வேலன்-மழலைகளை திறமைசாலிகளாக்க

1 வயது மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு பொருட்கள்.உணவுகள்.வாகனங்கள்.விலங்குகள்.பறவைகள் என படத்துடன் விளக்கி அது எழுப்பும் சத்தத்தையும் எளிதில் புரியும் வண்ணம் சொல்லித்தந்தால் எளிதில் அவர்கள் அதைப்பற்றி அறிந்துகொள்ளுவார்கள். அவர்களின் அறிவு மேம்படும்.4 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.பதிவிறக்கம் செய்து ்இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் விதவிதமான படங்கள் உள்ளது.ஒலி எழுப்பக்கூடிய பொருட்களின் ஒலிகளும்இதில் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒவ்வாரு பொருளாக கிளிக் செய்ய உங்களுக்கு அதன் ஒலி கேட்கும்.ஆடு கத்துவது.கார் ஒடுவது.பறவைகள் ஒலி.சிங்கம் கர்ஜனை என விதவிதமாக உள்ளது. இதில் உள்ள வற்றை தவிர நாமே சொந்தமாக படங்களையும் ஒலிகளையும் சேர்க்கலாம். அதற்கு நீங்கள் இந்த சாப்ட்வேரை எஙகு இன்ஸ்டால் செய்துள்ளீர்களோ அந்த டிரைவில் உள்ள Programme File -ஐ ஓப்பன்செய்துகொள்ளுங்கள். அதில்உள்ள 100 dof_toddler slides - data sets -sample images and sounds - wpelipart என முறையே திறந்துகொள்ளுங்கள்.
உங்களுக்க கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் .PNG பைலாகஉங்கள் குழந்தையின் படத்தை பெயர்கொடுத்து  சேமித்துக்கொள்ளுங்கள்.அதைப்போலவே இதில் உள்ள Partnersinrhyme என்பதில் குழந்தையின் சிரிப்பு ஒலி , அழுகை ஒலி, பேசும் மழலை மொழி என்பதை .wav பைலாக சேமித்துக்கொள்ளுங்கள்.
இப்பொது மெயின் விண்டோவினை திறந்து கொள்ளுங்கள். அதில் உங்கள் குழந்தையின் பெயரை கிளிக் செய்ய உங்களுக்கு குழந்தையின் படம் ஓப்பன் ஆகும். கூடவே குழந்தையின் மழலை மொழியையும் கேட்கலாம்.படத்தில் குழந்தை `ஹாஜர்......
படத்தை .PNG  ஆக மாற்ற போட்டோஷாப்பில் படத்தை திறந்து கொண்டு அதை சேவ்அஸ் save as கொடுத்து வரு்ம் விண்டோவில் .PNG பைலாக சேமிக்கவும். அதைப்போல குழந்தையின் மழலை மொழியை .wav பைலாக மாற்றிக்கொள்ளுங்கள்.குழந்தையின் அழுகை.சிரிப்பு, பேசுவது என ஒவ்வொன்றையும் தனிதனி படங்களில் சேமிதது அவர்களை கேட்க சொல்லி நாமும் மகிழலாம்.
பயன்படுத்திப்பாரு்ங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-மை டாக்குமெண்டை வேண்டிய டிரைவில் மாற்றிட

மை டாக்குமெண்டில் இடம் பெறும் மை பிக்ஸர். மை ஸ்கேன்.மை மியுசிக்.டவுண்லோடு என அனைத்து பைல்களும் டிரைவ் சியிலேயே அமர்ந்திருக்கும். ஏதாவது ஒரு காரணத்தினால் நாம் சி -டிரைவை பார்மெட் செய்யும் சமயம் அனைத்து தகவல்களும் அழிந்து போகும். பார்மெட் பண்ணும் முன் அதனை கவனமாக வேறு டிரைவில் காப்பி செய்து வைக்க வேண்டும். ஆனால் மை டாக்குமெண்டை நிரந்தரமாக நாம் விரும்பும் டிரைவில் சேமித்து வைத்துவிட்டால் சி- டிரைவ் பார்மெட் செய்தாலும் நமக்கு கவலையில்லை.
அதை எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.முதலில் மை டாக்குமெண்டில் ரைட் கிளிக் செய்து பிராபர்டீஸ் கிளிக் செய்யுங்கள் .உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 அதில் உள்ள டார்கெட் டேபை கிளிக் செய்து அதில் உள்ள ஃபைன்ட் டார்கெட் தேர்வு செய்யவும். உங்களுக்கு ஓப்பன ஆகும் விண்டோவில் நீங்கள் சேமிக்க விரும்பும் நீங்கள் விரும்பும் டிரைவினை தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவினில பாருங்கள்.
வழக்கப்படி மூவ் - அப்ளை - ஓ.கே. கொடுத்துவிடுங்கள். அவ்வளவுதாங்க. உங்கள் மை டாக்குமெண்டானது பத்திரமாக நீங்கள் சேமித்து வைத்துள்ள டிரைவில் அமரந்துகொள்ளும். நீங்கள் சேமிக்கும் பிற பைல்களும் அதில் சென்று சேமிப்பாகும்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.


