வேலன்:-வாட்ச்அப்பில் தமிழில் பேசி தமிழ்வார்த்தைகளாக தகவல்களை அனுப்ப

whatsappஎனப்படும் புலனத்தில் நாம் பேசும் தமிழினை வார்த்தைகளாக கொண்டுவர வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை கொண்டுவர நீங்கள் உங்கள் செல்பேசியில் கூகுள்ப்ளே ஸ்டோர் ஓப்பன் செய்து அதில் GBoard தேர்வு செய்யவும். இதனை பெற இங் குகிளிக் செய்யவும். பின்னர் அதனை இன்ஸ்டால் செய்யவும்.உங்களுக்கு  கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


நீங்கள் தகவல் அனுப்பவேண்டிய வாட்ச்அப்பினை ஒப்பன் செய்து தகவல் அனுப்பவேண்டியவரின் பெயரை தேர்வு செய்யவும். தகவல் உள்ளீடும் பகுதியை தேர்வு செய்யவும்.

 இப்போது உங்களுக்கு மைக் கொண்ட சிம்பல் கிடைக்கும். பெரியதாக பச்சை நிறத்தில் உள்ள மைக் அல்ல..சிறியதாக நீலநிறத்தில் உள்ள மைக்கினை தேர்வு செய்யவும்.
 வரும் விண்டோவில் செட்டிங்ஸ் கிளிக் செய்திடவும். உங்களுக்கு கிடைக்கும் விண்டோவில் Language தேர்வு செய்திடவும்.
 அதில் நிறைய மொழிகள் கொடுத்திருப்பார்கள். அதில் தேர்வாகிஉள்ள ஆங்கிலத்தினை அன்லாக் செயதிடவும். ஸ்கோரல் செய்து கீழே வரவும்.
 தமிழ் என்பதில் இந்தியாவினை தேர்வு செய்து பின்னர்கீழே உள்ள சேவ் கிளிக் செய்யவும்.
 இப்போது மீண்டும் முன்புசொன்னதுபோல தட்டச்சு பகுதியை தேர்வு செய்து மைக்கில் நீங்கள் பேசவிரும்புவதை தமிழிலேயே பேசவும்.
நீங்கள் பேச பேச தமிழில் வேகமாக தட்டச்சு ஆவதினை காணலாம். இதன் மூலம் வாட்ச்அப்பில் தமிழ்மொழியை வேகமாக உள்ளீடு செய்யலாம். இதேப்போல நீங்கள் நோட்பேடினையும் ப்ளே ஸ:டொரில் திறந்து இதேபோல தமிழில்பேசிமற்றவர்களுக்கு சுலுபமாக அனுப்பஇயலமுடியும். பயன்படுத்துங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- இலவச வீடியோ டவுண்லோடர்-Freemake-Youtube Video Downloader

இணையத்தில் நாம் பார்க்கின்ற வீடியோ பைல்களை பதிவிறக்கம் செய்திடவும் வேண்டிய பார்மெட்டுக்குமாற்றிடவும் இந்த வீடியோ டவுண்லோட் சாப்ட்வேர் பயன்படுகின்றது. இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில நீங்கள் பதிவிறக்கம் செய்யவேண்டிய வீடியோ வின் யூஆர்எல் முகவரியை காப்பி செய்யவும். பின்னர் இதில் உள்ள பேஸ்ட் யூஆர்எல் என்கின்ற டேபினை கிளிக் செய்யவும். பின்னர் இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட  விண்டோ ஓப்பன் ஆகும். 


இதில் மூன்று விதமான ஆப்ஷன்கள் கொடுத்திருக்கின்றார்கள். வீடியோ பதிவிறக்கம் மட்டும்(இணையத்தில் வீடியோ எந்த பார்மெட்டில் இருக்கின்றதோ அதே பார்மெட்டில் பதிவிறக்கம் ஆகும்) அடுத்துள்ள ஆப்ஷனில் ஆடியோ மட்டும்-வீடியோ தவிர்த்து ஆடியோ பைல்கள் மட்டும் டவுண்லோடு ஆகும். அடுத்து கன்வர்ட் என்கின்ற ஆப்ஷனும் அதற்கு எதிரே ரேடியோ பட்டனை கொடுததுள்ளார்கள் அதனை கிளிக் செய்திட நிறைய பார்மெட்டுக்கள் நமக்கு கிடைக்கும் தேவையான பார்மெட்டினை நாம் தேர்வு செய்யலாம் மேலும் வீடியோ பதிவிறக்கம் ஆகும் இடத்தினையும் ;நாம் தேர்வு செய்திடலாம். கடைசியாக இதில் உள்ள டவுண்லோடு கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
நமது வீடியோ பைலானது எந்த வகையில் நாம் விரும்பினோமோ அந்த வகையில் பதிவிறக்கம் ஆகும். நாம் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-புகைப்படங்களில் ஸ்லைட்ஷோ உண்டாக்க

