வேலன்:-போட்டோஷாப் பாடம்-17 (Pattern Image)





வேலன்:-போட்டோஷாப் பாடம்-17 Pattern Images

இதுவரை போட்டோஷாப் பாடங்கள்

படிக்காதவர்கள் இங்கே சென்று

வேண்டிய பாடத்தை படித்துக்கொள்ளவும்.





இன்றைய பாடத்தில் Pattern image

பற்றி பார்க்கலாம்.

Pattern image ஆனது ஒரு படத்தில்

குறிப்பிட்ட இடத்தை - குறிப்பிட்ட

நபரை தேர்வு செய்து அதை அதிக

எண்ணி்க்கையில் சுலபமாக

நிரப்ப நமக்கு உதவுகின்றது.அதற்கு நாம்

மானையும் மயிலையும்

(மானாட மயிலாட அல்ல)

எடுத்துக்கொள்ளலாம்.

முதலில் மான் படத்தை எடுத்துக்

கொண்டுள்ளேன்.





















இதன் image அளவு அகலத்தில்

6.667 மற்றும் உயரத்தில்

8.889 அங்குலத்தில் உள்ளது.


















இதில் அதன் முகம் மட்டும்

நான் தேர்வு செய்துள்ளேன்.





















முன்பே பாடத்தில் சொன்னது போல்

மார்க்யு டூலால் கட் செய்து கொள்ளுங்கள்.

பின்னர் Ctrl+N-ஐ அழுத்தி பின் Enter

தட்டுங்கள். உங்களுக்கு புதிய விண்டோ

ஓப்பன் ஆகியிருக்கும். அதில் கட் செய்த

மானை பேஸ்ட் செய்யுங்கள்.


















உங்களுக்கு மேற்கண்டவாறு படம்

கிடைக்கும். இனி பழைய படத்தை

முடி விடுங்கள். இப்போது ஸ்கீரினில்

தலை மட்டும் உள்ள மான கிடைக்கும்.

அதன் இமேஜ் அளவை அகலம் 2 அங்குலம்

உயரம் 3 அங்குலம் என மாற்றிக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு கீழ் கண்டவாறு படம் கிடைக்கும்.
















இதை அப்படியே விட்டுவிட்டு இப்போது

மேல்புறம் உள்ள Edit கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்

ஆகும்.






















அதில் உள்ள Define Pattern

கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்

கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.








ஓகே கொடுங்கள். இப்போது

நீங்கள் கொடுத்துள்ள Standard அளவின்

படி புதிய விண்டோ ஓப்பன் செய்யுங்கள்.

நான் அகலத்தில் 10 அங்குலமும்

உயரத்தில் 12 அங்குலமும் வைத்து

புதிய விண்டோ ஓப்பன் செய்துள்ளேன்.

இனி நீங்கள் Shift + F5 அழுத்துங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ

ஓப்பன் ஆகும்.


















இதில் Use எதிரில்உள்ள கட்டத்தில்

Pattern தேர்வு செய்து பின் Custom Pattern

எதிரில்உ ள்ள ரேடியோ பட்டனை கிளிக்

செய்தால் உங்களுக்கு மேலே உள்ளவாறு

ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் தேர்வு செய்த

மானின் படம் முதலில் இருக்கும்.

அந்த படத்தை தேர்வு செய்து ஓ,கே.

கொடுங்கள். கண் இமைக்கும் நொடியில்

என்ன நடக்கின்றது என பாருங்கள்.





















ஒரு மான் பாருங்கள் - 20 மானாக

வந்து விட்டது. இதைப்போல்

இந்த மயிலை பாருங்கள்.





















மயிலின் அளவு கீழே கொடுத்துள்ளேன்.


















இதில் மயிலின் முகம் மட்டும் கட் செய்துள்ளேன்.




















வேண்டிய அளவிற்கு படத்தின் இமேஜை

குறைத்துள்ளேன். படம் கீழே..











இதையும் Edit -Define Pattern -O.K.

கொடுத்தேன். புதிய விண்டோ

ஓப்பன் செய்தேன். அதில்

மானை நிரப்பியவாறு மயிலையும்

நிரப்பினேன்.

படத்தை பாருங்கள்.


















இதைப்போலவே நாம் குருப்பில்

நிற்கும் நபரின் முகம் மட்டும் கட் செய்து

தனியே இவ்வாறு செய்துகொள்ளலாம்.

பதிவுகளை பாருங்கள். பிடித்திருந்தால்

ஓட்டுப்போடுங்கள். பதிவின் நீளம் கருதி

பாடத்தை இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

சற்று முன் கிடைத்த விருது:-

தமிழ் 10 தளத்தில் எனக்கு இந்த வார கிரீடம்

அளித்துள்ளார்கள். அவர்களக்கு உங்கள்

சார்பாக எனது நன்றி...

விருதை காண இங்கு கிளிக் செய்யவும்.

பின்குறிப்பு:- இந்த அளவீடுகள் போட்டோஷாப்பில்

மிக முக்கியமானதாகும். நீங்கள் எடுக்கும்

போட்டோவினை ஸ்டுடியோவில் அச்சடுக்கும்

சமயம் இந்த அளவில்தான் அச்சடுப்பார்கள்.

எனவே இதை தனியே குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.





STAMP SIZE:-

2 x 3 c.m.

PASS PORT SIZE

3.5 X 4.5 c.m.

2 B

5 X 7 c.m.

MAXI

4 X 6 inch.

OTHER SIZES

8 X 6

10 X 8

12 X 8

10 X 15

12 X 15

12 X 18

12 X 24

12 X 30

12 X 36

JUST FOR JOLLY PHOTOES:-


ME THE FIRST- க்காக இருவருக்கும் சண்டை:-


friends

இதுவரையில் Image Pattern உபயோகித்தவர்கள்:-

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...