நவீன வசதிகளுடன் குறைந்த கொள்ளளவு கொண்ட ஆடியோ ப்ளேயராக இந்த பட்டர்பிளை ஆடியோ பிளேயர் திகழ்கின்றது. 2 எம்.பிக்கும் குறைவான கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் உள்ள Add New கிளிக் செய்து உங்களிடம் உள்ள பாடல்களையோ பாடல்களின் போல்டர்களையோ தேர்வு செய்யவும். இக்குவலைசர் உட்பட நவீன தொழில்நுடபங்கள் இதில் இணைத்துள்ளார்கள். நமக்கு வேண்டிய செட்டிங்ஸ் கொடுத்து ஓ.கே. தரவும்.
பாடல்களின் தொகுப்பிலிருந்து பாடல்களை தேர்வு செய்யலாம். பாடல்களை திரும்ப திருப்ப ஒலிக்க செய்யலாம்.
தேவையான பாடல்களை நாமே நமக்கு விரும்பியவாறு தொகுத்து அதை நாம் நமது கணிணிக்கு எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம். அதுபோல இம்போர்ட்;டும் செய்துகொள்ளலாம்.குறைந்த கொள்ளளவு இடத்துடன் அருமையான ஒலிதரத்துடனும் பயன்படுத்த எளியதாக உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.வாழ்க வளமுடன்
வேலன்.