வேலன்:-இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-2013.

அன்புள்ளம் கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்ததுக்கள்.





பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-2012-ல் அதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகள்

ஒவ்வொரு வருடம் முடிவில் திரைப்படங்கள் எத்தனை வெளியாகியது..இதில் நன்கு ஓடிய திரைப்படங்கள் எவ்வளவு என்று விவரங்கள் வெளியிடுவார்கள். பிளாக்கில் அதுபோல் ஒவ்வொரு வருட முடிவில் நான் எனது பதிவுகளில் அதிகநபர்கள் படித்த பதிவுகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்.எனது முந்தைய பதிவுகளை தவறவிட்டவர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளளலாம்.இந்த வருடத்திய மொத்த பதிவுகள் 102. கடந்த வருடம் 2011-ல் பதிவிட்ட மொத்த பதிவுகள் 218. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 50% மேல் பதிவுகள் குறைந்துவிட்டது. அதற்கு முழுகாரணம் மின்தடையே...சாதாரண பிளாக்குக்கே இவ்வளவு பாதிப்பு என்றால் மற்ற தொழில்கள் எந்த அளவு  பாதிப்பை அடைந்திருக்கும் என எண்ணிப்பாருங்கள்.இனி வரும் வருடத்திலாவது தடையில்லா  மின்சாரம் கிடைக்கும் என நம்புவோம். இனி இந்த வருடத்தில் நான் பதிவிட்டதில் அதிக நபர்களால் வாசிக்கப்பட்ட பதிவுகளை இங்கே பட்டியலிடுகின்றேன்.

1.வேலன்:-கணிணி ஜாதக குறிப்பு அறிந்துகொள்ள- வருகை தந்தவர்கள் 3488
நமது பிற்நதநாள் குறிப்பினை கொடுத்தால் நமது முழுஜாதகத்தினையும் கணித்துகொடுத:துவிடுவார்கள். அதுபோல இந்த சின்ன சாப்ட்வேரினை நமது கணிணியில் இன்ஸ்டால் செய்து அதனை கிளிக் செய்தால் நமது கணிணியின் மொத்த விவரமும் நமக்கு வந்துவிடும்; இந்த  பதிவினை காண  இங்கு கிளிக் செய்யவும்.
------------------------------------------------------------------------------------------------------
2.வேலன்:-சென்னையின் பஸ்ரூட் எளிதில் அறிந்துகொள்ள-வருகை தந்தவர்கள் -2913.

