வேலன்:-விஎலசி பிளேயரில் மறைந்துள்ள வசதிகள்

கணினியில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் பிளோயராக விஎல்சி பிளேயர் உள்ளது. ஆனால் அதில் பெரும்பாலான வசதிகள் ;நாம் அறிவதில்லை. ஆடியோ மற்றும் வீடியோக்களை பார்வையிடமட்டும் செய்கின்றோம். இதில் உள்ள கூடுதல் வசதிகள் என்னஎன்ன உள்ளது என பார்க்கலாம்.
1.வேண்டிய பார்மெட்டுக்கு வீடியோ ஆடியோ பைல்களை மாற்றிட
விஎல்சி பிளேயரில் உள்ள மீடியா எனகின்ற டேபினை கிளிக் செய்திடவும். வரும் பாப்அப் விண்டோவில Convert/Save என்கின்ற டேபினை கிளிக் செய்திடவும்.


 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். அதில் Add பட்டனை கிளிக் செய்து நீங்கள் பார்மெட்டு மாற்றவேண்டிய ஆடியோ மற்றும் வீடியோவினை தேர்வு செய்திடவும்.


உங்களுக்கு கீழ்கண்ட் விண்டோ ஓப்பன் ஆகும்.


 
அதனை டபுள் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்களுக்கு தேவையான பார்மெட்டின் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு செய்து சேவ் செய்து வெளியேறவும்.


இப்போது நீங்கள் வீடியோவினை பிளே செய்திட உங்களுக்கான வீடியோ வானது நீங்கள் விரும்பிய பார்மெடடில் மாறியிருப்பதை காணலாம்.
2.DVD FILE RIP  செய்திட:-
நம்மிடம் உள்ள டிவிடி பைல்களை ரிப் செய்திட இங்கு வசதி செய்து கொடுத:துள்ளார்கள். மீடியா டேபினை கிளிக் செய்து கன்வர்ட் சேவ் ஆபஷனை கிளிக் செய்திடவும்.
வரும் விண்டோவில் இரண்டாவதாக உள்ள டேபினை கிளிக் செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓபபன் ஆகும்.
அதில் உங்கள் டிவிடி உள்ள டிரைவினை தேர்வு செய்திடவும். வேண்டிய மாற்றங்கள் செய்தபின்னர் கீழே உள்ள ஆபஷனை கிளிக் செய்திடவும்.
3.இணையயத்திலிருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்திட:-
இணையத்தில் கிடைக்கும் வீடியோ பைல்களை டவுண்லோடர் மூலம் பதிவிறக்கம் செய்து பய்ன்படுத்துவோம். ஆனால் இதில் நாம் நேரடியாக பதிவிறக்கம் செய்திடலாம்.இதற்கும் மீடியா -கன்வர்ட் ;சேவ் கிளிக் செய்து வரும் விண்டோவில் நெட்ஒர்க் என்கின்ற டேபினை கிளிக் செய்திடவும்.
வரும் விண்டோவில் உங்கள் இணைய யூஆர்எல் முகவரியை காப்பி செய்திடவும். பின்னர் கீழே உள்ள சேவ் பட்டனை கிளிக் செய்து உங்களுக்கு வீடியோ எந்த பார்மெட்டில் வேண்டுமொ அதனை தேர்வு செய்திடுங்கள் சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் இணைய வீடியோவானது பதிவிறக்கம் ஆகிவிட்டுஇருப்பதை காண்பீர்கள்.இணைய வீடியோவினை பதிவிறக்கம ;செய்யாமலும் நீங்கள் பார்வையிடலாம்.
4. வெப் கேமராவினை பயன்படுத்த:-
நீங்கள் கணினியில் வெப்கேமரா பயன்படுத்தினால் அதன் ப்;;;;ரிவியூ பார்பது மட்டும் அல்லாது அதனை தனியே நீங்கள் ரெக்கார்ட் செய்து சேமித்தும் வைக்கலாம்.கீழே உளள விண்டோவில் பாருங்கள்.
5.வீடியோ ஆடியோ பைல்களில விரும்பிய இடத்தில் ரெக்கார்ட் செய்திட:-
விஎல்சி பிளேயரை திறந்துகொள்ளுங்கள் அதன்மேல்புறம் நிறைய டேப்புகள் கொடுத்துள்ளார்கள் அதில் உள்ள      வியூ என்பதனை கிளிக் செய்திடவும். வரும் பாப்அப் விண்டோவில் அட்வான்ஸ் கன்ட்ரோல்ஸ் -Advanced Controls என்பதனை கிளிக் செய்திடவும்.
 உங்களுக்கு விஎல்சியின் கீழே இடதுபுற மூலையில் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். உங்களுக்கான வீடியோவினை ஓடவிடுஙகள். உங்களுக்கு தேவையான பகுதியான பாடல்களோ -நகைச்சுவை காட்சிகளோ -சண்:டைகாட்சிகளோ வரும் வரை காத்திருங்கள் தேவையான காட்சி வந்ததும் அதில் முதலில் உளள  ரெக்கார்ட் பட்டனை கிளிக் செய்திடவும்.

