வேலன்:-நையாண்டி நகைச்சுவை உரையாடல்கள்.

சென்ற பதிவில் ரிங்டோனை நாமே எளிதில் உருவாக்குவதை பார்த்தோம். இன்றைய பதிவில் வித்தியசமான சில நகைச்சுவை வசனங்களை காணலாம்.ஏர்வாடி பற்றி எப்படி கலாக்கிறாங்கனு கேளுங்க:-

ஏர்டெல் அவசரத்துக்கு உதவுகின்றது;.இவர் அதற்காக ஏதுக்கு உதவி கேட்கின்றார் கேளுங்கள்.

கடனை வாங்கி ஓழுங்காக கட்டுவர்கள் சிலபேர்என்றால் பேங்கினையும் எப்படி எல்லாம் ஏமாற்றுகின்றார்கள் என கேளுங்கள்:- 

மெசேஸ் பேக்பற்றி எப்படி விசாரிக்கின்றார் என கேளுங்கள்.:-

அவருடைய மெபைல் பற்றி விவரம் கேட்கின்றார் பாருங்கள்.

மேலும் சில சுவராசியமான உரையாடல்கள் கீழே:-




கொஞ்சம் ரிலாக்ஸாக்கி கொள்ளவே இந்த பதிவு.கேளுங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பின்குறிப்பு:- நகைச்சுவைக்காகவே இந்த பதிவு.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-ரிங்டோனை எளிதில் நாமே உருவாக்க

சில பாடல்கள் கேட்க அருமையாக இருக்கும். நாம் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்களும் இருக்கும்.. சில பாடல்களில் இடையில் வரும் இசை நன்றாக இருக்கும். அதைப்போல சில பாடல்களில் இடையில் வரும் பாடல்வரிகள் அருமையாக இருக்கும். நாம் நமது தேவைக்கேற்ப பாடல்வரிகளை - இசையை -நமது செல்போனில் ரிங்டோனாக வைத்துக்கொள்ளலாம். அவ்வாறு வைத்துக்கொள்ள நமக்கு ரிங்டோன் மேக்கர் தேவைப்படும். 2 எம.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.. இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். 
 தேவையான பாடலை நீங்கள் உங்கள் கம்யூட்டரில் இருந்துதேர்வு செய்யவும்..
 பாடலை ஒலிக்க விடுங்கள். தேவையான இடம் வந்ததும் இதில் உள்ள ஸ்லைடரை நகர்ததிவையுங்கள். மீண்டும் ஒரு முறை பாடலை ஒலிக்க விடுங்கள். சரியாக வருகின்றதா என பாருங்கள். அடுத்துள்ள Next அழுத்துங்கள்.
Save Ringtone to My Computer கிளிக் செய்து பாடலை எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அங்கு சேமியுங்கள். 
உங்களுக்கு Processing நடைபெறும். மேலே உள்ள விண்டோவில் பாருங்கள். ரிங்டோன் தயாரானதும் அடுத்து நீங்கள் சேமித்துவைத்துள்ள இடத்தில் சென்று பாருங்கள். நீங்கள் உருவாக்கிய ரிங்டோன் அங்கு இருக்கும்.. அதிலிருந்து உங்கள் செல்போனுக்கு ரிங்டோனை மாற்றிக்கொள்ளுங்கள; பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்.
வேலன்.
  
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கால்பந்து விளையாட்டு

கிரிக்கெட் விளையாட்டினை கடந்தவாரம் பார்த்தோம். இந்த வாரம் கால்பந்து விளையாட்டினை பார்க்கலாம்.700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுடைய மூவ்மெண்ட்களை இதில் உள்ள அம்பு குறியின் மூலம் நிர்ணயம் செய்துவிடலாம். மேலும் விரைநது செல்ல ஆங்கில X  எழுத்தினை அழுத்தவேண்டும். நாம் இருக்கும் இடத்தை வட்டம் மூலம் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். 
சிறிய விளையாட்டுதான் விளையாடிப்பாருங்கள்..கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போல்டர்களை ரகசியமாக மறைதது வைக்க

