வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.

நமதுசெல்பேசியில்உள்ளடாக்குமெண்டுக்கள்.வீடியோக்கள்.புகைப்படங்களை நாம் கணினிக்கு மாற்ற பெரும்பாலும் கேபில் இணைப்பினை பயன்படுத்துவோம். ஆனால் இந்த மென்பொருளில் எந்த கேபிலும் இல்லாமல் செல்பேசி தகவல்களை நாம் கணினிக்கு சுலபமாக மாற்றிவிடலாம்.இந்த மென்பொருளை நாம் பதிவிறக்கம் செய்திட இங்குகிளிக் https://scantransfer.net/ செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 இதில் கியூ ஆர் கோடிங்கிடைக்கும். இப்போது உங்கள் செல்பேசியில் கியூஆர் ஸ்கேனரை  தேர்வு செய்திடவும். 

உங்கள் செல்பேசியில கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வரும் விண்டோவில் ஓப்பன் ப்ரவுசர் கிளிக் செய்திடவும். 
 வரும் விண்டோவில் செலக்ட் பைல்கள் என தேர்வு செய்திடவும்.
 இதில ;டாக்குமெண்ட் என கிளிக் செய்திடவும்.
 உங்கள் கணினிக்கு நீங்கள் எதனை மாற்றிட விரும்புகின்றீர்களோ அந்த பைலினை தேர்வு செய்திடவும்.
 தேவைப்படும் புகைப்படத்தினை -வீடியோவினை -டாக்குமெண்ட்டினை நீங்கள் கிளிக் செய்தால் போதுமானது.
அடுத்த வினாடி உங்களுடைய பைலானது உங்கள் கணினியில் நீங்கள் சேமித்த இடத்தினில் வந்து அமர்ந்தவிடும். இதன் மூலம் நீங்கள் சுலபமான செல்பேசி தகவல்கள். புகைப்படங்கள். வீடியோக்கபள்.டாக்குமெண்ட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-டாக்மெண்ட மற்றும் டெக்ஸ்ட் பைல்களை படிக்க -test to speech.

நாம் தட்டச்சு செய்யம் டாக்குமெண்ட்களை படித்து காண்பிக்க இந்த  மென்பொருள் பயன்படுகின்றது. இதில் பயன்படுத்தப்படும் டாக்குமெணட்களை நாம் ஆடியோ பைல்களாகவும் மாற்றிக்கொள்ளமுடியும். இதன் இணையதளம் செல்ல இங்குகிளிக்http://www.oksoft.pro/en/prog_another_speech
செய்யவும் இங்கு சென்று;இதனை பதிவறக்கம் செய்;தது இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவையான டாக்குமெண்ட் டெக்ஸ்ட்டை தட்டசசு செய்தோ இம்போர்ட் செய்தோ இதில் கொண்டுவரலாம். பின்னர் இதில் உள்ள ஸ்பீச் பட்டனை கிளிக் செய்திடவும்.
இதன் வலது பக்கத்தில் வால்:யூம் கன்ட்ரோல் ப்ட்டன் கொடுத்துள்ளார்கள். ஒலி அளவினை கூட்டியோ குறைத்தோ வைத்துக்கொள்ளலாம். மேலும் படிக்கும் வேகத்தினை அதிகமாகவோ குறைவாக அமைத்துக்கொள்ள இதில் ஸ்லைடர் கொடுத்துள்ளார்கள்.அதுபொல பிட்ச் அளவினை கூட்டவோ குறைக்கவோ செய்திடலாம்.
வார்த்தைகளை படிக்கும் வேகத்தினை நிறுத்தவோ அடுத்த வரிக்கு செலலவோ முந்தைய வார்த்தைக்கு செல்லவோ இதில் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் இருந்து டெக்ஸ்ட் பைலினை வேவ் வைலாக மாற்றி கணினியில் நாம் விரும்பும் இடததில் சேமிக்கலாம்.
படிக்கும் மாணவர்கள் கல்வியாளர்கள் டாக்குமெண்டடினை ஆடியோ பைலாக மாற்றி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்;;மற்றவர்களுக்கும் கொடுக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இணைய வேகம் அறிந்துகொள்ள -Fast internet speed test.