நன்றி - நட்புடன் ஜமால். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-போட்டோஷாப் -ஆல்பத்திற்கு பயன்படும் திருமண டிசைன்கள்.


இருமனம் இணைவது திருமணம். அந்த திருமணத்தின் பசுமை நினைவுகளை மீண்டும் கொண்டுவருவது புகைப்படங்கள். அந்த புகைப்படங்களின் அழகை மேலும் அழகாக்குவது டிசைன்கள். இன்று அந்த திருமண டிசைன்களின் தொகுப்பை காணலாம்.10 வகை டிசைன்கள் 20 எம்.பி. கொள்ளளவில் உள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்..படங்களை பதிவேற்ற வசதியாகவும். நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வசதிக்காகவும் படங்களின் ரெசுலேஷனை 300 லிருந்து 100 ஆக குறைத்துள்ளேன். நீங்கள் படங்களை பதிவிறக்கம் செய்து மீண்டும் அதை போட்டோஷாப்பினில் திறந்து அதன் ரெசுலேஷனை மீண்டும் 300 ஆக மாற்றிக்கொள்ளுங்கள்.டிசைன்களின தொகுப்பு கீழே-   









நண்பர் ஒருவர் நீங்கள் போ்ட்டோஷாபில் இந்த டிசைன்களை போடுவதே இல்லை என்று வருத்தப்பட்டார்.அவருக்காக இந்த டிசைன்களை இன்று பதிவிட்டுள்ளேன்.மேலும் நண்பர் காங்கேயம் நந்தகுமார் அவருக்கு தெரிந்த போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ள நண்பருக்கு எனது தளத்தை அறிமுகம் செய்துள்ளார்.அவரும் தளத்தை பார்த்து பயன்அடைந்ததாக கருத்தினை போட்டுள்ளார்.எனவே நீங்களும் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்தால் அவர்களுக்கு இந்த டிசைன்களை கொடுத்து உதவுங்கள்.அவர்களும் பயன்பெறட்டும்.புதியவர்கள் இந்த டிசைன்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்துபார்க்கவும்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-ஆங்கில டிக்ஷனரியும் - அறிவு விருத்தியும்.

தமிழ்க்கு கோனார் உரை - மேப்பிற்கு அட்லாஸ் - வரிசையில் ஆங்கில டிக்ஷ்னரி என்றாலே ஆக்ஸ்போர்ட் தான். இன்று ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியை பார்கக்லாம். 7 எம.பி. கொள்ளளவு கொண்ட டிக்ஷனரியின் உடன் அறிவு வளர்ச்சிக்கென ஆங்கில வார்த்தை அறிந்துகொள்ளும் விளையாட்டும்இதில் உள்ளது இதன் விஷேஷம். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். 
இதில் உள்ள சர்ச் காலத்தில் தேவையான வார்த்தையை கொடுத்தால் அதற்கான விளக்கம் கிடைக்கும். சாதாரண டிக்ஷரிதானே இது என நீங்கள் கேட்பது புரிகின்றது. இதிலேயே அறிவு வளர்ச்சிக்கான விளையாட்டும் இணைந்துள்ளது.இதில் மேல்புறம் உள்ள கேம் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.அதில் உள்ள ஆக்டிவிட்டி கிளிக் செய்ய 4 விதமாக நமக்கு கிடைக்கும்.
Baffle என்பதில் 16 எழுத்துக்களுடன் கட்டம் கிடைக்கும். அதில் தேவையான வார்த்தையை நாம் தேர்வு செய்யவேண்டும்.எவ்வளவு வார்த்தைகளை எவ்வளவு நேரத்திற்குள் தேர்வு செய்கின்றமோ அதற்கு ஏற்ப நமக்கு ஸ்கோர் கிடைக்கும்.
இதைப்போலவே Scramble.வரும் எழுத்துக்களுக்கு ஏற்ப வார்த்தையை தேர்வு செய்யவேண்டும்.
கீழே உள்ள விண்டோவில் உங்களுக்கு எளிதில் புரியும் என நினைக்கின்றேன்.
இதைப்போலவே Conundrum என்பதிலும் தேவையான வார்த்தையை தேர்வு செய்யவேண்டும்.
கொஞ்சம் அதிக அளவு ஆங்கில அறிவு தேவைப்படுவதால் நம்மைவிட நமது குழந்தைகள் எளிதில் இதற்கு விடைகண்டு விளையாடுவார்கள்.நீங்களும் விளையாடுங்கள். புதுபுது வார்த்தைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
பதிவுகளை பாருங்கள். கரு்த்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-75 வகையான 2 in 1 ஸ்கிரின் சேவர் மற்றும் வால்பேப்பர்கள்.