வேலன்-போல்டர்களை ரகசியமாக மறைத்துவைக்க
ரகசியம் யாருக்குதான் இருக்காது..ரகசியத்தை ரகசியமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விவரங்களை வைத்திருப்பார்கள்.கணக்குவிவரம்-தொலைபேசி எண்கள்-பாஸ்வேர்ட்கள்-புகைப்படங்கள் என ரகசியங்கள் பலவகைகளில் இருக்கும். அதை எலலாம் மொத்தமாக ஒரு போல்டரில் போட்டு அந்த போல்டரை தனியே மறைததுவிடலாம். 400 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும. இதில் உங்களுடைய பர்சனல் பாஸ்வேர்ட் ஏதாவது தட்டச்சு செய்யுங்கள். உடன் உங்கள் இ-மெயில முகவரி மற்றும் பாஸ்வேர்டினை நினைவுகொள்ளும் குறிப்புகளையும் தட்டச்சு செய்யுங்கள.
 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள ADD பட்டனை கிளிக் செய்தோ - போல்டரை இழுத்துவந்தோ இந்த விண்டோவின் உள்ளே விட்டுவிடுங்கள். இதில் உள்ள Secure கிளிக் செய்துவிடுங்கள்.உங்கள் போல்டரானது மறைந்துவிடுவதை கவனியுங்கள்.
 இப்போது உங்களுக்கு மீண்டும் உங்களுடைய போல்டர் தேவையென்றால் இந்த சாப்ட்வேரினை கிளிக்செய்யுங்கள் மீண்டும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்கள் பர்சனல் பாஸ்வேர்டினை தட்டச்சு செய்யுங்கள..வரும் விண்டோவில் நீங்கள் எந்த போல்டரை பார்க்க விரும்புகின்றீர்களோ அந்த போல்டரை தேர்வு செய்து Unsecure செய்துவிடுங்கள். இப்போது உங்கள் டிரைவில் சென்று பார்த்தீர்களேயானால் உங்களது போல்டர் இருக்கும்.இதில் நிறைய போல்டர்கள்போடும் வசதிஉள்ளதால் நீங்கள் எதை எதை மறைக்க விரும்புகின்றீர்களோ அதைஎல்லாம் இதில போட்டு மறைத்துவிடுங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பைல்கள் டெலிட் ஆகும்முன் நம்மிடம் அனுமதி பெற

வேலன்:-பைல்கள் டெலிட் ஆகும்முன் நம்மிடம் அனுமதி பெற
வீடுகளில் குப்பைகளை பெருக்கி வெளியில் கொட்டும்முன் ஒருமுறை பார்த்துக்கொட்டுதல் நல்லது.சமயங்களில் முக்கியமான பொருள்களும் குப்பையில் சென்றுவிடும்.அதைப்போல நாம் கணிணியில் பைல்களை டெலீட் செய்யும் முன் கணிணி நம்மிடம் அனுமதி கேட்டு பின்னர் டெலிட் செய்தல் நலமே.வழக்கமாக இந்த செட்டிங் கணிணியில் இருக்கும்.தவறுதலாக இந்த செட்டிங் மாறிவிட்டால் நாம் பைல்களை டெலிட் செய்யும் சமயம் நம்மிடம் அனுமதி கேட்காமலேயே பைல்கள் ரீ-சைக்கிள் பின்னுக்கு சென்றுவிடும். இதனை தவிர்க்க -ஒவ்வொருமுறையும் நாம் டெலிட் செய்கையில் நம்மிடம் அனுமதி கேட்டு டெலிட் ஆவதுபோல் செட் செய்யலாம்.அதற்கு நீங்கள் ரீ-சைக்கிள் பின் ரைட் கிளிக் செய்து ப்ராபர்டீஸ் தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.
 அதில் Global என்பதனை தேர்வு செய்யுங்கள்.வரும் விண்டோவில் Display delete confirmation dialog என்பதின் எதிரில் உள்ள கட்டத்தில் டிக் செய்து பின்னர் Apply -Ok செய்யுங்கள். இப்போது ஏதாவது ஒரு பைலை டெலிட் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
Yes அழுத்துங்கள். இனி நீங்கள் எந்த பைலை டெலிட் செய்தாலும் உங்களிடம் அனுமதி கேட்டே பைல்கள் ரீ-சைக்கிள் பின்னுக்கு செல்லும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இலவச வீடியோ ப்ளேயர்-free smith.