இணையம் நாம் பயன்படுத்திவருகின்றோம். சமயத்தில் இணையம் மெதுவாக செயல்படும். இணைப்பில் கோளாறா - அல்லது இணையவேகம் குறைவா என குழப்பம் ஏற்படும். இந்த இணையதளம் உங்கள் இணையதளதிலிருந்து உங்கள் கணினிக்கு எவ்வளவு வேகத்தில் இணைப்பு வருகின்றது என அறிந்துகொள்ளலாம்.இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் https://fast.com/செய்யவும். இந்த இணையதளம் ஒப்பன் ;செய்ததும் உங்களுக்கு சிலநிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள இணையவேகம் எவ்வளவு உள்ளது என தெரியவரும்.
இதன் மூலம் நமது இணைய இணைப்பின் வேகம் அறிந்துகொள்ளலாம். இதன்பிறகும் உங்கள் கணினி வேகம் குறைவாக இருந்தால் கணினியில் வேகம் குறைவதற்கான காரணத்தை  சரிபார்க்கவும். 
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பிடிஎப் பைல்களை உருவாக்க.திருத்தம் செய்ய மற்றும் ஒப்பீடு செய்ய -Apower PDF

பிடிஎப் பைல்களை உருவாக்க.எடிட் செய்திட.ஒப்பிட்டு பார்க்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
பிடிஎப் பைலினை திருத்தம் செய்ய.உருவாக்க.ஒப்பீடு செய்ய என மூன்று ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். தேவையானதை தேர்வு செய்யுங்கள்.எடிட் என்பதில் நீங்கள் பிடிஎப் பைலினுள் வார்த்தைகளை சேர்க்க,இமேஜ்களை சேர்க்க.எழுத்துருக்கள் ;நிறம் மாற்ற என எதுவேண்டுமானாலும் செய்திடலாம்.
இதன் மேல்புறத்தில் Create.Convewrt.Edit.Pages.Productions.Sign.Comment என ஆறுவிதமான டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.
கன்வர்ட் என்பதனை கிளிக் செய்து பிடிஎப்பைலானது உங்களுக்கு எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்து மாற்றிக்கொள்ளலாம்.இதில் உள்ள பேஜஸ் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் பைலினை  சேர்க்க.டெலிட் செய்திட எடிட் செய்திட கிராப் செய்திட என நிறைய வசதிகள்கொடுத்துள்ளார்கள். தேவையானதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதுபோல நீங்கள் பிடிஎப்பைலினை பாஸ்வேர்ட் கொடுதது பாதுகாக்கலாம்.இதனை பயன்படுத்துவதால் மற்றவ்ர்கள் உங்கள் பிடிஎப் பைலினை பார்க்க முடியாது. அதுபோல பிடிஎப் பைலினுள் நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட். அல்லது இமெஜினை வாட்டர் மார்க்காக கொண்டவரலாம். 
நீங்கள் கொண்டுவரும் வாட்டர்மார்க்கினை பைலின் எந்த இடத்தில் வேண்டுமோ அந்த இடத்தில் வைக்கலாம்வாட்டர்மார்க்கினை நாம் சுலபமாக நீக்கிவிடலாம். அதுபோல் எந்த எழுத்துரு .வேண்டிய அளவு,வேண்டிய நிறம் என கொண்டுவரலாம். மேலும் நீங்கள் கொடுக்கும் வார்ட்டர் மார்க்கினை பார்வைக்கு மட்டும் .பிரண்ட் செய்கையில் மட்டும் என கொண்டுவர இதில் வசதி செய்யப்பட்டுள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...