தேவையான காட்சி முடிந்ததும் மீண்டும் ரெக்கார்ட் பட்டனை கிளிக் செய்திடவும். உங்களுக்கான வீடீயோவானது கணினியில் மை வீடியோ போல்டரில் சேமிப்;;பாக இருப்பதை காணலாம்.
6.வீடியோக்களில் இருந்து புகைப்படம் -ஸ்னாப்ஷாட் எடுக்க
சிலருக்கு வீடியோவில சில நடிகர்கள் பிடிக்கும். சிலருக்கு நடிகைகள் பிடிக்கும். பாடல்களில் வரும இயற்கை காட்சிகள் பிடிக்கும். தேவையான புகைப்படத்தினை ஸ்நாப்ஷாட் எடுத:து சேமித்து  வைக்க இதனை பயன்படுத்தலாம். வியூடேபில் அட்வான்ஸ் செட்டிங்ஸ் கிளிக் செய்துவரும் விண்டோவில் ரெக்கார்ட் பட்டனுக்கு அடுத:துள்ள பட்டனைக கிளிக் செய்திடவும். உங்களுக்கான புகைப்படம் இமேஜ் பைல்களாக மை பிக்ஸர்ஸ் போல்டரில் சேமிப்பாகும். 




 அதுபோல இதில் உள்ள கடைசி பட்டனை கிளிக் செய்திட வீடியோவின் ப்ரேம்கள் ஒவ்வொன்றாக நகரும் தேவையான ப்ரேமை ஸ்;நாப்ஷாட்டாக எடுத:துவைத்துக்கொள்ளலாம்.
7.வீடியோவில் வாட்டர் மார்க் கொண்டுவர:-
விஎல்சி பிளேயரில் மேலே உள்ள டேபில் டூல்ஸ் என்பதனை தேர்வு செய்து கிளிக்செய்திடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும். அதில் Effects and Filters என்பதனை கிளிக் செய்திடுங்கள். அல்லது கீபோர்டில் Ctrl+E என கிளிக் செய்திடுங்கள்.
 வரும் விண்டோவில் வீடியோ எபெக்ட்ஸ் என்பதனை தேர்வு செய்திடுங்கள்.
 இதில் நமக்கு விருப்பமான புகைப்படங்களை லோகோவாக தேர்வு செய்திடலாம் அந்த லோகோவானது முழுவீடியோவிலும் வரும். மேலும் லோகோ புகைப்படத்தினை வீடியொவில் எந்த இடத்தில் வைக்கவேண்டுமோ அந்த இடத்தினை தேர்வு செய்துகொள்ளலாம்.
 அதுபோல வீடியொவில் நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட் ஐ கொண்டுவரலாம் விருப்பமான டெக்ஸ்டை தட்டச்சு செய்திடவும்.மேலும் டெக்ஸ்ட் விருப்பமான இடத்தில் இடம்பெற செய்திடவும் இதில் வசதி செய்யப்பட்டுள்ளது.
8. வீடியோ ஆடியோ காலதாமத்தினை சரிசெய்திட:-
சில வீடியோக்கள் முதலில் ப்ளே ஆகும் ஆனால் அதற்கான ஆடியோ சில நொடிகள் தாமதமாக ஒலிக்கும் அதுபோல சில ஆடியொக்கள் முன்னதாகவே ஒலிக்கும் -அதன்பிறகே வீடியோ வரும். அவ்வாறான தவறை சரிசெய்திட இதில் வசதி செய்யப்பட:டள்ளது. 
இந்த வசதியை கொண்டுவர டூல்ஸ் -எபெக்ஸ்ட்ஸ் கிளிக் செய்து பின்னர் இதில் உள்ள சிக்ரனைஸர் கிளிக் செய்திடவும். வரும் விண்டோவில் ஆடியோ -வீடியோ இதில் எதனை அட்ஜஸ்ட் செய்திடவேண்டுமொ அதனை நொடிகள் வித்தியாசத்தில் அட்ஜஸ்ட் செய்து நீங்கள் பரிவியு}; பார்க்கலாம்.அதுபோல சப்டைடிலையும் நீங்கள் அட்ஜஸ்ட் செய்:து கொள்ளலாம். 
9. ஒன்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு வீடியொக்களை பார்வையிட:-

