வேலன்:- புகைப்படங்கள் பிரிண்ட் செய்திட ஸ்லைட்ஷோ உருவாக்க. இணையபுகைப்படங்கள்உருவாக்க -TalaPhoto.

புகைப்படங்களை தனிப்படமாகவோ,மொத்தமாகவோ.இணைய புகைப்படமாகவோ.ஸ்லைட் ஷோ உருவாக்கவும் இந்த மென்பொருள் உதவுகின்றது. இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக்  செய்யவும்.


 இதன் பதிவிறக்கம் முடிந்ததும் வரும் விண்டோவில் இலவச உபயோகம் (Free Use) என்பதனை கிளிக் செய்திடவும். பின்னர் இதில உள்ள பைல் கிளிக் செய்து உங்களிடம் உள்ள புகைப்படங்களை தேர்வு செய்திடவும்.இதில் தனிதனி புகைப்படமாக நாம் பிரிண்ட் செய்துகொள்ளலாம். பேப்பரின் அளவினை நாம் தேர்வு  செய்துகொள்ளலாம்.


 இதில் உள்ள மல்டிபிரிண்ட் கிளிக் செய்திட உங்களிடம் உள்ள  புகைப்படங்கள் அனைத்தும வருவதை காணலாம்.அனைத்து புகைப்படங்களையும் தேவையான பேப்பரில் ஒரே படமாக பிரிண்ட் செய்து கொள்ளலாம்.
 புகைப்படங்களை இணைய புகைப்படங்களாக நாம் மாற்றிக்கொள்ளலாம்.
 தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்து பின்னர் இதில் உள்ளவெப்டிசைனர் கிளிக் செய்யவும்..புகைப்படங்களில் வாட்டர் மார்க்காக டெக்ஸ்ட்டினை நாம் சேர்க்கலாம். 

அதுபோல பின்புற நிறத்தினை (Backround Color) நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
பின்னர் இதில் உள்ள வழிகாட்டுதல் படி கிளிக் செய்துவாருங்கள்


 புகைப்படங்களை நாம் ஸ்லைட் ஷோவாக உருவாக்கலாம். 
 அதற்கு இதில் உள்ள ஸ்லைட்ஷோ பட்டனை கிளிக் செய்து வழிகாட்டுதல்படி கிளிக் செய்திடவும்.
 புகைப்படங்களில் பிரைட்நஸ் மற்றும் கான்டாஸ்ட் கொண்டுவரலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

ஓரே மென்பொருளில் தனிபுகைப்படம் பிரிண்ட் செய்திட.,மொத்தமாக பிரிண்ட் செய்திட.வெப் பக்கங்கள் உருவாக்க.ஸ்லைட் ஷோ கொண்டுவர என பயன்படுகின்றது. பயன்படுததிப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-காப்பி செய்தமுடியாத சிடிபைல்களை காப்பி செய்திட-CD Copy

சில சிடிக்கள் நாம் கேட்கலாம்.பார்க்கலாம் ஆனால் அதனை காப்பி செய்து மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது. இவ்வாறு பாதுகாக்கப்பட்ட சிடிக்களை சுலபமாக காப்பி செய்திட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த இங்கு கிளிக் செய்யவும். இதனைஇன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் நீங்கள் காப்பி செய்திடவேண்டிய பாரமெட்டினை தேர்வு செய்திடவும். மேலும் உங்கள் டிரைவில் எங்கு சேமிக்கவேண்டுமொ அந்த இடத்தினை தேர்வு செய்திடவும். இதில் உள்ள ஸ்டார்ட் காப்பிகிளிக் செய்திடவும். சில நோடிகள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் சிடியில் உள்ள தகவல்கள் உங்கள் கணினியின் ஹார்டிரைவில் சேமிப்பாக இருப்பததை காணலாம். இதில் நீங்கள் சிடியில் உள்ள ஒவ்வொரு பைலினையும் பிளேசெய்து பார்த்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-விதவிதமான வேர்ட் டிசைன் செய்திட -Flamingtext.

