வீடியோ மற்றும் புகைப்படங்களில் வேண்டிய அளவிற்கு சுருக்கவும்.தேவையான பகுதிகளை வெட்டி எடுக்கவும்.சிறப்பு எபெக்ட்கள் கொண்டுவரவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 18 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add Fils கிளிக் செய்து உங்களுக்கான வீடியோ மற்றும் புகைப்படத்தினை தேர்வு செய்யவும். பின்னர் உங்களுக்கான வீடியொ எந்த பார்மெட்டுக்கு வேண்டுமோ அதற்கான பார்மெட்டினை தேர்வு செய்யவும். இங்கு இவர்கள் என்னற்ற டிவைஸ்களுக்கான விதவிதமான பார்மெட்டுக்கள் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.உங்களுக்கான வீடியோவில் ஸ்னாப்ஷாட் எடுக்கவிரும்பினாலும் வீடியோவினை ஒடவிட்டு தேவையான காட்சியினை புகைப்படமாக எடுத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அதுபோல வீடியோக்களில் குறிப்பட்ட பகுதியை மட்டும் தேர்வு செய்து அதனை மட்டும் பயன்படுத்த இதில் கிராப் ஆப்ஷன் கொடுத்துள்ளார்கள்.இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையானதை பெற்றுக்கொள்ளலாம்.
அதுபோல வீடியோவில் குறிப்பிட்ட பகுதியோ அல்லது மொத்தமாகவோ ஸ்வேஷல் எபெக்ட் மூலம் கொண்டுவரலாம். Black; and White.Oil Painting.Line Drawing.Woodcarving.Negatve.Embossment.Carving.Old Film.Hase.Shadow.Fox.Mosice.Vertical Blind.Horzontal Blind.Soft.Sand என விதவிதமான எபெக்ட்டுகள்கொடுத்துள்ளார்கள். தேவையானதை கிளிக்செய்வதன் மூலம் நாம்பெற்றுக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அதுபோல ஒன்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை ஒன்றாக சேர்க்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. தேவையான வீடியோக்களை தேர்வு செய்து இதில் உள்ள Merge கிளிக் செய்து சேமிக்க விரும்பும்இடத்தினையும் தேர்வு செய்துவிட்டால் குறிப்பிட்டநேரத்தில் நமக்கான வீடியோக்கள் ஒன்றாக சேர்ந்துவிடும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நாம் கேமராவில் எடுத்த வீடியோக்களை இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி விதவிதமான எபெக்ட்டுக்கள்கொண்டுவருவதுடன் அழகான முழு நீள வீடியோ படமாக மாற்றலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.