வேலன்:-யூடியூப் வீடியோக்களை நேரடியாக பார்க்க -XeYoutube V3

யூடியூப் வீடியோக்களை பார்வையிட ஏதாவது ஒரு ப்ரவ்சர் மூலம் நாம் சென்று பார்வையிட வேண்டும். ஆனால் இந்த மென்பொருளில் நாம் யூடியூப் வீடியோக்களை நேரடியாக பார்வையிடலாம். இதன் இணையதளம் சென்று 
இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.; இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 Search for videos என்பதில் கிளிக் செய்திட நிறைய டேப்புகள் வரும். அதில் எந்த கேட்டகிரியில் உங்களுக்கு படம் தேவையோ அந்த கேட்டகிரியை கிளிக் செய்யவும்.
இப்போது அந்த கேட்டகிரியில் உள்ள அனைத்து வீடியோக்களும் உங்களுக்கு டிஸ்பிளே ஆகும். அதில் ஒன்றினை கிளிக் செய்திட உங்களுக்கு அதற்கான வீடியோ பக்கத்தில் உள் ளப்ரிவியூ விண்டோவில் ஓப்பன் ஆகி ஓட ஆரம்பிக்கும்.
இதன் மூலம் ப்ரவ்சர் ஓப்பன் செய்ய்◌ாமலே நாம ;நமக்கான வீடியோக்களை எளிதில் ப்◌ார்வையிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-யூடியூப் பைலினை பதிவிறக்கம் மட்டும் செய்திட-Xillsoft youtube HD Video Downloader

இணையத்தில் நாம் வீடியோக்களை பார்க்க நிறைய தளங்கள் இருந்தாலும் நாம் யூடியூப் வழியாகதான் பெரும்பாலும் பார்ப்போம். யூ டியூப் வீடியோக்களை பதிவிறக்கம் மட்டும்செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.30 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக:கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

இதில் யூடியூபின் சமீபத்து வீடியோக்கள் -பிரபலமான வீடியோக்கள்,அதிகம்பேர் பார்வையிட்ட வீடியொக்கள் என அதனதன் தம்ப்நெயில் வீயூக்கள் நமக்கு: தெரியவரும் தேவையான வீடியோவினை கிளிக் செய்திட அதன் யூஆர்எல் முகவரி தானே தேர்வு செய்துகொண்டு நமக்கு தேவையான வீடியொ ப்ரிவியூவுடன் பதிவிறக்கம் செய்ய ஆரம்பிக்கும்.
இதனு: மூலம் ஓன்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை நாம் சுலபமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பயனப்டுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-யூடியூப் வீடியோ மற்றும் முகநூல் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -YT1S

யூடியூப் வீடியோக்கள்.யூடியூப் வீடியோவின் ஆடியோ,யூடியூப் வீடியோவிலிருந்து எம்பி4,முகநூல் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய இந்த இணையதளம் பயன்படுகின்றது. இதன இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இதனை திறந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Youtube Downloader.Youtube to MP3.Youtube To MP4. FaceBook video Downloader பதிவிறக்கம் செய்திடலாம். நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய யூடியூப் வீடியோவினை தேர்வு செய்திடவும்.


இதில் தேவையான பார்மெட்டினை தேர்வு செய்திடவும். பின்னர் இதில் உள்ள டவுண்லோட் கிளிக் செய்யவும்.


யூடியூப் வீடியோவிலிருந்து நாம் பாடல் மட்டும் பதிவிறக்கம் செய்திட யூடியூப் டூ எம்.பி.3 கிளிக் செய்திடவும். தேவையான வீடியோவின்லிங்கினை பேஸ்ட் செய்திடவும். டவுண்லோடு என்பதனை கிளிக் செய்யவும். உங்களுக்கான வீடியோவின் பாடல் மட்டும் பதிவிறக்கம் ஆகும்.

இதனைப்போலவே  யூடியூபிலிருந்து நாம் எம்பி4 பார்மெட்டினை டவுண்லொடு செய்திடலாம்.


முகநூல் பக்கத்தீலிருந்து வீடியோவினை பதிவிறக்கம் செய்திட அதனுடைய லிங்கினை தேர்வு செய்து இதில் பேஸ்ட் செய்திடவும்.

நீங்கள் சேமிக்க விரும்பிய இடத்தில் உங்களுக்கான வீடியொவானது சேமிப்பாகி இருப்பதனை காணலாம். இந்த இணையதளம் மூலம் யூடியூப் மற்றும் முகநூல் வீடியோக்களை நாம் சுலபமாக பதிவிறக்கம் செய்திடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.

வாழ்கவளமுடன்

வேலன்.
 

