வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts

விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள் இருபதுக்கும் மேற்பட்டவைகளை நீங்கள் விரும்பும் அப்ளிகேஷன்களில் பயன்படுத்தலாம். 700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட நீங்கள் இங்கு கிளிக் செய்திடவும். ரேர் பைலாக உள்ளதை நீங்கள் விரிவாக்கம் செய்திடவும். பின்னர் உங்கள் கணிணியில் அதனை காப்பி செய்து பாண்ட் போல்டரில் பேஸ்ட் செய்திடவும்



நமது தமிழ்கம்யூட்டரின் பெயரை இதில் உள்ள Broken Planet என்கின்ற பாண்ட் கொண்டு தட்டச்சு செய்தபின்வந்த எழுத்துரு கீழே:-

Tamil Computer
இதுபோல நீங்கள் விரும்பும் பாண்ட்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தலாம்.; பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo

சில நேரங்களில் நம்மிடம் உள்ள ஜிப் பைல்கள் எரர் தகவல்களை தரும். திறக்க மறுக்கும். அவ்வாறான சமயங்களில் ஜிப் பைல்களை திறந்து பயன்படுத்த இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 7 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் திறக்க மறுக்கும் - எரர் மெஜெஸ் தரும் பைல்களை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள ரிப்பேர் என்பதனை கிளிக் செய்யவும்.
 பழுது நீக்கிய பைல்கள் உங்களுக்கு கிடைக்கும். பின்னர் இதில் உள்ள நெக்ஸ்ட் பட்டனை கிளிக் செய்திடவும்.
சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்திடவும். பின்னர் இதில் உள்ள சேவ் பட்டனை கிளிக் செய்தால் திறக்க மறுத்த ஜிப் பைலானது முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிDownloader.விறக்கம் செய்ட -Wise Youtube

யூடியூப் பைல்களை பதிவிறக்கம் செய்திட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் யூடியூப் முகவரியின் அல்லதுஏனைய வீடியோ பைல்களின் யூஆர்எல் முகவரியை இதில் காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். உங்களுக்கான வீடியோ கிடைக்கும் அதனை பதிவிறக்கம் செய்திடலாம். அதுபோல் யூஆர்எல் முகவரி தெரியாமல் வீடியோக்களை தேடி பதிவிறக்கம் செய்திட இதில் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் வீடீயோக்கானபெயரினை தட்டச்சு செய்தபின் சர்ச் கொடுக்கவும்.சம்பந்தப்பட்ட வீடியோக்கள் ப்ரிவியூவில் தெரியவரும். 
தேவையான வீடியோவினை தேர்வு செய்திடவும்.

உங்களுக்கு கீழே உள்ள டேபில் டவுன்லோடு என்பதனை கிளிக் செய்யவும். 
நீங்கள் சேமித்த இடத்தில் உங்களுக்கான வீடியோவானது சேமிபபாகும். 
அந்த இடத்தில் சென்று உங்களுக்கான வீடியோவினை நீங்கள் 
பார்க்கலாம் பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Wise Video Converter

நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் செல்ல இங்கு  கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செயததும் உங்களுக்க கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான வீடியொவினை தேர் வுசெய்திடவும்.சேமிக்க விரும்பும்இடத்தினை தேர்வு செய்திடவும்.
இதிலுள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.
வீடியோவில் எந்த பார்மெட்டுக்கு வேண்டுமோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்திடவும்.
இதில் உள்ள கன்வர்ட் என்பதனை கிளிக் செய்யவும்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் வீடியோவானது நீங்கள் விரும்பிய பார்மெட்டில் மாறியிருப்பதனை காணலாம்.
இதில் வீடியோ மட்டுமல்லாது ஆடியோ பைல்களையும் வேண்டிய பார்மெட்டில் மாற்றிக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- பாஸ்போர்ட்.விசா.ஐடிபோட்டோ நொடியில் ரெடிசெய்ய -ID Photos Pro.

பாஸ்போர்ட்.விசா.ஐடி ஓளிப்படங்களை தயார் செய்ய இந்த மென்பொருள் பயன்படுகின்றது. 65 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்  https://www.pixel-tech.eu/idphotos-pro/#about செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
முதலில் உங்களிடம் உள்ள புகைப்படத்தினை தேர்வு செய்திடவும்.தேர்வு செய்த ஒளிப்படத்தின் இடது கண்ணின் மையத்தினை தேர்வு செய்யவும்.
பின்னர் வலது கண்ணின் மையத்தினை தேர்வு செய்திடவும். பின்னர் முகத்தினை தேர்வு செய்திடவும். அடுத்து நெக்ஸ்ட் கிளிக் செய்யவும்.