புகைப்படங்களை நாம் சாதாரணமாக பார்ப்பதை விட பின்ணனி இசையுடனும் வீடியோ தரத்துடனும் ஸ்லைட்ஷோவாக பார்வையிடுகையில் பிரமிப்பாக இருக்கும். அதுபோல நம்மிடம் உள்ள புகைப்படங்களை ஸ்லைட்ஷோவாக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது:. 58 எம்.பி.கொளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்து ஒப்பன் செய்யததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் நம்மிடம் உள்ள புகைப்படங்களை தேர்வு செய்யவும். பின்னர் புகைப்படங்களை டிராக அன்ட் டிராப் மூலமோ அல்லது டபுள் கிளிக் செய்வதன் மூலமோ கீழே உள்ள ஸ்லைடிங் பாருக்கு புகைப்படங்கள் வந்துவிடும். 

 பின்னர் இரண்டாவதாக உள்ள டிரான்ஸ்ஷாக்ஸன் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 300 க்கும் மேற்பட்ட புகைப்பட எபெக்ட்கள் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
 உங்கள் விருப்பமான எபெக்ட்டினை டிராக அன்ட் டிராப் முறையில் இழுத்துவந்து ஸ்லைடிங்பாரில் விடவும்.அதற்கு அடுத்துள்ள பெக்ரவுண்ட மியூசிக் கிளிக் ;செய்திட உங்களிடம் உள்ள பாடல்களுக்கான போல்டரை தேர்வு செய்யவும். அதிலிருந்து புகைப்படத்திற்கு ஏற்ப சிட்டிவேஷன் பாடலை தேர்வு செய்யவும்.அதற்கு அடுத்துள்ள ஆல்பம் ஸ்டைலினை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 கடைசியாக உள்ள டிவிடி மெனு கிளிக் செய்யவும். உங்களுக்கான செட்டிங்ஸ் முடிந்ததும் இதில் உள்ள ப்ரிவியூ ஓடவிட்டு பார்க்கவும்.

அனைத்து பணிகளும் முடிந்ததும் சேவ் செய்துவிடவும். பின்னர் இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து உங்களுக்கான டிவிடியின் அளவுகளையும் செட் செய்து இறுதியாக பிளைட் டிவிடியினை அதற்கான டிரைவில் உள்ளிட்டு இதில் உள்ள Done கிளிக் செய்யவும்.சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கான டிவிடி காப்பி ஆகிவிடும்.பின்னர் ;டிவிடியினை தனியாக ப்ளேயரில் போட்டுபார்க்கவம். உறவினர் நண்பர்களுக்கு பரிசளிக்கவும். பயன்படுத்திப்பாருங்கள. 
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பிடிஎப் பைல்களை ஒன்றாக சேர்த்திட -PDF Joiner

ஒரு பைலில் உள்ள பிடிஎப் பைல்களை ஒன்றாக இணைக்கவும். ஓரு போல்டரில் உள்ள பிடிஎப் பைல்களை ஒன்றாக இணைக்கவும் இந்த பிடிஎப் ஜாயினர் உதவுகின்றது. 17 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் தனிதனி பைல்களில் உள்ள பிடிஎப் பைல்களை இணைக்க விரும்பினால் தேவைப்படும் பைல்களை தேர்வு செய்யவும்.சேமிகக விரும்பும் இடத்தினையும் தேர்வு செய்யவும். புதிய பைலுக்கு வேண்டிய பெயரையும் தட்டச்சு செய்யவும். பிறகு இதன் கீழே உள்ள கன்வர்ட் கிளிக் செய்யவும். ஓரு போல்டரில் உள்ள குறிப்பிட்ட பைல்கள் மட்டும் இணைக்க விரும்பினால் அதனை மட்டும் தேர்வு செய்து கீழே உள்ள கன்வர்டர் செலக்டட் தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
சில நொடிகள் காத்திருத்தலுக்கு பின்னர் நீங்கள் தேர்வு செய்த இடத்தில் உங்களுக்கான பிடிஎப் பைல்கள் இணைந்து காணப்படும். இது முற்றிலும் இலவச சாப்ட்வேர் ஆகும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கணிணி மூலம் வாட்ஸ்அப் கையாள