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-அனைத்து வகையிலும் பயன்படும் இபுக் கன்வர்ட்டர் -Any E-Book Converter.

இபுக் வகைகளான பிடிஎப்.மோபி.இ-பப்.போன்ற பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 நீங்கள் மாற்ற விரும்பும் பைலினை தேர்வு செயதிடவும். பின்னர் கீழேஉள்ள கன்வர்ட் பட்டனை கிளிக் செய்திடவும. உங்களுக்கு கீழு;கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள்மாற்றவிரும்பிய பைலினை தேர்வு செய்திடவும்.
 இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து மாற்றப்பட்ட பைல்கள எங்கு சேமிக்கவேண்டுமோ அந்த இடத்தினை தேர்வு செய்திடவும்.
 இறுதியாக ஓ.கே.செய்து கன்வர்ட் கொடுக்கவும். உங்களுக்கு கீழ்கண்ட தகவல் கிடைக்கும்.
நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான பைலானது விரும்பிய பார்மெட்டில் மாற்றம் அடைந்து இருப்பதினை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-புக்மார்க் மூலம் அனைத்தையும்உடனடியாக பெற-Bell Bookmarks.

அடிக்கடி பயன்படுத்தும் புகைப்படங்கள்.அப்ளிகேஷன்கள்.வீடியோக்கள். இணையதள முகவரிகள் என அனைத்தையும் நாம் புக்மார்க்காக சேமித்துவைத்துக்கொள்ளளலாம். இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள Add BookMark கிளிக்செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும்.
 இதில் புக்மார்க்காக உங்கள் கணிணியின் ஹார்ட்டிஸ்க்கிலிருந்து தகவல்களை பெறபோகின்றீர்களா அல்லது இணையத்தில் உள்ள லிங்க் கிலிருந்து தகவல்களை பெறபோகின்றீர்களா என முடிவு செய்யவும்.
 தேவையான தகவல்களை பதிவு செய்தவுடன் உங்கள் புக்மார்க்கு உங்களுக்கு விருப்பமான பெயரினை கொடுக்கவும்.
உங்களுடைய புக்மார்க் பகக்ங்கள் தயார் இப்போது உங்களுக்கு எதனை திறக்க விரும்புகின்றீர்களோ அதனை தேர்வு செய்து இதில் உள்ள Run கிளிக்செய்தால் போதுமானது. இங்களுக்கான புக்மார்க் பக்கமானது உடனடியாக திறந்துகொள்ளும். ப்வ்சரில் சேமிக்கபடும் புக்மார்க்கானது உங்களுக்கு இணைய லிங்க் மட்டும்தான் கிடைக்கும். ஆனால் இதில் இணைய இணைப்புக்கான லிங்க் மட்டுமல்லாது உங்கள் ஹார்ட்டிரைவிலிருந்தும் தகவல்களை பெறலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.

நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. மேலும் வீடியோ பைல்களை டவுண்லோடு செய்திடவும்,ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்திடவும் இதனை பயன்படுத்தலாம். இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்  செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

பைல்களை தேர்வு செய்வதன் மூலமோ டிராக் அன்ட் டிராப் முறையிலோ நாம் வீடியோ பைல்களை தேர்வு செய்திடலாம்.வீடியோ பைலினை தேர்வு செய்ததும் உங்களுக்கு தேவையான பார்மெட்டினை தேர்வு செய்திடவும். இறுதியாக இதில் உள்ள கன்வர்ட் கிளிக் செய்யவும்.
கன்வர்ட் ஆகி முடிந்ததும் உங்களுக்கு சக்ஸஸ் என்கின்ற தகவல் கிடைக்கும். நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோ நீங்கள் விரும்பிய பார்மெட்டில் இருப்பதனை காணலாம்.

இதில் மேல்புறம் மூன்று டேப்புகள் கொடுத்துள்ளார்கள். வீடியோ கன்வர்ட்டர். வீடியோ டவுண்லோடர் மற்றும் ஸ்கிரீன் ரெக்கார்டர் என மூன்று டேப்புகள் இருக்கும். இதில் வீடியோ கன்வர்ட்டரை பார்த்தோம். இப்போது நடுவில் உள்ள வீடியோ டவுண்லோடரை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

யூடியூப் வீடியோ தளம் உங்களுக்கு ஓப்பன் ஆகும்.தேவையான வீடியோவினை நீங்கள் டவுண்லோடு செய்திடலாம். அதுபோல மூன்றாவதாக உள்ள ரெக்கார்டரினை கிளிக் செய்யவும்.
நீங்கள்டெக்ஸ்டாப்பில் காண்கின்ற வீடியோவினை நாம் ரெக்கார்ட் செய்திடலாம். அதுபொல இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

