வேலன்:-தட்டச்சு செய்கையில் எழுத்துக்களை பெரியதாக்கி பார்க்க-Big Type.

சில நேரங்களில் நாம் சிறிய எழுத்துருக்களை தட்டச்சு செய்வோம். அவ்வாறு தட்டச்சு செய்யும் எழுத்துக்களை நாம் தட்டச்சு செய்யும் சமயமே பெரியதாக பார்க்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. 120 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கவும். இதன் இணையதளம்செலலவும் இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன்ஆகும்.

இதில் உள்ள செட்டப் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் சூம் செய்திடும் அளவு லென்ஸ் எங்கு வரவேண்டும். கர்சருக்கு உடனா அல்லது கர்சருக்கு மேலும் கீழா என்பதனை தேர்வு செய்திடவும்.
இப்போது நீங்கள் தட்டச்சு செய்திட ஆரம்;பிக்கையில் உங்களுக்கு சிறிய விண்டோ ஆனது தெரியவரும் ;அதில் நீங்கள் தட்டச்சு செய்திட எழுத்துக்கள் பெரியதாக தெரியும். ஒரு வார்த்தை முடிந்ததும் விண்டோ அடுத்த வார்த்தைக்கு சென்றுவிடும். இதன் மூலம் தட்டச்சு செய்கையில் நாம் எழுத்துக்களை பெரியதாக்கி பார்க்கலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- பிடிஎப் பைல்களில் லிங்குகளை சேர்க்க -நீக்க -மாற்றியமைக்க -PDF Link Editor

பிடிஎப் பைல்களில் இணையதள லிங்குகளை கொடுத்திருப்பார்கள். பிடிஎப்பைல் படிக்கும் சமயம் அந்த லிங்கினை கிளிக் செய்திட சம்பந்தபட்ட இணையதளம் நமக்கு திறக்கும். இந்த மென்பொருளில் அவ்வாறு இணையதள லிங்குகளை நாம் சேர்க்கவும். மாற்றியமைக்கவும். நீக்கிடவும் உதவிபுரிகின்றது. இந்த இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்  http://www.pdflinkeditor.com/ செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 இதில் உள்ள ஆட் டேப்பினை  கிளிக் செய்து உங்களுக்கு தேவைப்படும் பிடிஎப் பைலினை திறக்கவும். இப்போது உங்களுக்கூன பிடிஎப் பைலானது இந்த மென்பொருளில் தெரியவரும். இதில் உள்ள லிங்குகளின் விவரமும் தெரியவரும்.
இதன்மேல்புறம் உள்ள டேப்புகளில் ரீபிளேஸ் என்கின்ற டேபினை கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள ;மற்றவேண்டிய லிங்கினையும் சேர்ககவிரும்பும் லிங்கிளை இதன் கீழே உள்ள டேபிள் சேர்த்து ரீபிளேஸ் ஐகானை கிளிக் செய்திடவும். 
 அதுபோல நீங்கள் புதியதான லிங்கினை இதில சேர்க்க விரும்பினால் உங்களது பிடிஎப் பைலில் எந்த வார்த்தைக்கு லிங்க் கொடுக்க விரும்புகின்றீர்களோ அந்த வார்த்தையை இதில் தட்டச்சு செய்திடவும். பின்னர் இதில் உள்ள சர்ச் கிளிக் ;செய்திடவும்.
 சம்பந்தபட்ட வார்ததை உங்களுடைய பிடிஎப் பைலில் எத்தனை இடங்களில் வருகின்றதோ அந்த இடங்களின் எண்ணிக்கையை இது காண்பிக்கும். பின்னர் நீங்கள் சேர்கக விரும்பும் இணையதள லிங்கிளை இதன் கீழே உள்ள என்டர் லிங்க் யூஆர்எல் என்பதில் இணைக்கவும். 
அப்ளிகேஷனை மூடிவிட்டு இப்:போது உங்கள் பிடிஎப் பைலினை திறக்கவும். இப்போது நீங்கள் குறிப்பிட் ட வார்த்தையின் மீது கர்ச்ரை கொண்டுவர கர்சரானது அம்புகுறியாக மாறிவிடும். அதனை கிளிக் ;செய்திட நீங்கள் :குறிப்பிட்ட இணையதளத்திற்கு உங்களை அழைத்துச்செல்லும். இதன் மூலம் நீங்கள் இணையதள விவரம்அறிந்துகொள்ளலாம். கல்வி சம்பந்தமாக பிடிஎப் தயாரிப்பவர்கள் பாடம் சம்பந்தமான லிங்க்கு செல்ல இந்த மென்பொருளை பயன்படுத்தலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோ ஆடியோ கன்வர்ட்டர் -Glorylogic Video Converter.

வீடியோ பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும. ஆடியோவினை நிக்கிடவும்.சுலபமாக சிடியில் காப்பி செய்திடவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. 14 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடவும். இதன் இணையதளம் செலலவும். இங்கு கிளிக்  http://www.glorylogic.com/video-converter.htmlசெய்திடவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


a

இதில் தேவையான வீடியோ பைலினை தேர்வு செய்திடுங்கள். தனிபைலாகவோ போல்டராகவோ இதில் தேர்வு செய்திடலாம்.

இதன் கீழே மூன்று டேப்புகள் கொடுத்துள்ளார்கள். வீடியோ.ஆடியோ மற்றும பில்டர்ஸ் என இருக்கின்றது. இதில் வீடியோவினை தேர்வு செய்து அதில் தேவையான பார்மெட்டினை நாம் தேர்வு செய்திடலாம். அதுபோல ஆடியோ மற்றும் பில்டர்ஸ்ஸிலும் நமக்கு தேவையானதை தேர்ந்தெடுக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் வீடியோவினை ப்ரிவியூபார்க்கும் வசதியும்இதில கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேர்வு செய்யும் வீடியோ பைல்களை சிடியில் காப்பிசெய்திடவும் வீடியோவில் உள்ள ஆடியோபைல்களை நீக்கிடவும் இதில் வசதி உள்ளது. தேவைகளை நீங்கள் முடிவுசெய்து இறுதியாக இதில் உள்ள கன்வர்ட் கிளிக் செய்திடவும்.

சிலநிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் நீங்கள்தேர்வு செய்திட்ட இடத்தில் உங்களுக்கான வீடியோவானது நீங்கள் விரும்பியபடி மாறிஇருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோ ப்ளேயர் -Wise video player.

நமது கணினியில் உள்ள வீடியோக்களை பார்வையிட இந்த வீடியோ ப்ளேயர் ;உதவுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்குகிளிக் http://www.wisevideosuite.com/wisevideoplayer.html செய்திடவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 இதன்மீது கர்சரை வைத்து ரைட்கிளிக்செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். உங்களுக்கு தேவையான பார்மெட்டினை நீங்கள்தேர்வு செய்துகொள்ளலாம். 

இந்த மென்பொருளானது ஆதரிக்கும் வீடியோ பார்மெட்டுக்கள் 3GP, AVI, AVM, AVS, DAT, F4V, FLV, MKV, MOV, MP4, Mpeg, MPG, NSV, OGM, RM, RMVB, TP, TS, VOB, webm, WMV, மற்றும் பல வீடியோ பார்மெட்டுக்களை ஆதரிக்கின்றது. 



பயன்படுத்த எளிமையாகவும் விரைவாகவும் செயல்படுகின்றது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...