பாஸ்போர்ட் புகைப்படத்தில் உங்களுக்கு தேவையான நாட்டினை தேர்வு செய்திடவும். 


 
எல்லாம் முடிந்ததும் உங்களுக்கான ஒளிப்படம் உங்களுக்கு கிடைக்கும்

 உங்களுக்கு விதவிதமான ஒளிப்படங்கள் கிடைக்கும். இதில் உங்களுக்கு எந்த ஒளிப்படம் தேவையோ அதனை தேர்வு செய்திடவும்.
தேவையான ஒன்றினை மட்டுமொ அல்லது மொத்த ஒளிப்படத்தினையோ தேர்வு செய்து பிரிண்ட் கொடுக்கவும். உங்களுக்கான படம் தயார்.ஒளிப்படத்தினை நீங்கள் பாஸ்போர்ட் எடுக்கவோ.விசா எடுக்கவோ.ஐடி கார்ட்டுக்காகவோ நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். 
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-புளுரே ப்ளேயர்-VideoSolo Blu-ray Player

புளுரே வீடியொ.ஐஎஸ்ஓ போல்டர்களை சுலபமாக இயக்க இந்த புளுரே பிளேயர் பயன்படுகின்றது. 4கே வீடியோ வரையிலும் 5.1 மற்றும் டால்பி ஆடியோவரையிலும் இதில் ப்ளே செய்து பார்க்கலாம். இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்துதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும். இதில் உங்களிடம் உள்ள வீடியொவினை தேர்வு செய்யவும்.

வீடியோவில் மாற்றங்கள்செய்ய விரும்பினால் இதில் உள்ள எபெக்ட் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்டவிண்டோ வரும். அதில் உள்ள ஸ்லைட்பாரினை நகர்த்துவது மூலம் வீடியோவில் நீங்கள் விரும்பும் தரத்தினை கொண்டவரலாம்.
 மேலும் வீடியோவினை முழு ஸ்கிரீனில் நீங்கள் பார்த்து மகிழலாம். வீடியோவில் குறிப்பிடட புகைப்படம் நீங்கள் எடுக்க விரும்பினால் ;இதில் கீழே உள்ள ஸ்நாப்ஷாட்கிளிக் செய்திட நீங்கள் விரும்பிய புகைப்படம் இதில் உள்ள ஸ்நாப்ஷாட் போல்டரில் சென்று சேமிப்பாகும்.
குறைந்த அளவு இடத்தினை இது பிடிப்பதாலும் அனைத்துவிதமான வீடியொக்களை இது ஆதரிப்பதாலும் பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-அனைத்து அப்ளிகேஷன்களையும் நொடியில் மூடிவிட-Close All Windows

கணிணியில் நாம் பயன்படுததும் சமயம் அதிக அளவில் அப்ளிகேஷன்கள் திறந்து பயன்படுத்துவோம். அவசர வேலை காரணமாக செல்கையில் ஒவ்வொன்றையும் திறந்து அதை நாம் முறையாக மூட வேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரில் ஓரே கிளிக் கில் நாம் பயன்படுத்தும் அனைத்து அப்ளிகேஷன்களையும் நாம் மூடிவிடலாம். இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.நீங்கள் எந்த எந்த அப்ளிகேஷன்கள் திறந்துஉள்ளீர்களோ அந்த அப்ளிகேஷன்கள் உங்களுக்கு தெரியவரும்.
இதில் எதாவது அப்ளிகேஷன் உங்களுக்கு தேவையென்றால் அதன் எதிரில் உள்ள ரேடியோபட்டனின் டிக் மார்க்கினை எடுத்துவிடலாம். உங்களுக்கு எல்லா அப்ளிகேஷன்களும் மூடிவிடவேண்டுமானால் எப்5 கிளிக் செய்தால் உங்களுக்கு அனைத்து அப்ளிகேஷன்களும் கிடைக்கும் பிறகு கீழே உள்ள ஓ.கே. பட்டனை கிளிக் செய்திடவும் நொடியில் உங்கள் அப்ளிகேஷன்கள் அனைத்தும் மூடப்பட்டுவிடும். பயன்படுத்திப்;பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-டுப்ளிகேட் பைல்களை கண்டுபிடித்து நீக்கிட-duplicatedetective.