சின்ன சாப்ட்வேரில் நிறைய வசதிகள் உள்ள வீடியோ பிளேயரை இன்று பார்க்கலாம். எந்தவித வீடியோ பைல்களையும் இயக்க வல்ல 18 எம்.பி.கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான வீடியோவினை தேர்வு செய்யவும்.வீடியோவினை ஓடவிடவும. இப்போது வீடியோவின் இடது மூலையில் உங்கள் கர்சரை கொண்டுசென்றால் உங்களுக்கு வீடியோ அளவிற்கான டேப்புகள் ஓப்பன் ஆகும. அதில் விருப்பமான அளவிற்கு வீடியஅளவினை கொண்டுவரலாம். மணிரத்னம் போன்ற டைரக்டர்களின் படங்களில் நிறைய படங்கள் இருட்டில் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த மாதிரி படங்களில் தேவையானல் நாம் ஒளியின் அளவினை அதிகப்படுத்தியோ குறைத்தோ வைத்துக்கொள்ளலாம்.அதற்கான வசதியை இதன் வலதுபக்க மூலையில கர்சரை கொண்டுசெல்கையில ஓப்பன் ஆகும். தேவையான அளவினை வைத்துக்கொள்ளலாம்.
இதன் ஸ்கின் நிறத்தினை வேண்டியவாறு நாம் சுலபமாக மாற்றிக்கொள்ளலாம்.மற்ற பிளேயரில் உள்ளதைவிட கூடுதல் வசதியாக நாம் பார்க்கும் வீடியோவினை +10 செகண்ட முதல் +10 நிமிடம் வரை வீடியோவினை முன்னோக்கி நகர்த்தியோ பின்னோக்கி நகர்த்தியோ பார்க்கலாம்.இதில் நமக்கு தேவையான வீடியோவினை போல்டரில் இருந்தோ-சிடி டிரைவிலிருந்தோ தேர்வு செய்யலாம். இதில் யூஆர்எல் வசதி கொடுக்கப்பட்டுள்ளதால் தேவையான வீடியோவின் யூஆர்எல்லை காப்பி செய்து இதில் பார்க்கலாம்..ஆடியோபைல்களையும் கேட்க வசதிஉள்ளதால் அப்புறம் என்ன தயக்கம்? பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள

