இணையத்தில் அலாரம் செட் செய்ய


இணையத்தில் அலாரம் செட் செய்ய


 நாம் இணையத்தில் உலா வருகையில்


சமயத்தில் மெய்மறந்து அதில் லயித்து


விடுவோம். முக்கியமாக ஒருவரை


சந்திக்க வேண்டியதிருக்கும், அவசர


வேலையிருக்கும், வெளியே செல்ல


வேண்டியிருக்கும். இணையத்தில் உலா


வந்து அதை அனைத்தையும் நாம்


மறந்துவிடுவோம். பிறகுதான் நமக்கு


நமது வேலை நினைவுக்குவரும். நம் மீதே


நமக்கு வெறுப்பு வரும். அந்த மாதிரியான


நேரங்களில் நமக்கு கைகொடுப்பதுதான்


இணையத்தில் உள்ள அலாரம்.






 இதைபதிவிறக்கம் செய்யவேண்டியதில்லை.


அந்த இணையதளம் சென்று அதை நமது


புக்மார்க்காக செட் செய்து வேண்டியசமயம்


நாம் உபயோகித்துக்கொள்ளலாம்.


இதில் மொத்தம் நான்கு விதமான அலார ஒலிகள்


உள்ளது. 

கோழி கூவுவது,




அலாரம் கெடிகார ஓசை,





எலக்ட்ரானிக் ஓசை,



மற்றும் கிடார் ஓசை


 எனஇதில் உள்ளன. நாம் நமது விருப்பத்திற்கு ஏற்ப


தேர்வு செய்து கொள்ளலாம். அதுபோல் இதில்


ரயில்வே கடிகாரம் உள்ளது(24 மணிநேரம்).



நமக்கு வேண்டிய நேரத்தை செட் செய்துவிட்டால்


குறிப்பிட்ட நேரத்தில் நமக்கு அலாரம் ஓலிக்கும்.




இணையத்தில் நாம் பாடல்கள் கேட்டிருந்தாலும்,


படங்கள் பார்த்துக்கொண்டிருந்தாலும் நமக்கு


இந்த அலாரம் ஒலி கேட்கும்.



அலாரத்தை நாம்நிறுத்தவில்லையென்றால் நமக்கு

 10 நிமிட இடைவெளியில் மீணடும் அலாரம் ஒலிக்கும்.

உங்களுக்கு இந்த அலாரம் கடிகாரம் பிடித்திருந்தால்

உபயோகித்துப்பாருங்கள். பிடித்திருந்தால்

ஒட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்

வேலன்.


இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
நம்மிடம் உள்ள பைல்களின் வகைகளை அதனுடைய ஐ-கான் மூலம் எளிதில்அடையாளம் கண்டுகொள்ளலாம்.பிஎஸ்டி,வேர்ட்,எக்செல்,சிப்,பிடிஎப் என அனைத்திற்கும் ஒவ்வொரு ஐகான்அடையாளம் உள்ளது
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...