 இதில் கன்வர்ட்.டவுண்லோடு மற்றும் ரெக்கார்ட் என மூன்று டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இதில் உள்ள கன்வர்ட் பட்டனை கிளிக்செய்து நீங்கள் எத்தனை வீடியோக்களை ஒரே சமயத்தில் கன்வர்ட் செய்திட விரும்புகின்றீர்களோ அந்த எண்ணிக்கையை தேர்வு செய்திடலாம். அதுபொலவே டவுண்லோடு மற்றும் ரெக்கார்ட் செட்டிங்ஸ் அமைத்திடலாம்.ஒரே மென்பொருளில் மூன்றுவிதமான பயன்பாடு உங்களுக்கு பயன்படும். பயன்படுத்திப்பாருங்கள்.

வாழ்கவளமுடன்

வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போர்டபிள் பைல் மேனேஜர்-Xenon Portable File Manager

கணிணியில் பயன்படுத்தும் ஒவ்வொரு டிரைவ்களையும் அதில் பயன்படுத்தப்படும் போல்டர்களையும் ;அந்த போல்டர்களில் உள்ள பைல்களின் வகைகளையும் அறிந்து கொள்ள இந்த பைல் மேனேஜர் பயன்படுகின்றது. 500 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவைப்படும் டிரைவினை தேர்வு செய்யவும் விரும்பும் போல்டரை கிளிக் செய்தால் அந்த போல்டரில் உள்ள பைல்களின் விவரம் நமக்கு தெரியவரும்.போல்டர்களில் பைல்களில் மாற்றங்கள் செய்யவிரும்பினால்சுலபமாக செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-சிறிய ஆடியோ ப்ளேயர்-XM Play

நமது கணிணியில் உள்ள ஆடியோ பைல்களை கேட்டு மகிழ இந்த சின்ன பிளேயர் உதவுகின்றது. 150 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள ஆடியோ பைல் உள்ள போல்டரைதேர்வு செய்யவும் இதில் உள்ள பிளே கிளிக் செய்யவும். இதில் இக்வலிசர் உள்ளதால் ஒலியை வேண்டியவாறு கேட்டு மகிழலாம்.
மிகமிக சிறியதாக உள்ளதால் கணிணியில் சுலபமாக பயன்படுத்தலாம் மேலும் இது போர்டபிள் வெர்சன ஆக உள்ளதால் கணிணியில் இன்ஸ்டால் செய்யாமல் சுலபமாக பயன்படுத்தலாம். பயன்படுத்திப்பாருங்கள். 
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கணிணி குறிப்பிட்ட நேரத்தில் நிருத்திட-Power kit

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட மணிநேரத்தில் கணிணி தானாகவே நின்றுவிட.உறக்க நிலைக்கு சென்றுவிட ரீ ஸ்டார்ட் ஆகிட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 600 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில நேரத்தினையும் கால இடைவெளியையும் குிறத்துவிட்டு இதில் உள்ள Hibernate.Restart.Shutdown.Signout.Sleep என உள்ள ஆப்ஷனில் எது தேவையோ அதனை கிளிக் செய்து தேர்வு செய்யவும்.
பின்னர் இதில் உள்ள ஸ்டார்ட் கிளிக்செய்த பின்னர் ;நாம் செட் செய்த நேரத்தில் கணிணி ஆனது நாம் செட் செய்த செயலுக்கு ஏற்ப தனது பணியை நிறைவேற்றிடும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கணிணியின் டைம்டேபிள்-Bell Timetable

பள்ளிகளில் படிக்கும் சமயம் டைம்டேபிள் பயன்படுத்திஉள்ளோம். அதிகமாக நோட்டு புத்தகங்கள் வாங்கும் சமயம் ;இலவசமாக டைம்டேபிளையும் கொடுப்பார்கள். நாம் எந்த எந்த ப்ரியடுக்கு எந்த எந்த சப்ஜேட் என எழுதிவைத்துக்கொள்ளுவோம் அதுபோல கணிணியில் டைம்டேபிளாக இதனை கொடுத்துள்ளார்கள்.இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இனஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
 இதில் ஒரு வாரத்திற்கான டைம்டேபிள் திங்கள் முதல் ஞரயிறு வரை கொடுத்துள்ளார்கள். எந்த கழமை தேவையோ அதனை தேர்வு செய்யவும். 
அதில் when.at.what. என மூன்று காலங்கள் கொடுத்துள்ளார்கள். அதில் நமது தேவையை நிரப்பிக்கொள்ளலாம்.புதன்கிழமை என்ன வேலை எந்த நேரத்திற்கு செய்யவேண்டும் என இதில் குறித்துவைத்துவிட்டால் அந்த கிழமையில் அந்த வேலையை செவ்வனே முடித்துவிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கணிணி காலண்டர்.-Bell Calandar

கணிணியிலேயே காலண்டர் கொடுத்துள்ளார்கள். வரும் நாட்களின் நிகழ்ச்சிகளை சேமித்துவைத்துக்கொள்ள இந்த் சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக ;செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மேற்புறம் காலண்டர்கள்கொடுத்துள்ளார்கள். இதில் நமக்கு தேவையான தேதியை தேர்வு செய்யவும்.பின்னர் இதில் உள்ள + கிளிக் செய்யவும்.

