ஒளிப்படத்தில் அசைவுப்படங்களை இணைக்க நாம் போட்டோஷாப் பயன்படுத்தலாம்.இதற்கு முதலில் நீங்கள்போட்டோஷாப் அப்ளிகேஷனை திறந்துகொள்ளுங்கள். பின்னர் நீங்கள் ஒளிப்படததினை தேர்வு செய்யுங்கள். பின்னர் அசைவுப்படத்தினையும் தேர்வு செய்து ஓப்பன் செய்யவும்.
போட்டோஷாப் மெனுபாரில் உள்ள விண்டோ டேபினை கிளிக் செய்ய வரும் பாப்அப் மெனுவில் அனிமேஷன் என்பதை தேர்வு செய்யவும்.
உங்களுக்கு டைம்லைன் விண்டொ திறக்கும். இதில் நீங்கள் தேர்வு செய்த அனிமேஷன் படம் ஒவ்வொரு ப்ரேமாக டைம்லைனில் தெரியும்.
இதில் கீழே உள்ளகட்டங்களின் மேல் வலதுஓரம் மூன்று கோடுகளுடன் உள்ள ஐகானினை தேர்வு செய்து மெனுவினை கிளிக் செய்ய உங்களுக்கு பாப்அப்மெனு தோன்றும் அதில் உள்ள Select All Frames கிளிக் செய்யவும்.
பின்னர் Copy Frames தேர்வு செய்யவும். பின் முதலில் தேர்வு செய்த ஒளிப்படத்தினை கிளிக் செய்யவும். பின்னர் மேலே சொன்ன முறையில் விண்டொ தேர்வு செய்து Paste Frame கிளிக் செய்யவும்.வரும் விண்டோவில் Paste Over Selection Link மற்றும் Added Layers எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்து இறுதியில் ஓ.கே.தரவும்.
இப்போது படங்கள் முழுவதும் விண்:டோவில் காப்பி ஆகிவிடும். இப்போது மீண்டும் விண்டோ தேர்வு செய்து வரும் பாப்அப் விண்டோவில் Match Layer Across Frame என்பதனை தேர்வு செய்திடவும்.
இப்போது மீண்டும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். அதில் எல்லா ரேடியோ பட்டன்களையும் தேர்வு செய்து ஒ.கே.தரவும்.
இப்போது ஒளிப்படத்தில் உங்களுக்கு அனிமேஷன் படம் கிடைக்கும்.பின் அனிமேஷன் படத்தினை நகர்த்த விரும்பினால் அனிமேஷன் ப்ரேமினை தேர்வு செய்து பின்னர் அனிமேஷன் படத்தில் வைத்து கிளிக் செய்ய உங்களுக்கு வரும் பாப்அப்மெனுவில் Free Transform டூலினை தேர்வு செய்து அனிமேஷன் படம் எங்கு வரவேண்டுமோ அங்கு நதர்த்திக்கொள்ளுங்கள். அனிமேஷன் அளிவினை குறைப்பதனாலும் ;குறைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் என்டர் தட்டியபின்னனர் பைல்மெனு சென்று அதில் Save and Web Device என்பதனை தேர்வு செய்யுங்கள்.
வரும் விண்டோவில உங்களுக்கான படம் தெரியவரும். அதில் ப்ரிவியூ பார்த்துக்ககொள்ளுங்கள்.
இறுதியாக செவ் கொடுங்கள். பின்னர் விரும்பிய இடத்தினில் அதனை சேவ் செய்துகொள்ளுங்கள்.
இப்போது கடலின் மேற்பறப்பில் கழுகு பறப்பது போன்ற படம் கிடைத்துள்ளது. இது கன்னியாகுமரியில் உள்ள கடலாகும்.
வாழ்கவளமுடன்
வேலன்.