இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியில் வடிவேலு அவர்கள் வேறுஓரு உடலில் தன் உருவத்தினை பொருத்தி படம் வரைவார். அதுபோல விதவிதமான உடல்களில் நமது தலையை பொருத்தி அழகு பார்க்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 26 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திடஇங்கு கிளிக் செய்யவும.இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
வரும் விண்டோவில் நமது புகைப்படத்தினை தேர்வு செய்யவும். உங்களுடைய புகைப்படம் கீழ்கண்ட விண்டோவில ஓப்பன் ஆகும்.
அவர்கள் ஏற்கனவே வைத்துள்ள முகங்களின் டெம்ப்ளேட்டில் நமது புகைப்படத்தினையும் சேர்க்கவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இடதுபுறம் 195 டெம்ப்ளேட்டுக்கள் வைத்துள்ளார்கள். வெவ்வொறு தலைப்புகளில் புகைப்படங்கள் இருக்கும்தேவையாதை தேர்வு செய்யவும்.
விலங்குகளின் புகைப்படத்தில் புகைப்படத்தினை நான் இணைத்துள்ளேன்.
புகைப்படத்தினை வேண்டிய அளவிற்கு கொண்டுவரலாம். அதில் வேண்டிய மாற்றங்களையும் தனியே செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்ட.
விதவிதமான புகைப்படங்களின்தொகுப்புகள் கீழே
மாடலிங் செய்தபின் வந்துள்ள புகைப்படங்கள் கீழே:-
நீங்களும்உங்கள் குழந்தைகளின் புகைப்படததினை வைத்து விதவிதமாக அழகு பாருங்கள். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.