வெவ்வேறு வீடியொக்களை ஒன்றன்கீழ ஒன்றாகபோ பக்கத்தில் பக்கத்தில் வைத்தோ பார்வையிட இதில வசதி உள்ளது. நீங்கள் டூல்ஸ் சென்று பர்பார்மென்ஸ் என்பதனை கிளிக் செய்திடவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 

அதில் ப்ளேலிஸ்ட் அன்ட் இன்ஸ்டன்ஸ் என்பதன் கீழே உள்ள ரேடியோ பட்டன்களை நீங்கிவிட்டு சேவ் செய்து வெளியேறவும்.


உங்களுக்கு விருப்பமான வீடியொக்களை ஒவ்வொன்றாக திறக்கவும். அதனை விருப்பத்திற்கு ஏற்ப அடுக்கி வைக்கவும்.



நான்கு விண்டோக்களை ஒவ்வொரு மூலையிலும் பக்கத்து பக்கத்திலும் அடுக்கி வைக்கலாம். ஒரே சமயத்தில அனைத்து வீடியோக்களும் உங்களுக்கு ப்ளே ஆகும்.

10.நிறுத்திவிட்ட இடத்திலிருந்து தொடர்ந்து பார்க்க

விஎல்சி ப்ளேயரில் பாடல்களோ -வீடியோவோ பார்த்துகொண்டு இருக்கும் சமயம் இடையில் வேலை வந்தால் அதனை நிறுத்திவிட்டு சென்றுவிடுவோம். மீண்டும் விஎல்சி பயன்படுத்துகையில நாம் நிறுத்திவிட்டு சென்ற இடத்திலிருந்து பாடல்களையோ வீடியோவையோ தொடர்ந்து பார்க்கலாம். அந்த வசதியை விஎல்சியில் எப்படி கொண்டுவருவது என பார்க்கலாம். 
விஎல்சி யை திறந்துகொள்ளுங்கள். பின்னர்அதில் உள்ள Tools டேபினை கிளிக் செய்து அதில்வரும் பாப்அப் விண்டேவில் Performance கிளிக் செய்திடுங்கள்.
இப்போது உங்களுக்கு விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் கீழே உள்ள All என்பதனை கிளிக் செய்திடுங்கள். உங்களுக்கு விண்டோ ஓப்பன் ஆகும். 
 அதில் உள்ள Main interfaces கீளிக் செய்திட பக்கத்தில விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Continue Playback என்பதின் எதிரில் உள்ள விண்டொவில் கிளிக் செயதிட Ask.Never.Always என்கின்ற பாப்அப்மெனு கிடைக்கும். அதில் உள்ள Always என்பதனை தேர்வு செயதிடவும்.
பின்னர் சேவ் செய்து வெளியேறவும். இப்போது நீங்கள் வீடியோப்ளேயரை பிளை செய்தால் நீங்கள் நிறுத்திவிட்டு சென்ற இடத்திலிருந்து வீடியோ ப்ளே ஆக ஆரம்பிக்கும். 

11.வீடியோவில் குறிப்பிட்ட இடத்தினை புக்மார்க் செயதிட

வீடியோவில் நாம் படம் பார்த்துகொண்டு இருக்கும ;சமயம் சில காட்சிகள் நமக்கு பிடித்திருக்கும் அந்த இடத்தினை புக்மார்க் செய்துகொண்டு மீண்டும் பார்வையிட இதில் வசதி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் விஎல்சி ப்ளேயரில் படத்தினை ஒட விடுங்கள். பின்னர் அதில் உள்ள Playback-Custom Bookmark -Manage என்பதனை தேர்வு செய்திடவும்