சென்னையின் பரப்பளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. தாம்பரத்தில் ஆரம்பித்து கும்மிடிப்பூண்டி வரை பரந்து விரிந்து இருக்கின்றது. புது புது ஊர்களும் -புதுபுது கட்டிடங்களும் நம்மை மிரள வைக்கின்றது.சென்னைக்கு பழக்கமானவர்களே பஸ் ரூட் தெரியாமல் முழிக்கும் போது நாமெல்லாம் எந்த மூளைக்கு..? சென்னையின் பஸ் ரூட் எளிதில் அறிந்து கொள்ள இந்த இணைய தளம் நமக்கு அருமையாக வழிகாட்டுகின்றது.இந்த பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.
-----------------------------------------------------------------------------------------------------------
3.வேலன்:-மின்கட்டண  அட்டவணை. வருகை தந்தவர்கள்:-2791.
மின்சாரத்தை தொட்டால்தான் நமக்கு ஷாக் அடிக்கும். ஆனால் கடந்த ஒரு வாரமாக மின்கட்டணத்தை பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஷாக் அடிக்கின்றது. தொடாமலே ஷாக் அடிக்கும் அளவிற்கு என்ன உள்ளது என்கின்றீர்களா? உயர்ந்துள்ள மின்கட்டணங்கள் தான்.கரண்ட் எங்கே ஒழுங்காக வருகின்றது.. இதில் மின்கட்டணம் எவ்வளவு வந்துவிடபோகின்றது என கேட்கின்றீர்களா? 10 மணிநேரம் மின்தடை செய்து 14  மணிநேரம் மின்சாரம் மின்சார பயன்பாட்டிற்கு எவ்வளவு வந்துவிடப்போகின்றது என்கின்றீர்களா ? கீழே உள்ள கட்டண விகிதத்தை பாருங்கள். நெருக்கிய உறவினர் - நண்பர் திடீரென்று மறைந்துவிட்டால் நம்மால் அவரின் இழப்பை தாங்க முடியாது. ஆனால் அவர்களே உடல் நிலை சரியில்லை - தேறுவது கடினம் என தெரியவரும்போது நமது மனது தன்னால் அந்த துயரத்தை தாங்கிகொள்கின்றது. அதுபோல் உங்களுக்கான மின்கட்டணம் திடீரென்று அதிகமாக வந்துஉள்ளது என நீங்கள் அதிர்ச்சி அடைந்துவிட கூடாது என்கின்ற அக்கறையில் இந்த அட்டவணையை பதிவிடுகின்றேன். எவ்வளவோ பார்த்துவிட்டோம் இது எம்மாத்திரம் என்கின்றீர்களா? கவலைப்படாதீர்கள்....இதுவும் கடந்துபோகும்..
இந்த பதிவினை காண இங்கு கிளிக்செய்யவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
4.வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஒரே ஒரு சாப்ட்வேர் -வருகை தந்தவர்கள்-2769.
கம்யூட்டர் வாங்குவது பெரியதல்ல அதனை முறையாக பாராமரித்தால்தான் நாம் சொல்வதை கேட்கும்..பார்க்காத பயிறும் கேட்காத கடனும் பாழ் என்று கிராமக்களில்  சொல்வார்கள். அது போல சின்ன சின்ன வேலைகளை நாம் கம்யூட்டரில் செய்துவிட்டோமானால் அது நமது சொல்படி கேட்பதுமட்டுமல்லாமல் பிரச்சனைஇல்லாமல் செயல்பட்டுகொண்டுஇருக்கும்.பிரச்சனையில்லாமல் கம்யூட்டரை செயல்படுத்துவது எவ்வாறு? இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. 8 எம்.பி. கொள்ளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரில நமது கம்யூட்டருக்கு மிகமிக தேவையான 23 வகை பணிகளுக்குண்டான சாப்ட்வேர்கள் உள்ளது. இந்த தளம் செல்ல இங்கு கிளிக செய்யவும்.
------------------------------------------------------------------------------------------------------------
5.வேலன்:-எளிதில் அறிந்துகொள்ள ஆங்கில இலக்கணம். வருகை தந்தவர்கள்:- 2692.
பள்ளிகள் ஆரம்பித்துவிட்டார்கள். இனி குழந்தைகள் விளையாட்டுக்களை மறந்து பாடங்களை படிக்க ஆரம்பிப்பார்கள். இன்றைய பதிவில் ஆங்கிலம் பற்றி அறியலாம். ஆங்கிலத்தில் புலமை பெற இலக்கணம்அவசியம். அந்த இலக்கணம் பற்றி நமக்கு - குழந்தைகளுக்கு எளிமையாக அறிந்துகொள்ள இந்த புத்தகம் சொல்லிக்கொடுக்கின்றது.6 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த தளம் செல்ல  இங்கு கிளிக் செய்யவும்
----------------------------------------------------------------------------------------------------------
