வேலன்-ரீசைக்கிள்பின்னும் பின்லேடனும்.

பின்லேடனை நாம் மறந்தாலும் - நமது சாப்ட்வேர் நண்பர்கள் அவரை மறப்பதாக இல்லை...ரீ சைக்கிள்பின்னுக்கு விதவிதமான பெயர்களை வைத்தவர்கள் இப்போது ரீ-சைக்கிள்பின்னுக்கு பின்லேடன் பெயரையும் -புகைப்படத்தையும் இணைத்துள்ளார்கள். 2 எம்.பி.க்குள் உள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள கட்டத்தில் டிக் மார்க்செய்து பின்னர் அப்ளை செய்யுங்கள். இப்போது உங்களுடைய ரீ-சைக்கள்பின்னானது பின்லேடன் படத்துடன் வந்துவிடும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
ஏதாவது ஒரு பைலை நீங்கள் டெலிட்செய்ததும் உங்களுக்கு பின்லேடன் படத்துடன செய்துவரும்.கீழேஉள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது ரீ-சைக்கிள்பின்னில் நாம் டெலிட் செய்தபைல்இருக்கும். பின்லேடன் முகமும் மாறிஉள்ளதை காணுங்கள்.
இப்போது ரீ-சைக்கிள்பின்னை ஓப்பன் செய்து அதில் உள்ள பைலை டிலிட் செய்யுங்கள்.குண்டு வெடிக்கும் சத்தத்துடன் உங்கள் பைல் டெலிட் ஆவதை காண்பீர்கள்.குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டு பயந்துவிடாதீர்கள். பயன்படுத்திப்பாரு்ஙகள். கருததுக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-புகைப்படங்களை விரும்பியபடி மாற்ற

போட்டோஷாப்பில் செய்யப்படும் திருத்தங்களை போட்டோஷாப் உதவிஇல்லாமல் செய்ய கூடிய ஒரு சின்ன சாப்ட்வேராக இது உள்ளது. 700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
அதில் உள்ள பைலை கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்களுக்கான புகைப்படங்களை தேர்வு செய்யுங்கள்.
புகைப்படம் தேர்வு செய்ததும் நீங்கள் எடிட் கிளிக் செய்யவும். வரும் விண்டோவில் கிராப் செய்வது -நிறமாற்றம் செய்வது-அளவினை மாற்றுதல் போன்ற பணிகளை செய்யலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதில் நமக்கு தேவையான எழுத்துக்களையும் சேர்க்கலாம். இதில் தமிழ்மொழியை சேர்க்கும் வசதியும் உள்ளது. பாண்ட் அளவு - நிறம் -எல்லாவற்றையும் நாம் கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதன் பிறவசதிகள் கீழே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Get better result by editing your photos with Better JPEG photo editor:

  • Rotate, Flip photos (lossless)
  • Crop photos (lossless) - predefined and user-defined aspect 
  • ratios and sizes, composition guidelines
  • Add Margins to your photos (lossless)
  • New Correct Brightness (lossless)
  • New Correct Color (lossless)
  • Add Date / EXIF Info / Text to photos (lossless) - 
  • adjustable position, font, size, color, background, language, format, etc.
  • Remove Red Eyes from photos (lossless) - anti-aliasing, 
  • adjustable size, sensitivity, darkening
  • Copy/Paste to and from an external editor for local retouching 
  • without full recompression (lossless)
  • Resize photos
  • New Convert to Black & White (Grayscale) (lossless)
  • New Remove JPEG artifacts from photos
  • E-mail photos to friends and relatives
  • Batch process photos
  • Combine actions (Macro)
  • Undo/Redo editing
  • Preserve Metadata
  • Optimize JPEG Compression
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-படங்களை கலைத்துவிட்டு சேர்க்க

விதவிதமான படங்களை கலைத்துபோட்டு சேர்த்துவிளையாடும் விளையாட்டு இது.700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Game கிளிக் செய்ய படம் துண்டுதுண்டாக இடம் மாறிவிடும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
இதில் உள்ள Select Game என்பதனை கிளிக் செய்ய விதவிதமான படங்கள் நமக்கு கிடைக்கும்.அதில் தேவையானதை தேர்வு செய்யவும்.
இதில் நமது புகைப்படங்களையும் கொண்டுவரலாம். குழந்தைகளுக்கு விளையாட கொடுங்கள். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருததுக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-ஹாரிப்பாட்டர் பட ஸ்கிரின் சேவர்

