வேலன்:-வீடியோக்களை ஒன்றாக சேர்க்க

சில வீடியோக்கள் இருக்கும். அதை ஒன்றாக சேர்த்துப்பார்க்க விரும்புவோம்.இன்றைய பதிவில் வீடியோக்களை எப்படி ஓன்றாக சேர்ப்பது என பார்க்கலாம். இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். 3 எம்.பி. கொள்ளளவு கொண்டஇது டிரையல்விஷன் ஆகும்.இதை டவுண்லோடு செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ADD என்பதில் நீங்கள் சேர்க்க விரும்பும் பைல்களை தேர்வு செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள பைல்களை விரும்பியவாறு மேலே கீழே மாற்றி வைக்கலாம்.கடைசியாக Join  கிளிக் செய்யவும்.கீழே உள்ள விண்டோ தோன்றும்.
சில நொடிகளில் இணைப்பு வேலை முடிந்துவிடும். விருப்பபட்டால் சேர்த்த வீடியோ வை காணலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் கொண்டுவர

போட்டோஷாப்பில் பதிவு போட்டு ரொம்ப நாளாகியது என நமது வாசகர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இன்று போட்டோஷாப் பற்றிய பதிவு.விளம்பரம் மற்றும் லோகோவில் சில பெயர்களை பார்த்திருப்பீர்கள். வட்ட வடிவமாக வரும். அதை போட்டோஷாப்பில எப்படி கொண்டுவருவது என இன்று பார்க்கலாம். போட்டோஷாப் திறந்து கொள்ளுங்கள். அதில் புதிய விண்டோவினை 400x400,300x300,500x500, என விரும்பிய அளவிலும் Resolution (ரேசுலேஷன்) 72 Colour Mode = RGB Color, BackGround Contents= White என வரும்படியும் திறந்துகொள்ளுங்கள்.
பின்னர் Horizontal Type Tool ( ஹரிசான்டல் டைப் டூல்)திறந்துகொள்ளுங்கள். வேண்டிய பாண்ட் தேர்வு செய்யுங்கள்.நான் பாமினி தேர்வு செய்துள்ளேன். அதைப்போலவே முறையே Bold, 50pt,என வைத்துக்கொள்ளங்கள். இப்போது வேண்டிய வார்த்தைகளை தட்டச்சு செய்யுங்கள்.நான் உலகத்தமிழ்செம்மொழிமாநாடு-கோவை2010 என தட்டச்சு செய்துள்ளேன். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில என்னடா பாதி வார்த்தைகள்தான் வருகின்றது மீதியை காணவில்லையே என நினைக்கவேண்டாம். வார்த்தைகள் தெரியாவிட்டாலும் நீங்கள் தொடர்ந்து தட்டச்சு செய்யுங்கள்.
இப்போது எடிட் சென்று அதில உள்ள டிரான்ஸ்பார்ம் கிளிக்செய்யுங்கள். வரும் விண்டோவில் ரோடேட் 180 என்பதை தேர்வு செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போழுது நீங்கள் தட்டச்சு செய்தவார்த்தையானது தலைகீழாக உங்களுக்கு தெரிவதை காணலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது மீண்டும் பில்டர் டெஸார்ட் -போலார் கார்ட்டினஸ்  கிளிக்செய்யுங்கள்.  கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
இப்போது நீங்கள் தட்டச்சு செய்த வாக்கியம் கீழ்கண்ட விண்டோவில் ஓப்பன் ஆகும்.
வேண்டிய அளவினை கொடுத்து ஒ.கே.தாருங்கள்.இப்போது உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ தோன்றும்.
என்னடா இது பாதி தெரிகின்றது் மீதியை காணேமோ என நினைக்கவேண்டாம். இப்போது மூவ் டூலை தேர்வு செய்யுங்கள்.அடுத்து உங்கள் கீ-போர்டில் டெலிட் கீ யின் கீழே நான்கு அம்புக்குறிகளுடன் கீ கள் இருக்கும். அதில வலதுபக்கம் உள்ள அம்புக்குறியை தட்டுங்கள். உங்களுக்கு படம் ஆனது மெல்ல நகர ஆரம்பிக்கும்.வேண்டிய இடம் வந்ததும் நகர்த்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.வேண்டிய அளவுக்கு கொண்டுவர கன்ட்ரோல் உடன் டி(Ctrl+T) அழுத்துங்கள்.உங்களுக்கு எழுத்தை சுற்றி கட்டம் வருவதை காணலாம்.கீழேஉள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது ஆலட் ஷிப்ட்(Alt+Shift) அழுத்திகொண்டு நடுவில் உள்ள சிறிய கட்டத்தை நகர்த்துங்கள். இப்போது எழுத்தை வேண்டிய அளவிற்கு அதிகமாகவோ குறைவாக மாற்றிக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
வட்ட எழுத்துக்கள் ரெடி.நடுவில் படம் வரவேண்டும்.இப்போது வேண்டிய படததை தேர்வு செய்யுங்கள். நான் கோயில் கோபுரத்தை தேர்வு செய்துள்ளேன்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.

