நமது கணிணியில் ஏதாவது ஒரு பைல் தேடவேண்டுமானல் நாம்
Start-Search –For File and Folders சென்று வரும் விண்டோவில் நமக்கு தேவையான பைலினை தட்டச்சு செய்து பின்னர் கீழே உள்ள சர்ச் பாக்ஸில் என்டர் தட்ட வேண்டும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் அந்த சிரமம் நமக்கு இல்லை. 5 எம்.பி.கொள்ளவு-கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வரும் விண்டாவில் Find என்பதஎன்கின்ற பாக்ஸில் நமக்கான பைலின் பெயரையா –அதனுடைய எக்ஸ்டன்சனையா தட்டச்சு செய்தால் போதுமானது. தமிழில் ஒரு பழமாழி சொல்லுவார்கள். எள் என்று சொல்லும் முன் எண்ணையுடன வந்து நிற்கவேண்டும் என்று..அதுபால் இந்த சாப்ட்வேரில் நாம் தட்டச்சு செய்யும் சமயம் நமக்கு தேவையான பைலானது உடனே தேர்வாகும்.
மேலும் இதில் நம்கணிணியில் உள்ள அனைத்து டிரைவ்களும் காண்பிக்கும்.தேவையான டிரைவினை தேர்வு செய்தோ அல்லது முழுவதுமாகவா தேர்வு செய்து பைலினை தேட சொல்லலாம். மேலும் நாம் தேடும் பைலானது எந்த டிரைவ்களில் உள்ளது என்றும் மொத்தம் எத்தனை பைல்கள் அது கண்டுபிடித்து கொடுத்துள்ளது என்பதனையும் எளிதில் அறிந்துகொளளலாம். மேலும் வந்துள்ள பைல்களை நாம் ஆல்ப்ப்படிக்கல் படி நாம் வரிசைபடுத்திக்கொள்ளலாம். மேலும் தேர்வாகிஉள்ள பைல்களை தனியே டெக்ஸ்ட் பைலாகவா –எச்டிஎம்எல் பைலாகவா நாம் சேமித்துவைத்துக்க்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்
விரைவாக பைல்களை தேடி தருவதுடன் கூடுதல் வசதிகள் இதில் உள்ளதால்இதனையே பயன்படுத்திக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.