குழந்தைகளுக்கு ஹாரிபாட்டர் என்றால் கொள்ளைபிரியம். புத்தக விற்பனையில் சாதனைபடைத்த ஹாரிப்பாட்டர் படத்தின் ஸ்டில்கள் ஸ்கிரீன்சேவராக உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் வரும் ஸ்டில்கள் கீழே-

பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-பிடிஎப் ரீடர்-Sumatra PDF

விதவிதமான பிடிஎப் ரீடர்களை பார்த்திருந்தாலும் நமது விருப்பமான மொழிகளில் உபயோகிக்க இந்த பிடிஎப் ரீடர் பயன்படுகின்றது. குறைந்த அளவாக 4 எம்.பி.யில் இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்க கீழ்கண்ட விண்டா ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Settings கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களுக்கு எந்த விருப்பமான மொழி வேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள்.நான் தமிழ்மொழியை தேர்வு செய்துள்ளேன்.
உங்களுக்கு அனைத்தும் தமிழ்மொழியில் மாறிவிடும் கீழே உள்ள விண்டோவினில் பாருங்கள்.
பிடிஎப் ரீடருக்கு எந்தந்த வகைகளில் நாம் டாக்குமெண்டை படிக்க விரும்புகின்றோமோ அந்த வகையில் டாக்குமெண்ட்களை படிக்கலாம்.கீழே உள்ள் விண்டோவில் பாருங்கள்.
இதில் நேரடியாக இ-மெயில் அனுப்பும் வசதியும் உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.




பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-ஸ்கோரல் பாரை சுலபமாக நகர்த்த


சில டாக்குமென்ட்கள் நீண்டுடுடு....இருக்கும். அதை முழுவதும் பார்க்கையில் கர்சர் மூலம் ஸ்கோரல் பாரை தள்ளிப்பார்க்கவேண்டும். ஒவ்வொரு பகுதியையும் ஸ்கோரல் பார் மூலம் நகர்த்திப்பார்க்கவேண்டும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரை நாம் உபயோகிக்கையில் கர்சர் நகர்த்துவது மூலம் ஸ்கோரல் பாரை நகர்த்தாமலே நாம் கடைசிவரை பார்க்கலாம்.300 கே.பி. அளவுள்ள இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் தேவையான செட்டிங்ஸ் அமைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் எந்த டாக்குமெண்ட் திறந்து கர்சரை நகர்த்துவது மூலம் விண்டோ நகர்வதை காண்பீர்கள்.இதன் ஆங்கில வசதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Key Features
  • Two-dimensional scrolling with one mouse click
  • No need to position the mouse cursor on scroll bars
  • Works with all standard applications and most others
  • Pressing the "Ctrl" key temporarily disables scroll navigation
  • Dynamic mouse wheel acceleration (fully configurable)
  • Fully customizable
  • Now with full Windows 7 and 64 bit support!
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள.

வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-அவதார் பட ஸ்கிரீன்சேவர்.

சில கோடிகள் செலவழித்து பல கோடிகள் வசூலித்த படம் அவதார்.அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் சில ஸ்கிரீன்சேவராக வந்துள்ளது. 19 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். சில படங்கள் உங்கள் பார்வைக்கு-



இந்த ஸ்கிரீன் சேவரில என்ன விஷேஷம் என்றால் இதில் நமது கணிணியின் அப்போதையை நேரம் ஒடிக்கொண்டிருக்கும்.குழந்தைகளுக்கு பயமுறுத்த இந்த ஸ்கிரீன்சேவரை காண்பிக்கலாம்(நீங்கள் இல்லாதபோது குழந்தைகள் கட்டையை எடுதது கம்யூட்டரின் மானிட்டரை அடிக்காமல் இருந்தால் சரி)
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறு்ங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-போட்டோ மேனேஜர் 2010

