வேலன்:-உங்களுக்கு தெரிந்த 1001 விஷயங்களில் தெரியாத தகவல்கள்.

ஒவ்வொரு விஷயத்தினையும் நாம் அறிந்துவைத்திருப்போம். ஆனால் அதைப்பற்றிய தெரியாத விஷயங்களை அறிந்துகொள்ளும்போது நமக்கு ஆச்சரியம் உண்டாகின்றது. இந்த புத்தகத்தில் அதுபோல நமக்கு தெரிந்த ஆயிரம் விஷயங்களின் ஆயிரம் தெரியாத தகவல்களை கொடுத்துள்ளார்கள்.2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த தகவல் களஞ்சியம் புத்தகத்தினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்க்செய்யவும. இதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இதில் 27 தலைப்புகளில் சிறிய சிறிய அறிய தகவல்களை கொடுத்துள்ளார்கள்.


உலகிலேயே தரமான பட்டை எங்கு தயாராகிறது என உங்களுக்கு தெரியுமா? இலங்கையில் என கொடுத்துள்ளார்கள். அதுபோல அமெரிக்க அதிபர்கள் யார் யார் எந்த பல்கலைகழகத்தில் படித்துள்ளார்கள் என தெரியுமா? விளக்கம் கொடுத்துள்ளார்கள். படிக்கும் மாணவர்கள் சிறுசிறு தகவல்கள் அறிந்து பொது அறிவினை வளர்த்துக்கொள்ள இந்த புத்தகம் பயன்படுகின்றது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வாக்களர் அடையாள அட்டை ஆன்லைனில் பதிவு செய்ய

வாக்காளர் அட்டைக்கு நமது பெயரை புதியதாக சேர்க்க.முகவரி மாற்றம் செய்ய.பெயர் திருத்தம் செய்ய.முகவரி திருத்தம் செய்ய என ஆன்லைனில் வசதி செய்து கொடுத்துள்ளார்கள். அதற்கான இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இதனை கிளிக செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Form 6,Form 7,Form 8 & Form 8A என கொடுத்துள்ளார்கள். உங்களுக்கு எது தேவையானதோ அதை கிளிக செய்யவும்.
 நான் புதியதாக வாக்காளர் பெயர் சேர்க்க Form 6 என்பதனை கிளிக் செய்துள்ளேன்.அப்போது உங்களுக்கு ஒரு எச்சரிக்கை சேதி வரும் இதற்கு முன் நீங்கள் பதிவு செய்துள்ளீர்களா என கேட்கும். இல்லை யென்று கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில முதலில் உங்கள் மாவட்டத்தினை தேர்வு செய்யவும். பின்னர் உங்களது சட்ட மன்ற தொகுதியை தேர்வு செய்யவும்.அடுத்து உங்கள் பெயர் குடும்ப பெயர் தட்டச்சு செய்யவும். பின்னர் 2015 ஜனவரி அன்று உங்கள் வயது என்ன என்பதனை குறிப்பிடவும்.அடுத்து பிறந்த தேதி அறிந்திருந்தால் அதனை குறிப்படவும். நீங்கள் பிறந்த ஊர்,மாவட்டம்.இடம் முகவரி என அனைத்தையும் தெரிவிக்கவும். நீங்கள் தட்டச்சு செய்ய    ஏதுவாக நேரடி கீபோர்ட் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் நீங்கள் எளிதில் தமிழில் தட்டச்சு செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

 அடுத்து உங்கள் புகைப்படத்தினை ஸ்கேன்செய்து அதன் அளவானது 350 கே.பி.க்கு மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனை அப்லோடு செய்யுங்கள். உங்கள் தொலைபேசி எண் மற்றும இ-மெயில் முகவரியை கொடுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அவர்களது பெயரையும் உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவு முறையையும்.அவர்கள் அட்டை எண்ணிணையும் குறிப்பிடவும்.
அனைத்து விவரங்களும் பதிந்த பின்னர் இதில் உள்ள வெரிபிகேஷன் கோடினை தட்டச்சு செய்து விண்ணப்பத்தினை சமர்ப்பணம் செய்யுங்கள். சில நாட்களில் உங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை உங்களை வந்து அடையும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வ ளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-25க்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களை உடனடியாக திறக்க