இப்போது எல்லோரும் வாட்ஸ்அப் உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோருக்கும் வாட்ஸ்அப் மூலம் உடனடி தகவல் பரிமாரபடுகின்றன. கைப்பேசி  தகவல்களை நாம் நமது கணிணி மூலமும் கணிணி மூலம் வாட்ஸ்அப் தகவல்களை கைபேசிக்கும் அனுப்பிவிடலாம். 65 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 உங்கள் கைபேசியில் வாட்ஸ்அப் அப்ளிகேஷனை திறந்துகொண்டு இதில் வாட்ஸ்அப் வேப் பக்கத்தினை திறக்கவும். இப்போது உங்கள் கைப்பேசியில் ஸ்கேனர் ஒப்பன் ஆகும். அதன் மூலம் கணிணியில் உள்ள கியூஆர் கோடினை ஸ்கேன் செய்யவும். சில நொடிகளுக்கு பின்னர் உங்கள் வாட்ச்அப் தகவல்கள் கணிணியுடன் இணைக்கப்படும்.
இதில் உங்கள் கைப்பேசியில் உள்ள தகவல்கள் உங்கள் வாட்ஸ்ப்பில் உள்ள நண்பர்கள் விவரம் இடது பக்கமும் நீங்கள் தேர்வு செய்த நண்பரின் வாட்ஸ்அப் தகவல்கள் வலதுபுறமும் தெரியவரும்.  தேவையான தகவலை டபுள் கிளிக் செய்திட உங்களுக்கான வீடியோவோ புகைப்படமோ தகவல்களோ ஓப்பன் ஆகும்.
அதுபோல நீங்கள் கணிணியில் இருந்து வாட்ஸ்அப்பிற்கு தகவல்கள் பரிமாற விரும்பினால் இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து வீடியோ புகைப்படங்கள் தகவல்களை அப்லோடு செய்துவிடலாம். கைப்பேசியை விட துரிதமாக இதில் அனுப்பலாம். அதுபோல தட்டச்சு செய்வதும் கைப்பேசியை விட கணிணி சுலபமானது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- போட்டோ ஸ்டுடியோ.

போட்டோக்களில் சிறு சிறு மாற்றங்கள் செய்திடவும். படத்தினை மேலும் தரம் உயர்த்தவும் நேரடியாக பிரிண்ட் செய்திடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 38 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்து உங்கள்புகைப்படங்களுக்கான இடத்தினை தேர்வு செய்யவும்.
இதில் வலதுபுறம் எடிட் மெனு இருக்கும் அதனை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் red eye.retouch.brush.crop என நான்கு டேப்புகள் கொடுத்துள்ளார்கள். தேவையானதை தேர்வு செய்திட அதற்கான விண்டோ உங்களுக்கு ஓப்பன் ஆகும். அதில் எந்த எந்த மாற்றங்கள் செய்யவிரும்புகின்றீர்களோ அதனை செய்துவிட்டு சேவ் செய்துவிடவும். நீங்கள் தேர்வு செய்த போல்டருக்கான புகைப்படங்கள் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோவில் தெரியவரும்.
தம்ப்நெயில் வியூவில் தெரியும் புகைப்படத்தின் மீது டபுள் கிளிக் செய்திட உங்களுடைய படம் மெயின் விண்டோவில் டிஸ்பிளே ஆகும். மாற்றங்கள்எந்த எந்த புகைப்படங்களுக்கு செய்ய விரும்புகின்றீர்களோ அதனை செய்து முடித்ததும் நீங்கள் அடுத்துள்ளபிரிண்ட் ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளலாம். அதில் வரும் விண்டோவில் உங்களுக்கு ஸ்கேல் ஆப்ஷன் கொடுத்துள்ளார்கள். பிரிண்ட் செட்டிங்ஸ்ம் கொடுத்துள்ளார்கள். தேவையான செட்டிங்ஸ் மாற்றி பிரிண்ட் எடுத்துக்கொள்ளளலாம். பிடிஎப் பைலாக புகைப்படத்தினை மாற்றும் வசதியும் இதில் உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வெவ்வேறு நாட்டினுடைய அலாரம் கடிகாரம் பயன்படுத்த

