வேலன்:-செட்டிங்ஸ் பேனல் ஒரே இடத்தில்

கணிணியில் நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் டூல்கள் அனைத்தையும் ஒருசேர நாம் பயன்படுத்த இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும். இதனைஇன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 

இதில் 13 வகையான டேப்புகள் கொடுத்துள்ளார்கள். மொத்தம் 250 அப்ளிகேஷன்களை நாம் திறக்கலாம்.அப்ளிகேஷனில்  எது தேவையோ அதனை தேர்வு செய்யவும். ஒவ்வொரு டேப்புக்கும் எற்றவாறு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நிறைய டேப்புகள் கொடுத:துள்ளார்கள்.
நமக்கு தேவையான கன்ட்ரோல் பேனல்.சவுண்ட் சிஸ்டர்.ரெஜிஸ்டரி.ரெக்கவரி.டிஸ்பிளே செட்டிங்ஸ்;.டாக்ஸ்க்மேனேஜர்.பயர்பாக்ஸ்.குரோம்.என எதுதேவையோ அதனை நாம் தேர்வு செய்து இதன்மூலம் உடனடியாக திறக்கலாம்.

 இதில் உள்ள ஆப்ஷன் கிளிக் செய்திட நமக்கு ஹெல்ப்,ப்ரோகிராம்.டெவலப்பர் மற்றும் சோஷியல் டேப்புகள் கிடைக்கும்.

கணிணியில் பயன்படுத்தும் அனைத்துவிதமான அப்ளிகேஷன் டூல்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் நாம் தேடும் நேரம் நமக்கு மிச்சமாகின்றது. பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- இலவச வீடியோ-ஆடியோ ப்ளேயர் - PMPlayer

PMPlayer எனப்படும் இது ஒரு இலவச மென்பொருளாகும். இது அனைத்துவிதமான வீடியோ பைல்களையும் ஆடியோ பைல்களையும் சுலபமாகவும் விரைவாகவும் திறக்கக்கூடியது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
 இதன் கீழ்புறம் நிறைய ஐகான்கள் ;கொடுத்திருக்கின்றார்கள். இதில் முதலாவது ஐகானை கிளிக் செய்தால் பைல்கள் திறப்பதற்கான டேப் ஓப்பன் ஆகும். தேவையான பைலினை தேர்வ சேய்து ஒடவிடலாம். இரண்டாவதாக உள்ள ஐகானை கிளிக்செய்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதன் மூலம் விதவிதமான வீடியோ ஆடியோ பைல்களை திறக்கலாம்.டிவிடி பைல்களை திறக்கலாம். வெப்காம் திறக்கலாம். இணைய பைல்களை திறக்கலாம்.வீடியோவை ரெக்கார்ட் செய்யலாம். வேண்டிய பார்மெட்டுக்கு வீடியோவினை மாற்றிக்கொள்ளலாம்.சில வீடியோக்களில் வெளிச்சம்குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும் அவ்வாறான வீடியோ பைல்களை வேண்டியவாறு மாற்றம்  செய்து கொள்ளலாம். 
 ஆடியொ பைல்களின் தரத்தினை மேம்படுத்தலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

 பார்மெட் செய்யப்பட்ட பைலினை சேமிக்க வேண்டிய இடத்தினை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள ஸ்டார்ட் கிளிக் செய்திட சில நிமிடங்களில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இந்த சாப்ட்வேர் மூலம் வீடியோ காலினையும் வீடியோ கான்ப்ரன்ஸ்ஐயும் செய்யலாம்.வீடியோவில் உள்ள சப்டைடிலில் வேண்டிய மொழியையும் நாம் மாற்றிக்கொள்ளலாம்.வீடியோவில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பதுடன் நெட்ஓர்க் ஸ்டீரிமிங்ஸ் செய்யலாம்.நிறைய வசதிகளுடன் இலவசமாக கிடைப்பதால் இதனை பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க

கேமரா மற்றும் செல்போன் மூலம் எடுக்கப்படும் வீடியோக்கள் சில சமயம்அதிக எம்.பி. அளவில் இருக்கும். அதனை இணையத்திலோ அல்லது முகநூலிலோ பதிவேற்றம் செய்யும் சமயம் நேரம் ஆகும். வீடியோவின் தரம் குறையாமல் அளவினை குறைத்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் ;செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் அளவு குறைக்கவேண்டிய பைலினை டிராக் அன்ட்டிராப் முறையில் இழுத்துவிடவும். இதில் பிக்ஸர்.பில்டிர்.வீடியோ.ஆடியோ.சப்டைடில்.மற்றும் செப்டர்ஸ் என ஆறுவிதமான டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.வீடியோ டேபினை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
இதில் நமக்கான வீடியோ அளவினை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்த வீடியோவின் அளவு குறைய ஆரம்பிக்கும்.நமது தேவைக்கேற்ப வீடியோ அளவினை பார்த்து குறைத்து வைத்துக்கொள்ளலாம். மேலும் இதில் உள்ள ஆடியோவினை நீங்கம் செய்வதோ வேறு ஆடியோவினை சேர்ப்பதோ எளிது. மேலும் இதில் உள்ள சப்டைடில் தேவையில்லை என்றால் எளிதில் நீக்கி விடலாம். இதில் நாம் செய்த மாற்றங்களை ப்ரிவியூ பார்க்கலாம். அதற்கு இதில் உள்ள கிரியேட் வீடியோ ப்ரிவியூ கிளிக் செய்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ப்ரிவியூ பார்த்து முடிநத்ததும் மாற்றங்கள் ஏதும் செய்யவேண்டி யிருந்தால் செய்து முடித்துவிட்டு இதில் உள்ள ஸ்டார்ட் டகிளிக் செய்திடவும் உங்களுக்கான மாற்றப்பட்ட வீடியோ நீங்கள் சேமித்த இடத்தில் இருக்கும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...