வேலன்:-5 கே வீடியோ பிளேயர்-5K Player


வீடியோ.டிவிடி.இசை,ரேடியோ.யுடியுப் மற்றும் மொபைல் பிளே என ஆறுக்கும் மேற்பட்ட பிளேயர்களை இந்த பிளேயர் ஆதரிக்கின்றது. 35 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில்  முதலில் உள்ள  வீடியோ கிளிக் செய்து நமது கணிணியில் உள்ள வீடியோக்களை பார்வையிடலாம்.
சிடி  டிரைவில் உள்ள வீடியோ மற்றும் ஆடியோவினை கேட்டு மகிழலாம். 
இதில் உள்ள மியூசிக் கிளிக் செய்து நம்மிடம் உள்ள ஆடியோ பைல்களை கேட்டு மகிழலாம். மேலும் இதில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
இதில் இணைய இணைப்பிலுள்ள  ரேடியோ நிகழ்சிகளை கேட்டு மகிழலாம். இணைய வானோலி முகவரி தெரிந்தாலும் இதில் தட்டச்சு செய்து கேட்டு மகிழலாம். 
இதில் உள்ள யூடியூப் கிளிக் செய்து இணைய வீடியோக்களை கேட்கலாம். மேலும் இதில் உள்ள டேபில் இணைய தள யூடியூப் முகவரிக்கான இணையதள முகவரியை தட்டச்சு செய்து வீடியோக்களை பார்க்கலாம். பதிவிறக்கம் செய்யலாம். கீழே உள்ள விண:டோவில் பாருங்கள்.
இதில் உள்ள ஏர்பிளே கிளிக் செய்து நமது ஆன்ராயிட் மொபைலுக்கும் நமது கணிணிக்கும் வைபை மூலம் இணைப்பு கொடுக்கலாம். 
இதனால் நமது  மொபைலில் உள்ள வீடியோக்கள்.வாட்ச்அப் செய்திகள்.புகைப்படங்கள் ஆகியவற்றை கணிணியில் கண்டுகளிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...