வேலன்:-போட்டோஷாப் பாடம்-22(கலர்படத்தை நொடியில் கருப்பு வெள்ளையாக்க)






போட்டோஷாப்பில் இன்று கலர் புகைப்படத்தை நொடியில்
கருப்பு வெள்ளை புகைப்படமாக மாற்றுவது பற்றி பார்க்கலாம்.
உங்களுக்கு தேவையான புகைப்படத்தை தேர்வு செய்து
கொள்ளுங்கள்.

இப்போது Ctrl+Shift+U கீகளை ஒரு சேர அழுத்துங்கள். உங்களது
படம் மானது கருப்பு வெள்ளையாக மாறிவிடும்.



சரி படத்தை பாதி வெள்ளை மீதி கலர் வேண்டும் என்ன செய்வது?
மீண்டும் படத்தை தேர்வு செய்யுங்கள்.

படத்தை மார்க்யு டூலால் நடு மையம் வரை தேர்வு செய்யுங்கள்.
Feather Tool -கொண்டு வேண்டிய ரேடியஸ் அளவினை கொடுத்து
ஓகே செய்யுங்கள். இப்போது முன்பு சொன்னது போலவே
Ctrl+Shift+U அழுத்துங்கள். நீங்கள் தேர்வு செய்த பாகம் மட்டும்
கருப்பு வெள்ளையாக மாறி விடுவதை பார்க்கலாம்.

இன்றைய டிசைனில் கீழ்கண்ட PSD புகைப்பட பைலை
இணைத்துள்ளேன்.

கீழ்கண்ட புகைப்படத்தை பாருங்கள்.

இதில் புகைப்படத்தை கட்செய்து கீழ்கண்டவாறு இணைத்துள்ளேன்.

அவ்வாறே கீழ்கண்ட புகைப்படமும்.


மேற்கண்ட PSD FIle தேவைப்படுவர்கள் கீழ்கண்ட லிங்க்

கிளிக்
செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பதிவினை பாருங்கள்.பயிற்சியினை மேற்கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

கலர்படத்தை கருப்புவெள்ளையாக மாற்றியவர்கள்:-

JUST FOR JOLLY PHOTOS:-
இணைய நண்பர் அனுப்பிய புகைப்படம்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வார்த்தைகளை சுலபமாக விட்ஜெட்-டெப்ம்ளேட்டில் தேட




<span title=

சில திரட்டிகள் அவர்களின் ஓட்டுப்பட்டை-அவர்களின்
கோடுகள் -போன்றவற்றை சேர்ப்பதற்காக இந்த வார்த்தைகளை
தேடி இந்த வரிகளை சேருங்கள் என குறிப்பிடுவார்கள்.
சில சமயம் நமக்கே டெம்ப்ளேட்டை
திருத்துவதற்காக அதில் உள்ள வரிகளை - வார்த்தைகளை
தேடி அலைவோம். அதில் நமக்கு தேவையான வரிகள்
கிடைக்கும் வரை ஒவ்வோரு வரியாக மவுஸ் ஸ்கோரல்
மூலம் பார்த்துவருவோம். ஆனால் வார்த்தைகளை தேட
இப்போது சுலபவழி ஒன்றை பார்ப்போம்.

பிளாக் Dashboard -க்கு சென்று, உங்கள் பிளாக்கின் Layout -ஐ
கிளிக் செய்து,Edit HTML -ஐ கிளிக் செய்யவும். அதில் Expand
Widget Templatesசெக் பாக்ஸ்-ஐ தேர்வு செய்து கொள்ளவும்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இப்போது உங்களுக்கு தேவையான வரியை தேடவேண்டும்.
Ctrl+F அழுத்துங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
வலது கை மூலையில் ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள பெட்டியில் இப்போது மீண்டும் நீங்கள் தேட
விரும்பும் வரிகளை காப்பி செய்தோ - தட்டச்சோ- செய்யுங்கள்.

இப்போது Enter தட்டுங்கள். இப்போது நீங்கள் தேடும்
வார்த்தைகள் கலரில் தேர்வுசெய்து இருப்பதை பாருங்கள்.

உங்கள் தேவையான கோடிங்கை சேருங்கள்.

வேலை சுலபமாக முடிந்ததா?