2 in 1 பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் வால்பேப்பராகவும் அதே படம் ஸ்கிரீன் சேவராகவும் இருப்பதை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா.. சிறுவர்கள் விரும்பும் ரயில் வண்டி ஸ்கிரீன் சேவரை கீழே உள்ள விண்டோவினில் பாருங்கள்.
ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 75 ஸ்கிரின் சேவர்கள் இந்த தளத்தில உள்ளது. அந்த தளம் காண இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
பெரும்பாலான படங்கள் வால்பேப்பராகவும் அதே படம் ஸ்கிரீன் சேவராகவும் உள்ளது. கண்ணை கவரும் படங்களோ மிக அருமை. 5 எம்.பி.யிலிருந்து 40 எம்.பி வரை ஒவ்வொரு படமும் வித்தியாசமான அளவினில் உள்ளது். உங்களுக்கு எது விருப்பமோ அதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.எனக்கு பிடித்தது உங்களுக்கு பிடிக்காமல் போகலாம் அல்லவா? அதனால் தான் மொத்த படங்களின் லிங்க் கொடுத்துவிட்டேன்.தேவையானதை தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
மாடலுக்கு சில படங்கள் கீழே-
அருவி நீர்விழ்ச்சியுடன் வரு்ம் படம் கீழே-
வண்ண மீன்கள் அணிவகுப்பு-
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு- நமது பதிவிலேயே முழு கவனம் செலுத்தியதால் திருக்கழுக்குன்றம் பதிவில்கவனம் செலுத்த முடியவில்லை.
நேற்று இரவு (25-10-2010 )கடும் மழை - பயங்கர மின்னல் - 
அதிரவைக்கும் இடி சத்தம். இந்திரனின் இடி பூஜை  இனிதே முடிந்தது.அதே சமயம் பளிச்சின்னு எனது மனதினில் ஒரு மின்னல்.என்ன ஆச்சுன்னு தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-அதிக பாஸ்வேர்ட்களை சுலபமாக கையாள

வெவ்வெறு இ-மெயில் முகவரிகள் - சில தளங்களின் பாஸ்வேர்ட்கள்.வங்கி கணக்கு விவரங்கள் - ஏ.டி.எம.கார்டின் பாஸ்வேர்ட்கள் என அனைத்து விவரங்களையும் தனிப்பட்ட போல்டரிலோ - பென்டிரைவிலோ - பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம்.இதனை நீங்கள் பயன்படுத்தியவுடன் அனைத்து பாஸ்வேர்ட்களையும் நினைவில் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. இந்த சாப்ட்வேருக்கு நாம் தரும் மாஸ்டர் பாஸ்வேர்ட் மட்டும் நாம் ஞாபகமாக நினைவில் கொண்டால் போதும்.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதை இன்ஸ்டால் செய்தவுடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில நீங்கள் மாஸ்டர் பாஸ்வேர்ட் கொடுக்கவும. இந்த மாஸ்டர் மாஸ்வேரட் தான் அனைத்து விண்டோக்களையும் ஒப்பன் செய்யும் பாஸ்வேர்ட் உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் நம்மிடம் உள்ள அனைத்து சாவி கொத்துக்களையும் ஒரு பெட்டியில் வைத்து பூட்டி அந்த சாவியை பத்திரமாக வைத்துக்கொள்ளுவோம் அல்லவா. அதுபோல்தான் இந்த மாஸ்டர் பாஸ்வேர்ட்..எனவே இதனை கவனமாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.மறுமுறை அதையே மீண்டும் தரவும்.
பாஸ்வேர்ட தயாரானதும் உங்களுக்கு கீழ்கண்ட தகவல் வரும்.
ஒ.கே. கொடுத்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ மீண்டும் ஒப்பன் ஆகும். இதில நீ்ங்கள் முதலில் கொடுத்த மாஸ்டர் பாஸ்வேர்டினை மீண்டும் கொடுக்கவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் மெனு கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நியு டேடா பைலை ஓப்பன் செய்யவும்.
இதில் நியு என்பதனை கிளிக் செய்யவும்.
வரும் விண்டோவில் உங்கள தகவல்களை பதிவு செய்யவும்.நான் உதாரணத்திற்கு ஜி-மெயிலின் இ-மெயில் முகவரி -யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் பதிவு செய்துள்ளேன்.
கடைசியில் சேமிக்கவும். இதைப்போலவே உங்களிடம் உள்ள கணக்குகளை இதுபோல் ஒவ்வொன்றாக சேமிக்கவும்.
இப்போது நீங்கள் இந்த பேனலை திறந்து கொள்ளுங்கள். நீங்கள் திறக்க இருக்கும் தளமோ - இ-மெயில் விண்டோவினையோ திறந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும். அதில் இந்த தளத்தில் இருந்து அந்த தளத்திற்கு கர்சரால் இழுத்து விடுங்கள். 