 புகைப்படங்கள்.பிடிஎப் பைல்கள்.ஆபிஸ்பைல்கள் என ஒரே மாதிரியான பைல்களை நாம் வெவ்வேறு போல்டர்களில் போட்டுவைத்திருப்போம் இதனால் நமது டிரைவ்களில் இடப்பற்றாக்குறை ஏற்படலாம். அவ்வாறு இரண்டு இரண்டு பைல்களாக உள்ளதை ஒப்பிட்டு நீக்கிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
 இதில் நமக்கு தேவையான டிரைவினை தேர்வு செய்து பின்னர் இ;தில் உள்ள ஸ்கேன் ஐகானினை கிளிக் செய்திடவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் ஸ்கேன் செய்யப்பட்ட பைல்கள்.டிரைவ்கள். ஒன்றாக உள்ள் பைல்கள் மற்றும் டுப்ளிகேட் பைல்கள் பற்றிய விவரம் தெரியவரும்.பைல்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ள ரிப்போர்ட்டும் நமக்கு கிடைக்கும்.

ஒவ்வொரு பைல்லினையும் நாம் ஓப்பன் செய்து பார்த்துக்கொள்ளலாம். இதன்மூலம் டுப்ளிகேட் பைலினை நாம் டெலிட் செய்துவிடலாம். பயன்படுத்திப்பாருங்கள். 
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-மறந்துவிட்ட கடவுச்சொல்லை கண்டுபிடிக்க-Passwdfinder

இணையம் பயன்படுத்துகையில் ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும் நாம் பாஸ்வேர்ட் கொடுததுஇருப்போம். கடவுச்சொல்லை நினைவில் வைத்திருப்போம். அல்லது எதிலாவது குறித்துவைத்து இருப்போம். ஆனால் அதனை மறந்துவிட்டாலோ அல்லது எழுதிவைத்த குறிப்பு தொலைந்துவிட்டாலோ அதனை மீட்டு நமது கடவுச்சொல்லை கண்டுபிடிக்க இந்த சாப்ட்வேர் பயன்புடுகின்றது. 5 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் நீங்கள் எந்த எந்த அப்ளிகேஷன்களில் கடவுச்சொல்லை பயன்படுத்துகின்றீர்களோ அந்த அப்ளிகேஷன் பெயர் - பயனாளர் பெயர்.கடவுச்சொல் ஆகியன உங்களுக்கு தெரியும். அதனை நீங்கள் :சேமித்து வைப்பதொ அல்லது மொத்தமாக பிரிண்ட் எடுத்தோ வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பேஸ்புக் பாஸ்வேர்டினை மாற்ற-Change Password in Facebook

உங்கள் பேஸ்புக் கணக்கினை ஆரம்பித்திருப்பீர்கள். உங்களுக்கான பேஸ்புக் பாஸ்வேர்டினை நீங்கள் தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம். அதனை எப்படி மாற்றுவது என இப்போது காணலாம். உங்கள் பேஸ்புக் கணக்கினை திறந்துகொள்ளுங்கள். இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வரும் விண்டோவில் General என்பதனை கிளிக் செய்யவும்.அதில் உள்ள பாஸ்வேர்ட் என்பதனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்கள் பழைய பாஸ்வேர்டினையும் நீங்கள் புதியதாக கொடுக்கக்கூடிய பாஸ்வேர்டினையும் தட்டச்சு செய்யவும். பின்னர் இதில் உள்ள சேவ் சேஞ்சஸ் கிளிக் செய்து வெளியேறவும். இப்போது நீங்கள் உங்கள் பேஸ்புக்க ணக்கிற்கு புதிய பாஸ்வேர்ட் கொடுத்துதான் உள்நுழைய முடியும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பேஸ்புக்கில் வீடியோவினை பதிவிறக்கம் செய்திட-Download Facebook Videos