இப்போழுது படத்தில் இந்த பெயரை மூவ் டூல் மூலம் கொண்டு வருகின்றேன்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

கிளோன் ஸ்டாம்ப் டூல் (Clone Stamp Tool) மூலம் கீழே உள்ள பகுதிகளை நீக்கினேன். இப்போது வந்துள்ள படத்தை பாருங்கள்.

தமிழில்செய்ததைப்போலவே ஆங்கிலத்தில தட்டச்சு செய்த வாக்கியம் கீழே-

உங்களுக்கு தேவையான வாக்கியத்தைஇதுபோல் தட்டச்சு செய்து பயன்படுத்தி பாருங்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-Excell -எக்ஸெல்லில் சுலபமாக பிரிண்ட் எடுப்பது எப்படி?


எக்ஸெல்லில் பிரிண்ட் எடுப்பது தனிக்கலை. புதியவர்கள். அதைப்பற்றி இன்று தெரிந்துகொள்ளலாம்.எக்ஸெல்லில் தேவையான பகுதியை தட்டச்சு செய்துகொள்ளுங்கள். இனி அதை பிரிண்ட் எப்படி எடுப்பது என பார்க்கலாம்.நீங்கள் பிரிண்ட் செய்யும் எக்ஸெல் டாக்குமெண்ட்டின் ரோ அதிகமாக இருந்து காலம் குறைவாக இருந்தால் அதை நாம் பேப்பரில் Portrait-லும்(நீள வாட்டத்திலும்) காலம் அதிகமாக இருந்து ரோ குறைவாக இருந்தால் அதனை Landscape-லும்(குறுக்கு வாட்டத்திலும்) பிரிண்ட் செய்தால் அழகாக இருக்கும். நீங்கள் பிரிண்ட் செய்யும் முன் Page Setup  கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  
அதில் முதலில உள்ள Orientation ல் முன்பு சொன்னபடி Portrait or Lanscape அதில் எது தேவையோ அந்த தேவையானதை தேர்வு செய்யுங்கள்.Scaling என்பதில் Adjust to உள்ள அளவில் எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவிற்கான % (சதவீதம்) தேர்வு செய்யுங்கள்.சதவீத அளவை கூட்டுவது - குறைப்பது மூலம் எழுத்துக்களின் அளவில் மாற்றம் வரும்.Page Size ல் உங்கள் பேப்பரின் அளவினை தேர்வு செய்யுங்கள்..கடைசியாக ஓ.கே. தாருங்கள்.இப்போது இரண்டாவது டேபை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். .
Margins என்பதில் மேலே கீழே -இடது பக்கம் வலது பக்கம் என வேண்டிய அளவினை கொடுங்கள். பிரிண்ட டானது பேப்பரின் மையத்தில்(Center on Page) வர இதில் உள்ள Horzontaly -Vertically எதிரில் உள்ள கட்டத்தில டிக் அடையாளம் செய்து  ஒ.கே.தாருங்கள்
இப்போது மூன்றாவதாக உள்ள Header/Footer  என்பதை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் பிரிண்ட் செய்யும் பக்கத்தின் மேலே அல்லது கீழே வேண்டிய வார்த்தைகளை சேர்க்கலாம். நமது விருப்பபடியும் வார்த்தைகளை-தேதியை நேரத்தை- கொண்டுவரலாம்.
கடைசியாக Sheet Tap –ஐ தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்..