 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்களுக்க விருப்பமான இடம் வந்ததும் இதில் உள்ள create என்பதனை கிளிக் செயதிடவும்.
 நீங்கள் எத்தனை இடங்கள் தேர்வு செய்கின்றீர்களோ அத்தனை இடங்களும் உங்களுக்கு கிடைக்கும்.
இப்போது நீங்கள் புக்மார்க்காக சேமித்துள்ளதை கிளிக் செய்திட நீங்கள் புக்மார்க் செய்த வீடியோ அந்த இடத்திலிருந்து ப்ளே ஆக ஆரம்பிக்கும். குறிப்பிட்ட காட்சி வசனம் நடனம் என எதுவேண்டுமானாலும் நாம் புக்மார்க்காக சேமித:துவைத்து பார்வையிடலாம்.
12.விஎல்சி பிளேயரில் விதவிதமான ப்ளேயர் மாடல்கள்(ஸ்கின்) கொண்டுவர:-
 விஎல்சி பப்ளேயரில் அவர்கள் டீபால்டாக ஒரே மாடல ப்ளேயரை கொடுத்துள்ளார்கள் நாம் விரும்பியதை கொண்டுவர நீங்கள் Tolls -Performance கிளிக் செய்திடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன ஆகும்.
அதில Use Coustem Skin என்கின்ற ரேடியோ பட்டனை கிளிக் செய்திடவும். நீங்கள் கணினியில சேமிததுவைத்துள்ள ஸ்கின் மாடலை தேர்வு செய்திடுங்கள். பின்னர் இதில் உள்ள சேவ் ஆப்ஷனை கிளிக் செய்து வௌியேறுங்கள் பின்னர் நீங்கள் விஎல்சி ப்ளேயரை இயக்குகையில் நீங்கள் தேர்ந்தெடுத்த ப்ளேயரானது உங்களுக்கு கிடைக்கும்... ப்ளேயர் உங்களுககு பிடிக்கவில்லையென்றால் மீண்டும் பழையபடி டூல்ஸ்;; -ப்ர்பார்மென்ஸ் கிளிக் செய்து யுஸ் கஸ்டம்ஸ் ஸ்கின் என்பதின் எதிரில் உள்ள ரேடியோபட்டனை நீக்கிவிட்டு Use Native Style எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்தால் பேதுமானது. 


 உங்கள் விஎல்சி ப்ளேயரானது பழையபடி மாறிவிடும்.

13.விதவிதமான ஸ்கிரின் ப்ளேயர்கள் 
ஒரே மாதிரியான ப்ளேயரினை பார்த்து நமக்கு சலிப்பு உண்டாகும் இதில் விதவிதமான ப்ளேயர்கள் கொடுத்துள்ளார்கள். இதனை மெர்த்தமாகவோ அல்லது நீங்கள் விரும்பும ப்ளேயரின் மாடலையோ பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக் https://www.videolan.org/vlc/skins.htmlசெய்யவும். இங்கு சென்றுபார்த்தால் உங்களுக்கு விதவிதமான ப்யேயர்கள் கிடைக்ககும்.
இதில விருப்பமானதை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
 
 14.தமிழ் உள்பட இந்திய மொழிகளில்  விஎல்சி ப்ளேயரை பயன்படுத்த

விஎல்சி ப்ளேயரில் நாம் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்திவந்தோம். ஆனால் இப்போது இதில் தமிழ் .தெலுங்கு.கன்னடம்.மலையாளம். இந்தி என இந்திய மொழிகளை இணைத்துள்ளார்கள். நாம் த்மிழ்மொழியை கொண்டுவர இதில் உள்ள டூல்ஸ்  - ப்ர்பார்மென்ஸ் கிளிக் செய்து வரும் விண்டோவில் Language டேபினை கிளிக் செய்திடவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில அனைத:து மொழிகளும் இருக்கும். அதன் அருகில் உள்ள ஸ்கோரல் பாரினை நகர்த்தவும்.

 வரும் விண்டோவில் தமிழ் என்பதனை தேர்வு செய்து பின்னர கீழே உள்ள சேவ் பட்டனை கிளிக செய்து வெளியேறவும். ஒரு முறை விஎல்சி ப்ளேயரை ஆப் செய்து ஆன் செய்யவும். 


இதில் உள்ள டேப்புகள் அனைத்தும தமிழில் மாறிஉள்ளதை கா ணலாம்.