நாம் கம்யூட்டரில் எந்த அப்ளிகேஷனில் பணிபுரிந்தாலும் -விளையாட்டினை விளையாடினாலும்-இணைய இணைப்பில் தளங்கள் பார்த்தாலும் மொத்த விவரங்களையும் எளிதில் அறிந்துகொள்ளலாம்.அதுமட்டும் அல்லாமல் எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என்பதனையும் துல்லியமான நேரம் முதற்கொண்டு அறிந்துகொள்ளலாம்.6 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.நீங்கள் இதனை இன்ஸ்டால் செய்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் கம்யூட்டர் யூசேஜ் பச்சை நீறத்தில் வந்துவிடும்.சிகப்பு நிறம் கம்யூட்டர் உபயோகம் இல்லாத நேரத்தினை குறிக்கும்.
 நீங்கள் எந்த எந்த அப்ளிகேஷன்களை எவ்வளவு நேரம் உபயோகித்தீர்கள் என இதில் உள்ள சார்ட் வைத்து எளிதில அறிந்துகொள்ளலாம்.
 எந்த எந்த அப்ளிகேஷனை நீங்கள் திறந்துபார்த்தீர்கள் என அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்..
 இதில் நேரத்தினையும் செட்செய்துவிடலாம்.. தவிர அன்றைய பொழுதில் நீங்கள் எவ்வளவு நேரம் கம்யூட்டரில் பணிபுரிந்தீர்கள் என்பதனையும் அறிந்துகொள்ளலாம்.
நீங்கள் அப்ளிகேஷன் டேபில் கர்சரை கொண்டு செல்ல எந்த இடத்தில் நீங்கள் எந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினீர்கள் என்கின்ற விவரம் தெரியும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
காலாண்டு தேர்வு அடுத்தவாரம் ஆரம்பிக்க இருப்பதால் இன்று எனது மகனை படிக்கசொன்னேன். ஆனால் அவர் படிக்காமல் கம்யூட்டரில் கேம் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். மாலை வந்ததும் கம்யூட்டரில் விளையாடினாயா என கேட்டேன். இல்லை படித்துககொண்டுஇருந்தேன் -கொஞ்சநேரம்தான் கம்யூட்டரில் விளையாடினேன் என கூறினார். அவரை பக்கத்தில் வைததுகொண்டு இந்த சாப்ட்வேரினை ஓப்பன் செய்து காண்பித்தேன். அவர் எந்த எந்த விளையாட்டினை எவ்வளவு நேரம் விளையாடினார் என துல்லியமாக காண்பித்தது.கொஞ்சநேரம் படித்துவிட்டுகம்யூட்டரில் விளையாடிக்கொண்டு இருந்ததை ஒப்புக்கொண்டார்.இந்த சாப்ட்வேர் விண்டோஸ் சர்வீஸ் பேக் -3 மற்றும் அதற்கு பிறகு வந்த பதிவுகளில் தான் வேலை செய்யும். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் விளையாட்டினை கிரவுண்டில் சென்றுதான் விளையாடவேண்டுமா என்ன? நாம் நமது கம்யூட்டரிலேயே விளையாடலாம்.700 கே.பி.அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 கீ கண்ட்ரோல் மற்றும் மவுஸ்கண்ட்ரோல்கள் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோவில் அறிந்துகொள்ளுங்கள்.
பந்து வரும் திசைக்கேற்ப நாம் கீ களை உபயோகிக்கவேண்டும். இதிலும் நமககு: ஸ்கேர் எண்ணிக்கை தெரியவரும்.விளையாடிப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பயமுறுத்தும் பாம்புகளின் ஸ்கிரீன்சேவர்கள்.

பாம்பேன்றால் படையும் நடுங்கும் என்று சொல்லுவார்கள்.. இங்கு விதவிதமான பாம்புகளின் படங்களை ஸ்கிரீன்சேவராக கொண்டுவரலாம்.11 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.






பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-யூடியூப் விடியோக்களை எளிதில் பதிவிறக்கம் செய்ய

இணையத்தில் அதிக அளவு வீடியோக்களை நாம் யூ டியுப் இணையதளம் மூலம் பார்க்கின்றோம். சில வீடியோக்களை பதிவிறக்கம்செய்து பின்னர் பார்க்கவும் விரும்புவோம். பதிவிறக்கம் செய்வதில் புதியவர்கள் நிறையபேர் தடுமாற்றம் அடைவார்கள். எளிய முறையில் யூடியுப்விடியோக்களை பதிவிறக்கம் செய்ய இந்த புதிய சாப்ட்வேர் வந்துள்ளது. 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.பின்னர் அதனை இன்ஸ்டால் செய்துகொள்ளவும். இப்போது யூ டுயுப்பில் தேவையான வீடியோவினை பாருங்கள். 
இந்த சாப்ட்வேர் நீங்கள் பார்க்கும் வீடியோவினை தானே பதிவிறக்கம் செய்ய ஆரம்பித்துவிடும்.
ஒரே சமயத்தில் எத்தனை வீடியோக்களை நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பினாலும் இதன்மூலம் எளிதில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த சாப்ட்வேரினை கிளிக் செய்துவிட்டு நீங்கள் வீடியோகளை பார்க்கவேண்டியதுதான். தானே பதிவிறக்கம் செய்து உங்களுக்கு பதிவிறக்கம் முடிந்ததும் தகவல் தரும். நீங்கள்சேமித்து வைத்துள்ள இடத்தில் சென்று நீங்கள் டவுண்லோடு செய்த வீடியோவினை பார்க்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்..
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- போட்டோக்களில் ஈஸியாக எபெக்ட்டுகள் கொண்டுவர