வெளி நாடுகளில் வேலை செய்வது இப்போது அதிகமாகிவிட்டது. நமது உறவினர்களோ நண்பர்களோ வேறு நாட்டில் வேலை செய்துவருகின்றார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் நேரங்கள் வேறுபடும். நமது நாட்டிற்கும் அவர்கள் நாட்டிற்கும் நேரங்கள் முன்னே பின்னே வரலாம் அவ்வாறான குறைகளை தீர்க்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 440 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 அதில் நீங்கள் கணிணியில் வைத்துள்ள நேரத்திற்கு டிஸ்பிளே ஆகும். இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் General.Appreance.Add clock.Alarm என நான்கு டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.
 இதில் உள்ள அப்பியரன்ஸ் கிளிக்செய்து உங்கள் கடிகாரத்தின் நிறத்தினை வேண்டியவாறு கொண்டுவரலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இதில் உள்ள ஆட்கிளாக் கிளிக் செய்தால் வரும் விண்டோவில் எல்லா நாட்டினுடைய நேரங்கள் கொடுத்துள்ளார்கள்.உங்களுக்கு எந்த நாட்டினுடைய நேரம் தேவையோ அதனை தேர்வு செய்யலாம்.கடிகாரத்தின் நிறத்தினையும் நீங்கள் தேர்வு செய்தவுடன் உங்களுக்கான கடிகாரம் டெக்ஸ்டாப்பில் டிஸ்பிளே ஆகும்.கடைசியாக உள்ள அலாரம் டேபினை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். வெளிநாட்டில் வசிக்கும் நபருடன் நீங்கள் எந்த நேரத்திற்கு பேச வேண்டுமோ அந்த நேரத்தினை தேர்வு செய்து அவர்களுடன் பேசலாம்.
 மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் கம்ப்யூட்டர் நின்றுவிடவும். ரீஸ்டார்ட் செய்திடவும்.பூட்டி விடவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 உங்கள் விருப்பத்திற்கு  ஏற்ப நீங்கள் கடிகார நிறத்தினையும் நேரத்தினையும் தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-டிரைவ்களின் விவரம் ட்ரீசைஸ் மூலம் அறிந்துகொள்ள

நமது கணிணியில் டிரைவ்களில் உள்ள பைல்களின் விவரம் முழுவதும் அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.இதனை பதிவறக்கம் செய்திட  இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் நமது கணிணியில் உள்ள டிரைவ்கள் தெரிய வரும் இதில எந்த டிரைவின் விவரம் தேவையோ அதனை தேர்வு செய்யவும். வரும் விண்டோவில் எந்த பைல்கள் எவ்வளவு இடத்தினை பிடித்துள்ளது என அறிய இதில் உள்ள சார்ட் கிளிக் செய்யவும்.
இதில் உள்ள டீட்டெய்ல்ஸ் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் பைல்களின் விவரம் தெரியவரும்.
இதில் உள்ள எக்ஸ்டென்ஷன்ஸ் கிளிக் செய்திட நம்மிடம் உள்ள பைல்களின் விவரமும் அதில் ப்ரோகிராம் பைல்.வீடியோ பைல்.ஆடியோபைல் என உள்ள பைல்களின் விவரம்அது பிடித்துள்ள இடம் அளவுகளையும் அறிந்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில்உள்ளயூசர்ஸ் கிளிக் செய்திட யூசர எவ்வளவு சதவீதம் கணிணி எவ்வளவ சதவீதம் பயன்படுத்துகின்றது என விவரம் அறிந்துகொள்ளலாம்.
நாம் பயன்படுத்தும் டிரைவின் டாப் 100 பைல்களின் விவரம் அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் அதிகப்படியாக எந்த பைல்களை நாம் பார்வையிடுகின்றோம் என அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோ ப்ளேயர்-Wondershare Player.

நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை பார்வையிடவும் அதில் இருந்து தேவையான ப்ரேமை புகைப்படம் எடுக்கவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 25 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான வீடியோ பைலினையோ - போல்டரையோ தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள பிளே பட்டனை அழுத்தவும் உங்களுக்கான வீடியோவானது ஓட ஆரம்பிக்கும்.
உங்களுக்கு தேவையான ப்ரேம் வந்ததும் இதில் உள்ள கேமரா ஐகானை கிளிக் செய்திட உங்களுடைய புகைப்படம் சேமிப்பாகும். புகைப்படங்கள் தனியே போல்டரில் சேர்ந்துவிடும் தேவைப்படும் சமயம் நாம் அதனை எடுத்து பயன்படுத்தலாம். பயன்படுத்த சுலபமான இந்த ப்ளேயரை பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...