வேலன்:-டிசைன் பாக்ஸ்(போட்டோக்களை டிசைன் செய்திட)

போட்டோஷாப்பில் செய்யக்கூடிய வேலைகளை இந்த டிசைன்பாக்ஸ் எளிதில் செய்துவிடும். 8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் https://www.presentation-3d.com/products/design-box.htmlசெய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்யவும். வலதுபுறம் உங்களுக்கு Basic.Color,Filter என மூன்று டேப்புகள் இருக்கும.Basic டேபில் Lightness.Contrast,Saturation.Sharpness என நான்குவிதமான ஸ்லைடர்கள் இருக்கும். தேவையானதை நாம் வைத்துக்கொள்ளலாம்.Color  டேபில் RGB ஸ்லைடர்கள் இருக்கும். தேவையானதை நகர்த்தி வைத்துக்கொள்ளலாம்.ப்ரிவியு வசதி உள்ளதால் நமக்கு பிடித்திருந்தால் அதனை Apply செய்துகொள்ளலாம்.அதனைப்போலவே பில்டரிலும் தேவையான வசதியை நாம் பெற்றுக்கொள்ளலாம்.
இடதுபுறம் உங்களுக்கு Favourite ஆக 28 விண்டோக்கள் டிஸ்பிளே ஆக தெரியும்.தேவையானதை கிளிக் செய்ய படம் பெரியவிண்டோவில் நமக்கு தெரியும்.இதனைப்போலவே Basic.Lomo,Digital,Fashion என 5 வித டேப்களில் மொத்தம் 102 எபேக்ட்கள் உள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மேலும் இதில் Painter.Convert.GIfMaker.Svo Convert.Ios Icon.QR Code என 7 டேப்கள்உள்ளது.Convert ல் Rotate,Resize,Watermark.Rename.Output என 5 டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.தேவையானதை தேர்வு செய்துகொண்டு பின்னர் அதன் கீழே உள்ள Process கிளிக் செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள Gif Maker மூலம் நம்மிடம் உள்ள புகைப்படங்களை அனிமேஷன் படமாக மாற்றிவிடலாம். அனிமேஷன் நகரும் நேரத்தினை செட் செய்யலாம்.
கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள ISO Icon மூலம் நாம் புகைப்படத்தினை தேர்வு செய்ய நமக்கு பல்வேறு அளவுகளில் புகைப்படங்கள் தெரியவரும் தேவையானதை கிளிக் செய்து நாம் Export செய்துகொள்ளலாம்.
நம்மிடம் உள்ள புகைப்டங்களை வேண்டிய மாற்றங்கள் செய்து இமெயிலும் அனுப்பும் வசதி உள்ளது. இது ஏழு நாட்களுக்கான டிரையல் விஷன் ஆகும்.தேவைப்படின் நீங்கள் முழுவேர்சனையும் வாங்கிகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பின்குறிப்பு:-
எனது மகனுக்காக அருகில் உள்ள மெடிக்கல்ஷாப்பில் சென்று இன்று -29.08.2012 பிரட் வாங்கினேன்.வழக்கமாக தயாரிப்பு தேதியை பார்த்துவாங்கும் பழக்கம் உள்ளதால் அதில் உள்ள தயாரிப்பு தேதியை பார்த்துவியந்துவிட்டேன்.காரணம் நாளை மறுதினம்(31.08.2012) தயாரிக்க உள்ள பிரட் இன்றே எனது கைகளில்....இன்று எனக்கு கிடைக்கவேண்டும் என்றால்  பிரட்டை அவர்கள் நேற்றே தயாரித்துஇருக்கவேண்டும் அல்லவா...அப்புறம் எதற்கு தயாரித்த எட்டுநாட்களுக்குள் பயன்படுத்தவேண்டும் என்ற வாசகம்;.... 
அப்போ நான் பிரட்டை இன்றிலிருந்து எட்டு நாட்களுக்குள் பயன்படுத்துவதா- அல்லது இதில் உள்ள தேதியில் இருந்து  எட்டுநாட்களுக்குள் பயன்படுத்துவதா?எனக்கு ஒன்றும் புரியவில்லை...உங்களுக்காவது புரிகின்றதா?

 எங்கள் வீட்டுக்காரம்மா புது பிரட்டாக வாங்கிவரசொன்னார்கள்.நான் எப்படி ரொம்ப பிரஷ்காக தயாரிப்பதற்கு  இரண்டுநாட்களுக்கு முன்னரே உள்ள பிரட்டை வாங்கிவந்துவிட்டேன் பார்த்தீங்களா!

வாழ்க வளமுடன்....