புகைப்படங்களை விதவிதமான எபெக்ட்டுக்களில் கொண்டுவர நமக்கு போட்டோஷாப் சாப்ட்வேர் தேவை. ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் போட்டோஷாப்பில் செய்யும் விதவிதமான எபெக்ட்டுகளை கொண்டுவரலாம். 186 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் https://easy-photo-effects.en.softonic.com/செய்யவும்.
 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். இதில் உள்ள ஓப்பன் இமெஜ் என்பதனை கிளிக் செய்து தேவையான புகைபடத்தினை தேர்வு செய்யவும்.
இதன் மேற்புறம் 12 விதமான எபெக்ட்டுகள் உள்ளது. நமக்கு தேவையான எபெக்ட்டினை தேர்வு செய்யவும். 
 ஒவ்வொரு எபெக்ட் மேல்புறமும் அதற்கான செட்டிங்ஸ் இருக்கும்.. அதனை கிளிக் செய்து நமக்கு எந்த அளவு அதன் எபெக்ட்தேவையோ அதனை செலக்ட் செய்துகொள்ளுங்கள்.
இந்த எபெக்ட் மூலம் பிளாக் அனட் ஒயிட் படம் கொண்டுவந்துள்ளேன்.
 மற்றும் ஒரு புகைப்படம்.
 விதவிதமான கலரில் எபெக்ட் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
தேவையான மாற்றங்கள் செய்தபின் இதனை தனியே சேமிக்கும் வசதி உள்ளது. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பெட்டிகளை சுடும் விளையாட்டு

சிறு வயதில் ஒரே மாதிரியான காலி டப்பாக்களை அடிக்கி வைத்து கீழே சரிந்துவிடாமல் ஒவ்வொன்றாக எடுக்கவேண்டும். யார் அதிக டப்பாக்களை கீழே விழாமல்எடுக்கின்றார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்களாவார்கள்.அதைப்போலவே இந்த சின்ன சாப்ட்வேரில் அந்த விளையாட்டினை விளையாடலாம். 25 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் உள்ள பாக்ஸில் கிளிக் செய்ய பாக்ஸ் வெடித்து சிதறும். பச்சை நிற பாக்ஸ் ஒவ்வொன்றாக கீழே இறங்கும். அதே சமயம் கீழே சிதறிவிடாமலும் பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு நிலையாக செல்ல செல்ல ஆர்வம் நமக்கு அதிகரிக்கும்.குழந்தைகளுக்கு விளையாட கொடுங்கள். நீங்களும் விளையாடி பாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-கணிணியின் அனைத்து விவரங்களும் அறிந்துகொள்ள

பிரபல மருததுவமனைகளில் மாஸ்டர் செக்கப் என்று செய்யும்போது நமது பெயருக்கு ஒரு பைல் ஒன்றினை போட்டு நமது உடல்நிலை பற்றிய அனைத்து விவரங்களையும் அதில் குறித்துவைத்திருப்பார்கள். அதுபோல் இந்த சின்ன சாப்ட்வேரானது நமது கம்யுட்டரின் அனைத்து தகவல்களையும் சேமித்து வைத்துள்ளது.2 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
உங்கள் கம்யுட்டரின் மொத்த ஜாதகமும் அதில் வந்துவிடும். இதில் மேல்புறம் சிறு சிறு ஐ-கான்கள் இருக்கும்.
 இதில் 18 விதமான தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
 நமது கணிணியில் உள்ள டிரைவ்களின் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
 சிபியு தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
 இன்புட் டிவைச்களின் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
 இதன் மேல்புறம் பார்த்தீர்களேயானால் File;.Edit.View.System,Control Panel.Programs.Hardware.Options என நிறைய டேப்புகள் உள்ளது. இதன் ஒவ்வொன்றின் மூலமும் கணிணியின் எந்தஒரு செயலையும் நீங்கள் எளிதில் அனுக முடியும. உதாரணமாக நீங்கள் Control Panel -Add & Remove ப்ரோகிராம செல்ல வேண்டுமானால் இதன் மூலமாகவே எளிதில் செல்லமுடியும். மேலும் உங்கள் கணிணியில் நீங்கள் பொருத்தியுள்ள அனைத்து சாப்ட்வேர் வீவரங்களையும் அறிந்துகொள்ளமுடியும்.கணிணி பழுது பார்ப்பவர்களுக்கு இந்த சாப்ட்வேர் மிக அவசியமான ஒன்றாகும். இதன் விவரங்களை பிரிண்ட் எடுக்கும் வசதி உள்ளதால் ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இணையதளம் சுற்ற வைக்க

