மொழித் தொல்லியல் (Linguistic Archeology) என்ற புதிய மொழியியல் துறையின்ஆய்வுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, உலகில் மொழி தோன்றியகாலத்திலேயே தோன்றிய மொழி தமிழ்மொழி என்பது இன்னும் தெளிவாகிறது. மொழிப் பதிவுகளில் முற்பட்டதாகக் கூறப்படும் பாறை ஓவியஎழுத்துகள், மட்பாண்டக் கிறுக்கல் எழுத்துகள் தமிழ்மொழி எழுத்துகளாகஅடையாளம் கண்டறியப்படுகின்றன. அவற்றிற்கு ஒலிப் பொருத்தம்(PhotonicValue) கொடுத்து மொழிப் பனுவலாக்கம் (Decipherment) செய்யப்படுகின்றன. சிந்துவெளி போன்ற புதையுண்ட நாகரிகங்களில் கிடைக்கும் மொழிசார் தொல்பொருள்களிலிருந்து மீட்டெடுக்கப்படும் சொற்களும்,தொடர்களும் தமிழ்மொழியில் ஒப்பீடு செய்து தமிழாகப் படிக்கப் பெறுகின்றன; அவை தமிழ்மொழிதான் என நிறுவப்படுகின்றன.
அதேநேரத்தில், உலக வரலாற்றில் புகழ்பெற்ற பல பேரரசுகளோடு பரவலாக ஆட்சி செய்த பழம்பெரும் மொழிகள் பல, இன்றைக்கு மக்கள்வழக்கிழந்து இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. ஆனால், தமிழ்மொழி இன்றும் மக்கள் வழக்கிலும் பயன்பாட்டிலும் வளமாக வாழ்ந்துகொண்டுள்ளது. அதற்குக் காரணம் தமிழ்நாட்டை ஆண்ட அன்றைய தமிழ்ப் பேரரசுகள் கழகம் வைத்து இலக்கியங்களை உருவாக்கியும் தொகுத்தும் தமிழ் வளர்த்துள்ளனர். தொடக்க காலத்தில் கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகளில் வாழ்ந்துவந்த தமிழ்,இன்றைய அறிவியல் உலகத்தில் நூல் வடிவிலும், கணிப்பொறியிலும் தன்னைத் தக்கவைத்துள்ளது. ஒருங்குகுறி வழக்குக்கு வந்ததன் விளைவாகத் தொடர்ந்து பதிவுகோல்(Pen drive),இணையம், முகநூல், கீச்சகம்(Twitter),புலனம் (Whatsapp) எனப் பலவற்றின் பயன்பாடுகளிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டு உலா வருகிறது.மக்களின் வழக்கிலும் கருத்திலும் பதிவிலும் இடம்பெற்று, இத்தொழில்நுட்பக் காலத்துக்கேற்ற ஏராளமான கலைச்சொற்களின் உருவாக்கத்திற்குத்தகச் சொல்வளத்தைப் பெருக்கிக் கொண்டுள்ள மொழி தமிழ்மொழி.இவ்வாறான தொடர் பயன்பாட்டுடன் உலக மொழிகளிலேயே நீண்ட நிலைத்த வாழ்நாளைப் பெற்றதோர் அரிய மொழியாகத் தமிழ் விளங்குகிறது.
அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியை மேலும் வளர்க்க தமிழக அரசு முன்வந்துள்ளது. அதன்தொடர்ச்சியாக தமிழ்மொழியில் உள்ள தமிழ்ச்சொற்களுக்கு ஏற்ப அகராதியை வெளியிட்டுள்ளது.இதில் சுமார் 3,45,000 சொற்கள் இணைக்கப்பட்டுள்ளஎ.தமிழ்மொழியைதவிர வேறு எந்த மொழியிலும் இவ்வளவு சொற்கள் இல்லை என்பது விஷேஷமாகும்.இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். நீங்கள் கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள தேடுபொறியில நீங்கள் விரும்பும் சொற்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில சொற்களை தேட தட்டச்சு செய்யவும். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில சொற்கள் கிடைக்கும்.
நீங்கள் :தேடிய சொற்களுக்கு ஏற்ப பொருள்தரும் பிற சொற்களையும்,அது இடம்பெற்ற பாடல்வரிகளையும் இதில் இணைத்துள்ளார்கள். சொற்களுக்கான ஆங்கில சொற்களும் இதில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இவர்கள் தமிழ்மொழியில் 35 நூல்களை வெளியிட்டுள்ளார்கள். நூல்களை வாங்கும் முறையையும் விவரித்துள்ளார்கள். இவர்கள் இணையதளம் மூலம் தெரிந்துகொள்ள வசதிஏற்படுத்திஉள்ளார்கள். இவர்களை தொடர்பு கொள்ள தொடர்பு முகவரியையும் வெளியிட்டுள்ளார்கள். 05.07.2019 அன்று முதன்முதலாக தமிழுக்கு என்று இந்த இணையதளத்தினை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. நாமும் இதனை பயன்படுத்தி தமிழ்மொழியை அறிந்துகொள்வோம்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்