வேலன்:-புகைப்படங்களை எளிதில் பார்வையிட Sage Thumbs

புகைப்படங்கள் நமக்கு வெவ்வேறு பார்மெட்டுக்களில் கிடைக்கும். தம்ப்நெயில் வியு போடும் சமயம் நமக்கு சில பார்மெட்டுவகைகள்தான் தெரியவரும். ஆனால் சில வகை பார்மெட் புகைப்படங்களை அதற்காக உள்ள அப்ளிகேஷனில் சென்றுதான் திறந்துபார்க்க முடியும்.. ஆனால் இந்த சின்ன சாபட்வேரினை நாம் பதிவிறக்கம் செய்துவிட்டால் புகைப்படங்களை நாம் சுலபமாக பார்வையிட முடியும். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுடைய புகைப்படத்தினை ரைட் கிளிக்செய்யவும்.கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நாம் Sage thumbs கிளிக் செய்ய நமது புகைப்படத்தின் வியு தெரியவரும். அதன் கீழேயே அதனை நாம் எந்த வகையாக மாற்றவிரும்புகின்றோமோ அதற்கான ஆப்ஷன்களும் கிடைக்கும்.புகைப்படத்தினை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றும் வசதியும் இதிலேயே தரப்பட்டுள்ளது.

மேலும் எந்த எந்த பார்மெட்டு புகைப்படங்களை நீங்கள் திறக்க விரும்புகின்றீர்களோ அந்த பார்மெட்டுக்க்ளை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே ஆப்ஷனில் அதைகொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



இதில் உள்ள பிறவசதிகள் உங்கள் வசதிக்காக கீழே கொடுத்துள்ளேன்.
இதர வசதிகள்:-
Features List:
  • Extended thumbnail image view of Explorer folder
  • Thumbnail image in explorer context menu
  • Extended info tips
  • Support 162 image formats (224 extensions)
  • Support additional 26 image formats via XnView plugins
  • One-click conversion to popular image formats support
  • Wallpaper selection support
  • Copy to clipboard support
This extension can be installed in Windows 2000, XP, Vista, Windows 7, Windows Server 2003 and 2008. Both 32-bit and 64-bit editions are supported.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இமேஜ் காம்போனண்ட்ஸ்.

 போட்டோக்களில் விதவிதமான மாறுதல்கள் கொண்டு வர இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. 16 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து உங்கள் கணிணியில் உள்ள புகைப்படத்தினை தேர்வு செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதன் வலதுபுறம் உங்களுக்கு உங்கள் புகைப்படத்தின் அனைத்து விவரங்களும் தெரியவரும். உங்கள் புகைபடம் உள்ள போல்டர். அது எடுக்கப்பட்ட நேரம்.தேதி எந்த வகையான கேமராவால் எடுக்கப்பட்டது.புகைப்படத்தின் கேமரா செட்டிங்ஸ் என பலவிவரங்கள் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

 இதன் மேல்புறத்தில் உங்களுக்கு 11 வகையான டேப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். கீழே உள்ள் விண்டோவில் பாருங்கள்.
 புகைப்படத்தினை தேர்வு செய்ய இந்த காலத்தினையும் நீங்கள் பயன்படுத்தலாம். இதில் பிரிண்டிங் வசதி படங்களை பெரியதாக்கிபாரத்த்ல்.சுற்றுதல் என பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இதில் சூம் வசதி கொடுக்கப்பட்டுள்ளதால் நாம் விரும்பும் இடத்தினை பெரியதாக்கி பாரக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இதில் பில்டரில் பலவகையான டேப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதால் புகைப்படத்தினை நாம் விரும்பும் வாறு மாற்றிக்கொள்ளலாம்.Invert.Grascale.Gausian Blur.Mean Removal.Moire.Random Giler.Morlan.Black and White.Pixelate.Sphere.Swirl.Time Wrap.Water என பல பில்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 நான் வாட்டர் பில்டரை உபயோகித்து படத்தினை மாற்றிஉள்ளேன்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

ஒரு புகைப்படத்தினை தேர்வு செய்து கொண்டு இதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆப்ஷன்களையும் ஒவ்வொன்றாக பயன்படுத்திப்பாருங்கள்.. பிடித்திருந்ததை தனியாக சேவ் செய்தோ - பிரிண்ட் எடுத்தோ வைத்துக்கொள்ளுங்கள்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
 வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-ஆங்கில இலக்கணம் தமிழ் மூலம் அறிந்துகொள்ள


ஆங்கில இலக்கணத்தை நாம் தமிழ் மூலம் எளிதில் அறிந்து கொள்ள இந்த தளம் நமக்கு உதவுகின்றது. இந்த தளம் காண இங்கு கிளிக் செய்யவும்.இந்த தளம் கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் உள்ள Tences Dictionary கிளிக் செய்து Verb -ஐ தட்டச்சு செய்யவும். உங்களுக்கு உங்களுடைய Verb ஆனது Simple Tense, Continuous Tense,Perfect Tense.Perfect Continuous Tense என 12 மில்லியன் வார்த்தைகள் தொகுத்துள்ளார்கள்.


