வேலன்:-ஓரே கிளிக்கில் கம்யூட்டடரை பூட்ட



கம்யூட்டரில் நாம் முக்கிய வேலையாக இருப்போம்.
அந்த சமயம் அவசரவேலையாக சிலநிமிடங்கள்
கம்யூட்டரைவிட்டு எழுந்துசெல்லவேண்டி வரும்.
அந்த சில நிமிடங்களில் யாராவது கம்யூட்டரை
ஏதாவது செய்துவிட்டால் பிறகு வருத்தப்பட்டு
பிரயோசனமில்லை.அந்த மாதிரி நேரங்களில்
இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும். இதை
நாம் நிறுவியதும் நமது டாக்ஸ்பாரில் பூட்டு
சிம்பளுடன் அமர்ந்துவிடும். அதை கிளிக் செய்தால்
கம்யூட்டர் லாக் ஆகிவிடும். மீண்டும் நாம் பாஸ்
வேர்ட் கொடுத்துதான் ஓப்பன் செய்யமுடியும்.
(விண்டோஸ் கீ+L அழுத்தியும்-Screen Saver மூலமும்
லாக் செய்யலாமே என்பது நீங்கள் கேட்பது
புரிகின்றது. ஆனால் இது அதைவிட சுலபமாக
இருக்கின்றது)இந்த சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு
கிளிக் செய்யவும்.(இது சின்ன சாப்ட்வேர்தான்
இதன் கொள்ளளவு 575 கே.பி.தான்.) இதை பதிவிறக்கி
உங்கள் கணிணியில் நிறுவி அதை ஒப்பன்
செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
முதலில் உங்கள் பாஸ்வேர்டையும் அதையே மீண்டும்
கான்பார்ம் செய்தும் தட்டச்சு செய்து ஓ,கே. கொடுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது பார்த்தீர்களேயானால் உங்கள் டாக்ஸ்பாரில்
பூட்டு போன்ற அடையாளத்தை காணலாம். கீழ்கண்ட
விண்டோவினை பாருங்கள்.
இப்போது பூட்டினை நீ்ங்கள் கர்சரால் டபுள் கிளிக்
செய்யும் சமயம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அவ்வளவுதான். உங்கள் கம்யூட்டர் லாக் ஆகிவிட்டது.இனி
யாராவது கர்சரால் கிளிக் செய்தால் அவர்களுக்கு
பாஸ்வேர்ட் கேட்டு எச்சரிக்கை செய்தி கிடைக்கும்.
கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
இப்போது நீங்கள் ஏற்கனவே கொடுத்த பாஸ்வேர்டை சரியாக
கொடுத்தால் தான் உங்களுக்கு மீண்டும் விண்டோ ஓப்பன்
ஆகும்.பயன்படுத்திபாருங்கள்.கருத்தினை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ம்...இப்ப சொல்லு....
C for CAT
D for DOG
E for ELEPHANT


இன்றைய PSD-டிசைன் 45க் கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்தபடம் கீழே:-
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இதுவரை கம்யூட்டரை பூட்டியவர்கள்:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...