்படியே ஓ.கே. கொடுங்கள்.
 இப்போது மீண்டும் லெயர் - லெயர்ஸ்டைல்-
டிராப் ஷோடோ கிளிக் செய்யுங்கள்.
  
இதிலும் அதே அளவுகளை ஓ,கே. கொடுங்கள்.
கடைசியாக இதன் டுப்ளிகேட் தேர்வு செய்ய கீழ்
கண்டவாறு தேர்வு செய்யுங்கள்.
  
 ஒ.கே. கொடுங்கள். இப்போது உங்கள் எழுத்துக்கள்
மீதே மற்றும் ஒரு காப்பி அமர்ந்திருக்கும். இப்போது
மூவ் டூல் கொண்டு (டூல்பாரில் இரண்டாவதாக
இருக்கும் டூல்) உங்கள் எழுத்தினை மெல்ல
மவுஸால் கீழே இழுங்கள். எழுத்தின் பிம்பம் கீழே
வருவதை காணலாம்.
  
இப்போது மீண்டும் லேயர் ஸ்டைல் தேர்வு செய்து 
அதில் Opacity யை உங்களுக்கு தேவையான அளவுக்கு
வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அந்த அளவினை
குறைக்க குறைக்க உங்கள் எழுத்தின் நிறம் மங்கி
வருவதை காணலாம்.


  
 தேவையான அளவு வந்ததும் ஒ.கே. கொடுங்கள்.கீழே
உள்ள படத்தை பாருங்கள்.
  
உங்களுக்காக மற்றும் ஒரு எழுத்தில் டிசைன் செய்தது.
உங்களுக்கு எழுத்துக்கள்சரியாக வந்துவிட்டால் 
புகைப்டங்களிலே எழுத்துக்களைகொண்டுவரலாம்
கோலர்லம்பூர் நண்பர் பெயரில் எழுத்துரு:-
 
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
 அதிக படங்களுடன் விளக்கவேண்டியுள்ளதால்
இந்த பக்கம் திறக்க நேரம் ஆவதை பொறுத்துக்
கொள்ளவேண்டுகின்றேன்.
எதேனும் சந்தேகமிருந்தால் கருத்தினில் கேளுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
வரேன் சொன்னாரு....இன்னும் வரக்காணேமே...!
 
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
 டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
 
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...