வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.

கணினியில் ஸ்கிரின்ஷாட் எடுக்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. 2 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த இந்த இணையதளம் http://floomby.com/ செல்லவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 உங்களுக்கு தேவையான செட்டிங்ஸ் செய்துகொள்ளுங்கள்..
 புகைப்படமானது JPEGஅல்லது  PNG என எதுவேண்டுமோ அதனை தேர்வு செய்துகொள்ளுங்கள். புகைப்படத்தின் தரத்தினை முடிவுசெய்திட இதில் உள்ள ஸ்லைட் பாரினை நகர்த்திகொள்ளவும்.
புகைப்படம் தேர்வு செய்ததும் உங்களுக்கு விண்டோ திறக்கம் அதில் புகைப்படத்தின் கீழே டூல்கள் நிறைய கிடைக்கும் தேவையான டூல்களை பயன்படுத்தி தேவையான வசதியினை நாம் பெறலாம். பின்னர் நீங்கள் படத்தினை சேவ் செய்து கணினியில் பாதுகாக்கலாம். தேவைப்படும் சமயம் பயன்படுத்திக்கொள்ளலாம். 
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோவினை வேண்டிய மாற்றங்கள் செய்திட -Video Converter Ultimate

வீடியோவினை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும் இணையதளமான யூடியூபிலிருந்து வீடியோவினை பதிவிறக்கம் வேண்டிய பார்மெட்டுக்கு செய்து அதில் மாற்றங்கள் செய்திடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 சுமார் 300 க்கும் மேற்பட்ட பார்மெட்டுகளில் நாம் வீடியோவினை மாற்றிக்கொள்ளலாம். மேலும் இதில் மேலே டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.

இணையதளமான யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.பின்னர் யூஆர்எல் முகவரியை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்திடவும் பின்னர் இதில் உள்ள அனலைஸ் கிளிக் செய்திடவும்.
சில நிமிடங்களில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும். அதில் நீங்கள் வேண்டிய ஆப்ஷனை கிளிக் செய்திடலாம்.

இதுதவிர வீடியோவில் வாட்டர் மார்க்க கொண்டுவரவும் வேண்டிய பாகம் மட்டும் கிராப் செய்து பயன்படுத்தவும் பிரைட் மற்றும் கான்ட்ராஸ்ட் கொண்டுவரலாம்.வீடியோ என்கன்ஸ் மூலம் வீடியோவினை தரமானதாக மாற்றலாம்.மேலும் வீடியோவினை இடம் வலமாகவும் மேலும் கீழுமாகவும் மாற்றலாம் மேலும் தேவையான அளவிற்கு இதனை சுற்றலாம்.வேண்டிய பகுதிமட்டும் கிராப் செய்து பயன்படுத்தலாம்.அனைத்து பணிகளும் முடிந்து இறுதியில் நீங்கள் சேமிக்க விரும்பும் பகுதியை தேர்வு செய்திடவும். பின்னர் கன்வர்ட் கிளிக் செய்திடவும். சில நிமிடங்களில் உங்களுக்கு தேவையான வீடியோ நீங்கள் விரும்பிய பார்மெட்டில் இருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...