பேஸ்புக்கில் வரும் வீடியோவினை நாம் பதிவிறக்கம் செய்து பின்னர் விரும்பும சமயம் பார்வையிடலாம். முதலில் உங்களுக்கான பேஸ்புக் கணக்கினை திறக்கவும். பின்னர் அதில் நீங்கள் பதிவிறக்கம் செய்ய உள்ள வீடியோவினை தேர்வு செய்யவும. பின்னர் வீடியோவினை ஒடவிடவும. பின்னர் வீடியோவின் மீது கர்சர் வைத்து ரைட் கிளிக் செய்யவும. கீழே உள்ள விண்:டோவில் பாருங்கள்.
 அதில் உள்ள Show Video URL என்பதனை கிளிக் செய்யவும. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
அந்த யூஆர்எல் ;முகவரியை காப்பி  செய்து வேறு ஒரு புதிய விண்டோவில் திறக்கவும. உங்களுக்கான வீடியோ பிளே ஆகும். அதனை நிறுத்திவிட்டு இப்போது யூஆர்எல் முகவரிக்கு வாருங்கள். அதில் உள்ள WWW என்பதனை நீக்கிவிட்டு அந்த இடத்தில் . m என தட்டச்சு செய்து என்டர் செய்யுங்கள். உங்களுக்கான புதிய பக்கம் ஓப்பன் :ஆகும். அதில் வீடியோவினை ஓடவிட்டு பின்னர் ரைட் கிளிக் செய்து Save Video Us  என்பதனை தேர்வு செய்யவும். உங்கள் வீடியோ சேமிக்கவிரும்பும் இடத்தினையும் தேர்வு செய்து ஒ.கே.தாருங்கள். உங்களுக்கான வீடியோ உங்கள் கணிணியில் நீங்கள் விரும்பிய இடத்தில் இருப்பதனை காணலாம். பயன்படுததிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பேஸ்புக் பக்கத்தினை தமிழில் கொண்டுவர-Change language in Facebook

ஆங்கிலம் பழக்கத்தில் இருந்தாலும் சிலர் தமிழையே அதிகம் விரும்புவர். தமிழில் பேஸ்புக் (முகநூல்) பக்கம் கொண்டுவர உங்களுடைய பேஸ்புக் கணக்கினை திறக்கவும். வழக்கமாக செட்டிங்ஸ் சென்று அதில் உள்ள லெங்குவேஜ் கிளிக் செய்யவும்.
உங்களுக்கான லேங்குவேஜ் பக்கம் திறக்கும். அதில் உள்ள லெங்குவேஜ் எடிட் கிளிக் செய்யவும்.

இதில் இந்திய மொழிகள் உட்பட உலக மொழிகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.நான் த்மிழினை தேர்வு செய்துள்ளேன்.
ஒ.கே.செய்து வெளியேறுங்கள். இப்போது உங்கள் முகநூல் பக்கத்தினை திறந்தால் அதில் உள்ள உள்ளடக்கங்கள் எல்லாம் தமிழிலேயே இருப்பதை காணலாம்.
உங்களுக்கு மீண்டும் வேறு மொழி மாற்ற விரும்பினால் மேற்படி செட்டிங்ஸ் சென்று பழையபடி உங்களுக்கு எந்த மொழி வேண்டுமோ -ஆங்கிலம் உட்பட அதனை தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.





பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பேஸ்புக் கணக்கினை நிரந்தரமாக நீக்கிட-Remove Facebook Account.

பேஸ் புக் கணக்கினை நிரந்தரமாக நீக்கிட நீங்கள் கீழ்கண்ட யூஆர்எல் முகவரியை தட்டச்சு செய்யவும்.www.facebook.com/help/delete_account  உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள டெலிட் மை அக்கவுண்ட கிளிக் செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

உங்களுடைய பாஸ்வேர்ட் தட்டச்சு செய்து இதில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளித்து பின்னர் ஓ.கே.தரவும்.உங்களுக்கான பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக நீக்கப்பட்டுவிட்டது. நீங்கள் அதனை மீண்டும் பெறவேண்டுமானால் 15 நாட்களுக்குள் உங்களுடைய இமெயில் முகவரி மூலம் சென்று உங்களுடைய பேஸ்புக் கணக்கினை மீட்டெடுக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பேஸ்புக்கில் பிடிஎப் பைல்களை இணைக்க-Add PDF File To Facebook