பதிவை பாருங்கள். மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

தகவல் உதவி:-நண்பர் திரு.யூர்கன் க்ருகியர்

வார்த்தைகளை சுலபமாக விட்ஜேட் டெப்ம்ளேடில்
இதுவரையில் தேடியவர்கள்
web counter

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-விதவிதமாய்-வித்தியாசமாய் ரிங்டோன்கள்


சிலர் செல்போனில் விதவிதமாக ரிங்டோன்கள் - மெசேஜ்
டோன்கள் வைத்திருப்பார்கள். அவர்களுக்காகவே இநத
தளம் உள்ளது. இதில் 3,18,538 -க்கும் மேற்பட்ட ரிங்
டோன்கள் வெவ்வேறு கேட்டகிரியில்(Categories) உள்ளது.
புகழ்பெற்ற பாடல்கள்,செந்தில் கவுண்டமணி காமெடிகள்,
வடிவேலு காமெடிகள்,குழந்தைகளின் சிரிப்புகள்,குழந்தையின்
அழுகுரல்கள்,நகைச்சுவையான இசைதொகுப்புகள் என
நமக்குவேண்டிய கேட்டகிரியை(Categories) தேர்வுசெய்து
வேண்டியதை -விரும்பியதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தளம் செல்ல முதலில் இங்கு கிளிக் செய்யவும்.

உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் உள்ள பிளே பட்டனை கிளிக் செய்து பாடலை முதலில்
முன்னோட்டம கேளுங்கள். உங்களுக்கு பாடல்- காமெடி வசனம்
-ரிங் டோன் -பிடித்திருந்தால் இதன் கீழ் உள்ள Get Ringtone கிளிக்
செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள PC DOWNLOAD கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓன்று ஓப்பன் ஆகும்.


இதன் கீழ் புறத்தில் உள்ள Start Download கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு நீங்கள் ரிங்டோனை எந்த டிரைவில் சேமிக்க
போகின்றிர்களோ அந்த டிரைவை தேர்ந்தேடுங்கள். பிறகு
சேமியுங்கள்.
இப்போது உங்கள் விருப்பபாடல் உங்கள் கணிணியில்
இருக்கும். அதிலிருந்து நீங்கள் உங்கள் மொபைலுக்கு
டேட்டா கேபிள் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.
பதிவை பாருங்கள்.பிடித்திருந்தால் மறக்காமல்
ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

ரிங்டோனை இதுவரை பதிவிறக்கம் செய்தவர்கள்:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பிடித்த MP-3 பாடல் வரிகளை ஒரே பாடலாகசேர்க்க



நான் நேற்று MP-3 கட்டர் பற்றி பதிவிட்டிருந்தேன். அதற்கு

நண்பர் கீழ்கண்டவாறு கருத்துரை கூறியிருந்தார்.
கருத்துரை கீழே:-

யூர்கன் க்ருகியர் கூறியது...

நல்ல விடயம் சார். பகிர்வுக்கு நன்றி!

சார் .. வெவ்வேறு பாடல்கள்களின் கிளிப்களை வேண்டிய
இடத்தில ஒன்று சேர்த்து நாமாகவே ஒரு ரி-மிக்ஸ் தயார்
பண்ற மாதிரி ஒரு சாப்ட்வேர் ஐ தேடி கொண்டிருக்கிறேன்.
August 25, 2009 10:42 AM
நண்பர் ஆசைபட்டுவிட்டார்...ஆசையை நிறைவேற்ற
இன்று MP-3 Joiner பற்றி பதிவிடுகின்றேன்.

நம்மிடம் பல எம்.பி.3 பாடல்கள் இருக்கலாம். அதில்
விருப்பமான இசை,பாடல் வரிகள் இருக்கலாம்.
சில பாடல்களில் பாடல் வரிகள் நன்றாக இருக்கும்.
சில பாடல்களில் இசை நன்றாக இருக்கும். நாம்
நமக்கு பிடித்த பாடலில் இருந்து பாடலையும்
பிடித்த இசையையும் ஒன்றாக சேர்த்து நமக்கு
விருப்பமான பாடலை உருவாக்கலாம்.அதற்கு
இந்த எம்.பி.3 ஜாயினர் உதவுகின்றது.

3 எம்.பி. கொள்ளளவு உள்ள இதை பதிவிறக்க இங்கு
கிளிக் செய்யுங்கள். உங்கள் கணிணியில் நிறுவிக்
கொள்ளுங்கள்.உங்களுக்கு இந்த சாப்ட்வேரை ஓப்பன்
செய்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதன் மேல்புறம் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோஇருக்கும்.