தமிழ் உங்களுக்கு பிடிக்கைவில்லையென்றால் மீண்டும் பழையபடி டூல்ஸ்.-ப்ர்பார்மென்ஸ் கிளிக் செய்து வரும் விண்டொவில் மொழியை தேர்வு செய்து பி ன்னர் ஆங்கிலம் தேர்வு செய்து இறுதியாக சேவ செய்து வெளியேறவும். இப்போது உங்களுக்கு பழையவாறுஆங்கிலத்தில் விஎல்சி ப்ளேயர் கிடைக்கும்.இதுபோல ;உங்களுக்கு விருப்பமான மொழிகளை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
15. ஒரே படத்தினை ஒன்றுக்கும் மேற்பட்ட ப்ரேம்களில் பார்வையிட:-
 ஒரே படத்தினை நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட ப்ரேம்களில் பார்வையிடலாம்..
விஎல்சி பிளேயரை திறந்துகொள்ளுங்கள். பின்னர்
விஎல்சி பிளேயரில் மேலே உள்ள டேபில் டூல்ஸ் என்பதனை தேர்வு செய்து கிளிக்செய்திடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும். அதில் Effects and Filters என்பதனை கிளிக் செய்திடுங்கள். அல்லது கீபோர்டில் Ctrl+E என கிளிக் செய்திடுங்கள்.
 வரும் விண்டோவில் வீடியோ எபெக்ட்ஸ் என்பதனை தேர்வு செய்திடுங்கள்.
 அதில் நிறைய டேப்புகள் கிடைக்கும் அதில் Advanced என்பதனை கிளிக் செய்திடுங்கள். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Clone என்ப்தன் எதிரில் உள்ள ரேடியோ பட்டனைதேர்வு செய்து Number of Clones என்பதில் உங்களுக்கு எவ்வளவு விண்டோக்கள் வேண்டுமோ அதனை தேர்வு செய்திடுங்கள். பின்னர் வீடியோ வினை தேர்வு செய்து ப்ளே செய்யுங்கள்.

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விண்டோவினை சிறியது பெரியது என அமைத்துக்கொள்ள விண்டோக்கள் அனைத்திலும் வீடியோவானது ஒரே சமயத்தில் ப்ளே ஆகும்.;


17-முப்பரிமாண படம் கொண்டுவர:-

முன்புபோல வீடியோ அட்வான்ஸ் திறந்தகொள்ளுங்கள்.
அதில் உள்ள Anaglyph 3D என்பதன் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு செய்திடவும. பின்னர் விண்டோவின் முடிவிட்டு வீடியொவினை ப்ளே செய்யவும். இப்போது உங்களுக்கான வீடியோவானது முப்படிமாண வீடியோவாக தெரியவரும்.

18-Mirror Effect கொண்டுவர:-
இதையேபோல் Mirror என்பதன் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்திடவும. வீடியோவினை ப்ளே செய்யவும்.;வீடியோவானது ஒன்றுடன் ஓன்று ஒட்டிஉள்ளதுபோல வீடியோ கிடைக்கும்.

19-Waves Effect கொண்டுவர:-
இதைப்போல Waves என்பதன் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக்செய்திடுங்கள். இப்போது வீடியோவினை ப்ளே செய்யுங்கள். உங்கள் வீடியோவானது அலைகள் போல வலைந்து வலைந்து தெரியஆரம்பிக்கும்.

20-Water Effect கொண்டுவர:-
இதைப்போல Water Effect என்பதன் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்து இப்போது வீடியோவினை ப்ளே செய்யுங்கள். உங்கள் வீடியோவின் கீழ்புறம் அலைகள் எ.பெக்ட் கிடைக்கும். 

21-Motion Detect கொண்டுவர:-
இதைப்போல Motion Detect என்பதன் எதிரில் உள்ள ரேடியோபட்டனை கிளிக் செய்து இப்:போது வீடியோவினை ப்ளே செய்யவும். உங்கள் வீடியொவில் மோஷன் எபெக்ட் கிடைக்கும்.

22. பலவீடியோ பைல்களை ஓரே வீடியோ பைலாக மாற்ற:-

நம்மிடம் உள்ள சின்ன சின்ன வீடியோ பைல்களை ஒரே வீடியோ பைலாக மாற்றவும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும் இதில் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ ப்ளேயரை திறந்து அதில மீடியா என்பதனை தேர்வு செய்திடவும்.

அதில் கன்வர்ட் அன்ட சேவ் என்பதனை தேர்வு செய்திடவும். வரும் விண்டோவில் பைல் என்பதனை தேர்வு செய்து ஆட் பட்டன் கிளிக் செய்து உங்களுக்கான வீடியோக்களை தேர்வு செய்யுங்கள்.
 
இதன் கீழ்உள்ள கன்வர்ட் மற்றும் சேவ் பட்டனை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும். நீங்கள் விருமபும் பார்மெட்டினைதேர்வு செய்திடவும்.
விருமபிய இடத்தில சேமிக்கவும். பின்னர் உங்களுடைய வீடியோவானது ஒன்றாக சேர்ந்து விரும்பிய பார்மெட்டில் மாறி விடும். பின்னர் நீங்கள் சேமிக்கவிருப்பிய இடததில் சென்று வீடியொவினை பார்வையிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...