கணிணியில் இலவச டைரி
நாம் கணிணியில் புக்மார்க் குறித்து வைப்போம்.
சில நாள் கழித்து அது எதனுடைய புக்மார்க்-
அதனால் என்ன பயன் என மீண்டும் அந்த
புக்மார்க்கை நீங்கள் இணையத்தில் சென்றே
அறிந்து கொள்ள முடியும். உங்கள் நண்பர்
நீங்கள் குறித்துவைத்துள்ள புக்மார்க்கின்
இணைய முகவரி(URL) கேட்கின்றார். அந்த
சமயம் உங்கள் கணிணியில் இணைய இணைப்பு
துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பாது என்ன
செய்வீர்கள். அந்த மாதிரியான சமயங்களில்
இந்த கணிணி டைரி நமக்கு உதவுகின்றது.
நாம் நமது கணிணியிலேயே குறிப்புகளை
-இணைய முகவரிகளை –நமது விருப்பமான
புக் மார்க்குகளை -சாப்ட்வேர் களின்
சீரியல் எண்களை எழுதிவைக்க இந்த டைரியை
பயன்படுத்தலாம். இணைய இணைப்பு
இல்லாத சமயங்களிலும் நாம் இந்த புக் மார்க்கை
பயன் படுத்தலாம்.முதலில் நமது கணிணியில்
இந்த டைரியை எப்படி வெளியே எடுத்துவரலாம்
என பார்க்கலாம்.முதலில் நீங்கள் டெக்ஸ்டாப்பின்
வெற்றிடத்தில் மவுஸால் கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு இந்தமாதிரி ஒப்பன் ஆகும்.
அதில் உள்ள Text Document –ஐ
மவுஸால் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கான
Text Document ஆனது ஓப்பன் ஆகி
டெக்ஸ்டாப்பில் அமர்ந்துவிடும். பின் அதை
ரைட் கிளிக் செய்து Rename-ல்
உங்கள் விருப்பமான பெயரை தட்டச்சு
செய்யுங்கள்.நீங்கள் சூட்டிய பெயருடன்
Text Document காட்சியளிக்கும். இதை
ஓப்பன்செய்யுங்கள். உங்களுக்கு இந்த
சாரளம் ஓப்பன் ஆகும்.
சரி அதில் அன்றைய
தேதியை எப்படி எடுத்து வருவது. நீங்கள்
உங்கள் Key-Board –ல் F5 அழுத்துங்கள்.
உங்கள் Text Document –ல் அன்றைய தேதி
வந்துவிடும். நீங்கள் உங்கள் புக் மார்க்
இணைய முகவரியை அதில் பேஸ்ட்
செய்யுங்கள்.அத்துடன் அந்த இணையத்தை
பற்றியும் குறிப்புகளை யும் ஆங்கிலத்தில்
அல்லது தமிழில் தட்டச்சு செய்துவிடுங்கள்.
உங்கள் இணைய இணைப்பு இல்லாத
சமயங்களிலும் நீங்கள் சுலபமாக உங்கள்
புக்மார்க்கை யும் –குறிப்புகளையும்
பார்க்கலாம். ஒருமுறை பயன்படுத்திப்
பாருங்கள். மறக்காமல் வாக்களியுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
இலவச டைரியை இதுவரையில் புரட்டியவர்கள்
வலைப் பூவில் உதிரிப் பூக்கள்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
எந்த மாதிரியான சந்தர்பங்களில் நாம் நமது
கம் யூட்டரை Format செய்யவேண்டும்?
1.விண் டாஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில்
பைல்கள் கரப்ட்(Corrupt) ஆகும் சமயம்.
2.தவறுதலாக விண்டா பைல்களை நாம்
அழிந்து விடும் சமயம்.
3.சாப்ட்வேர்களை முறையாக Uninstall
செய்யாமல் அதனால் பிழை ஏற்பட்டிருந்தால்.
4.சிஸ்டம் ரீ-ஸ்டார் செய்தும் கணிணி செயல்
படாத சமயம்.
5. வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டு எந்த விதமான
ஆன்டிவைரஸாலும் அதை நீக்க முடியாத சமயம்.
6.நமது கணிணியில் ஸ்பைவேர் தாக்கிய சமயம்.
7.Registry-ல் பிழை ஏற்பட்டு இருக்கும் சமயம்.
8. வழக்கத்திற்கு மாறாக கணிணி மிகவும்
மெதுவாக செயல்படும் சமயம்.
மேற்கண்ட 8 பிழைகள் உங்கள் கணிணியில்
ஏற்பட்டால் நீங்கள் தயங்காமல் கணிணியை
Format செய்யலாம்.
(பின்குறிப்பு:- இணைய இணைப்பில் ஏற்பட்ட
பழுது காரணமாகவும்-எனது சகோதரியின்
துணைவர் அகால மரணம் காரணமாகவும்
இடையில் என்னால் பதிவிட முடியவில்லை.
தவிர ஆங்கில பாடம் தொடர்ந்து ஞாயிற்றுக்
கிழமைகளில் வெளியிட வேண்டும் என்ற
காரணத்தால் இணைய இணைப்பு இல்லாத
போதும் தன்னுடைய இணைய இணைப்பு மூலம்
ஆங்கில் பாடத்தின் பதிவுகளை பதிவிட
உதவி செய்த நண்பர்
ஆனந்த்துக்கு இந்த பதிவின் மூலம்
நன்றியை தெரிவித்துக்
கொள்கின்றேன்.
நன்றி....)