இதில் முதலில் உள்ள Print Area காலத்தில் எந்த காலத்தில இருந்து எந்த காலம் வரை என குறிப்பிடுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் Al லிருந்து k8 வரை உள்ள கட்டங்களை பிரிண்ட் எடுக்க விரும்பினால் a1:k8 என   குறிப்பிடுங்கள். அதைப்போலவே
பிரிண்ட டைட்டில் எந்த ரோவின் இடையில் எந்த காலத்தின் இடையில் வரவேண்டுமோ அந்த இடத்தை கீழே உள்ள பிரிண்ட் டைடில்லில் குறிப்பிடுங்கள். அதைப்போலவே உங்களுக்கு பிரிண்ட்டானது கோடுகளுடன் வரவேண்டுமா ? கோடு இல்லாமல் வரவேண்டுமோ என்பதை கீழே உள்ள பிரிண்ட் காலத்தின் கீழே உள்ள Gridness கிரிண்ட் என்பதில் எதிரில் உள்ள பட்டனில் கிளிக்செய்யுங்கள். இறுதியாக பிரிண்ட் ப்ரிவியு பார்த்து ஓ.கே. தாருங்கள்
பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள.
 வாழ்க வளமுடன்,
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-Damage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற

நாம் காப்பி செய்யும் சிடிகளில்  அந்த சிடியில் உள்ள தகவல்களை எழுதிவைப்போம். சில சமயம் எழுத மறந்துவிடுவோம்.சில நாட்கள் கழித்து சிடியை எடுத்து பார்க்கும் சமயம் டேமேஜ் (Damage) ஆகியிருக்கும்.எதில்போட்டாலும் சிடி ஓப்பன் ஆகாது. அதில் என்ன தகவல் உள்ளது என்பதும் நமக்கு தெரியாது. அந்த சிடியை வைத்துக்கொள்வதாக இல்லை குப்பையில் போட்டுவிடுவதா என குழப்பமாகும். குப்பையில போடும் முன்பு அதை செக்செய்து போடுவது நல்லது. சிலசமயம் அதில முக்கியமான தகவல்கள் இருக்க்கூடும். அதை சிடி டிரைவில போட்டால் ஒப்பன் ஆகாது. அந்த மாதிரியான சமயத்தில் நமக்கு கை கொடுக்க வருவது இந்த சாப்ட்வேர். உயிருக்கு போராடுபவருக்கு பெரிய டாக்டர் கடைசியாக முயற்சிசெய்வதில்லையா. அதுபோல் இந்த சாப்ட்வேர் மூலம் கடைசியாக முயற்சிசெய்து இதில உள்ள தகவல்களை மீட்டு எடுக்கலாம். இதிலும் தகவலை எடுக்க முடியாவிட்டால் அவ்வளவுதான்.மனதை தேற்றிக்கொண்டு சிடியை தூக்கி போட்டுவிடுங்கள்.இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்கள் கணிணியில் இன்ஸ்டால்செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இப்போது உங்களுக்கு சிடியை டிரைவில் போடசொல்லி தகவல் வரும் கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
இப்போது சிடி டிரைவில் சிடியை போட்டு ஓ.கே.தாருங்கள். இப்போது மெயின் விண்டோவில் உள்ள சிடி ஐகானை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது நெக்ஸ்ட் கொடுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில நீங்கள் சேமிக்க விரும்பம் போல்டரை தேர்வு செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும். அதில பைல்கள் சிடியிலிருந்து டிரைவின் போல்டருக்கு காப்பி ஆகும். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
இறுதியாக பைல்கள் காப்பி ஆகிவிட்டதை காணலாம்.இதுதவிர்த்து நீங்கள் சிடியில ஒரே ஓரு பைலை மட்டும் காப்பி செய்வதானாலும் காப்பி செய்யலாம். மெயின்விண்டோவில் இரண்டாவதாக உள்ள ஐ –கானை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
எந்த பைல்வேண்டுமோ அதை மட்டும் தேர்வு செய்து அதைமட்டும் வேண்டிய போல்டரில புதியதாக பெயர் கொடுத்து காப்பி செய்யலாம் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
.
சிறிது நேரம் கழித்து  நீங்கள் காப்பி செய்த போல்டரில் பார்த்தால் உங்கள் சிடியில் உள்ள தகவலானது ஜம்முனு அங்கு அமர்ந்திருக்கும். பதிவினை பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள்.