போட்டோக்களில் தான் நாம் பணிபுரிய புதிய புதிய சாப்ட்வேர்கள் வந்தவண்ணம் உள்ளது. அந்த வகையில் இந்த போட்டோமேனேஜர் வித்தியாசமாக உள்ளது. 10 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்க கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலதுபுறம் நீங்கள் தேவையான போல்டர் மூலம் புகைப்படங்களை தேர்வு செய்யலாம்.இதில் உள்ள இமேஜ் தேர்வுசெய்வதன் மூலம் நீங்கள் அளவு,பைல் சைஸ் மற்றும் வகைகள் மூலம் வகைப்படுத்தலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
ஒரு புகைப்படமோ அல்லது அந்த போல்டரில் உள்ள அனைத்து புகைப்படங்களையோ நீங்கள் பிக்ஸ்ல் கள் குறைக்கலாம்.-சதவீதம் மூலம ்குறைக்கலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
போட்டோ பிரிண்ட அளவினை தேர்வு செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதன் இடது புறம் முழுஸ்கீரீன் அளவு மற்றும் ஸ்லைட் ஷோ வரவழைத்தல்- செய்யலாம்.
இதில் உள்ள HTML AlBUM கிரியேட் செய்வதன் மூலம் வித்தியாசமக போட்டோக்களை அழகுப்படுத்தலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஒரு போட்டோஷாப்பில் செய்ய வேண்டிய பணிகளை இந்த சின்ன சாப்ட்வேரில் எளிதில் செய்துமுடிக்கலாம்.இங்கு குறைந்த அளவே நான் பதிவிட்டுள்ளேன்.
இதில் மேலும் உள்ள வசதிகளை ஆங்கிலத்தில் காணுங்கள்.
Key Features:

  • Browse Folders and Preview Images
    Photo Manager 2010 displays classic list of thumbnails for images in a folder and lets you explore folders and preview photos located on your compact disks or DVDs, local disks, removable disks or network drives. Preview photos in full screen mode or run a slide show.
  • Print Photos
    Print your photos one image per page, or multiple images per page with optimal layout, or as a contact sheet. Customize and format page headers and footers as desired.
  • Scan or ImportImport images from scanner or digital camera.
  • Edit Images
    Adjust levels, exposure, recovery, fill light, blacks, white balance, brightness or contrast, hue and saturation, correct color balance, remove noise, and use editor filters, such as sharpness, edge detection, and even view the Fourier Transform of selected photo. Use Auto ColorAuto Levels, and Auto Contrast adjustments. Save edited photo to a new file in common image formats. Red eye correction.
  • Assign Keywords, Ratings and Categories to Images
    Assign keywords, categories, ratings and captions to photos in Tags view.
  • Web Album
    You can select desired images and save them as HTML album for sharing in the Internet.
  • Search in Database
    Search for images in the database by keywords, ratings and categories in DB Search view. Pick required images in a second and manage the results: preview, edit, print or copy photos.
  • Search for Images on Local Discs and Network Drives
    Search your local disks, CDs or DVDs, network drives for images, and put all images to a special list for your further work.
  • Search for DuplicatesPhoto Manager allows you to search for and manage duplicate images.
  • Manage Photos
    It is easy to manage any images that are shown in any view of the program. You can sort, copy, move, delete image files or entire folders with images.
  • EXIF Properties
    Photo Manager displays detailed information about the selected photo, including EXIF properties and camera manufacturer notes (Maker Notes).
  • RAW format Support
    With RAW format plug-ins Photo Manager previews photos created in RAW format and can develop and save full size images.

 அனைத்து வசதிகளையும் நீங்கள் ஒவ்வொன்றாக பயன்படுத்திப்பாருங்க்ள.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-ஸ்டிக்ஸ் விளையாட்டு

சின்ன வயதில் ஐஸ்-குச்சிகளை எடுத்து மொத்தமாக போட்டு பின்னர் ஒவ்வொன்றாக எடுக்கவேண்டும். விரைவில் யார் எடுக்கின்றார்களோ அவர்களுக்குதான் பாயிண்ட். நவீன கம்யூட்டர் உலகத்தில் அந்த விளையாட்டு 10 கே.பி. அளவில் வந்துள்ளது. அதனை பதிவிறக்கம் செய்ய 
இங்கு கிளிக் செய்யவும்.இதை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வண்ண வண்ண நிறங்களில் குச்சிகள் இருக்கும். மேலாக எந்த கலர் குச்சி இருக்கி்ன்றதோ அதை கர்சர் மூலம் கிளிக் செய்ய அது மறைந்துவிடும். யார் குறைந்த நேரத்தில் எடுக்கின்றார்களோ அவர்கள் வெற்றிப்பெற்றவர்களாவர்கள்.
விளையாடி முடிந்ததும் உங்களுக்கு ஸ்கோர் வினாடிகளில் விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 500குச்சிகள்-1000 குச்சிகள் என லெவல் உள்ளது. விளையாடிப்பாருங்கள். குழந்தைகளுக்கு விளையாட கொடுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-டெக்ஸ்க்ஸ்பேஸ்.

