இணையத்திலிருந்து யூடியூப் வீடியோக்களை விதவிதமான டவுண்லோடு சாப்டவேர்கள் உள்ளன. அதனைப்போல இந்த யூ டியூப் விடியோ கிராப்பர் சாப்ட்வேரும் பயன்படுகின்றது. 12 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add பட்டனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் யூடியூப் பிற்கான யூஆர்எல் முகவரியை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
மெயின் விண்டோவில் உங்கள் வீடியொ உங்களுக்கு எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்யவும். அதனைப்போலவே எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தினையும் தேர்வு செய்யவும். வீடியோவின் ப்ரெம்ரேட்-ப்ரேம் சைஸ் -கோடக் முதலியவைகளை நாம் தேர்ந்தேடுக்கலாம்.இறுதியாக ஓ.கே.கொடுங்கள்.அவ்வளவுதான் உங்களுக்கான யூடியூப்பிலிருந்து பதிவிறக்கம் செய்த வீடியோ ரெடி.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.