முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் கணிதத்திலே தனி திறமை வளர்த்துக்கொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில உள்ள Task கிளிக் செய்திட வரும் விண்டோவில் Whole Number.Decimals.Tables.Money.Percentage.Fractions என ஆறுவிதமான கணித கணக்குகள் வரும். நமக்கு தேவையானதை தேர்வு செய்யவும்.
அடுத்து கணக்கு வகையினையும் எத்தனை நபர்கள் விளையாட போகின்றார்கள் என்பதையும் தேர்வு செய்யவும்.ஒவ்வொரு கண்க்கும் 20 முதல் 150 வரையிலும் கணக்கற்ற வகையிலும் எது தேவையோ அதனை தேர்வு செய்யவும். கீழே உள்ள விணடோவில் பாருங்கள்.
விளையாட போகின்றவர்களின் பெயரை தட்டச்சு செய்யவும். கீழே உள் ளரெடி கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டீடா ஓப்பன் ஆகும்.
உங்கள் பெயருடன் விண்டோ உங்களுக்கு கிடைக்கும்.
உங்களுக்கான கணக்கு ஸ்கிரீனில் வரும் அதற்கான விடையை அதற்குண்டான கட்டத்தில் தட்டச்சு செய்யவும்.
இறுதியாக End கிளிக் செய்யவும்.
நீங்கள் செய்த கண்ககிற்கான சரியான விடையும் எத்தனை தவறுகள் செய்தீர்கள் என்கின்ற விவரமும் எவ்வளவு நேரத்தில் செய்தீர்கள் என்கின்ற விடையும் உங்களுக்கு கிடைக்கும். தேவைப்பட்டால் அதனை நீங்கள் பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம்;.
மாணவர்கள்.ஆசிரியர்கள்.பெற்றோர்கள் என அனைவரும் கணிதத்தில்தனிபுலமை பெற்றிட இந்த சாப்ட்வேர் பய்ன்படுகின்றது:. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.