
வலைப்பதிவு எழுதும் சில நண்பர்கள் ஆகட்டும் -
இணையத்தில் சாட்டிங் செய்யும் நண்பர்கள்
ஆகட்டும்...தமிழை ஆங்கிலத்திலேயே தட்டச்சு
செய்கின்றார்கள். ஏன் தமிழை தமிழில் தட்டச்சு
செய்ய கூடாதா....படிக்கும் காலத்தில்
டைப்ரேட்டிங் கிளாஸ் போக சந்தர்ப்பம் கிடைக்
காமல் (அ) போயும் சரியாக படிக்காமல்...சரி
விடுங்கள். நாம் கற்றுக்கொள்ளவில்லையென்றாலும்
நமது குழந்தைகள் தமிழில்தட்டச்சு செய்ய
கற்றுக்கொள்ளட்டும்.
இங்கு நான் தமிழ் பாண்ட் பாமினியை இணைத்துள்ளேன்.
ஏற்கனவே வைத்துள்ளவர்கள் வேண்டாம். இல்லாதவர்கள்
இங்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.உங்கள்
கணிணியில் பாண்ட் போல்டரில் சேமித்துக்கொள்ளுங்கள்.
இப்போது ஸ்டார்ட் மெனு சென்று On-Screen Board டெக்ஸ்க்
டாப்பிற்கு கொண்டு வாருங்கள். On- Screen Board எப்படி
உபயோகிப்பது என அறிந்துகொள்ள எனது முந்தைய
பதிவிற்கு செல்ல இங்கு கிளிக் செய்யுங்கள். ரைட் இப்போது
அதில் Settings-Font-Bamini தேர்வு செய்துகொள்ளுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதை முன்னேட்டமாக வைத்துக்கொண்டு கீழ்கண்ட
தமிழ் எழுத்துக்களை தட்டச்சு செய்து கற்றுக்கொள்ளுங்கள்.
தினம் ஒரு அரைமணிநேரம் போதும். நீங்கள் ஒரு வாரத்தில்
எளிமையாக கற்றுக்கொள்ளலாம். கீழ்கண்ட பிடிஎப்பைலை
பிரிண்ட் எடுத்து உபயோகித்துக்கொள்ளுங்கள்
Tamil Typewriter Key Book
அடுத்து டிரைவ்வுகள் - பிளாக்குகள் - இ மெயிலுகள் - சாட்டிங்குகள் ஆகிய
வற்றில் தமிழை எப்படி பயன்படுத்துவது பற்றி பதிவிடுகின்றேன்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ஆஸ் பாஸ்.....வெத்தலை பாக்...
இன்றைய பதிவிற்கான PSD புகைப்படம் கீழே:-

டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-

இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
தமிழில் சுலபமாக தட்டச்சு செய்ய கற்றுக்கொண்டவர்கள்:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்