விளம்பரங்களாகட்டும்-திரைப்படங்களின் டைடில்கள் ஆகட்டும் வித்தியாசமாக பாண்ட்களில் பெயர் இருந்தால்தான் மற்றவர்களை கவரும். அந்த வகையில் என்னிடம் இருந்த தமிழ்பாண்ட்களில் தேர்ந்தெடுத்து இங்கு 12 தமிழ்பாண்டுகளை கொடுத்துள்ளேன்.பதிவிறக்கி பயன்படுத்திகொள்ளுங்கள். இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இது வெறும் 2 எம்.பி்.குள்தான் உள்ளது.இந்த பாண்ட்களை எப்படி கம்யூட்டரில் இன்ஸ்டால்செய்வது என முன்னரே நான் பதிவிட்டுள்ளேன்..அதைப்போலவே இந்த பாண்ட்களின் எழுத்துக்களை கீ -போர்ட்டில் எப்படி காண்பது என நான் பதிவிட்டுள்ளதை இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.இப்போது இந்த பாண்ட்களை பயன்படுத்தி நான் பதிவிட்டுள்ள மாடல் எழுத்துக்களை காணுங்கள்.

இந்துக்கள் வினாயர் இல்லாமல் எந்த வேலையையும் தொடங்க மாட்டார்கள். இதில் மொத்தம் 10 வினாயகர் உருவங்கள் விதவிதமாக உள்ளது. இதை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்தால் போதும். வேண்டிய அளவில் உருவத்ததை கொண்டு வரலாம்.கீழே உள்ள வினாயகர் உருவங்களை காணுங்கள்.

சாமி சூலம் என்கின்ற பாண்ட் மூலம் அம்மன் பெயரை தட்டச்சு செய்துள்ளேன்.இங்கு புள்ளி வரும் இடங்களில் சூலம் வருவதை கவனியுங்கள்.

சாமி வேல் என்கின்ற பாண்ட் மூலம் வேலன் பெயரை (சாமி பெயருங்க)தட்டச்சு செய்துள்ளேன்.

சங்கீதம் பாண்ட் மூலம் தட்டச்சு செய்த வாக்கியம் கீழே:-
இதுவும் சங்கீதம் பாண்ட்தான்:-

காதலர்கள் மனம் கவர்ந்த இதயம் பாண்ட்டில் தட்டச்சு செய்த வார்த்தை கீழே:-

இசை பாண்ட் மூலம் தட்டச்சு செய்த வார்த்தை கீழே:-

தாடகம் பாண்ட்டில் தட்டச்சு செய்த வார்த்தை கீழே:-

தீர்த்தம் என்கின்ற பாண்ட்டில் தட்டச்சு செய்த வார்த்தை கீழே:-

சித்திரம் என்கின்ற பாண்டில் தட்டச்சு செய்த வார்த்தை கீழே:-

வைகை பாண்ட்டில் தட்டச்சு செய்த வார்த்தை கீழே:-


கோலம் பாண்ட்டில் தட்டச்சு செய்த வாக்கியம் கீழே:-

(ஏங்க ..நீங்க நினைக்கின்ற புள்ளி ராஜா நான் இல்லைங்க...சும்மா பெயர் போட்டு பார்த்தேன்.அவ்வளவுதான்.)

பதிவுகளை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-Screen Saver-ஸ்கிரீன் சேவரில் வீடியோ வரவழைக்க


ஸ்கிரீன் சேவரில் நாம் புகைப்படங்களை மாற்றுவதை பார்த்துள்ளோம். அதைப்போல புகைப்படங்களுடன் இசையையும் ஒலிப்பதை பார்த்துள்ளோம். ஆனால்இந்த சாப்ட்வேரில் ஸ்கிரீன் சேவராக வீடியோ படம் ஓடுவதை காணலாம்.இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.3 எம்.பி. கொள்ளளவு உள்ள இது இலவச சாப்ட்வேரே..இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு டாக்ஸ்பாரில் கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
இதில் உள்ள Settings கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும். இதில் கம்யூட்டர் எவ்வளவு நேரம் காத்திருந்தால் உங்களுக்கு வீடியோ வரவேண்டுமோ அந்த நேரத்தை குறிப்பிடவும்.ஒலியையும் மீண்டும் கணிணி இயல்பு நிலைக்கு திரும்புவதையும் இதில செட் செய்திடலாம்.
டாக்ஸ்க்பாரில் உள்ள Main என்பதனை கிளிக்செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் வீடியோ உள்ள போல்டரை தேர்வு செய்துகொள்ளலாம். அதைப்போல ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோ போல்டர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
நீங்கள் செட் செய்த வீடியோவானது குறிப்பிட்ட நேரம் நீங்கள் கம்யூட்டருக்கு எந்த வேலையையும் கொடுக்காமல் இருந்தால் ஸ்கிரீன்சேவராக வீடியோ படம் ஓட ஆரம்பிக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-Alarm -அலாரத்தில் திரைபட பாடல்கள் செட் செய்ய