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போல்டர்களை வேண்டிய நிறத்திற்கு மாற்ற


விதவிதமான கலர்களில் போடும் கோலத்தினை ரங்கோலி கோலம் என்கின்றோம். அதுபோல நமது கம்யூட்டரில் உள்ள போல்டர்களுக்கும் விதவிதமான கலர்களை தரலாம். இதன் மூலம் குறிப்பிட்ட பைல்களுக்கு இந்த நிறம்தான் என முடிவு செய்யும்போது தேடுவதற்கு நமக்கு வசதியாக இருக்கும். உதாரணமாக போட்டோக்களுக்கு நாம் சிகப்பு நிறத்தினை வைத்துவிட்டால் போட்டோ உள்ள போல்டர்கள் எல்லாம் சிகப்பு நிறம் என கண்டுகொள்ளலாம். அதைப்போலவே நமது வீட்டில்உள்ள குழந்தைகளுக்கும் அவர்கள் சம்பந்தப்பட்ட போல்டர்களுக்குஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம் என நிறங்களை கொடுத்துவிட்டால் அவர்கள் பைல்களின் போல்டர்களை தேட வசதியாக இருக்கும்.1.5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் https://www.folderico.com/செய்யவும்.இதனை இன்ஸ்டால்  செய்தபின்னர் நீங்கள் உங்கள் கணிணியில் உள்ள போல்டரை ரைட்கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் வேண்டிய நிறத்தினை நீங்கள் கிளிக் செய்யவும்.


ஒவ்வொரு போல்டர்களுக்கும் விதவிதமான வண்ணங்கள் கொடுத்துள்ளேன்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

நீங்களும் உங்களது  போல்டர்களுக்கு வண்ணங்கள் கொடுத்துப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
 வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கேன்சர்பற்றிய 100 கேள்விகளும் அதற்கான பதில்களும்.

இன்றைய காலகட்டத்தில் முக்கியமான நோய் என்றால் அதை கேன்சர் என்று சொல்கின்றோம். கேன்சர் வந்தால் அவ்வளவுதான-அவர் ஆயுள் முடிந்தது என எண்ணுகின்றோம்.ஆனால் அதுவும் மற்ற நோய்களைபோல  சாதாரணமானதுதான். கேன்சரைப்பற்றி சரியான விழிப்புணர்வு நமக்குஇல்லாததால் தான் அதற்கு முக்கியகாரணமாகும்.கேன்சர் வந்தவர்களுக்கு மனதைரியம்தான்முக்கியம். அடுத்து அவர்சார்ந்துள்ளவர்களுக்கு மன தைரியம் முக்கியம்.எந்த நிலையிலும் மனதைரியத்தை இழந்துவிடகூடாது. எனக்கு கிடைத்த இந்த 100 கேள்விகளும் அதற்கான விடைகளும் உங்களுக்கு கேன்சரைப்பற்றிய ஒரு தெளிவான மனநிலையை உருவாக்கும் என எண்ணுகின்றேன்.1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த பிடிஎப் புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய 
இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் கேன்சரை பற்றிய கேள்விகளும் அதற்கான பதில்களும் முறையாக கொடுத்துள்ளார்கள்.
உங்களுடைய நண்பர்கள்.உறவினர்கள் யாருக்காவது கேன்சர் வந்திருந்தால் இந்த புத்தகத்தை அவர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-நூற்றாண்டுகளுக்கான காலண்டர்


காலண்டர்களை நாம் பிறந்ததுவரை அறிந்திருப்போம். ஆனால் நூற்றாண்டு காலண்டரை கேள்வி பட்டிருக்கின்றீர்களா?1800 முதல் 2500 வரை உள்ள நூற்றாண்டுகளுக்கான காலண்டரை நாம் இங்கு காணலாம்.கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
 இதில் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழியை தேர்வு செய்யலாம். மேலும் 1800 முதல் நமக்கு தேவையான நூற்றாண்டினை முதலில் தேர்வு செய்யவும்.பின்னர் அடுத்துள்ள டேபில் நமக்கு தேவையான வருடங்களை 10 வருடங்களாக பிரித்துள்ளார்கள். தேவையான வருடத்தை தேர்வு செய்யவும். பின்னர் அதில் தேவையான வருடத்தினை தேர்வு செய்யவும்.உங்களுக்கான வருடத்தினை தேர்வு செய்யவும். 
இப்போழுது உங்களுக்கான காலண்டர் கிடைக்கும். இதில் நமக்கு தேவையான தேதியையும் -கிழமைகளையும் பார்க்கலாம்.வரலாறறு தகவல்கள் சேகரிப்பவர்களும் - நமது கொள்ளுதாத்தா -அவருக்கும் தாத்தா பிறந்த தேதி தெரிந்தால் அவர் என்று பிறந்தார் என்று எளிதில் அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோ பைல்களுக்கு பாஸ்வேர்ட் கொடுக்க

பெரும்பாலும் நாம் டாக்குமெண்ட்டுகளைதான் பாஸ்வேர்ட்கொடுத்து பாதுகாப்போம். ஆனால இந்த சின்ன சாப்ட்வேரில நாம் வீடியோ பைல்களையும் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம். 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.