இதில் உள்ள Add Files -ல் உங்கள் கணிணியில் உள்ள பாடலை
தேர்வு செய்துகொள்ளலாம். இல்லை மொத்த போல்டரில் உள்ள
பாடல் வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள்
Add file கிளிக் செய்து உங்கள் விருப்பமான பாடலை தேர்வு
செய்யுங்கள்.

இதைப்போல் நீங்கள் எத்தனை பாடல்களை தேர்வு செய்கின்
றீர்களோ அந்த பாடல்கள் மொத்தத்தையும் தேர்வு செய்து
கொள்ளுங்கள். இப்போது கீழ் வரிசையில் பார்த்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ இருக்கும்.


முதல் பாடலை தேர்வு செய்து பாடலை ஓட விடுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பாடல் வரிகளோ அல்லது இசையோ
வரும் சமயம் இதில் உள்ள Begin கிளிக் செய்யுங்கள். பாடல்
ஓடிக்கொண்டிருக்கும். நீங்கள் விரும்பிய பாடல்வரியோ -
இசையோ முடிந்ததும் இதில் உள்ள End கிளிக் செய்யுங்கள்.
இதைப்போல் இதில் உள்ள மொத்தப்பாடல் வரிகளையும்
தேர்வு செய்து முடித்ததும் இதில் உள்ள Join கிளிக் செய்யுங்கள்.

இதில் நாம் பாடலின் Format மாற்றிக்கொள்ளலாம். அதைப்
பேர்ல மேல்புறம் உள்ள UP Arrow -Down Arrow கிளிக் செய்வது
மூலம் பாடலை இடம்மாற்றம் செய்யலாம். அதைப்போல்
பாடலில் உள்ள Remove கிளிக் செய்வது மூலம் பாடலை நீக்கி
விடலாம். இதில் Skin கலர் மாற்றும் வசதி உள்ளது. கீழே
உள்ள படத்தை பாருங்கள்.



நீங்கள் விருப்பிய வாறு செய்து முடித்ததும் உங்கள் பாடலை
நீங்கள் விரும்பிய இடத்தில் விரும்பிய பெயர் கொடுத்து சேமித்து
வைத்து வேண்டிய சமயம் கேட்டு மகிழவும்.

முக்கிய விஷயம் இது டிரையல் விஷன் தான்.
பிடித்திருந்தால் வாங்கி உபயோகியுங்கள். பிடிக்காவிட்டால்
மறக்காமல் ஒட்டுப்போடுங்கள்.

சற்றுமுன் கிடைத்த தகவல்:- நண்பர் அவர்கள் இந்த
சாப்ட்வேருக்கான சீரியல் எண் தந்துள்ளார். அவரின் தளம்
செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இதுவரை பாடலை ஓன்று சேர்த்தவர்கள்:-

web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-MP-3 கட்டர் உபயோகிப்பது எப்படி?



<span title=




நாம் இதற்கு முன் D.V.D. Cutter உபயோகிப்பது பற்றி பார்த்தோம்.
அந்த பதிவைஇதுவரை பார்க்காதவர்கள் இங்கு கிளிக்
செய்யவும். இப்போது MP-3 Cutter பற்றி பார்ப்போம்.

இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக்
செய்யவும்.இதை கணிணியில் இன்ஸ்டால் செய்யவும்.

இந்த சாப்ட்வேரை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன்ஆகும்.


இதில் உள்ள ஓப்பன் கிளிக் செய்து நீங்கள் கட்செய்யவிரும்பும்
பாடலை தேர்ந்தேடுங்கள்.பாடலை பிளே செய்யுங்கள்.
பாடல் ஓட ஆரம்பிக்கும்.இதில் உள்ள ஸ்லைடரும் நகர
ஆரம்பிக்கும். படத்தை பாருங்கள்.

நீங்கள் விரும்பும் பாடல்வரி வந்ததும் அதில் உள்ள SetStart
கிளிக்செய்யுங்கள்.இப்போது ஸ்லைடர் ஆனது நீலக்கலருடன்
நகர ஆரம்பிக்கும்.

உங்களுக்கு தேவையான வரிகள் ஒலித்து முடித்ததும் இதில்
உள்ள Set End கிளிக் செய்யுங்கள்.