 வரும் விண்டோவில் நமக்கான டெக்ஸ்ட் -நிகழ்ச்சி நிரலை தட்டச்சு செய்யவும். பின்னர் சேமித்து வெளியேறவும்.


குறிப்பிட்ட நாள் வந்ததும் நமக்கு நமக்கான நிகழ்சிசயை நினைவுபடுத்தும். நிகழ்ச்சிக்கான தேதி குறிப்பிடுகையில் அந்த தேதியானது போல்ட் லட்டரில் நமக்கு தெரிவிக்கும்.இதன் மூலம் நாம் அந்த நிகழ்வின் நிரலை அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-எம்எஸ்ஆபிஸிக்கு மாற்றான வேர்ட் -Bell Word Light

 எம்எஸ்ஆபிஸ் -ல் உள்ள வேர்டை போலவே இந்த சாப்ட்வேரிலும்வேர்ட் உள்ளது. ஆபிஸில் உள்ள முக்கிய அம்சங்களும் இந்த வேர்டில் உள்ளது. இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 


 வேர்டில் உள்ளது போலவே இதிலும் நாம் டாக்குமெண்ட்களை தட்டச்சு செய்யலாம்.பாண்ட் அளவினை மாற்றலாம். நிறத்தினை கொண்டுவரலாம். 
டேபிள்.இன்சர்ட் பிக்ஸர்ஸ்.தேதி மற்றும் நேரம் எழுத்து ஸ்டைல் என அனைத்தினையும் இதில் கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள டெம்பளேட் கிளிக் செய்திட வரும் விண்டோவில் டெம்ப்ளேட் டிசைன்களும்.லேட்டர்பேட்.ஐடிகார்ட்.விசிடிங்கார்ட் போன்றவைகளை இதன் மூலம் டிசைன்செய்து சுலபமாக கொண்டுவரலாம்.
எம்எஸ்ஆபிஸிக்கு மாற்றாக இந்த வேர்ட் சாப்ட்வேரினை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள். 
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பெல் ரிமைண்டர்-Bell Reminder

போன்பில்.கரண்ட்பில்.பாலிசி.வாடகை போன்று அன்றாடம் நாம் நினைவு வைத்திக்கவேண்டிய சில விஷயங்கள் உள்ளன.சரியான சமயத்தில் நினைவு வரவில்லையென்றால் வீண் டென்ஷனும். அலைச்சலும் தான் மிச்சம்.இந்த குறையை போக்குவதற்கு இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நமக்கான ரிமைண்டரை தட்டச்சு செய்து தேதி மற்றும் நேரத்தினை செட் செய்து சேவ் செய்திடவும்.
குறிப்பிட்ட நேரத்தில் நமது தேவையை நினைவு படுத்தும்.பயன்படுததிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-புகைப்படங்களை விரைந்து பார்வையிட-Bell Photo Viewer

புகைப்படங்களை விரைந்து பார்வையிடவும் திருத்தங்கள்செய்யவும் இணையத்திலிருந்து புகைப்படங்களை பதிவிறக்கம் செய்திடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.
       இதில் உள்ள ஓப்பன் இமேஜ் கிளிக் செய்து நம் கணிணியில் உள்ள புகைப்படங்களை தேர்வு செய்யவும் அப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோவில் உள்ளவாறு டேப் கிடைக்கும். 
புகைப்படங்களை ஸ்லைட்ஷோவாக பார்வையிடலாம்.
ஸ்லைட்ஷோவிற்கான செட்டிங்ஸ் அமைக்கலாம் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


பைல் இன்போ தேர்வு செய்ய அந்த புகைப்டத்திற்கான தகவல்கள் நமக்கு கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


இணையத்திலிருந்து புகைப்படங்களை பதிவிறக்கம் செய்திட இதில் உள்ள டவுண்லோடு கிளிக் செய்ய வரும் விண்டோலில் நமது புகைப்டத்திற்கான லிங்கை பேஸ்ட் செய்யவும். 
படமானது டவுண்லோடு ஆகிவிடும். புகைப்படங்களை பெரிதுசெய்து பார்க்கவும்.நேரடியாக பிரிண்ட் செய்திடவும். இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...