தேவையான வீடியோவினை தேர்வு செய்யுங்கள்.



இதில் உள்ள DRM  டேபினை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் எந்த வீடியோவினை பாஸ்வேர்ட் கொடுக்க விரும்புகின்றீர்களோ அந்த வீடியோவினையும் அதனை சேமிக்கும் இடத்தினையும் தேர்வு செய்யுங்கள். கீழே உள்ள Password கட்டத்தில் பாஸ்வேர்டினை தட்டச்சு செய்யுங்கள்.சேவ் செய்து வெளியேறுங்கள். 

இப்போது நீங்கள் வீடியோ பைலினை திறக்க உங்களுக்கு பாஸ்வேரட் கேட்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.சரியான பாஸ்வேர்டினை தட்டச்சு செய்து ஓ.கே.தாருங்கள்.
இனி இந்த ப்ளேயரில் பாடல்கள் கேட்டு மகிழுங்கள்முக்கியமான வீடியோ பைல்களை மற்றவர்கள் பார்க்கவேண்டாம் எனவிரும்புபவர்கள் இந்த சாப்ட்வேரினை உபயோகிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-தமிழ்நாடு விவரங்கள்..

ஜனாதிபதிகள் விவரம் வெளியிட்டதில் நல்ல வரவேற்பு.அதனை தொடர்ந்து நண்பர் ஒருவர் தமிழ்நாடு விவரங்களை அனுப்பி உள்ளார். நமது பதிவர்களுக்காக இங்கே பதிவிடுகின்றேன்.ஆட்சியார்கள் மாறலாம் -அதிகாரிகள் மாறலாம். மாறாதது முகவரிகள் தான்.இதில் அமைச்சர்கள் -அதிகாரிகள் விவரங்களை இணைத்துள்ளேன்.இந்த பதிவினை படிப்பதற்குள் அமைச்சர்களோ -அதிகாரிகளோ மாறியிருக்கலாம்.எனவே மாறியுள்ள பெயர்களை சரியாக எழுதிக்கொள்ளுங்கள்.

Tamil Nadu Profile

பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

நன்றி :-திரு சரவணன் அவர்கள்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-புகைப்படங்களை விரைந்து பார்வையிட

புகைப்படங்களை விரைந்து பார்வையிட இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது. 22 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் இடதுபுறம் உள்ள மெனு கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள இமேஜ் போல்டரை கிளிக் செய்து தேவையான புகைப்படங்களை தேர்வு செய்யவும்.
இதில் நமக்கு புகைப்படம் ஓப்பன் ஆகும். 


இதில்நமது புகைப்படத்தின் விவரங்கள் தெரிய வரும். கீழே உள்ள விண்டோ வில் பாருங்கள்.
புகைப்படத்தின் நடுவில் வைத்து கிளிக் செய்ய புகைப்படம் பெரியதாக தெரியும்.இதில் மெனுபாரில் உள்ள ஆப்ஷன் கிளிக் செய்ய ஐந்து வகையான ஆப்ஷன்கள் நமக்கு கிடைக்கும். நமக்கு தேவையான ஆப்ஷனை கிளிக் செய்துஉபயோகித்துக்கொள்ளளலாம் கூடுதல் விவரங்களுக்கு பிடிஎப் பைலை இதில் இணைத்துள்ளார்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-Sand Script --வார்த்தை விளையாட்டு

ஆங்கிலத்தில் நாம் எவ்வளவுதான் புலமைபெற்றிருந்தாலும் புதுபுது வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் தெரிவதில்லை.இந்த சாப்ட்வேரில் நமது ஆங்கில புலமையை அதிகரிக்க செய்யும் வகையில் அமைந்துள்ளது. 16 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கான ஆங்கில வார்த்தைக்கான அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கான ஆங்கில வார்த்தையை நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்.
ஒவ்வொரு லெவல் முடிந்ததும் உங்களுக்கு ஜீபூம்பா வரும்.
தவறான எழுத்தை நீங்கள் தேர்வு செய்தால் சரியான விடை உங்களுக்கு தெரியவரும்.
மூன்று விதமான ஆப்ஷன்கள் உங்களுக்கு கொடுத்துள்ளார்கள் தேவையானதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.புதுப்புது ஆங்கில வார்த்தைகள் அறிந்துகொள்வதுடன் மூளைக்கும் கொஞ்சம்வேலை கொடுக்ககலாமே...!பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...