வேலன்:-பிடிஎப் பைலில் உள்ள புகைப்படங்களை பிரித்துஎடுக்க

சில முக்கியமான பைல்கள்.புத்தகங்கள்.குறிப்புகள் பிடிஎப் வடிவில இருக்கும். அதில் உள்ள படங்கள் மட்டும் நமக்கு தேவைப்படும். ஒன்றிரண்டு படங்கள் தேவைப்பட்டால் அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். புத்தகத்தில் உள்ள அனைத்துபடங்களும் தேவையென்றால் அதற்கு காலதாமதம் ஏற்படும்.அவ்வாறு படங்களை மட்டும் விரைந்து பதிவிறக்கம் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 5 எம.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ  ஓப்பன் ஆகும்.


தேவையான இடத்தினை தேர்வு செய்ததும் உங்களுக்கான படம் உள்ள பக்கத்தினையோ அல்லது முழு புத்தகத்தினையோ தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
தேவையான ஆப்ஷன்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்துகொள்ளுங்கள்.
நீங்கள் தேர்வு செய்யும் படம் எந்த பார்மெட்டில் தேவையோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்துகொள்ளவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அனைத்து பணிகளும் முடிந்ததும இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும்.


இறுதியாக உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் சேமித்துவைத்துள்ள இடத்தில் சென்று பார்த்தால் பிடிஎப் பைலில் உள்ள உங்களுக்கான புகைப்படங்கள் அனைத்தும் இருப்பதை காணலாம். இது டிரையல் விஷன் பிடித்திருந்தால் வாங்கிகொள்ளுங்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- கைவினை பொருட்களை கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட வாழ்த்து அட்டைகளை தயாரிக்க

பிறந்தநாள் மற்றும் திருமணநாள் அன்று வாழத்துக்களை அனுப்புவதும் வாழ்த்துக்களை பெறுவதும் பெரிய இன்பம். கடையில் சென்று வாழ்த்துஅட்டைகளை தேர்வு செய்தாலும் நமக்கு விரும்பியவாறு செய்து வாழ்த்துஅட்டைகளை செய்து கொடுத்தால் அதனை பெற்றுகொள்பவர்களுக்கும் ;இன்பம் தரும் நமக்கும் இன்பம். இந்த புத்தகத்தில் நூறுவிதமான வாழ்த்துஅட்டைகளின் டிசைன்களும் அதனை நாமே தயாரிக்கும் முறைகளையும் கொடுத்துள்ளார்கள்.50 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து ஒப்பன் செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் ஒவ்வொரு கார்ட் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களும் அதனை ஒவ்வொரு நிலையாக செய்திடும் வழிமுறைகளும் கொடுத்துள்ளார்கள்.
 முதலில் செய்யும ஒன்றிரண்டு காட்டுகள் சற்று முன்னே பின்னே வரும்.


அதே டிசைன்கள் நாம் இரண்டுமுன்று செய்துவிட்டால் அருமையாக வரும். நமக்கு தெரிந்த பேன்சிகடைகளிலும் நாம் விற்பனைக்கு அதனை கொடுக்கலாம். வருமானத்திற்கு வருமானம். பொழுதுபோக்குக்கு பொழுதுபோக்கும் ஆகும். பள்ளி பயிலும் குழந்தைகளுக்கு ப்ரோஜெக்ட் ஆகவும் இதனை செய்துகொடுக்கலாம்.நீங்களும் செய்துபாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பிடிஎப் கட்டர் -PDF CUTTER

ஆடியோ கட்டர்.வீடியோ கட்டரைப்போல பிடிஎப் பைல்களை கட்  செய்திட இந்த பிடிஎப் கட்டர் பயன்படுகின்றது.2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமக் குதேவையான பிடிஎப் பைலினை தேர்வு செய்யவும். இதில் மூன்று விதமான கட்டிங் ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள்.முதலாவது ஓரு குறிப்பிட்ட பக்கங்கள் முதல் தேவையான பக்கங்கள் வரை தொடர்ச்சியாக கட் செய்திட இதில் முதலில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு செய்து தேவையான பக்கங்களை தேர்வு செய்யவேண்டும்;மொத்தமுள்ள  பிடிஎப் பைலில் குறிப்பிட்ட தொகுப்பு (செப்டர்)மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம். அடுத்துள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்திடமொத்தமுள்ள பிடிஎப் பைலில் எந்த எந்த பக்கங்கள் மட்டும் தேவையோ அந்த பக்கங்களின் எண்களை மட்டும் தட்டச்சு செய்து கமா பொட்டு அடுத்து தேவைப்படும் பக்க எண்ணை குறிப்பிடலாம். இறுதியாக உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்திட நீங்கள் தேர்வு செய்திட்ட பிடிஎப் பைல்களில் உள்ள அனைத்து பக்கங்களும் தனிதனி பிடிஎப் பக்கங்களாக தேர்வாகி பிடிஎப் பைல்களாக சேமிப்பதை காணலாம். பயன்படுத்த எளிதாக உள்ளதால் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...