பேஸ்புக்கில் நாம் காண்கின்ற பிடிஎப் பைல்களை எவ்வாறு இணைப்பது என பார்க்கலாம். பிடிஎப் பைல்களை நாம் முதலில் இணையத்தில் அப்லோடு செய்திட வேண்டும். அவ்வாறு இணையத்தில் அப்லோடு செய்கின்ற தளங்கள் கீழே:-

https://issuu.com/

https://www.scribd.com/


இந்த இணையதளங்களில் சென்று உங்கள் இமெயில் முகவரி மூலம் சைன் இன் செய்துகொள்ளவும். பின்னர் அதில் உங்கள் பிடிஎப் பைலினை அப்லோடு செய்யவும். 
 உங்களின் பிடிஎப் பைலானது அப்லோடு ஆகியபின்னர் டிஸ்பிளே ஆகும். அதில கீழே உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதிலிருந்து நீங்கள் நேரடியாக பேஸ்புக் கணக்கிற்கு அப்லோடு செய்யலாம். 
 இல்லையென்றால் இதில் உள்ள எம்பேடட் கிளிக் செய்தால் உங்கள் பிடிஎப் பைலிற்கான எம்படேட்  லிங்க் கிடைக்கும். 

அதனை அப்படியோ காப்பி செய்து உங்கள் பேஸ்புக் கணக்கினில் பேஸ்ட் செய்து போஸ்ட் செய்யலாம். பயன்படுத்திப்பபாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பைல்களை பிரிக்க -இணைத்திட -3nity File Splitter and Joiner

சில வகை பைல்கள் அளவினில் பெரியதாக இருக்கும். அதனை மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இணையத்தில் பதிவேற்றுவதிலும் சிரமம் ஏற்படும். அவ்வாறான பைல்களை வேண்டிய அளவிற்கு பிரித்து மீண்டும் ஒன்றாக சேர்த்திட இந்த மென்பொருள் பயன்படுகின்றது ;இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

பைல்களை எந்தனை துண்டுகளாக மாற்றிட வேண்டுமோ அந்த துண்டுகளை தேர்வு செயதிடவும். அதுபோல எவ்வளவு எம்பிக்களில ;அதனை பிரித்திட வேண்டுமோ அநத எம்பி அளவினை குறிப்பிட்டு பைலினை பிரித்துகொள்ளலாம். இறுதியாக எந்த இடத்தில் பைலினை சேமிக்கவிரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை தேரவு செய்து ஸ்லிப்ட் என்பதனை கிளிக் செய்:து ஒ.கே.தரவும். 

 பைல்களை பிரிந்ததும் உங்களுக்கான தகவல்கிடைக்கும்.
பிரிந்துள்ள பைல்களை ஒன்றாக சேர்த்திட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. பிரிந்துள்ள பைல்களை தேர்வு செய்திடவும். 
சேமிக்கவிரும்பும் இடத்தினை தேர்வு செயதிடவும். பின்னர் இதில் உள்ள ஜாயின் ;;என்பதனை கிளிக் செய்திடவும்.
சில நிமிடங்கள்காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கு இணைத்தாகிவிட்டதாக தகவல் கிடைக்கும். நீங்கள் சேமிதத இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான இணைந்த பைல்கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -3nity video converter.

வீடியோ கன்வர்ட் செய்திட நிறைய மென்பொருள்கள் இருந்தாலும் வித்தியாசமானதாக இந்த மென்பொருள் உள்ளது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 

 உங்களுக்கான வீடியோவினை தேர்வு செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்:ஆகும்.
 இதில் நீங்கள் வீடியோவினை எந்த பார்மெட்டுக்கு மாற்றிட விரும்புகின்றீர்களோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்திடவும். பின்னர் வீடியோவில் வாட்டர் மார்க் சேர்ப்பது,தேவையான அளவு கிராப் செய்வது.வீடியோவின் அளவினை நிர்வகிப்பது.ஆடியோவின் தரத்தினை நிர்வகிப்பது போன்றவற்றினை செய்திடலாம்.
 மேலும் விடியோவில் கிட மட்டம்.நெடு மட்டம்.திருப்புதல்.நிழற்படமாக்குதல். வெளிச்சம் கொண்டுவருதல்.கான்ட்ரஸ்ட் கொண்டுவருதல் போன்ற பணிகளை செய்திடலாம்.
 நீங்கள் முடிநத்ததும் இதில் நீங்கள் ப்ரிவியூ பார்கக்லாம் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.;
 அனைத்து பணிகளும் முடிந்ததும் உங்களுக்கு நீங்கள் செய்த திருத்தங்களுக்கான ரிப்போட்டுடன் நீங்கள் எங்கு சேமிக்க விரும்பினீர்களோ அந்த இடத்தில் வீடியோ சேமிப்பாகிஇருக்கும்.
வேண்டிய மாற்றங்களுடன் கூடிய வீடியோவினை நீங்கள் பயன்படுத்தலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...