6. வேலன்:-எளிய முறையில் சிடி காப்பி செய்ய-வருகை தந்தவர்கள்:-2421
நீரோ தவிர பைல்களை சிடியில் காப்பி செய்ய ஏதாவது சாப்ட்வேர் இருக்கா என்று நண்பர் ஒருவர் கேட்டார். அவருக்காக தேடுடகையில் இந்த சாப்ட்வேர் கிடைத்தது. எளிதில் புரியும் வகையில் அளவில் சிறிய தாகவும் உள்ளது.5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இந்த தளத்திற்கு செல்ல  இங்கு கிளிக் செய்யவும்.
------------------------------------------------------------------------------------------------------------
7.வேலன்:-பழைய -புதிய தமிழ் திரைப்பட பாடல்கள் தொகுப்பு -வருகை தந்தவர்கள்-2383.
திரைப்பட பாடல் ஒன்றை தேடும் சமயம் இந்த இணையதள முகவரி கிடைத்தது. திரைப்பாடல் என பெயரிட்டுள்ள இந்த இணையதளம் காண
இங்கு கிளிக்செய்யவும்
------------------------------------------------------------------------------------------------------------
8.வேலன்:-ஆங்கில இலக்கணம் தமிழ் மூலம் அறிந்துகொள்ள -வருகை தந்தவர்கள்-2329.
ஆங்கில இலக்கணத்தை நாம் தமிழ் மூலம் எளிதில் அறிந்து கொள்ள இந்த தளம் நமக்கு உதவுகின்றது. இந்த தளம் காண இங்கு கிளிக் செய்யவும்.
----------------------------------------------------------------------------------------------------------
9.வேலன்:-2012 உலகம் அழியபோகின்றதா..?-வருகை தந்தவர்கள்-2012.
கடைசி மூன்று நாட்களா? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவுகள் இருக்கும்.. அது நிறைவேறியும் நிறைவேறாமலும் இருக்கும். நம்பவும் முடியவில்லை..நம்பாலும் இருக்க முடியவில்லை..எதை என்கின்றீர்களா, உலகம் அழியபோறதாக சொல்கின்றார்களே அதைதான்.வரும் 21.12.2012 வெள்ளிக்கிழமை அன்று உலகம் அழியபோவதாக மாயன் சொல்லி சென்றதை சொல்கின்றார்கள்.எதையோ இணைய்த்தில் தேடும் சமயம் இந்த காலண்டர் கிடைத்தது. சரி மாயன் காலண்டர் வித்தியசாமாக இருக்கும் என எண்ணி டவுண்லோடு செய்துபார்த்தால் கீழ்கண்ட காலண்டர் கிடைத்தது.அதில் உள்ள செகண்ட்கள் ஒவ்வொன்றாக குறைந்துகொண்டே இருந்தது.பிறகுதான் தெரிந்தது ...அவர்கள் வெள்ளிக்கிழமை வரை நேரம் குறைந்துகொண்டே வருமாறு கடிகாரத்தை செட் செய்துள்ளார்கள். என்று...மேலும ;விவரங்கள் அறிந்து கொள்ள இங்கு கிளிக் இங்கு கிளிக்செய்யவும்.
------------------------------------------------------------------------------------------------------------
10.வேலன்:-மேஜிக் காலண்டர்.-வருகை தந்தவர்கள்:-2001.
கடலில் முத்து எடுப்பவர்களுக்கு சில சமயம் விலை மதிப்பில்லா அரிய முத்து கிடைக்கும். அதுபோல் சாப்ட்வேர்களில் குறைந்த அளவில் நிறைய வசதிகளை கொண்ட இந்த சாப்ட்வேரினை சொல்லலாம். 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
------------------------------------------------------------------------------------------------------------
சில பதிவுகளுக்கு வருகை தந்தவர்கள் பார்க்கும் சமயம் ஆச்சரியமாக உள்ளது. சில பதிவுகள் ஹிட்டாகும் என நினைத்து பதிவிடுவேன் ஆனால் போணி ஆகாது. சில பதிவுகள் எங்கிருந்து ஹிட்டாகப்போகின்றது என நினைப்பேன் ஆனால் பிரம்மாண்டமான ஹிட்டாகிவிடும்.. மேலே பதிவிட்டுள்ள பதிவுகளில் எளிதில் அறிந்து கொள்ள ஆங்கில இலக்கணம் புத்தகத்தினை இதுவரை 5854 பேர் பதிவிறக்கி உள்ளார்கள். ஆனால் வருகை தந்தவர்களோ 2692 பேர்தான். அதுபோல உலகம் அழியபோகின்றதா  என்கின்ற பதிவினை 2012 பேர் பார்ததுள்ளனர்.(வியப்பு என்ன என்றால் வந்தவர்கள் எண்ணிக்கையும் 2012 தான்) வரும் ஆண்டில் தடையில்லா மின்சாரம் கிடைத்து அதிகம் விரும்பும் பதிவுகளை பதிவிட ஆண்டவனை பிராத்திக்கின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-PSD படங்களை JPG படமாக மாற்ற