அடுத்து Principal Part of Verbs  கிளிக் செய்ய verb வகைகளை பட்டியலிட்டுள்ளார்கள்.


அடுத்துள்ள Simple Sentences கிளிக் செய்ய சுமார் 5 ஆயிரம் வார்த்தைகளுக்கு தமிழ் ஆங்கில விளக்கம் கொடுத்துள்ளார்கள்..


அடுத்துள்ள Proverb கிளிக் செய்ய சுமார் 300 பழமொழிகள் தமிழ் -மற்றும் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார்கள்.இதில் உள்ள சர்ச் பாக்ஸில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து  அதற்கான பழமொழியை தமிழில் அறியலாம். தமிழில் தட்டச்சு செய்து அதற்கான பழமொழியை ஆங்கிலத்தில் அறியலாம். மொத்தத்தில் ஆங்கிலம் பயில விரும்புவோர்களுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-MKV--ப்ளேயர்.

இணையத்தில் பதிவிட வசதியாக வீடியோ பைல்களை திரைப்படங்களை பெரும்பாலும் MKV File பார்மெட்டில் பதிவிடுவார்கள்.இந்த வீடியோ பைல்களை சில பிளேயர்கள் சப்போர்ட் செய்யாது. எனவே இதற்கென உள்ள இந்த எம்.கே.வி.பிளேயரை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள எம்.கே.வி. பைலை தேர்வு செய்து ஓடவிடலாம்.சில வீடியோ படங்களை பார்க்கும் சமயம் வீடியோ முதலிலும் ஆடியோ பிறகும் ஒலிக்கும. சில வீடியோக்களில் ஆடியோ முதலிலும் வீடியோ அதன்பிறகும் வரும். இதனால் நாம் பார்க்கும் வீடியோ படம் முழு திருப்தியை தராது.இவ்வாறான வீடியோ பைல்களின் ஆடியோவினை நாம் இதில் உள்ள Audio டேபினை கிளிக் செய்து இதில் உள்ள Audio delay +0.1 Second கிளிக் செய்து ஆடியோ ஒலிக்கும் நேரத்தை கூட்டவோ குறைக்கவோ செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
 அதைப்போலவே இதில் உள்ள கண்ட்ரோல் டேபினை கிளிக்செய்து கீழ்கணட கன்ட்ரோல்களை நாம் எளிதில் நிறைவேற்றிக்கொள்ளலாம்.
இனி MKV பார்மெட்டில் உள்ள வீடியோவினை பார்க்க வேறு வீடியோ தேடி ஓடாமால் இந்த பார்மெட்டிலேயே பார்த்து ரசிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருததுக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-எளிமையான பீடிஎப் ரீடர்

விதவிதமான பிடிஎப் ரீடர்கள் இருந்தாலும் புதியதாக இந்த ரீடரும் உள்ளது.6 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கான விண்டோ ஓப்பன் ஆகும. இதில் நமது கணிணியில் உள்ள பிடிஎப்  பைலை தேர்வு செய்யவும். இப்போது இடதுபுறம் உங்களுக்கு Table of Contents கிடைக்கும. நமது புத்தகத்தில் உள்ள பக்கங்கள் தெரியவரும். 
முழு ஸ்கிரீன் அளவிற்கும் நாம் புத்தகத்தை படிக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


புத்தகத்தின் முழுஅளவினையும் நாம் பார்க்கலாம். ஒவ்வொரு புக்கமாகவும் பார்க்ககலாம். புத்தகத்தின எழுத்துரு அளவு தெரியவில்லையென்றால் ஜீம் செயதும் புத்தகத்தை படிக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