சமீபத்தில் டாக்டர் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். ஒரு பேஷண்டை வீட்டில் சென்று அப்போதுதான் வந்திருந்தார். என்ன சார்-பேஷண்ட்டுக்கு பிரச்சனை என்றேன. பிரஷர் அதிகமாகிவிட்டது-அதனால் தலை சுற்றுகின்றது என்று கூறினார். என்ன செய்தீர்கள் என கேட்டேன்.மாத்திரை கொடுத்து இரவு முழுவதும் முதுகை பார்த்துக்கொண்டிருங்கள் சரியாகிவிடும் என்று கூறியதாக கூறினார். எனக்கு முதலில் ஓன்றும் புரியவில்லை. பிரஷருக்கும் முதுகை பார்த்துக்கொணடிருப்பதற்கும் என்ன சம்பந்தம் என கேட்டேன்.அவர்கள்தான் தலை சுற்றுகின்றது என்று கூறினார்களே அதனால் முதுகை பார்த்துக்கொண்டிருங்கள் என நகைச்சுவையாக கூறியதாக சொன்னார். சரி பதிவிற்கு வருவோம். நமது மானிட்டருக்கும் பிரஷர் வந்தால் என்ன ஆகும். இந்த வலைதளம் சென்று இங்கு கிளிக் செய்தீர்களே யானால் உங்கள் மானிட்டருக்கும் பிரஷர் வந்து சுற்ற ஆரம்பிக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இதில் உள்ள சர்ச் பாக்ஸில் நீங்கள் வேண்டிய தளத்தின் பெயரை தட்டச்சு செய்ய ஓப்பன் ஆகும் தளமும் சுற்ற ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு விளையாட்டு காட்ட இதனை பயன்படுத்தலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்...
வாழ்க வளமுடன;..
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-தமிழ் இலக்கணம் எளிதில் அறிய

நான் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழியைப்போல இனிய மொழி எங்கும் கண்டதில்லை என பாரதியார் கூறினார்.அந்த பெருமைமிக்க தமிழ்மொழியின இலக்கணத்தை எளிதில்அறியும் முறையை இன்று காணலாம்.இந்த தளம் செல்ல நீங்கள் இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.
இதில நீங்கள் எழுதிய அல்லது இலக்கணம் அறிய விரும்பும் செய்யுளை உள்ளீடு செய்யவும். உள்ளீடு செய்யும் சமயம் எழுத்துபிழை இல்லாமல் உள்ளீடு செய்யவும்.நான் திருக்குறளை உள்ளீடு செய்துள்ளேன்
இதில் முதலில் உள்ள எழுத்தில் கிளிக் செய்ய இதில் உள்ள உயிர் எழுத்து -மெய்எழுத்து-உயிர்மெய் எழுத்து-ஆயுத எழுத்து எவ்வளவு உள்ளது என தெரியவரும். அடுத்துள்ள அசை சீர் அறிந்துகொள்ளலாம்.
அடுத்துள்ள டேபினை கிளிக் செய்ய இதில் உளள தளைகளை அறிந்துகொள்ளலாம்.
 அடுத்துள்ள டேபினை கிளிக் செய்ய இதில் உள்ள அடியை அறிந்துகொள்ளலாம்.
இதில் உள்ள மோனைஅறிந்துகொள்ளலாம்.
இறுதியாக இதில் உள்ள எதுகையை அறிந்துகொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தளத்தை பயன்படுத்தி எளிய முறையில் இலக்கணம் அறிந்துகொள்ளலாம்.மேலும் இதனை உருவாக்கியவர் திரு.virtualvinodh-இந்தியாவில் -தமிழ்நாட்டில்-சென்னையில் உள்ளவர்.அவருக்கு நமது சார்பாக பாரட்டுதல்களும் நன்றிகளும்.ஆசிரியர் தினத்திற்கு தமிழ் ஆசிரியர்களுக்கும் நமது பதிவுலக ஆசிரியர்களுக்கும் இந்த பதிவினை சமர்ப்பிக்கின்றேன்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...