நம்மிடம் உள்ள PSD  படங்களை JPG ஆக மாற்ற நாம் போட்டோஷாப் மூலம் தான செய்யமுடியும். அனைவரும் போட்டோஷாப் வைத்திருப்பார்கள் என சொல்ல முடியாது.அவர்களுக்காகவே இந்த சின்ன சாப்ட்வேர நமக்கு பயன்படுகின்றது.1 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் https://www.easy2convert.com/psd2jpg/செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள இன்புட் பைலில் உங்களுக்கான PSD பைலை தேர்வு செய்யவும். பின்னர் நீங்கள் JPG படத்தினை எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை தேர்வு செய்யவும்.இதில் உள்ள Image Quality எதிரில் உள்ள ஸ்லைடரை நகர்த்த நமக்கான படத்தின் தரத்தினை தேர்வு செய்யலாம்.இறுதியாக நீங்கள் Concert கிளிக் செய்யவும். இப்போது உஙகளுக்கான படம் JPG ஆக கிடைக்கப்படும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- கிருஸ்துமஸ் மரத்தினை லாக்ஆன் ஆக வரவழைக்க

இன்னும் 2 நாளில் கிருஸ்துமஸ் வரபோகின்றது. நாம் நமது கம்யூட்டரில் டெக்ஸ்டாப்பில் விதவிதமான கிருஸ்மஸ் மரங்கள் வைத்திருப்போம். ஆனால் கம்யூட்டர் துவங்குகையிலேயே லாக்ஆன் ஆகும் சமயம் கிருஸ்துமஸ் மரம் வந்தால் எவ்வாறு இருக்கும். 10 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்..


இதில் 5 விதமான கிருஸ்துமஸ் மரங்கள் வைத்துள்ளார்கள். நமக்கு தேவையானதை தேர்வு செய்து Apply Changes கிளிக் செய்யவும்.





இனி ஒவ்வொரு முறை கம்யூட்டரை நீங்கள் துவங்குகையில் நீங்கள் தேர்வு செய்த கிருஸ்மஸ் மரம் லாக்ஆன் ஸ்கிரீனாக வருவதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-2012 உலகம் அழியபோகின்றதா..?

கடைசி மூன்று நாட்களா? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவுகள் இருக்கும்.. அது நிறைவேறியும் நிறைவேறாமலும் இருக்கும். நம்பவும் முடியவில்லை..நம்பாலும் இருக்க முடியவில்லை..எதை என்கின்றீர்களா, உலகம் அழியபோறதாக சொல்கின்றார்களே அதைதான்.வரும் 21.12.2012 வெள்ளிக்கிழமை அன்று உலகம் அழியபோவதாக மாயன் சொல்லி சென்றதை சொல்கின்றார்கள்.எதையோ இணைய்த்தில் தேடும் சமயம் இந்த காலண்டர் கிடைத்தது. சரி மாயன் காலண்டர் வித்தியசாமாக இருக்கும் என எண்ணி டவுண்லோடு செய்துபார்த்தால் கீழ்கண்ட காலண்டர் கிடைத்தது.அதில் உள்ள செகண்ட்கள் ஒவ்வொன்றாக குறைந்துகொண்டே இருந்தது.பிறகுதான் தெரிந்தது ...அவர்கள் வெள்ளிக்கிழமை வரை நேரம் குறைந்துகொண்டே வருமாறு கடிகாரத்தை செட் செய்துள்ளார்கள். என்று...காலண்டரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.



SS மியூசிக்கிலும் உலகம் அழியபோவதை மூன்று வீடியோ எடுத்து 
கடந்த 2011-ம் வருடமே இணையத்தில்போட்டுள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

வீடியோ:- ஒன்று.

வீடியோ:- இரண்டு.

வீடியோ : மூன்று.

இதற்கு முன்னர் இவ்வாறுதான் ஸ்லாப் ராக்கெட் விழப்போகின்றது என பயமுறுத்தினார்கள். அதுபோல் 2000 ஆண்டு உலகம் அழியபோகின்றது என்றார்கள்.எதுவும் நடக்கவில்லை...அதுபோல் 21 -12-2012 ம் நமக்கு கடந்துபோகும்.நல்லதையே நினைப்போம்..நல்லதே நடக்கும்...

நன்றி :- SS MUSIC.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- ஐந்து கிருஸ்துமஸ் சாப்ட்வேர் பணிகள் ஒரே சாப்ட்வேரில்.

இந்துக்களுக்கு எப்படி தீபாவளி பண்டிகையோ அதுபோல் கிருஸ்துவர்களுக்கு  கிருஸ்மஸ் பண்டிகை விஷேஷம். கிருஸ்மஸ்க்கு எவ்வளவு நாள் இன்னும் உள்ளது என்று நாட்களை எண்ணிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் குறையை நிறைவேற்ற இந்த சின்ன சாப்ட்வேர் உதவுகின்றது. 4 எம்.பி கொள்ளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரில் 5 விதமான சாப்ட்வேர்கள் உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்..இனி அதில ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

கிருஸ்மஸ் மரம்:- 
இந்த சாப்ட்வேரினை இன்ஸ்'டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.இதில் 20 விதமான கிருஸ்மஸ்மரங்கள் உள்ளது. 