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.எனது 300 ஆவது பதிவிற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கும்,ஒட்டு போட்ட அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி....கோடை மழை கொண்டாட்டம் தொலைகாட்சியில் தான் வழங்குவார்களா என்ன? நாமும் கோடை மழை கொண்டாடலாம் வாங்க.இந்த மே மாதம் முடியும் வரை தினம் ஒரு பதிவை பதிவிடலாம் என உள்ளேன்.வழக்கமான PSD டிசைன் புகைப்படங்கள் கோடை மழை கொண்டாட்டம் முடிந்ததும் பதிவிடுகின்றேன்.இப்போது கோடைமழையை கொட்டாட மறக்காமல் தினம் வந்து விடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

இன்றைய பதிவில் திரைப்பட பாடலைஅலாரமாக செட் செய்வதை பார்க்கலாம். வழக்கப்படி அலாரம் அடித்தால் நமக்கு விதவிதமான ஒலிகள் தான் கிடைக்கும் இந்த சாப்ட்வேரில் நாம் தட்டச்சு செய்த வாக்கியம் அலராமாக குரலில் ஒலிக்கும். நமது குரலில் பேசி அதை அலாரமாக ஒலிக்க செய்யலாம். திரைப்பட பாடலை அலாரமாக ஒலிபரப்ப செய்யலாம். சரி...இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். 12 எம்.பி. அளவுள்ள இந்த சாப்ட்வேர் முற்றிலும் இலவசமே...

நீங்கள் உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


அதில் முதலில் உள்ள Set Alarm கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். அதில் நேரத்தையும் தேதியையும் பூர்த்தி செய்யுங்கள்.Enter the Reminder Test ல் உங்களுடைய டெக்ஸ்டை தட்டச்சு செய்யுங்கள்.குறிப்பிட்ட வேலையை உங்களுக்கு நினைவுபடுத்த அந்த வேலையை தட்டச்சு செய்து வைக்கலாம்.சரி..உங்களுக்கு டெக்ஸ்ட் பிடிக்கவில்லை. நீங்கள் பேசிய ஆடியோ அல்லது திரைப்பட பாடல்கள் வேண்டும் என்றாலும் இதில் செட் செய்து கொள்ளலாம். 
Use Music or sounds to remind me என்பதின் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு Select MP3 File or Select Wave File என்பதை தேர்வு செய்து பாடலையோ உங்கள் பேச்சையோ செட் செய்யுங்கள்.மேலும் Daily Alarm என்பதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் கிழமையையும் டெக்ஸ்டையும் - பாடலையும் விருப்பபடி தேர்வு செய்யலாம்.Advance Alarm செட் செய்து வேவேறு தேதிகளையும் செட் செய்திடலாம். இதனால் திருமணம் - பிறந்த நாள் - முக்கிய நிகழ்ச்சிகளையும் குறித்து வைத்து நமக்கு நினைவுட்டும் படி செய்யலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் 2999 வரை காலண்டர் உள்ளது.(அதுவரை இருப்போமா.?) கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில StopWatch  உள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள் ஸ்டாப்வாட்ச் தேவைபடும் போது உபயோகித்துக்கொள்ளலாம். 
Active Alarm கிளிக் செய்வதன் மூலம் நாம் செட் செய்த தை பார்க்கலாம். தேவைபட்டால் ரீ - செட் செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில உள்ள Settings கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான வசதியை பெற இங்குள்ள ரேடியோபட்டனை கிளிக்செய்வதன் மூலம் பெறலாம்.
Select the charactor மூலம் நான்கில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.அதைப்போல கெடிகாரத்தின் டைப்பை மாற்றிக்கொள்ளலாம் கீழே உள்ள விண்டோக்களை பாருங்கள்.
பயன்படுத்தி பாருங்கள்.கருத்தினை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...