வலதுபுறம் புத்தகத்தின் முதல் பக்கம் தெரியவரும்.இதில் புத்தகத்தின் ஓரமாக கர்சரை கொண்டு சென்றால் அடுத்த பக்கம் திரும்பும்.நாம் புத்தகம் நேரடியாக படிக்கையில் புத்தகத்தை திருப்புவதுபோல் இதிலும் நாம் புத்தகத்தின் பக்கங்களை  திருப்பி படிக்கலாம். கீழே உள்ள விண்:டோவில் பாருங்கள். 
இதில் உள்ள View Tab கிளிக் செய்ய புத்தகத்தின் பக்கங்களின் முழு அளவு --தம்ப்நெயில் வியு -மற்றும் கலர் செட்டிங்குகளையும் நாம் காணலாம்.இதன் மூலம் பக்கங்களுக்கு வேண்டிய நிறங்களை கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
படிப்பதற்கு அருமையாகவும் -பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் உள்ளது.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

தனக்கு கிடைத்த Sunshine Blogger Award விருதினை எனக்கும் மற்ற நண்பர்களுக்கும்   பகிர்த்துகொடுத்துள்ளார்கள் சகோதரி மஞ்சுபாஷினி அவர்கள்.அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.


சகோதரி மஞ்சுபாஷினி அவர்களின் முகவரி தளம் காண இங்கு கிளிக் செய்யவும். 

நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பழைய -புதிய தமிழ் திரைப்பட பாடல்கள் தொகுப்பு

திரைப்பட பாடல் ஒன்றை தேடும் சமயம் இந்த இணையதள முகவரி கிடைத்தது. திரைப்பாடல் என பெயரிட்டுள்ள இந்த இணையதளம் காண
இங்கு கிளிக்செய்யவும்.இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில வீடு.இசை,திரைப்படங்கள்.பாடல்கள்.நடிகர்கள்.வருடம்.தொகுப்புகள் என நிறைய டேப்புகள் கொடுத்துள்ளளார்கள்.இதில் இசையை கிளிக் செய்தால் உங்களுக்கு இசையமைப்பாளர்களின் பெயர்கள் வரும்.அவர்கள் இசையமைத்த படங்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை தெரியவரும் தேவையான இசைஅமைப்பாளர் பெயரை கிளிக செய்து பாடலை தேர்வு செய்யலாம்.திரைப்படங்களின் பெயரை கிளிக் செய்தால் உங்களுக்கு அகர வரிசையில் படங்கள் தெரிய வரும்.தேவையான படங்களை தேர்வு செய்யலாம்.நான் பார்மகளே பார் படத்தினை தேர்வு செய்துள்ளேன்.
பாடகர்கள் வரிசையில் அவர்கள் பாடிய மொத்த பாடல்களையும் தொகுத்துள்ளார்கள். தொகுப்புகளில் இசையமைப்பாளர்களின் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்கள். ராகங்கள் நமக்கு தெரியும். இதில் இளையராஜாவின் பாடல்களை ராகங்கள் வரிசையில் இணைத்துள்ளார்கள். நான் லதாங்கி ராகத்தில் வந்துள்ள பாடலை கீழே கொடுத்துள்ளேன்.
பாடல்களை கேட்பதற்கு இதிலேயே ப்ளேயர்கள் கொடுத்துள்ளார். 
பாடல்களை கேட்டுப்பாருங்கள். நண்பர்களுக்கும் சொல்லுங்கள். மறக்காமல் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கணிணி ஜாதக குறிப்பு அறிந்துகொள்ள

 நமது பிற்நதநாள் குறிப்பினை கொடுத்தால் நமது முழுஜாதகத்தினையும் கணித்துகொடுத:துவிடுவார்கள். அதுபோல இந்த சின்ன சாப்ட்வேரினை நமது கணிணியில் இன்ஸ்டால் செய்து அதனை கிளிக் செய்தால் நமது கணிணியின் மொத்த விவரமும் நமக்கு வந்துவிடும்;4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் உள்ள விண்டோ கிளிக் செய்ய மேலே உள்ள விண்டோ உங்களுக்கு ஓப்பன் ஆகும். 
 இதில் window machine.sensors.usb bus.network.spd.volumes.modems.pci bus..பலவித டேப்புகள் கிடைக்கும். எந்த விவரம் தேவையோ அந்த டேபினை கிளிக் செய்ய அதன் உள்டேப் விவரங்களும் நமக்கு கிடைக்கும் இதனை காப்பிசெய்தும் வைத்துக்கொள்ளலாம்.
கணிணி பழுது பார்ப்பவர்களுக்கு இந்த சின்ன சாப்ட்வேர் வரபிரசாதமாகும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...