 இதில் உள்ள மரத்தில் கர்சர்வைத்து ரைட் கிளிக் செய்ய உங்களுக்கு தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான ஐகானை வைத்துக்கொள்ளலாம். மேலும் நீங்கள் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறையோ அரைமணிநேரத்திற்கு ஓரு முறையோ அலாரம் அடிப்பதுபோல் செட் செய்துகொள்ளலாம். பாண்ட் அளவுகளை மாற்றிக்கொள்ளலாம்.
---------------------------------------------------------------------------------------------------------விஸ்டா கிளாக்:-
நேரத்தினை நாம் விதவிதமான கடிகாரம் மூலம் அறிந்துகொள்ளலாம்.உலக நேரத்தினை நாம் செட் செய்துகொள்ளலாம்.மேலும் இதில Clock.Coutdown,Uptime.StopWatch.மற்றும் Timer இதில் செட் செய்யலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.


------------------------------------------------------------------------------------------------------------
SANTA COUNTDOWN:-
கிருஸ்'மஸ் என்றாலே கிருஸ்மஸ்தாதா தான நினைவுக்கு வருவார். கிருஸ்மஸ் தாதா விதவிதமான உடைகளிலும் அவரின் தொப்பியிலும் என 20 க்கும் மேற்பட்ட பொருட்களில் நாம் கடிகாரத்தினை செட்செய்துகொள்ளலாம். இதிலும் அரை மணிநேரத்திற்கு ஒரு முறையும் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறையும் அலாரம் அடிக்கும் வசதி உள்ளது.குழுந்தைகளுக்கு கொடுத்தால் மகிழ்ச்சியுடன் விளையாடுவார்கள்.




 -----------------------------------------------------------------------------------------------------------
SNOW GLOBE COUNTDOWN:-
விதவிதமான கண்ணாடி குடுவைக்குள் விதவிதமான கிருஸ்மஸ் மரக்களை வைத்து கவுண்டவுன் டைம் வைத்துள்ளார்கள்.இதிலும் 9 விதமான கிருஸ்மஸ் சம்பந்தமான பொருட்களை வைத்துள்ளார்கள்.

 ------------------------------------------------------------------------------------------------------------
ZONE CLOCK:-

ஒரே விதமான கடிகாரம் வைத்துள்ளார்கள்.எங்கு வேண்டுமோ அங்கு நகர்த்தி வைத்துக்கொள்ளலாம். கீழே உள்ள விண்:டோவில் பாருங்கள்




இந்த அனைத்துவிதமான 5 IN 1 சாப்ட்வேர்கள் பற்றி அறிந்:து:கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.
அனைத்தையும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோக்களை காப்பி செய்ய(Video Capturer)

 நண்பர் ஒருவர் ஒரு வீடியோ சிடி கொண்டுவந்து கொடுத்தார். அதில் உள்ள வீடியோவினை பார்க்க முடிந்தது. ஆனால் காப்பி செய்ய முடியவில்லை. அதனை எவ்வாறு காப்பி செய்யலாம் என பார்த்தபோது இந்த சின்ன சாப்ட்வேர் கிடைத்தது. 1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Window,Region,Desktop என மூன்றுவிதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். நமக்கு தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம். பின்னர் இதில் உள்ள Start பட்டனை கிளிக் செய்தபின் டாக்ஸ்பாரில் அமரந்துகொள்ளும். பின்னர் நாம்நமது வீடியோவினை ஓடவிடவேண்டும். வீடியோ முடிந்ததும் இதில் உள்ள ஸ்டாப் பட்டனை கிளிக் செய்யவும்.இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும. இதில்நமது வீடியோ Processing ஆவதை கவனிக்கலாம்.
நீங்கள் சேமித்த இடத்தில் உங்களது வீடியோ இருப்பதை காணலாம்.பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள்..
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோபைல்களை அனிமேஷன் படமாக மாற்ற