எழுத்துக்களில் நாம் விதவிதமான டிசைன்கள்கொண்டவர வேர்ட். அல்லது போட்டோஷாப் பயன்படுத்துவொம்.ஆனால் இந்த இலவச இணையதளத்தில் நமக்கு வேண்டிய லோகோ மற்றும் எழுத்துக்களில் டிசைன்கொண்டுவர உதவுகின்றது. இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக்  செய்யவும்.
உங்களுக்குகீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
அதில் உள்ள டேபில் நமக்குவிருப்பமான பெயரினை தட்டச்சு செய்திடவும. நான் தமிழ்கம்யூட்டர் என தட்டச்சு செய்துள்ளேன். உங்களுக்கு விதவிதமான டிசைன்கள் வரும். 



உங்களுக்கு எந்த டிசைன் பிடித்துள்ளதோ அதனை டபுள்கிளிக் செய்திடுங்கள். 


இதில் உள்ள எடிட் கிளிக்செய்து வார்த்தைகளில் பின்புற நிறம்.எழுத்துரு அளவு மற்றும் நீங்கள் பதிவிறக்கம் செய்யவேண்டிய பார்மெட்டினை தேர்வு செய்துகொள்ளலாம்.


இதில் டெக்ஸ்ட.லோகோ.ஷோடோ.பேக்கிரவுண்ட்.மற்றும் இமேஜ் என 5 டேப்புகள்கொடுத்துள்ளார்கள்.பார்மெட்டினையும் தேர்வு செய்திடலாம்.
அனைத்து பணிகளும் முடிந்தபின்னர் நீங்கள் இதனை டவுண்லோடு செய்து உங்கள ;கணினியில்சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
இந்த லோகோவினை நீங்கள் எந்த ஒரு அப்ளிகேஷனிலும் சுலபமான பயன்படுத்திக்கொள்லாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Wise Youtube Downloader.

இணையத்தில் பயன்படுத்தப்படும் யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திடவும் வீடியொக்களை தேடி பதிவிறக்கம் செய்திடவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செயதிட இங்கு கிளிக்     செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்க கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 இதில் உங்கள் யூடியூப் யூஆர்எல் முகவரியை இதில உள்ள டேபில் தட்டச்சு செய்தோ காப்பிபேஸ்ட் செய்தோ கீழே உள்ள டவுண்லோடு லிங்க்கினை கிளிக் செய்திடவும்.
நீங்கள் பதிவிறக்கம் செய்யவேண்டிய வீடியோவின் அளவினை தேர்வு செய்திடவும். 

சில நிமிடங்களுக்கு பின்னர் உங்கள் வீடியோவானது டவுண்லோடு ஆகிவிட்டிருப்பதை நீங்கள் காணலாம்.
அதுபோல இணையத்தில் நீங்கள் வீடியோக்களை தேடி பின்னர் பதிவிறக்கம் செய்யும் வசதியும் இதில இணைந்துள்ளது. நீங்கள் தேடும் வீடியோவின் பெயரினை இதில தட்டச்சு செய்து பின்னர் சர்ச கிளிக் செய்திடவும். நீங்கள் தேட சொன்ன வார்த்தைக்கு ஏற்ப நிறைய வீடியொக்கள் உங்களுக்கு டிஸ்பிளே ஆகும். 




தேவையானதை கிளிக்செய்தால் டவுண்லோடு ஆக ஆரம்பிக்கும்.


 அதுபோல இதில் உள்ள செட்டிங்ஸ கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

வேண்டிய பார்மெட்டினையும் சேமிக்க விரும்பும் இடத்தினையும் நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- பிரிண்ட லாக் செய்யப்பட்ட பிடிஎப் பைல்களை பிரிண்ட செய்திட -PDF Print Lock

சில பிடிஎப் பைல்களை நாம் பார்வையிடலாம். சேமிக்கலாம் ஆனால்அதிலிருந்து நாம்பிரிண்ட் எடுத்து பயன்படுத்த முடியாது. நீங்கள் பிரிண்ட்ஆப்ஷன் கொடுத்தால் பிரிண்ட் ஐகான் ஹிட்டன் செய்தவாறு உங்களுக்கு தெரியவரும்.உங்களால் பிரிண்ட எடுக்க இயலாது.
அவ்வாறு உள்ள பிடிஎப் பைல்களை நீங்கள் உங்கள் கணினியில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.பின்னர் பிடிஎப் பைலின் நடுவில்வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள்.கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


அதில் டாக்குமெண்ட் ப்ராபர்டீஸ் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் இரண்டாவதாக உள்ள டேபினை கிளிக் செய்திடவும்.