உங்களுக்கு அந்த தளம் ஒப்பன் ஆகிவிடும்.யூசர் நேம் தட்டச்சு செய்வதோ -பாஸ்வேரட் நினைவு கொள்ளவோ தேவையில்லை.நேரம் அதிகம் நமக்கு மிச்சமாகும். உங்கள் பர்சனல் தகவல் அடங்கிய பைலை உங்கள் பென்டிரைவில் கொண்டு செல்லாம். எந்த கணிணியிலும் பென்டிரைவை இணைத்து தகவலை பெறலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-புகைப்படத்தில் படங்கள் எழுத்துக்களை வாட்டர் மார்க்காக உபயோகிக்க

வாட்டர் மார்க் சாப்ட்வேர் பற்றி நாம் ஏற்கனவே நிறைய சாப்ட்வேர்கள். பார்த்திருக்கின்றோம்.மற்றது மாதிரி இல்லாமல் இது சற்றே புதுமாதிரியாக உள்ளது.7 எம்.பி. கொள்ளளவு கொண்டஇதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஒரே ஓரு புகைப்படம் ஆக இருந்தால் அந்த புகைப்பட பைலையும் அதிக படங்கள் இருந்தால் அதனுடைய போல்டரையும் தேர்வு செய்யவும்.ஒரே ஒரு புகைப்படம் தேர்வு செய்ததும் வந்துள்ள விண்டோ கீழே-
நிறைய படங்கள் உள்ள போல்டரை தேர்வு செய்ததும் வந்துள்ள படம் கீழே-
இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்தபின்னர் உங்களுக்கு அடுத்த விண்டோ ஓப்பன் ஆகும். அதில் படத்திற்கு தேவையான எழுத்துக்களை நாம் தட்டச்சு செய்யலாம்.
இதில்உள்ள டெக்ஸ்ட் செட்டிங் கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் தேவையான எழுத்தின் அளவு -  வகை - வண்ணம் - அமைப்பு என அனைத்தையும் தேர்வு செய்யவும்.
எழுத்து தட்டச்சு செய்ததும் வந்துள்ள விண்டோவின் படம் கீழே-
ஒ.கே. கொடுத்து அடுத்து பக்கம் செல்லவும.இதில் 9 வகையான படங்களின் தொகுப்பு உள்ளது. அதில் நாம் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.
இதில் கீழே உள்ள Browse -ப்ரவுஸ் கிளிக் செய்து கம்யூட்டரில் உள்ள நமக்கு விருப்பமான படத்தை தேர்வு செய்துகொள்ளலாம்.படத்தை வேண்டிய அளவு டிரான்ஸ்பரன்ட் செய்துகொள்ளலாம். 
இதில் பார்ட்ர் அமைக்கும் வசதியும் உள்ளது. தேவையான டிசைனையும் தேவையான அளவினையும் தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
படத்திற்கு வேண்டிய பெயரினை கொடுக்கலாம். எல்லாம் செய்து முடித்ததும் இறுதியாக ரன் கொடுத்து வேண்டிய இடத்தில் சேமிக்கவும்.
இறுதியில் வந்துள்ள படம் கீழே-

பதிவு போடுபவர்கள் குறிப்பாக சமையல் குறிப்பு போடுபவர்கள் இந்த சாப்ட்வேர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...