கணிணியில் நாம் பணி புரிகையில் அடிக்கடி பயன்படுத்தும் 25 க்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களை உடனடியாக பெற இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டர்ல் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் அப்போதைய நேரம்,தேதி கிழமை போன்ற விவரங்கள் தெரியவரும். இதன் மேல்புறம் மூன்று வித டேப்புகள் கொடுத்துள்ளார்கள். அதில் பைல்,இன்போ,ஆப்ஷன் என டேப்புகள் இருக்கும். இதில் உள்ள பைல்கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட டாப்அப்மெனு கிடைக்கும். அதில் NotePad;Paint.Calculator.ControlPanel.CharMap.WordPad.Browse.Minimize & Exit என அப்ளிகேஷன்கள்கொடுத்துள்ளார்கள். அப்போதைக்கு எது தேவையோ அதனை கிளிக் செய்தால் உங்களுக்கான விண்டோ ஓப்பன் ஆகும். நீங்கள் இதற்காக ஸ்டார்ட்.ப்ரோகிராம் செல்ல தேவையில்லை.
இதில் உள்ள இன்போ கிளிக் செய்திட உங்களுக்கு User Name.Network.Windows Version.MAC Address.IPAddress.Manufacurrer.Resolution CPU Speed.Toral Memory போன்ற விவரங்கள் கிடைக்கும். உங்களுக்கு எந்த விவரம் தேவையோ அதனை கிளிக் செய்திட உங்களுக்கு இந்த அப்ளிகேஷனில் உள்ள ஸ்கிரினில் அதற்கான விவரம் தெரியவரும்.
அதனைப்போலவே ஆப்ஷன் கிளிக் செய்திட நமக்கு Restart,Shut Down, என நமக்கு தேவையான ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளலாம்.

கணிணியில் முக்கியமான எல்லா அப்ளிகேஷன்களையும் நாம் சுலபமாக பெற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வைரஸ் பாதித்த பென்டிரைவிலிருந்து பைல்களை மீட்டுஎடுக்க

ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு வீடியோ,ஆடியோ,டாக்குமெண்ட்.பைல்கள் போன்ற தகவல் பரிமாற்றத்திற்கு முன்பெல்லாம் பிளாப்பி பயன்படுத்திவந்தோம். பின்னர் அதுவே சிடியாக பரிணாமவளர்ச்சி அடைந்தது. பின்னர் சிடியின் பயன்பாடும் குறைந்து பென்டிரைவ் மிகுந்த பயன்பாட்டுக்கு வந்தது. பென்டிரைவ்களை ஒரு கணிணியில் இருந்து மற்றும் ஒரு கணிணிக்கு தகவல்கள் பாரிமாரும்சமயம் இலவசமாக வைரஸ்களும் கணிணியில் இருந்து பென்டிரைவ்விற்கு பரவிவிடுகின்றன. ஒரு பென்டிரைவில் வைரஸால் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து தகவல்கள் பெறஇயலாது.அதிலிருந்து தகவல்களை மீண்டும்பெற நாம் Start - Run -CMD என தட்டச்சு செய்து பின்னர் எந்த டிரைவில் பென்டிரைவ் உள்ளதோ அதனை தேர்வு செய்து பின்னர் தகவல்களை பெறவேண்டும். சாதாரண மக்களுக்கு இது மிகுந்த சிரமமே...வைரஸ் பாதித்த பென்டிரைவிலிருந்து அனைத்து பைல்களையும ;மீட்டு எடுக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. பாமர மக்களின் வேலையை சுலபமாக மாற்றிவிடுகின்றது. இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட் விண்டோ ஓப்பன் ஆகும்.  
இதில் நம்மிடம் உள்ள பென்டிரைவிற்கான டிரைவினை தேர்வு செய்யவும். இதில் கொடுக்கப்பட்டு:ள்ள ரேடியோ பாக்ஸில் தேவையானதை கிளிக் செய்யவும். பின்னர் இதில் உள்ள Proceed பட்டனை கிளிக் செய்யவும்.
 உங்களுக்கான இந்த விண்டோ திறக்கும்.சில வினாடிகள் நீங்கள் ஏதுவும் செய்யாமல் காத்திருக்கவும்.
 உங்கள் தகவல்கள் மீட்டு எடுக்கப்பட்டது என உங்களுக்கு தகவல்வரும்.
இதில் உள்ள OpenDestination கிளிக் செய்தால் உங்களுக்கான பென்டிரைவ் திறக்கப்பட்டு உங்கள் பைல்கள் அதில் தெரியவரும். நீங்கள் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...