பிரிண்ட் நாட் அலவுட் என உங்களுக்கு தகவல் தெரியவரும். இப்போது நீங்கள் உங்கள் ப்ரவுசரில் கூகுள் டிரைவினை ஒப்பன் செயதிடுங்கள். வரும் விண்டோவில் நியூ என்பதனை தேர்வு செயதிடுங்கள்.அதில பைல் அப்லோடு என்பதனை கிளிக்செய்து வரும் விண்டோவில் உங்கள் பிடிஎப் பைலினை தேர்வு செய்திடுங்கள். சில நிமிடங்கள் காத்துஇருக்கவும்.




நீங்கள் இப்போது வரும் பிடிஎப் பைலினை உங்கள் கணினியில் மீண்டும் சேமித்து இப்போது பிரிண்ட் ஆப்ஷன் சென்று பாருங்கள்.


ஹிட்டன் ஆன பிரிண்ட் ஆப்ஷனானது இப்போது உங்கள் பார்வைக்கு தெரியவரும். இப்போது நீங்கள் அதனை பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்.
வாழ்கவளமுடன்
வேலன்.





பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பாஸ்வேர்ட் கொடுத்து இன்டர்நெட் பயன்படுத்த.-Internet Locker.

டாக்குமெண்ட்டுக்கள். அப்ளிகேஷன்கள் போல்டர்கள் போன்றவற்றிக்கு பாஸ்வேர்ட் கொடுப்பதுபோல நாம் இன்டர்நெட்டுக்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம். இதனால் மற்ற்வர்கள் நமது இன்டர்நெட்டினை பய்ன்படுத்துவதை தடுப்பதுடன் நமது இமெயில் உபயோகம்.தடைசெய்யப்படட இணையதளங்கள் போன்றவற்றையும் மற்றவர்கள் பார்வையிடுவதிலிருந்து பாதுகாக்கலாம்;இதன் இணையதளம் சென்றுஇதனைபதிவிறக்கம்செய்திடஇங்குகிளிக்  செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதன் ஸ்கின் கலரினை நாம் தேவைப்படும் நிறத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இன்டர்நெட்டினை மற்றவர்கள் உபயோகிக்கும் நேரத்தினையும நாம் இதில் செட்செய்துவிடலாம். 
 நீங்கள் மற்றவர்கள் பார்க்கவிரும்பும் நேரத்தினை இதில்செட் செய்துவிட்டால்அந்த நேரம் மட்டுமே இன்டர்நெட்டானது உபயோகமாகும். அதன்பிறகு இன்டர்நெட லாக் ஆகிவிடும். அதன்பிறகு மற்றவர்கள் உபயோகிக்கவிரும்பினால் பர்ஸ்வேர்ட் கொடுத்தே உள் நுழையமுடியும்.

 உங்களுககான பாஸவேர்டினை இரண்டுமுறை தட்டச்சு செய்திடவேண்டும்.
 பின்னர் ஓ.கே. கொடுதது வெளியேறியபின்னர் நீங்கள் மீண்டும் இன்டர்நெட்டில் நுழையவேண்டுமானால் பாஸ்வேர்ட் கொடுத்தபின்னரே இன்டர்நெட் பயன்டுத்தத முடியும்.
இதன் மூலம் மற்றவர்கள் நமது இன்டர்நெட் பயன்படுததுவதை நாம் தடைசெய்துவிடலாம். பயன்படுத்திப்பர்ருங்கள்
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-புகைப்படங்களில் பெயர் கொண்டுவர -Add Text to Photos.