புகைப்படங்களிலிருந்து நாம் அனிமேஷன் தயாரித்து இருப்போம். ஆனால் வீடியோ பைல்களிலிருந்து அனிமேஷன் தயாரிக்க வீடியோவை ஓடவிட்டு பின்னர் அதில் ஸ்கிரீன்ஷாட் எடுத்து மீண்டும் அனிமேஷனாக மாற்றவேண்டும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் வீடியோ படத்தை ஓடவிட்டு நேரடியாக நாம் அனிமேஷன் கொண்டுவரலாம். 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உங்கள் கணிணியிலிருந்து வீடியோவை Load video என்பதில் கிளிக் செய்து தேர்வு செய்யவும். அடுத்து எவ்வளவு வினாடிக்கு ஒரு புகைப்படம் தேவை என்பதனை தேர்வு செய்யவும்.அவட்புட் நமக்கு தேவையான அளவிற்கோ அல்லது ஒரிஜினல் அளவிற்கோ தேர்வு செய்யவும்.
 இதிலேயே Effects கொடுத்துள்ளார்கள்.தேவையான Effect தேர்வு செய்துகொள்ளவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 சில வினாடிகளில் நமது வீடியோவானது அனிமேஷன் படமாக மாறிவிடும்.
சேமிக்கவிரும்பும் இடத்தை தேர்வு செய்துகொள்ளவும்.இறுதியாக மாற்றங்கள் தேவைபட்டால் செய்துகொண்டு இதில் உள்ள Run பட்டனை அழுத்ததவும். அவ்வளவுதான்.உங்களுக்கான வீடியோவில் தயாரான அனிமேஷன் ரெடி. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-ஓரே சாப்ட்வேரில் விதவிதமான கால்குலெட்டர்கள்


கால்குலேட்டரில் எவ்வளவோ வகைகள் இருந்தாலும் சில கால்குலேட்டர்கள் சில அப்ளிகேஷன்கள் பயன்படுத்த மட்டுமே உதவும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் சுமார் 75 கணக்குகள் சுலபமாக போடலாம்.500 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவைபடும் கணக்கு விவரத்தை  தேர்வு செய்யவும்.
 நான் பிறந்த நாள் முதல் இன்றுவரை எவ்வளவு வயதாகின்றது என்பதனை அறிந்துகொள்ள Birthday Calculator கிளிக் செய்துள்ளேன். இதில் நமது பிறந்த தேதி,மாதம்.வருடம் தட்டச்சு செய்து இதில் உள்ள Calculate கிளிக் செய்தால்நொடியில் உங்களுக்கு உங்களது வயது மாதம் தேதி.எவ்வளவு மாதங்கள் கடந்துள்ளது.எவ்வளவு நேரம் ஆகிஉள்ளது.எவ்வளவு நாட்கள் கடந்துள்ளது எவ்வளவு வாரம் எவ்வளவு மாதம் என அத்தனை விவரங்களும் நமக்கு துல்லியமாக கிடைத்துவிடும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இதனைப்போல நாம் வங்கியில் செலுத்தும் டெபாஸிட்டுக்களுக்கான கூட்டுவட்டி எனப்படும் Compound Interest சுலபமாக கணக்கிடலாம்.இதில் நமது வைப்பு தொகை,வருட வட்டி.எவ்வளவு வருடம் என அனைத்தையும் தட்டச்சு செய்து இதில் உள்ள கால்குலேட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதனைப்போலவே வண்டி லோன்.அறிவியல் கால்குலெட்டர்.கணித கால்குலேட்டர்.என பலவிதமான கால்குலெட்டர்கள் கொடுத்துள்ளார்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
எனது பிறந்தநாளுக்கு நேரிலும் தொலைபேசியிலும் கருத்துரையிலும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி....
வாழ்க வளமுடன்
வேலன்.

பின்குறிப்பு:-
இதுவரையில் பதிவிட்டு 800 பதிவுகளை கடந்துவிட்டேன். தொடர்ந்து உங்கள் ஆதரவில்......
velan 800
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பிறந்தநாள் வாழ்த்து.






அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில் 
 முக்கிய விஷேஷம்.. பிறக்கும்போது
கொண்டுவரவில்லை.இறக்கும்போதும் கொண்டு செல்ல
போவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்
முடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து இன்று
 இதுவரை சுமார்  20,00,000 பார்வையாளர்கள் 
எனது தளத்திற்கு வந்துசென்று உள்ளனர்.இது எனக்கு மிகுந்த
மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எனக்கு தெரிந்த
விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்கு
தெரியாததையும் சொல்லிதாருங்கள்.கற்றுக்கொள்கின்றேன்.
இணையதளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.
அந்தவகையில் உண்மையில் நான் மிக்க அதிர்ஷ்டக்காரன் தான்.
பதிவில் என்ன வி்ஷேஷம் என்றால் இன்று எனது பிறந்தநாள்
02.12.2012.தொடர்ந்து உங்கள் அன்பையும ஆசிர்வாதத்தையும் வேண்டி...

என்றும் அன்புடன்..
வேலன்.


velan
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-ஆடியோ பைல்களை டிவிடியாக மாற்ற

பாடல்கள் விரும்பிகேட்காதவர்களே இருக்கமாட்டார்கள். சிலருக்கு வீடியோ பாடல்கள் பிடிக்கும். சிலருக்கு ஆடியோ பாடல்கள்.பிடிக்கும். வீடியோ பாடல்களை டிவிடியாக மாற்ற நிறைய சாப்ட்வேர்கள் உள்ளன. ஆனால் ஆடியோ பைல்களை டிவிடியாக மாற்ற சில சாப்ட்வேர்கள் மட்டுமே உள்ளது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் வேண்டிய ஆப்ஷன்களை செட் செய்திடவும. பேக்கிரவுண்ட புகைப்படங்களாக மூன்று புகைப்படங்கள் கொடுத்துள்ளார்கள்..கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இதில் import file மூலம் நம்மிடம் உள்ள ஆடியோ பைல்களை தேர்வு செய்யவும்..கீழே உள்ள ஸ்லேடரில் பாடல்களின கொள்ளளவுக்கு ஏற்ப நீலநிறம் வருவதை கவனியுங்கள்.
 இறுதியாக இதில் உள்ள Create கிளிக் செய்யுங்கள்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் ஆடியோ பைலகள் டிவிடியாக மாறிவிட்டதை கவனியுங்கள. நாம் தனியே நமது கணிணியிலும் டிவிடியாக சேமித்துவைக்கும் வசதியும் உள்ளது;.பயன்படுத்திப்பாருங்கள்...கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இலவச பியானோ கற்றுகொள்ள


உன் இசை என்னும் இன்பவெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா ...என யாராவது உங்களிடம் கேட்கின்றார்களா,? கவலையை விடுங்கள். உங்கள் கீபோர்டையே பியானோவாக மாற்றிக்கொள்ளலாம். பின்னர் நீங்கள் பியானாவில் பின்னி எடுக்கலாம்.2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். நீங்கள ்இன்ஸ்டால ்செய்துமுடித்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

உங்கள் கீபோர்டோ பியானோவின ்கீக்களாக மாறிவிட்டதால் நீங்கள் ஒவ்வொரு கீயாக அழுத்தி வரும ்ஒலியை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இதில ரெக்கார்ட் செய்யும வசதியும் உள்ளதால் உங்கள் இசை குறிப்பை மீண்டும் ஒலிக்க செய்து தவறுகளை திருத்திக்கொள்ளலலாம்.பாடல்களின கீகள் சிலவற்றை அவர்கள் கொடுத்துள்ளார்கள். அதனை பயன்படுத்தியும் நாம் பாடல்களை ஒலிக்க செய்யலாம்.உங்களுக்கு மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவர்கள் தள முகவரி சென்று பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.

JUST FOR JOLLY:-
பார்த்ததில் பிடித்தது:-




பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எளிதில் எடுக்க Mr.Shot.

அடிக்கடி ஸ்கிரீன் ஷாட் எடுத்து சேமித்துவைப்பவரா நீங்கள்.அப்போது உங்களுக்கு இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படும். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Options கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உஙகள் புகைப்படம் எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யவும்.
இதில் நீங்கள் Ctrl+D தட்டச்சு செய்தால் டெக்ஸ்டாப்பினையும் Ctrl+Wதட்டச்சு செய்தால் விண்டோவினையும் Ctrl+Z தட்டச்சு செய்தால் தேவையான இடத்தையும் படம்பிடிக்கலாம்.தவிர எந்த பார்மெட்டில் படம் வேண்டுமோ அந்த பார்மெட்டையும் தேர்வு செய்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
படித்ததில் பிடித்தது:-
JUST FOR JOLLY:-

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...