நம்மிடம் உள்ள ஆடியோ.வீடியோ.புகைப்படங்களை மற்றவர்கள் பார்வையிடாமல் இருக்க கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்கலாம். மற்றவர்கள்நமது புகைப்படங்களையோ.வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை திறக்கும் சமயம் அவர்களிடம் பாஸ்வேர்ட் கேட்கும். சரியான பாஸ்வேர்ட் கொடுத்தால் தான் பைல்திறக்கும். 13 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வீடியோ. ஆடியோ. புகைப்படம் என டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.தேவையானதை தேர்வு செய்திடவும். கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.
தேவையான பைலினை தேர்வு செய்திடவும். தேர்வு செய்தபின்னர் ப்ரிவியூ பார்க்கும் வசதியும் உள்ளது.
நமது பைலினை எந்த பாரமேட்டுக்கு தேவையோ அதனை தேர்வு செய்திடவும்.
உங்களுடைய பைலானது பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கப்பட்ட பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது நீங்கள் உங்களுடைய பைலினை திறக்க முற்படுகையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
சரியான பாஸ்வேர்ட் கொடுத்தால்தான் உங்களுக்கான வீடியோ.ஆடியோ.புகைப்பட பைல்கள் திறக்கும்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.