சில டாக்குமெண்ட்கள்.சில புகைப்படங்கள்.சில வீடியோக்கள் என முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் இருக்கும். அதனை மற்றவர்கள் பார்க்காமல் இருக்க சிடி -டிவிடியில் பாஸ்வேர்ட கொடுத்து பாதுகாக்கலாம். டிவிடி மற்றும் சிடிக்களில் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மேலே உள்ள Create Disc என்பதனை கிளிக் செய்யவும். இப்போது உங்களக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.நீங்கள் காப்பி செய்யபோவது சிடியா அல்லது டிவிடியா என முடிவு செய்யவும்.அதற்கு ஏற்ப டிஸ்க் அளவினை தேர்வு செய்யவும். இறுதியாக ஓ.கே. தரவும்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
பின்னர் இதில் கொடுத்துள்ள கடவுச்சொல்லினை இரண்டு முறை தட்டச்சு செய்யவும்.இறுதியாக Create Disc என்பதனை கிளிக் செய்யவும்.
உங்களுக்கான டிரைவ் ஆனது மை கம்யூட்டரில் தெரியும். அதில் நீங்கள் சேமிக்க விரும்பிய புகைப்படங்கள். வீடியோக்கள். டாக்குமெண்ட்கள் என எது விருப்பமோ அதை காப்பி செய்து டிரைவில் சேமியுங்கள்.நீங்கள் டிரைவில் சேமித்த பைல்களானது சி டிரைவில் c:\\user\user\rdisc.rdi என் கின்ற இடத்தில் சேமிப்பாகும். பின்னர் மீண்டும் நீங்கள் ;முதலில் திறந்த விண்:டாவினை திறந்து அதில் Delete disc என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கான டிரைவானது மை கம்யூட்டரில் இருந்து மறைந்துவிடும். இப்போது உங்களுக்கான நீரோ அல்லது அஷாம்பூ அல்லது வேறு எதாவது அல்லது உங்களிடம் இருக்கின்ற சிடி காப்பி செய்கின்ற சாப்ட்:வேரினை பயன்படுத்தி சி டிரைவில் யூசரில் உள்ள பைலினை காப்பி செய்யவும். சிடியானது சில நிமிடங்களில் காப்பி ஆகிவிடும். இப்போது சிடியை வௌியில் எடுத்து மீண்டும் டிரைவில் போடவும். பின்னர் முதலில் திறந்த விண்டோவினை திறந்து அதில் உள்ள open exciting disk என்பதனை கிளிக்செய்து உங்கள் சிடி டிரைவினை தேர் வுசெய்யவும். இப்போது விண்டோ திறக்கையில் உங்களுக்கு கீழ்கண்ட எச்சரிக்கை செய்தி வரும். அதில் நீங்கள் ஏற்கனவே உள்ளீடுசெய்த கடவுச்சொல்லை தட்டச்சு செய்யவும்.
பின்னர் ;ஒ.கே. தர நீங்கள் சிடியில் காப்பி செய்த டாக்குமெண்ட்கள். புகைப்படங்கள. வீடியோ என நீங்கள் எதனை மற்றவர்கள் பார்வையிலிருந்து பாதுகாப்பாக வைக்கவேண்டும் என விரும்பினீர்களோ அந்த பைலினை பார்வையிடலாம். நீங்கள் ஒவ்வொரு முறையும் சிடியை ஒப்பன் செய்து பார்த்திட இந்த வழி முறையையே பயன்படுத்திட வேண்டும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்