ஆறுமனமே ஆறு...அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்று பழைய சிவாஜி பாடலை கேட்டிருப்பீர்கள். அதைப்போல இந்த சாப்ட்வேரில் நாம் ஆறு விதமான டெக்ஸ்டாப்புகளை கொண்டுவரலாம்.ஆறு டெக்ஸ்டாப்பிலும் வேறு வேறுப்ரோகிராம்களைகொண்டுவரலாம்.19எம்.பி.கொள்ளளவுகொண்ட
இதனைபதிவிறக்கம்செய்யஇங்குகிளிக்செய்யவும்.இதனைஇன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழு்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மேனேஜ் என்பதனை கிளிக் செய்தால் நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் Browse for more picture கிளிக் செய்து உங்களுக்கு விருப்பமான புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.
அதனைப்போல விருப்பமான டெக்ஸ்டாப்பின் பேக்கிரவுண்டையும் தேரவு செய்யலாம்.
ஒவ்வொரு டெக்ஸ்டாப்பிலும் வரவேண்டிய ப்ரோகிராம் -அப்ளிகேஷன்களை நாம் முடிவு செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதன்மூலம் நமது குழந்தைகள் -அல்லது கம்யூட்டர் உபயோகிப்பவர்கள் என அவரவர் விருப்பமான புகைப்படத்தையும் - விருப்பமான அப்ளிகேஷன்களையும் நாம் முடிவு செய்துகொள்ளலாம். டாக்ஸ்பாரில் விதவிதமான படங்களை காணலாம். எந்த படம் தேர்வு செய்கின்றமோ அந்த டெக்ஸ்டாப் ஓப்பன் ஆகும்.பயன்படுத்திப்பாருங்கள். வித்தியாசமாக இருக்கும்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-அழகிய நகரங்களின் வால்பேப்பர்கள்


அழகிய நகரங்களின் 50 விதவிதமான வால்பேப்பர்கள் உங்களுக்காக இங்கே இணைத்துள்ளேன்.23 எம.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.சில மாதிரிப்புகைப்படங்கள் கீழே-














பதிவிறக்கம் செய்யுங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-ஆன்லைனில் செல்போன்மற்றும் டிஷ்டிவி ரீசார்ஜ் செய்ய

நாம் வெளிநாட்டில்-வெளிஊரில் வேலை செய்பவர்களாக இருப்போம். நமது வயதான பெற்றோர்-மனைவி -நண்பர்கள் சொந்த ஊரில் இருப்பார்கள். அவர்களுடைய செல்போனுக்கு நாம் நமது இருப்பிடத்திலிருந்தே ரீ-சார்ஜ் மற்றும் டாப்அப் செய்யலாம். ஆன்லைனில் வரும் பலபல வசதிகளில் புதியதாக இதுவந்து உள்ளது. இனி ஆன்லைனில் நாம் செல்போன் மற்றும் டிஷ் டிவிகளுக்கு எப்படி ரீசார்ஜ் முதலியவைகளை எளிதாக செய்யலாம் என்பதனை காணலாம்.முதலில் இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
வரும் விண்டோவில் உங்களுடைய பெயர் முகவரி செல்போன் எண் கொடுத்து ரிஜிஸ்டர் செய்யவும்.
வரும் விண்டோவில் உங்களுடைய கம்பெனியை தேர்வு செய்யவும். நான் ஏர்டெல் கம்பெனியை தேர்வு செய்துள்ளேன்.
ரீ சார்ஜ் செய்யவிரும்பும் போன் எண்ணை கொடுத்து கோ கொடுக்கவும்.
இப்போது உங்களுக்கு ரீ-சார்ஜ் அல்லது டாப்அப் தேர்வு செய்து அதற்கான தொகையை தேர்வு செய்யவும்.வரும் விண்டோவில் உங்களது வங்கி கண்ககு உள்ள ஏடிஏம் கார்டை தேர்வு செய்யவும்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோவரும் அதில் உங்கள் வங்கி ஏடிஎம் கார்டில் உள்ள எண் -பெயர் மற்றும் ரகசிய குறியீடு ஆகியவற்றை குறிப்பிடவும்.
இறுதியாக சப்மீட் செய்துவிடவும். உங்களுக்கான தொகை உங்கள் செல்போனில் வந்துவிடும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...