புகைப்படங்களில் போட்டோஷாப் துணையில்லாமல் வேண்டிய வார்த்தைகளை நாம் கொண்டுவர இந்த இணையதளம் உதவுகின்றது. இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக்  செய்யவும்.இதன் இணையதளம் சென்றதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் நமது கணினியிலிருந்து தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்திடவும்.




இதன் வலது ஓரம் உள்ள பாக்ஸில் விதவிதமான பாண்ட் மாடல்கள் மற்றும் டிசைன்ககள் கொடுத்துள்ளார்கள். உங்களுக்கு விருப்பமான டிசைனை தேர்வு செய்து விருப்பமான டெக்ஸ்ட்டினை தட்டச்சு செய்துகொள்ளுங்கள்.
இதில் உள்ள அடுத்து கிளிக் செய்திட உங்களுக்கு கீழு;கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

டவுண்லோடு கொடுங்கள். உங்கள் புகைப்படம் உங்கள் விரும்பிய டெக்ஸ்ட்டுடன் உங்கள்கணினியில் பதிவிறக்கம் ஆகிஉள்ளதை காண்பீர்கள்.




இதுபோல உங்களுடைய புகைப்படங்களில் வேண்டிய பெயரினை சுலபமாக சேர்த்துக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Faasoft Video Converter

வீடியொ பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும் கிராப் செய்திடவும் எடிட் செய்திட.வாட்டர் மார்க் சேர்த்திட.ஆடியோ பைல்களை சேர்கக.வீடியோவிலிருந்து ஸகிரீன்ஷாட் எடுக்க என பல கன்வர்ட்டர்களை இந்த மென்பொருள் கொண்டுள்ளது. 15 எம்;பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும     உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


தேவையான வீடியோவினை தேர்வு செய்திடவும்.

 இதில் உள்ள டிரிம் பட்டனை கிளிக் செய்து வீடியோவில் வேண்டிய இடத்தினை தேர்வு செய்திடவும். 
 நீங்கள் எடிட் செய்த படமானது பக்கத்து விண்டோவில முழுவதுமாக தெரியவரும்.
 வீடியொவில் பிரைட்னஸ் .கான்டஸ்ட்.மற்றும் சட்டுரேஷனை நாம் நிர்ணயித்துக்கொள்ளலாம். சில வீடியோக்கள் வெளிச்சம் அதிகபடியாக இருக்கும் அதில் வெளிச்சத்தினை குறைத்துக்கொள்ளலாம். அதுபோல சில வீடியோக்களில் ஒளி அளவு குறைவாக இருக்கும் அதில் ஒளி அளவினை கூட்டிக்கொள்ளலாம்.
 வாட்டர ;மார்க் கொண்டுவந்து அதில வீடியோவில் எந்த இடத்தில் வேண்டுமொ அந்த இடத்தில் நாம்    நகர்த்தி வைத்துக்கொள்லாம். பாண்டின் நிறத்தினை மாற்றிக்கொள்ளலாம். அளவினை தேவைக்கு ஏற்ப கூட்டி அல்லது குறைத்து வைத்துக்கொள்ளலாம்.
 வீடியோ எஃபக'டில் கருப்பு வெள்ளையோ ஆயில் கலரிங்.பழைய படம் என எதுவேண்டுமோ அதனை கொண்டுவரலாம். அதற்கான ரேடியோ பட்டன்கள் கொடுத்துள்ளார்கள்.
 ஆடியோ பைல்களின் தரத்தினை கூட்ட குறைக்க வைத்துக்கொள்ளலாம் வேண்டிய ஆடியோயவினை சேர்க்கலாம்.
 இறுதியாக உங்களுக்கு எந்த பார்மெட்டு வேண்டுமோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்திடலாம்.
 சேமிக்க விரும்பும் இடத்தினை  தேர்வு செய்து கன்வர்ட் கிளிக் செய்திட சில 
நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் வீடியோவானது கன்வர்ட் ஆக ஆரம்பிக்கும். நீங்கள் தேர்வு செய்த இடத்தில சென்று வீடியோவினை பார்வையிடலாம். பயன்படுத்திப்புர்ருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...