நீங்கள் எவ்வளவு நீளத்திற்கு பாடலை பதிவு செய்துள்ளீர்களோ
அதன்விவரமும் பாடல் ஒலிக்கும் நேரமும் காண்பிக்கும்.



இதில் உள்ள Play Selection கிளிக் செய்து ஒரு முறை கட் செய்த
பாடலைகேட்டுப்பாருங்கள். மாற்றங்கள் ஏதும் இருப்பின் செய்துவிட்டு
மீண்டும் ஒரு முறை பாடலை கேட்டுப்பாருங்கள.
இறுதியாக பாடலை Save Selection கிளிக்செய்து உங்கள்
விருப்பமான டிரைவில் சேமிக்கவும்.

உங்களுக்கு மேற்கண்ட விண்டோ தோன்றும். ஓ.கே.கொடுங்கள்.
அவ்வளவு தான். இந்த பாடலை நீங்கள் உங்கள் விருப்பபடி
செல்போனில் ரிங் டோனாகவோ - மெசேஜ் டோனாகவோ
வைத்துக்கொள்ளலாம்.

பதிவை பாருங்கள். பிடித்திருந்தால் மறக்காமல்
ஒட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்:,

வேலன்.

இதுவரை MP-3 Cutter உபயோகித்தவர்கள்:-

web counter

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப் பாடம்-21



போட்டோஷாப்பில் இன்று சாதாரண போட்டோவில் எப்படி டிசைன்
களை சேர்த்து அழகாகமாற்றுவது என பார்க்கலாம்.

இப்போது டிசைன்செய்து மாற்றிய போட்டாவை பாருங்கள்.
எவ்வளவு அழகாக மாறி உள்ளது.


இன்றைய பாடத்தில் இதை எவ்வாறு செய்வது என பர்ர்க்கலாம்.
முதலில் இந்த லிங்க் கிளிக் செய்து இந்த PSD பைலை டவுண்லோடு
செய்து கொள்ளவும்.( நமது வாசகர்கள் வசதிக்காக இதை விண்ரேர்
மூலம் சுருக்கி பதிவேற்றியுள்ளேன். விண்ரேர் பைலை எப்படி
விரிவாக்குவது என ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்).
இங்கு PSD பைலை பற்றி சொல்லவேண்டும். பல லேயர்கள்
சேர்ந்து உருவாக்குவது தான் PSD பைல். இதில் உள்ள லேயரை
கிளிக் செய்து டிலிட் செய்தாலோ - மூவ் டூல் கொண்டு மூவ்
செய்தாலோஅந்த குறிப்பிட்ட லேயரில் உள்ள படம் மறைவதோ
-மூவ் ஆகவோ செய்யும். இப்போது இந்த் பைலை போட்டோ
ஷாப்பில் திறந்து கொளளுங்கள். உங்களுக்கு மீண்டும் இந்த
படம் ஓப்பன் ஆகும்.இதில் மொத்தம் 25 டிசைன்கள் உள்ளது
என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆனால் அதுதான்
உண்மை. இதில் உள்ள ஒவ்வொரு டிசைனையும் நம்மால்
நீக்கவோ - மற்றொரு படத்தில் சேர்க்கவோ முடியும்.
இப்போது நீங்கள் F7 கீ-யை அழுத்துக்கள்.உங்களுக்கு
கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள ஓவ்வோரு டிசைனும் ஓரு லேயர் ஆகும்.
இப்போது நாம் இந்த டிசைன்போலவே இன்னும் ஒரு டிசைன்
உருவாக்குவதை காணலாம். முதலில் உள்ள போட்டோவின்
அளவிற்கு ஒரு விண்டோ ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.
இதை ஓ,கே. கொடுக்க உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.

உங்களுக்கு வெள்ளைநிற விண்டோஓப்பன் ஆகியதா. இப்போது
F7 அழுத்தியதில் வந்த விண்டோவில் கடைசியாக உள்ள Layer 8
கிளிக் செய்யுங்கள். அந்த லேயரானது நீல நிறமாக மாறிவிடும்.
இப்போது மூவ் டூல் கிளிக் செய்யுங்கள். உங்கள் கர்சரை கொண்டு
வந்து படத்தின் மீது வைத்து கிளிக் செய்து கர்சரை இழுத்துவந்து
புதிய விண்டோவில் விடுங்கள். இப்போது கீழ்கண்ட விண்டோவை
பாருங்கள்.

