வழக்கமாக நாம் டெக்ஸ்டாப்பில உள்ளதை ஸ்கிரீன்ஷாட்(பிரிண்ட் ஸ்கிரீன்) எடுக்க கீ-போர்டில் உள்ள பிரிண்ட்ஸ்கிரீன் கீ-யை அழுத்தி பின்னர் அதை பெயிண்ட்டில் சென்று பேஸ்ட் செய்வோம். ஆனால் ஒரே கீ-யை அழுத்துவது மூலம் நாம் பிரிண்ட்ஸ்கிரீன் சுலபமாக பெறலாம்.2 எம்பி.கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்யஇங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.இதில் உள்ள Preferences கிளிக்செய்ய விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவையான ஆப்ஷன்களை தேர்வு செய்வதுடன் ஹாட்கீயுடுன் தேவையான கீ-களை தேர்வு செய்யலாம்.அடுத்துள்ள Source கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள ஆப்ஷன்களில் தேவையானதை கிளிக் செய்யவும்.மூன்றாவதாக உள்ள Destination கிளிக் செய்ய நீங்கள் எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ-எந்த மாதிரி சேமிக்கவிரும்புகின்றீர்களோ -இமெயில் அனுப்ப விரும்புகின்றீர்களோ அதை முடிவு செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக உள்ள images கிளிக் செய்ய படத்தை நீங்கள் எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டில் சேமிக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
வழக்கமாக நாம்பிரிண்ட் ஸ்கிரீன் மூலம் படத்தை காப்பி செய்வதை விட இது மேலும் சுலபமாக உள்ளதால் இதை பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.