மீண்டும் layer 0 கிளிக் செய்யுங்கள். முன்பு சொன்னது மாதிரியே
செய்யுங்கள். அந்த டிசைனை இழுத்துவந்து இந்த விண்டொவில்
விட்டுவிடுங்கள்.

இவ்வாறே நீங்கள் ஓவ்வொரு லேயராக இழுத்துவந்து உங்கள்
புதிய விண்டோவில் சேர்த்துக்கொண்டோ இருங்கள்.

கீழ்கண்ட படத்தில் சிறிய சிகப்பு புள்ளிகளை சேர்த்துள்ளேன். அதற்கான
லேயர் small red mork என குறிப்பிட்டுள்ளேன்.
இந்த படத்தில் ஓரத்தில் பூ டிசைன் லேயரை சேர்த்துள்ளேன்.
அதற்கான லேயர் Green Leaves என குறிப்பிட்டுள்ளேன்.
அதைப்போல் பச்சை பூக்களுக்கு எதிர் புறம் பார்டர் சேர்த்துள்ளேன்.
இப்போது தம்பதியரை எடுத்துவந்து சேர்த்துள்ளேன். இந்த இடத்தில்
நீங்கள் உங்கள் போட்டோவை சேர்க்கலாம். போட்டோவை
பென்டூலால் கட் செய்து எப்படி எடுத்துவருவது என முன்னர்
பதிவிட்டுள்ளேன்.இப்போது பெயரை சேர்த்துள்ளேன்.
இங்கு நீங்கள் உங்கள் பெயரைசேர்த்துக்கொள்ளலாம்.


இப்போது இரண்டு இதயங்களை கொண்டுவந்து சேர்த்துள்ளேன்.
இதை லேயரில் two red hearts என பெயர் சூட்டியுள்ளேன்.
இப்போது அழகான மனைவி அன்பானதுணைவி என்கின்ற வரியை
சேர்த்துள்ளேன்.


இப்போது அமைந்தாலே பேரின்பமே என்கின்ற வரியையும்
சிகப்பு குடை மற்றும் பெயரையும் சேர்த்துள்ளேன்.


இப்போது Wedding Day என்கின்ற வரியையும் நீல நிற குடையையும்
சேர்த்துள்ளேன்.


இந்த நீல நிறம் மற்றும் சிகப்பு நிற குடையை எனது பிளாக்கின்
தலைப்பின் ஓரத்தில் நீங்கள் காணலாம்.


நீங்கள் F7 அழுத்தி வரும் லேயரில் பார்த்தால் உங்களுக்கு
லேயரின் முன்பும் கண் ஒன்று தெரியும்.அதில் உள்ள
கண்ணை நீங்கள் கிளிக் செய்து பாருங்கள்.உங்கள் படத்தில்
உள்ள அந்த லேயர் படம் மறைவதைகாணலாம்.
பதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன் முடிக்கின்றேன்.
இதைப்போல் என்னிடம் சுமார் 200க்கும் மேல் டிசைன்கள்
உள்ளது. இன்று பதிவிட்டது ஒரு டிசைன்தான் .
உங்களுக்காக இனி பதிவுகளில் ஒவ்வொரு டிசைனின் லிங்க்
கொடுத்துவருகின்றேன்.பத்து அல்லது பன்னிரண்டு
டிசைன் சேர்ந்ததும் நீங்கள்அதை ஒரு சிடியில் காப்பி
செய்து வைத்துக்கொள்ளுங்கள்.ஒவ்வொரு டிசைனிலிருந்தும்
ஒரு லேயரை எடுத்து நாமேதனியாக டிசைன் செய்யலாம்.
இந்த லேயரை பற்றி சொல்லவே இன்றைய பாடம்.போட்டோ
ஷாப்பில் உள்ள டூல்கள் பற்றி பாடம் தொடர்ந்துவரும்.


பதிவுகளை பாருங்கள். பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்
போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

போட்டோஷாப் டிசைன் இதுவரை செய்தவர்கள்:-
web counter

JUST FOR JOLLY PHOTOS

மனிதர்களுக்கு பன்றிக்காய்ச்சல் வராமலிருக்க நீங்கள் மாஸ்க்
போட்டுக்கொள்கின்றீர்கள். எங்களுக்கு மனிதர்கள்
காய்ச்சல் வராமலிருக்க நாங்களும் மாஸ்க் போட்டுக்
கொள்கின்றோம்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...